Tuesday 5 March 2013

பைரவர் வழிபாட்டின் முக்கியத்துவம்:

பைரவர் வழிபாட்டின் முக்கியத்துவம்:





பைரவர் பற்றிய வழிபாடுகளை அறியும் முன்னர் அவரைப் பற்றி சில தகவல்கள் அறிந்து கொள்வோம்.

மும்மூர்த்திகளுக்கும் மூலவரான பைரவர் எனப்படும் ருத்ரனே அனைவருக்கும் தேவர்களுக்கும் மானிடர்களுக்கும் காவல் தெய்வமாக விளங்கி அவரவர் வினைகளுக்கு ஏற்ப நற்செயல்களையும் தீவினைகளையும் அளித்து வருகிறார். பைரவரை எவர் ஒருவர் தினமும் மனதார வணங்கி தங்கள் அனுதின செயல்களை ஒரு நண்பனிடம் தெரிவிப்பது போல கூறி நம்பிக்கையுடன் வணங்கி வருவோர்க்கு வாழ்வில் துன்பம் இல்லை. தொட்டது துலங்கும். சும்மாவா முன்னோர்கள் சொன்னார்கள் "பைரவர் வழிபாடு கை மேற்  பலன்" என்று இது பலருடைய வாழ்க்கை அனுபவங்கள் ஆகும். சிவனுக்கும் மற்ற சித்தர்களுக்கும் சக்திகளை கொடுப்பவர் அவரே. சித்தராக விரும்புபவரும் ஆன்மீக வாழ்கையில் முன்னேற விரும்புபவரும், கஷ்டங்களை போக்கி செல்வா வளம் பெற விரும்புபவரும் வழிபட வேண்டிய கடவுள் பைரவர் மட்டுமே. பைரவர்களில் பல அம்சங்கள் உள்ளன. அவற்றில் மிகப் பிரதானமவர்கள் அஷ்ட பைரவர்கள் எனப்படும் எட்டு பைரவர்கள் ஆவார்.

1. அசிதாங்க பைரவர்,
2. ருரு பைரவர்,
3. சண்ட பைரவர்,
4. குரோத பைரவர்,
5. கபால பைரவர்,
6. உன்மத பைரவர்,
7. பிஷன பைரவர்,
8. சம்ஹார பைரவர்.

பொதுவாக பைரவர் நீல மேனி கொண்டவாராகவும், சிலம்புகள் அணிந்த திருவடியை கொண்டவராகவும் பாம்புகள் பொருந்திய திருவரையும் மண்டை ஓட்டு மாலைகள் புரளும் திரு மார்பும், சூலம், பாசம் உடுக்கை, மாலு முதலிய தாங்கிய திருக்கரங்களை கொண்டவராய் கூறப்பட்டாலும் அஷ்ட பைரவர் வடிவங்களாக கூறப்படும் பொழுது அவரின் வண்ணம், ஆயுதம், வாகனம் இவைகள் மாறுபட்டுக் காணப்படும்.

ஒரே பைரவர் எட்டு வகை பணிகளை எட்டு திசைகளிலும் ஏற்கும் பொழுது அவர் அஷ்ட பைரவராகத் தோற்றம் அளிக்கின்றார், மேலும் அவரே அறுபத்தி நான்கு காலங்களிலும் அறுபத்தி நான்கு பணிகளை ஏற்று செயல்படும் பொழுது அறுபத்தி நான்கு பைரவர்களாக தோற்றம் அளிக்கின்றார்.

மேலே குறிப்பிட்ட பெயர்கள் புராணத்திற்கு புராணம் மாறுபட்டு காணப்படுகின்றது. பைரவாம்சமான சிவனது துக்கத்தை போக்கும் வல்லமை கொண்ட பைரவர் சக்தி அம்சமான காளியை பைரவி என்ற பெயரில் ஈசானதிக்கில் வைத்துக் கொண்டு காவல் காகின்றனர்.

மேலும் புராண காலங்கள் மட்டுமின்றி கலியுக காலத்திலும் எப்பொழுது எல்லாம் அதர்மம் தலை தூக்கி ஆடுகின்றதோ அப்பொழுது சிவனின் ஆணைப்படி பைரவர் எழுச்சி பெற்று உலக மக்களை காப்பார் என்று புராணங்கள் கூறுகின்றன. அசுரர்களின் ஆட்டம் தலை தூக்கும் பொழுது எல்லாம் அவர்களை அளித்தவர் பெரும்பாலும் பைரவ மூர்த்தியே ! பைரவருக்கான ஆலயங்கள் உலகில் பல இடங்களிலும் உள்ளன. இன்று வரை பலராலும் ரகசியமாய் பிரவ வழிபாடு சூட்சுமமாக எல்லா மதத்தினராலும் நடை பெற்று வருகின்றது. நேபாளம், அமெரிக்க, இலங்கை என பல அயல் நாடுகளில் பைரவருக்கு தனி கோவில்கள் உள்ளன. இதை போன்று பல்வேறு பெருமைகளை கொண்டவர் பைரவர். அவை பற்றிய தொகுப்பு பின்னாட்களில் வெளிவரும்.


நன்றிகள் : குருநாதர்

No comments:

Post a Comment