Monday 24 December 2012

நமது இந்தியாவின் ஆத்ம பலத்தை சிதைத்த மெக்காலே




இன்னுமா நமது மக்களுக்கு இவை புரியவில்லை 
இதை மாற்றிடவோ நமது தலைவர்களுக்கு நேரமில்லை



நன்றிகள் : குருநாதர்


நமது பாரம்பரிய கல்வித் திட்டமும் இன்றைய நவீன நாகரிக கல்வித் திட்டமும்





நாம் முன்பு சொன்ன மெக்கலே நாச வேலைக்கான ஆதாரங்கள் சில

புராதனமான இந்துக்கல்வி முறைக்கு குருகுலக் கல்விமுறைஆஸ்ரமக் கல்வி முறை என்று பிரிக்கப்பட்டு இருந்தது; இந்த இரண்டு கல்வி முறையிலும் 6 வயது முதல் 18 வயது வரை என 12 ஆண்டுகள் தேர்ந்தெடுத்து கல்வி புகட்டப்பட்டது. குருகுலக்கல்வியில் அரசவையின் குலகுரு அரச குடும்பத்துக் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவார்; அதற்காக அரச குடும்பத்துப் பிள்ளைகள் குல குருவின் குருகுலத்தில் உள்ளுறைப் பயிற்றுவித்தல் மூலம் குலகுருவுக்கும் அவர்தம் பத்தினியாருக்கும் தேவையான சேவைகள் செய்துகொண்டும் அவரவர்களுக்கு விருப்பமான பாடங்களைப் பயிலுவர். அங்கும் அனைவருக்கும் பொதுவான பாடமாக கவன ஈர்ப்பு  என்ற மனதை ஒருமுகப்படுத்தும்,குண்டலினி சக்தி எழுச்சிக்காக சில மூச்சுப்பயிற்சிகளே கற்றுக்கொடுக்கப்பட்டன. கவனத்தில் நிலைத்த தன்மை உட்சென்று வெளிவரும் சுவாசத்தைப்பொறுத்து அமைகிறது. மனம் அடங்கி ஒன்றில் நிலைப்பதற்கு மூச்சுப்பயிற்சி மிக அவசியம்.மூச்சு அடங்க மனம் அடங்கும். மனம் அடங்கினால்,பிரபஞ்சமே அடங்கிவிடும்.

ஒரு குருகுல மாணவனின்  செயல்பாடு எப்படி இருக்கும்

என்பதை அறிய வேண்டுமானால்,சாண்டில்யன் அவர்கள் எழுதிய விலைராணி, ஜலமோகினி, ஜலதீபம் மூன்றுபாகங்கள், முதலான சரித்திர நாவல்களை வாசித்தால் உணரலாம்; இந்த சரித்திரநாவல்களில் கதையின் கதாநாயகன்  ! தமிழில் சொன்னால் தான் புரியும் இல்லையா? கதையின் ஹீரோவின் செயல்பாடுகளை எழுத்தில் கொண்டு வந்திருப்பார் சாண்டில்யன்.இந்த நாவல்களை வாசித்து முடித்ததும், நமக்கு ஒரு சந்தேகம் வரும்?


இவ்வளவு திறமைசாலியாகவா நமது முன்னோர்கள் இருந்தார்கள்?
சந்தேகமில்லாமல் நமது முன்னோர்கள் இந்த நாவலில் சித்தரித்திருப்பதை விடவும், அதி மேதாவிகள்; திறமைசாலிகளே! இருந்தும் கூட நம்மிடம் இவர்களிடம் இருக்கும் திறமையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லையே? ஏன்?

அதுதான் ஆங்கிலேயன் இந்தியாவில் செய்த அழிவு வேலையின் இறுதிகட்டம்!!! ஆமாம்! இவ்வ்வ்வளவு சிறப்புமிக்க குருகுலக் கல்வி முறையை தனது கல்வி முறையாக மாற்றிக்கொண்டுவிட்டான்;

அதே சமயம்,வீணாகப்போன,தேவையில்லாத,முழுக்க முழுக்க நமது நினைவுத்திறனை சோதிக்கும் விதமான பாடத்திட்டத்தை நம் மீது திணித்துவிட்டான்.1947 இல் சுதந்திரம் வாங்கியது முதல், இன்று வரையிலும் இந்த குப்பை நிறைந்த பாடத்திட்டத்தை மாற்றிட நமது ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை;மாற்றிட வேண்டும் என்ற மனோபாவம் உருவாகவில்லை;மாற்றிவிட முயன்ற அரசாங்கத்தை மேற்கு நாடுகள் பலகோடி டாலர்கள் செலவழித்து வீழ்த்துகின்றன. (ஆமாம்,அவர்களால் இந்த உலகில் இந்தியாவைத் தவிர வேறு எங்கு போய் சுதந்திரமாகக் கொள்ளையடிக்க முடியும்?)


நவீன கல்வித் திட்டம் எனப்படும் மெக்காலே கல்வித் திட்டமானது, அகங்காரம் நிறைந்த மனிதர்களை நம் இந்தியாவில் உருவாக்கிவருகிறது; அகங்காரம் நிறைந்த மனிதர்களால் பொறுப்பில்லாத சமுதாயம் உருவாகிவிட்டது; (பொறுப்பில்லாத, தொலைநோக்கு திட்டமில்லாத தலைவர்களையே நாம் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறோம்). பொறுப்பில்லாத சமுதாயத்தினால், தனது முன்னோர்களின் அறிவுப் பொக்கிஷத்தின் பெருமையை உணரக் கூட முடியவில்லை; எனவே, பல அரிய பொக்கிஷங்களை நாம் இழந்து வருகிறோம் இன்று வரையிலும்!!!

1990கள்வரையிலும் பி.எஸ்.ஸி,, பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜி போன்ற பட்டப்படிப்புகளே இருந்தன; இந்தப் பட்டப்படிப்புகளை படித்து முடிப்பவர்கள், மேல்நாடுகளின் வாழ்க்கை முறைக்கு, மேல்நாடுகளின் தொழில்களுக்கு மட்டுமே தயார் செய்யப்படுகின்றனர் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?


இன்றைய கல்வித்திட்டத்தில் தெருவுக்கு ஒரு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியும், ஊருக்கு ஒரு பொறியியல்(என் ஜினியரிங்) கல்லூரியும் வந்துவிட்டன; வெகு விரைவில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரியும் வந்துவிடும். இந்தக் கல்வித்திட்டத்தில் மனதை மலரச் செய்யக்கூடிய பாடங்கள் மருந்துக்கு கூட இல்லை; நான் ஒரு பி.; நான் ஒரு பி.டெக்., நான் ஒரு எம்.பி.., என்ற அகங்காரம்தான் ஒவ்வொரு பட்டதாரிக்கும் உருவாகிவருகிறது. யாருக்குமே அடங்காத பட்டதாரிகள், காமத்துக்கும் பணத்துக்கும் புகழ்ச்சிக்கும் மட்டுமே பணிகிறார்கள். எனவே, கள்ளத்தனம் உருவாகிறது. இந்த கள்ளத்தனத்தின் உச்சகட்டமே இன்று நாம் காணும் அரசியல் இழிநிலை!!!

எப்போது அன்புக்கும், பக்திக்கும், விட்டுக்கொடுத்தலுக்கும் மதிப்பில்லையோ அப்போது முதலே நமது நாடு அழிவை நோக்கி நகர்ந்து வருகிறது என்பதே உண்மை. நாம் நமது வேர்களை இழந்தோம்; இன்று அரசியலானது, அதர்மத்தின் சொரூபமாகி இந்தியத் தன்மையை (பெண்களை மதித்தல், கோவில்களையும், கோவில் வழிபாட்டுமுறைகளையும் பாதுகாத்தல், சுற்றுச்சூழலை வளர்த்தல்) சிதைத்து வருகிறது.
மெக்காலே கல்வித் திட்டமானது, நமது அப்பா, அம்மாவை முட்டாளாக பார்க்க வைக்கிறது; நமது தாத்தா பாட்டியை அப்பாவியாக எதிர்கொள்ள வைக்கிறது; நமக்கு எல்லாலே தெரியும் என்ற அகங்காரத்தை மட்டுமே தருகிறது; அதே சமயம், நமது மனதைத் தொடும் விதமாக எதுவும் செய்ய வில்லை;



மெக்காலே கல்வித் திட்டத்தின் விளைவாக  நமது அறிவுச்செல்வங்களான புராதனமான பல்லாயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளை  இழந்துவிட்டோம்; இவை அனைத்தும் தற்போது ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆராயப்பட்டுவருகின்றன. அவைகளில் மருத்துவம், ஜோதிடம், அணுசக்தி, வானியல், வாஸ்து சாஸ்திரம், மரணமில்லாமல் வாழும் கலை;வேறு நட்சத்திர மண்டலங்களுக்கு சில நாட்களில் சென்று வரும் சூட்சுமப்பயண வழிமுறை, நிர்வாகம், போர்க்கலை, அரசியல் நிர்வாகம், நகரமைப்பு, யோகாசனத்தின் அவசியம், மூலிகைகளின் மருத்துவ அறிவு, பூமி பற்றிய முழுமையான அறிவு, கதிர்வீச்சை எதிர்கொள்ளும் திறன் போன்றவைகள் இருக்கின்றன.


மெக்காலே கல்வித் திட்டத்தால்,நமது 6 தலைமுறையினர் (சுமார்  200 ஆண்டுகள்)நமது முன்னோர்களின் பெருமைகளை சிறிதும் அறியாமல் போய்விட்டனர். இதை அப்போதே எதிர்த்தவர்கள் ராஜாராம் மோகன் ராய், சுவாமி விவேகானந்தர்,சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றவர்கள் ஆவர். இவர்களே மெக்காலே  கல்வித் திட்டத்துக்கு மாற்றாக நமது இந்து தர்மப் பெருமைகளை உணரவைக்கும் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார்கள். அவைகளே ராமக்ருஷ்ண மிஷன் பள்ளிகள், சின்மயா மிஷன் பள்ளிகள், குருகுல முறைப்படி உருவாக்கப்பட்ட ஏராளமான பள்ளி, கல்லூரிகள் ஆகும். இவைகளின் பரவல் இந்தியாவின் மக்கள் தொகைக்கு ஒரு சதவீதம் கூட இல்லை என்பதுதான் கொடுமை!!!மாற்றம் என்பதே மாறாத நிரந்தரம் ! என்று இருந்தாலும், மாற்றத்தை ஏற்றிடும் பாரம்பரியமும்,பாரம்பரியத்தை கைவிடாத மாற்றமுமே நமது இந்தியப் பாரம்பரியம் ஆகும். அப்பேர்ப்பட்ட இந்தியப்பாரம்பரியத்தை நமது கல்வித் திட்டத்தில் எப்போது நாம் கொண்டு வரப் போகிறோம்?

ஓம்சிவசிவஓம்    ஓம்ஹரிஹரிஓம்
நன்றிகள் : குருநாதர்

Thursday 20 December 2012

பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு ஒழுங்குநிலைக்கு வரும் பிரபஞ்சமும் நமது பூமியும்!!!



பல கோடி ஆண்டுகளாக பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது;சூரியன் நமது காலக்ஸியான பால்வழிமண்டலம் எனப்படும் மில்கிவேயை(Milky Way)ச் சுற்றி வருகிறது;பால்வழிமண்டலம் கன்னிராசி மண்டலத்தைச் சுற்றிவருகிறது; இதுவரையிலும் வானியல் நிபுணர்கள் ஆராய்ந்து கண்டறிந்துள்ளார்கள்:

உலகின் மிக பிரம்மாண்டமான விண்வெளி மற்றும் பிரபஞ்ச ஆராய்ச்சி அமைப்பான நாசா அமெரிக்காவுக்குச் சொந்தமானது;அமெரிக்க ராணுவத்தை விட வலிமையும்,சக்தியும்,செல்வ வளமும் கொண்டது;இங்கே ஏராளமான விஞ்ஞானிகள் இருபத்துநான்கு மணி நேரமும் விண்வெளியை ஆராய்ந்து வருகின்றனர்; இவர்களின் ஆராய்ச்சியால் தான் நாம் வாழ்ந்து வரும் சூரியக் குடும்பம் பற்றிய பல உண்மைகளை நாம் கண்டறியமுடிந்தது;(இவர்கள் விஞ்ஞான பூர்வமாக கண்டறிந்த உண்மைகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்களாகிய ஆர்ய பட்டர், பாஸ்கராச்சாரியார், அபிராமி பட்டர், சித்தர்களில் ஒரு சிலர் கண்டறிந்து பாடல்களாக எழுதியிருக்கின்றனர்; அதில் ஒன்றுதான் திருமந்திரமும், காகபுஜண்டர் சித்தரின் பாடல்களும்!!!)


மாயன் காலண்டர் 21.12.2012 அன்றோடு முடிவதை நாசா சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை; இதில் ஏதாவது உண்மை இருக்கலாம் என்று கருதி,பலவிதமான ஆராய்ச்சிகளைச் செய்து வெளியிட்டிருக்கிறது;அந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளின் படி நாம் வாழும் பூமியும், சூரியனும், சந்திரனும்,பால்வழிமண்டலமும் ஒழுங்கற்ற நிலையிலிருந்து ஒழுங்கு நிலைக்கு வர இருக்கிறது;இந்த ஒழுங்கு நிலையானது வரும் டிசம்பர் 23,24,25-2012 என்ற ஏற்பட இருக்கிறது!!!


 இதன் படி உலகத்தில் பருவநிலை மாற்றங்கள் திகைப்பூட்டும் விதமாக ஏற்பட இருக்கிறது;வட துருவம்  தென் துருவமாக மாற இருக்கிறது;பூமியின் புவியீர்ப்பு விசையில் மாற்றம் உண்டாகும்;மனித குல வரலாற்றில் மட்டுமல்ல;பிரபஞ்ச வரலாற்றிலும் இது மிகப் பிரம்மாண்டமான மாற்றமாக இருக்கும் என்று நாசா ஆராய்ந்து வெளியிட்டிருக்கிறது;இந்த மாற்றத்தால் தனுசு ராசி மண்டலம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது;மேலும் விபரமறிய நாசாவின் இந்த இணைப்பைச் சொடுக்கவும்;ஆங்கிலத்தில்  இருக்கும் இந்த ஆராய்ச்சி முடிவின் படி டிசம்பர் 23,24,25 இந்த மூன்று நாட்களும் யாரும் வெகுதூரம் பயணம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கிறது.செய்வோமா?


 நன்றிகள் : குருநாதர்