Saturday, 31 December 2011

ஓம் சிவ சிவ ஓம் ஜெபித்தவர்களின் அனுபவங்கள் மற்றும் அவர்கள் பெற்ற பலன்கள் - பகுதி ஒன்று :-


எனது குருநாதரின் வழிகாட்டுதலின் படி ஓம் சிவ சிவ ஓம் ஜெபித்தவர்கள் பல மகத்தான அனுபவங்களை பெற்றுள்ளனர். அவற்றை உங்கள் பார்வைக்காக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
என் சக அலுவலக ஊழியர் ஒருவர் தினமும் ஓம் சிவ சிவ ஓம் ஜபித்து வருகிறார். மிகவும் நேர்மையான மற்றும் தெய்வ நம்பிக்கை கொண்ட அவர் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.
கடந்த மூன்று மாதங்களாக இந்த மந்திர ஜெபத்தினை செய்து வருகிறார். சரியாக 15 நிமிடங்கள் தினமும் செய்வார். முதலில் செய்யும் பொழுது சற்று தடுமாற்றம் மற்றும் தடங்கல் இருந்து கொண்டு வந்தது.
ஆனால் இப்பொழுது அவை இல்லை. தன்னுடைய தங்கைக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த அவசரமாக பணம் தேவைப்பட்டது. அதை மனதில் நினைத்துக் கொண்டு ஜெபம் செய்து வந்தார். சரியாக 14 நாட்கள் 
கழித்து ஒரு நாள் அலுவலக முதலாளியின் தங்கை அவரை வேலை நிமித்தமாக வீட்டிற்கு அழைத்து உள்ளார். வேலை முடிந்ததும் முதலாளியின் தங்கை எதுவும் கேட்காமல் திடீரென 4000 ரூபாய் அவர் கையில் கொடுத்துள்ளார். இத்தனைக்கும் இவர் முதலாளியின் தங்கையிடம் பணம் எதுவும் இதற்கு முன்பு கேட்கவும் இல்லை அவரும் கொடுத்தது இல்லை. அதே சமயம் அவர் தங்கையுன் பள்ளிக் கல்வி கட்டணம் சரியாக 4000  இது முதல் அனுபவம், இரண்டாவது அவருடைய வீட்டில் பொருளாதாரப் பிரச்சனைகள் பெருமளவில் குறைந்துள்ளன. நன்றிகள் எனது குருநாதர் :- ஓம் சிவ சிவ ஓம்.

Saturday, 24 December 2011

ஹனுமான் ஜெயந்தி :- நாம் செய்ய வேண்டியது


இன்று ஹனுமான் மற்றும் ராமபிரானை நினைத்து விரதம் இருப்பது மிகவம் நன்மை அளிக்கும் செயல் ஆகும். மேலும் ஹனுமான் மற்றும் பைரவரை வழிபடும் பக்தர்களை சனிபகவான் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். முதல் யுகத்தில் அதாவது த்ரேத யுகத்தில் ஒரு நாள் வாயு புத்திரனின் மைந்தனாகிய ஹனுமனை சனி பகவான் பிடிக்கச் சென்றுள்ளாராம். உடனே சனி பகவான் ஹனுமனது தலையில் அமர்ந்து கொண்டு உன்னை பிடிக்கப் போகிறேன் என்று கூறினாராம். அப்போது ஹனுமான் மிகப்பெரிய பாறைகளை தனது தலையில் ஒன்றன் மீது ஒன்றாக தூக்கி வைத்தாரம், பாரம் தாங்காத சனிபகவான் தன்னை விட்டு விடும் படி கேட்டுக் கொண்டாராம். ஹனுமனும் விட்டு விட்டார். ஆனாலும் சனிபகவான் கடமை தவறாதவர் அல்லவா ! மற்றொரு முறை மீண்டும் ஹனுமனை பிடிக்க வந்து ஹனுமனிடம் கேட்டார் , உன்னை எங்கிருந்து பிடிக்க வேண்டும் என்று ? அதற்கு ஹனுமான் முதலில் காலில் இருந்து பிடித்துக் கொள் என்றாராம். சனிபகவானும் அவரது காலைப் பிடிக்க செல்லும் பொது ஹனுமான் அவரை காலுக்கு கீழே வைத்து அழுத்த தொடங்கினாராம். மீண்டும் சனிபகவான் தன்னை விட்டு விடும் படி கேட்டுக் கொண்டாராம். அதற்கு ஹனுமான் என் பக்தர்களையும், ராம பக்தர்களையும் ஒன்றும் செய்யக் கூடாது என்று சத்தியம் செய் என்றாராம். சத்தியம் வாங்கிக் கொண்டு சனிபகவானை விட்டாராம். எனவே ஆஞ்சநேயரையும் ராமரையும் இன்று வழிபாடு செய்யுங்கள். உளுந்து வடிகள், பாயாசம் செய்து படையல் இடுங்கள். நல்லதே நடக்கட்டும். மேலும் ஆஞ்சநேயருக்கு செவ்வாய் கிழமை தோறும் குங்குமம் அபிசேகம் மற்றும் வெண்ணை சாற்றுதல் மிகச் சிறப்பு. ஆஞ்சநேயரை வணங்கும் பொழுது முதலில் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லி விட்டு பின்பு தான் அனுமன் பற்றி பாடல்கள், துதிகள் சொல்ல வேண்டும். ஏன் எனில் அந்த அளவுக்கு ராமர் மீது அவர் பற்று வைத்து உள்ளார். ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஆஞ்சநேயா.
ஓம் சிவ சிவ ஓம். --  நன்றிகள் என் குருநாதருக்கு.
அணைத்து வகையான நோய்களுக்கும் ஒரு சிறந்த நமது முன்னோர்களின் மருந்து

சீன செவிவழி தொடு சிகிச்சை :- இந்த முறையும் நமது தமிழ் முன்னோர்களால் அறிமுகம் செய்யப்பட்டது ஆகும். இது போன்று மேலும் பல மருத்துவ முறைகள் நமது முன்னோர்களால் அறியப்பட்டு அந்நியர்களால் அளிக்கப்பட்டு உள்ளது. எஞ்சி இருக்கும் சிலவற்றையாவது நாமும் ஆதரித்து பலன் பெறுவோம், நமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கூறுவோம். இது போன்ற அறிய பல மருத்துவ முறைகள் இன்று உள்ளதை என் குரு நாதர் எனக்கு கூறினார் மேலும் கூறுவார். என் குருநாதருக்கு என்றென்றும் நன்றி கலந்த வணக்கங்கள். இதோ இந்த 
சென்று அறிந்து கொள்ளுங்கள்.

Thursday, 22 December 2011

சனிப்பெயர்ச்சி : - அணைத்து ராசியினருக்கும் துல்லியமான சோதிட பலன்கள்

மேஷம்: இதுவரையிலும் ஆறாமிடத்தில் இருந்துவந்த சனிபகவான்,உங்களை படுசுறுசுறுப்பாக வைத்திருந்திருப்பார்;தொழில்,வேலை எதுவாக இருந்தாலும் ஓய்வேயில்லாமல் ஓடிக் கொண்டே இருந்திருப்பீர்கள்.கடந்த ஆறுமாதங்களாக ஒரு வித டல் ஏற்படத் துவங்கியிருக்கும்.ஆமாம்,இன்று முதல் ஏழாமிடத்திற்கு சனி வருகிறார். இனி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் கூர்ந்த கவனத்தோடு செயல்படுவது அவசியம். இல்லாவிட்டால்,ஒரு வேலையை ஒரே தடவையில் முடிக்க முடியாமல் போகும்.21.12.11 முதல் 1.7.12க்குள் ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டம் தங்களை வந்துசேரும்.15.12.12 முதல் 23.1.13க்குள் உங்கள் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படும்.எனவே, மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க இப்போதே பழகுங்கள்.

ரிஷபம்:ஜன்மத்தில் கேது இருந்தாலும்,ஆறாமிட சனியால்,அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அசுர வளர்ச்சி உங்களுக்கு ஏற்படும்.வீண் செலவுகளை கட்டுப்படுத்தி,சேமிப்பை அதிகரியுங்கள்.மாணவர்கள் பாடத்தில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவார்கள்.புதுமணத்தம்பதிகள்,பெற்றோர்களாவார்கள்;ஓய்வு பெற்றவர்களுக்கு நிதிசார்ந்த பிரச்னைகள் ,குடும்பப்பிரச்னைகள் தீரும்.கலைத்துறையினர் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்துவர்.

மிதுனம்: அரை அஷ்டமச்சனியால் (அதாங்க,அர்த்தாஷ்டமச்சனி) அவதிப்பட்டவர்கள்,இனிமேல் நிம்மதியைப் பெறுவார்கள்.உங்களின் பிடிவாதத்திற்கும் கூட அங்கீகாரம் கிடைக்கும்.பலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.21.12.11 முதல் 1.7.12க்குள் பலர் சிறந்த வாழ்க்கைத்துணையை அடைவார்கள்.மணமானவர்கள்,தமது வாழ்க்கைத் துணையால் போற்றப்படுவீர்கள்.மிகச்சிறந்த நட்புகளைப் பெறுவீர்கள்.15.12.12 முதல் 23.1.13வரையிலான காலகட்டத்தில் ஒரு தேவையில்லாத பிரச்னையில் மாட்டிக்கொள்வீர்கள்.இதைத் தவிர்க்க,தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவரவும்; அல்லது ஏதாவது ஒரு சித்தர் வழிபாடு செய்துவருக!

கடகம்: ஏழரைச்சனியானது 26.6.2009 அன்றே முடிந்தாலும் பல கடக ராசிக்காரர்களுக்கு இன்னும் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழில் அமையவில்லை என்பது தான் நிஜம்.சில சமயம்,பலருக்கு சனிபகவான் மூன்றாமிடத்தில் தரவேண்டிய நற்பலன்களை தாமதமாகத் தருவார் என்பது அனுபவ உண்மை.எனவே, இந்த சனிப்பெயர்ச்சியானது கடகராசிக்காரர்களுக்கு ஒரு நிரந்தரமான வேலை/தொழிலைத் தரும் என்பது சத்தியம். அதே சமயம்,அர்த்தாஷ்டமச்சனி(அரை அஷ்டமச்சனி)யானது உங்களுக்கு ஆறுமாதங்களுக்குப் பிறகே செயல்படத்துவங்கும்.அனாவசியமான வேலைகள்/நடவடிக்கைகளை அடியோடு விலக்குங்கள்.

முக்கிய குறிப்பு :- இந்த பூமியும்,நமது பாரத நாடும் கடக ராசியில் உதயமானவையே! எனவே, 21.12.11 முதல் டிசம்பர் 2014க்குள்ளான காலகட்டத்தில் பூமியின் நிலப்பரப்பு சுருங்கும்;கடல்பரப்பு அதிகரிக்கும்.நாடுகளின் பேராசையால் உலகப்போர் வரும் சூழல் வந்திருக்கிறது.அதற்கேற்றாற்போல,வருடக்கிரகங்களான குரு,சனி போன்றவை முறையான பெயர்ச்சி ஆகவில்லை;ஆமாம்! மே 2012 அன்று தான் குருபகவான் மீனராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாக வேண்டும்.ஆனால்,நடப்பில் மே 2012 இல் மேஷத்திலிருந்து ரிஷபத்துக்குப் பெயர்ச்சியாகிறார். எப்போதும் இரண்டரை ஆண்டுகள் தான் சனிபகவான் ஒரு ராசியில் இருப்பார்;தற்போது மூன்றாண்டுகள் துலாம் ராசியில் இருக்கப் போகிறார்.சராசரிமக்கள் உணவுப்பொருட்களையும்,தங்கத்தையும் சேமித்து வைத்துக்கொள்வது அவசியம்.

கடகராசிக்காரர்களுக்கு 21.12.11 முதல் 1.7.12க்குள் ஒரு நிரந்தரமான கடன் அல்லது நோய் அல்லது எதிரிகள் உருவாகக் கூடிய காலமாக இருக்கிறது.
15.12.12 முதல் 23.1.13 வரையிலான காலகட்டத்தில் எதிர்பாராத விபத்து அல்லது குடும்ப அவமானம் அல்லது கடுமையான பிரச்னை ஏற்படும்.இறைவழிபாடும்,அன்னதானமுமே இதிலிருந்து உங்களைக் காப்பாற்றும் என்பது உறுதி.

சிம்மம்: சிங்க ராசியினரே,21.12.11 முதல் ஏழரைச்சனி முழுமையாக விலகுகிறது;இனிமேல் சுய தொழில் துவங்கலாம்;வேலையிடத்தில் துணிந்து அதிக சலுகைகளுக்கு போராடலாம்;பிரிந்த தம்பதியினர் ஓராண்டுக்குள் ஒன்று சேர்ந்துவிடுவீர்கள்;சாதாரண வேலையில் இனிமேல் இருக்கக் கூடாது.மிகச்சிறந்த நட்புகள் ஏற்படும்.பலருக்கு அரசுவேலை கிடைக்கும்.நீங்கள் இனி எப்போதும் உங்கள் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இராது.சேமிக்கத் துவங்குங்கள்;மே 2012 வாக்கில் வேலை அல்லது இட மாற்றம் சர்வ நிச்சயம்.எதெற்கெடுத்தாலும் குழப்பமடையும் மனநிலையை கைவிடுங்கள்.ஒரு தடவை காசிக்கோ,ஏதாவது ஒரு சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலுக்கோ சென்று அவரை வழிபடவும். திருநள்ளாறு அல்லது குச்சனூர் அல்லது திருக்கொள்ளிக்காடு செல்வதை விட,சனிபகவானின் குருவாகிய பைரவரை வழிபட்டால்,சனிபகவான் அளவற்ற மகிழ்ச்சியடைவார். உங்களுக்கு இழந்த அனைத்தும் திரும்பக்கிடைக்கும் என்பதை இந்த மூன்றாண்டுகளில் உணருவீர்கள்.

கன்னி: கடகராசியின் சுபாவங்களைக் கொண்ட கன்னி ராசியினரே,புறக்கணிப்பு என்ற வார்த்தையின் அர்த்தத்தை இந்த இரண்டரை ஆண்டுகளில் உணர்ந்திருப்பீர்கள்.தகுதி குறைந்த வேலையில் இருந்து நீங்கள் பட்ட அவமானங்கள்,கஷ்டங்களை யாரும் நம்ப மாட்டார்கள்.இனி அந்தக் கவலை இல்லை;இருப்பினும், அடுத்த மூன்றாண்டுகளுக்கு அசைவம் சாப்பிடுவதை கைவிட்டுவிட்டு,சனியின் குருவாகிய கால பைரவரை சனிக்கிழமைகளில் வரும் ராகுகாலத்தில்(காலை 9.00 முதல் 10.30) வழிபடவும்.கால பைரவ அஷ்டகத்தை இந்த நேரத்தில் கால பைரவர் சன்னிதியில் வாசிக்கவும்.கால பைரவருக்கு செவ்வரளிமாலை அல்லது உளுந்து வடை மாலை அணிவித்து இவ்வாறு செய்து வருக! மே 2012 இல் வர இருக்கும் ரிஷபகுருப் பெயர்ச்சியானது உங்களுக்காவே உரியது.ஆமாம்! சனியின் தொல்லை இனி 30% மட்டுமே.
21.12.11 முதல் 23.1.13க்குள் வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.மாணவர்கள் அவர்கள் எதிர்பாராத மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

துலாம்: நீதி நியாயம் என்பதை தனது சுபாவமாகக் கொண்ட துலாம் ராசியினரே!21.12.11 முதல் டிசம்பர் 2014 வரையிலான மூன்றாண்டுகளில் உங்களுக்கு ஒரு நாளானது ஒரு வருடத்தை விடவும் நீளமாக இருக்கும்.உங்களை சுய தொழில் ஆரம்பிக்க தூண்டி,உங்களின் சேமிப்பைக் கரைத்துவிடும்.பிடித்த வேலை கிடைத்தால்,எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காது;நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையாக இருந்தால்,வேலையே பிடிக்காது.இதெல்லாம் மே 2012 முதல் தான் அதுவரையிலும் சனியின் தொல்லை இராது.தவிர,இந்த மூன்றாண்டுகளில் ஜன்மச்சனியின் தொல்லை ஓராண்டு மட்டுமே! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? குருவின் பெயர்ச்சிகள் உங்களை சனியின் உக்கிரத்திலிருந்து காப்பாற்றும்.21.12.11 முதல் 1.7.12 வரையிலும்,மே 2013 முதல் மே 2014 வரையிலும் குருவின் பார்வை உங்களைப் பார்ப்பதால்,இந்த காலகட்டத்தில் ஜன்மச்சனியின் தாக்குதல் அவ்வளவாக இராது.
நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில்,எளிமையான வாழ்க்கைக்கு உங்களை தயார்படுத்துங்கள்.அசைவம் சாப்பிட்டால்,சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்;எனவே,அசைவம் தவிர்க்கவும்.உங்களுக்கு எந்த கிரகத்தின் திசாபுக்தி நடந்தாலும்,அது செயல்படாது.அனைத்தும் ஸ்தம்பித்துப்போகும்.எனவே, நீங்கள் முனி வழிபாடு செய்துவரவும்.அல்லது ஏதாவது ஒரு ஜீவசமாதிக்கு தினமும் சென்று வழிபடுவதை ஒரு வழக்கமாக்குங்கள்;அல்லது தினமும் கால பைரவர் வழிபாடு செய்வதன் மூலமாக ஓரளவு நிம்மதியான வாழ்க்கை உறுதி.

விருச்சிகம்:எல்லோரையும் சிரிக்க வைக்கும் விருச்சிக ராசியினரே,உங்களுக்கு ஏழரைச்சனி துவங்கிவிட்டாலும்,21.12.11 முதல் 1.7.12 வரையிலும் மட்டுமே விரையச்சனியின் தாக்கம் இருக்கும்.1.7.12 வாக்கில் ஏற்படப்போகும் குருப்பெயர்ச்சி உங்களை 1.7.12 முதல் ஓராண்டுக்கு பாதுகாக்கும்.அனாவசியமான கிண்டல்களை கைவிடவும்.அளவாக சாப்பிடவும்.மார்க்கெட்டிங் வேலை கிடைத்தால் உடனே சேர்ந்துவிடுங்கள்.ஏனெனில்,அலைந்து திரிந்து வேலை பார்ப்பவர்களை சனிபகவான் அவ்வளவாக பாதிப்பதில்லை;கோபப்படுவதை நிறுத்தவும் அல்லது குறைக்கவும்.ஏனெனில்,அடுத்த ஆறாண்டுகளுக்கு உங்களின் கோபத்திற்கு மதிப்பிராது.பிறரின் காதலுக்கு உதவி செய்யக்கூடாது.தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருக!
15.12.12 முதல் 23.1.13 வரையிலான காலகட்டத்தில் வீட்டை விட்டு நீங்கள் விலகிச்செல்லும் சூழ்நிலை உருவாகும்.எச்சரிக்கை.

தனுசு: 21.12.11 முதல் 1.7.12க்குள் உங்கள் வாழ்வில் மிக முக்கியமான திருப்பு முனை ஏற்படப்போகிறது.நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த ஏக்கங்கள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் நிறைவேறிவிடும்.அனைத்து எதிர்ப்புகளையும் முறியடித்துவிடலாம்.ஆனால்,1.7.12க்குப் பின்னர்தான்,நமது ஆசைகள் நிறைவேறிவிட்டன என்பதை உணருவீர்கள்.

மகரம்: அஷ்டமச்சனி 26.6.2009 அன்றே முடிந்துவிட்டாலும்,பல மகர ராசியினருக்கு இன்னும் ஒரு நன்மையும் கிடைக்க வில்லையே என்று ஏங்குகிறீர்கள் இல்லையா? பத்தாமிடத்துக்கு உங்கள் ராசி அதிபதி வந்தாலும்,அவர் உச்சமாகப்போவதால்,பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.வராக்கடன் வசூலாகும்.2021 வரையிலும் முன்னேற்றம் மட்டுமே உண்டாகும்.திருமணத்தடை நீங்கி,திடீரென திருமணம் நடைபெறும்.சுபச்செலவுகள் ஏற்படும்.அதற்கேற்ப வருமான வழிமுறைகளும் உண்டாகிவிடும்.எல்லா கடன்களையும் அடைத்துவிடலாம்.அவமானம் இனி உங்களை நெருங்காது.
கும்பம்: அஷ்டமச்சனி முடிந்தது.எவ்வளவு பாடு பட்டீர்கள்.உங்களையே சனிபகவான் போதுமான அளவுக்கு ஆழம் பார்த்திருப்பார்.நேர்மையாக வாழ்ந்தவர்களுக்கே இந்த சோதனை எனில்,சுயநலமாக வாழ்பவர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள்?
உங்களுக்குரிய அங்கீகாரம் குடும்பம்,வேலை ,தொழில்,சமுதாயத்தில் கிடைக்கத் துவங்கும்.தொழிலை விரிவுபடுத்தலாம்.சேமிப்பு கைகொடுக்கும்.கல்வி,குழந்தைகள்,குடும்பம் என அனைத்திலும் மகிழ்ச்சி,மகிழ்ச்சி,மகிழ்ச்சி மட்டுமே!!தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தால்,கிடைக்க வேண்டிய லாபங்கள் நான்கு மடங்காக கிடைக்கும்.செக் பண்ணிப் பார்க்கலாமா?

மீனம்: சிக்கனத்தின் அவசியத்தை புரிய வைக்கவே இந்த சனிப்பெயர்ச்சி ஏற்பட்டுள்ளது.ஆமாம்! 1.7.12 முதல் அஷ்டமச்சனியின் தாக்கத்தை உணருவீர்கள்.அதற்குள் ஒரு நிரந்தர வேலை அமைந்தாலும்,சிறுசிறு விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்கவும்.மூத்தவர்கள்,மூத்த உடன்பிறப்புகளுடன் அனுசரித்துப் போவது அவசியம்.இல்லாவிட்டால் தனிமைபடுத்தப்படுவீர்கள்.சனிக்கிழமை தோறும் அனாதைகள்,உடல் ஊனமுற்றோர்களுக்கு ஒரு வேளை மட்டுமாவது அன்னதானம் செய்யுங்கள்.தினமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள்.ஒம்சிவசிவஓம்

எனது குருநாதருடைய வாக்கு :-  இந்த சனிப்பெயர்ச்சிப் பலன்கள் முழுமையான பலன்கள் அல்ல;சனிபகவான் சிலருக்கு எதிரிடையான பலன்களையும் தருவது வழக்கம்.இதுவரையிலும் நாம் பிறருக்கு தீங்கு தந்திருந்தால்,அதன் தண்டனையை நமது வாழ்க்கையில் ஜன்மச்சனி,அஷ்டமச்சனியில் அனுபவித்தே ஆகவேண்டும் என்பதே விதி.இதை மாற்றிட முடியாது.சனி பகவான் தான் மனிதர்களின் ஆயுள் மற்றும் தொழிலுக்கு அதிபதி. யாருக்கும் தேவையில்லாமல் தீமை செய்யாதவர்களுக்கும்,நேர்மையானவர்களுக்கு சனிபகவான் ஒரு போதும் கஷ்டங்களைத் தருவதில்லை என்பதே அனுபவ உண்மையாகும்.

சனியின் குரு பைரவர் ஆவார்.பைரவர் வழிபாடு செய்பவர்களை சனிபகவான் தொல்லை தருவதில்லை;ஏனெனில்,சனிக்கு வாத நோயை நீக்கி,கிரகபதவியை அளித்தவர் பைரவர் ஆவார். “பைரவரை யார் தொடர்ந்தும்,தினமும் வழிபடுகிறார்களோ அவர்களை நான் வதைக்க மாட்டேன்” என்று பைரவரிடம் சனிபகவான் சத்தியம் செய்திருக்கிறார்.பைரவர் வழிபாட்டினை 25 நூற்றாண்டுகளுக்குப் பிறகு,மீண்டும் நமக்காக அறிமுகப்படுத்திய எனது குருவின் மானசீக குரு சிவநிறை,பைரவபுத்திரன் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கும்,அவரது ஆயுள் கால சீடரும்,எனது ஆன்மீக குருவுமாகிய திரு.சிவமாரியப்பன் அவர்களுக்கும் கோடி கோடி கோடி கூகுள் நன்றிகள்!!! மேலும் ஆஞ்சநேய வழிபாடும் சால சிறந்தவை.
ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம்

Tuesday, 13 December 2011

மரம் நடுவோம்

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் சுகாதாரத்திற்கும் முக்கிய பங்கு அளிப்பது இயற்கை வளங்களே. அத்தகைய வளங்கள் இன்று நம் நாட்டில் அதாவது தமிழ்நாட்டில் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை தடுக்க அரசு முன்வர வேண்டும். அண்மையில் மக்கள் நலம் பேணும் ஜெயலலிதா அரசு பதினாறு லட்சம் மரக்கன்றுகளை நட முன்வந்துள்ளது. இது மிகவும் வரவேற்க்கத்தக்க விஷயம் ஆகும். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலைகளுக்கு இது போதாது. நமது முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் 2020 ஆண்டிற்குள் இந்தியாவில் 100 கோடி மரம் நட வேண்டும் என பாடுபட்டு வருகிறார். இதற்கு ஒத்துழைப்பு தரும் விதமாக பல்வேறு அமைப்புகளும், மனிதர்களும் இந்த புண்ணிய செயலை செய்து வருகின்றனர். இவர்களோடு நாமும் சற்று கை கோர்ப்போமா? ஆம் நீங்களும் மரம் நடலாம். இது பெரும் புண்ணிய செயல்களில் ஒன்று. மரம் வளர்த்தல், ஏழைக்கு கல்வி அறிவித்தல், அன்ன தானம் செய்தல், முதியோர், உணமுற்றோர்க்கு, உதவி செய்தல் மிகப் பெரும் புண்ணிய செயல்கள் ஆகும். இவர்களால் இவர்களது தலைமுறைகளும் நலம் பெறுவார்கள். காரணம் இல்லாமலா நம் முன்னோர்கள் கோவில்களிலும், பொது இடங்களிலும் மரம் நட்டு வளர்த்தனர். நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயல்களிலும் ஆன்மீகமும், அறிவியலும் சேர்ந்து இருக்கிறது பெருமைப்பட வேண்டிய விஷயம் ஆகும். எனவே தான் இன்று ஆஸ்திரேலியர்கள் அரச மரம் நாடும் முயற்சியில் களம் இறங்கி உள்ளனர். எதற்கு? சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க! இன்று உலக நாடுகள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் முக்கியமானது புவி வெப்பமடைதல். அதை தடுக்க மரம் நடுவது மட்டுமே தீர்வு. உங்களுக்கும் விருப்பம் இருந்தால் www.greenkalam.in என்ற இணையத்தளத்தில் தொடர்பு கொள்ளவும். இத்திட்டத்தை தமிழ்நாட்டில் துவங்கி வைத்தவர் நமது சின்னக்கலைவாணர் விவேக் அவர்களே. அவர்களுக்கு நம் மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். மரம் வளர்ப்போம், மலை பெறுவோம், மனித நேயம் காப்போம். இந்த ஆன்மீக எக்ஸ்பிரஸ் வலைப்பூவை உருவாக்கும் திட்டத்தை எனக்கு அளித்த என் குருநாதருக்கு என்றும் என் நன்றிகள்.

Friday, 9 December 2011

முருகர் நிகழ்த்திய அற்புதம்

அட என்னப்பா ! கடவுளாவது இருக்கிறதாவது, கடவுள் இருந்தா அவரை எனக்கு முன்னாடி ஒரு தடவ வர சொல்லு பார்க்கலாம். நாத்தீகவாதிகளும், பிரார்த்தனைப் பற்றி தெரியாதவர்களும் அடிக்கடி கூறும் கருத்து இது. இந்த கருத்து அவர்களின் இயலாமையை குறிக்கிறது. அவர்கள் பேசுவது அந்தக் கடவுள்ளுக்கே கேட்டு விட்டதோ என்னவோ பரம்பொருளின் மைந்தனாகிய அந்த முருகப் பெருமானே தன்னுடைய பக்தருக்காக நேரில் வந்து வைத்தியம் பார்த்துள்ளார். என்ன நம்ப முடியலையா ? பொய்ய சொன்னாலும் பொறுக்க மாதிரி சொல்லனும்னு நெனைக்ரிங்களா ? சில பேரு நெனச்சாலும் நெனைப்பாங்க. ஏன்னா  கலி காலம் அப்டி. எதயுமே சன் டிவி  இல்ல சயின்ஸ் இல்ல வெள்ளைக்காரன் சொன்ன தானே நம்புவிங்க. இந்த சம்பவம் நிகழ்ந்தது வேறு எங்கும் இல்லை சென்னையில் தான். ஆம் சென்னை எழும்பூர் அருகில் உள்ள ஒரு பிரபல அரசு பொது மருத்துவமனையில் சரியாக 83 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது. இங்கு பாம்பன் சுவாமிகள் ஒரு நோயினால் அவதியுற்று சேர்க்கப்பட்டார். தீவிர முருக பக்தரான அவர் தமிழில் புலமை பெற்றும் திகழ்ந்தவர் ஆவார். அந்த நோயின் வலி தாங்காமல் ஒரு நாள் மதிய வேலையின் பொழுது அவர் முருகா என்ன இது சோதனை ? உன் பக்தன் எனக்கே இவ்வளவு சோதனை தருகிறாய் ? நோயை தீர்த்து விடு என்று புலம்பி விட்டு உறங்கி விட்டாராம். அவர் கேட்டுக்கொண்டதடற்கு இணங்க சரியாய் அரை மணி நேரப் பொழுதிலேயே சாட்சாத் அந்த முருகப் பெருமானே அந்த மருத்துவமனைக்கு வந்து அவருக்கு வைத்தியம் செய்தார். அவருடைய நோய் முற்றிலும் குணமாகியது. முருகருக்கு நன்றி சொல்லி விட்டு அவர் மீண்டும் ஆன்மீகப் பணிகளை துவங்கி விட்டார். என்ன ஒரு அற்புதம் பார்தீர்கள ? இதில் இருந்து நீங்கள் உணர வேண்டியது என்னவென்றால் அதாவது இந்த கலி காலத்திலேயே அதுவும் இவ்வளவு வக்கிரக்காரர்கள் இருக்கும் அந்த சென்னையிலேயே 83 வருடத்திற்கு முன்னால் கடவுளே தன பக்தனுக்காக வந்தார் என்றால், உண்மையான பக்திக்கு கடவுள் எப்போதும் எந்நேரமும் காட்சி அளித்து துயர் தீர்ப்பார். இன்றும் அந்த மருத்துவமனையில் பாம்பன் சுவாமிகள் சிறப்பு பிரிவு ( PAAMBAN SWAAMIGAL SPECIAL WARD ) என்றே அழைக்கப்படுகிறது. வாழ்க தமிழ் முன்னோர்கள். இந்த செய்தி இன்னைக்கு எதனை பேருக்கு தெரியும் இந்த சென்னையில் ? முதல் முறை கேள்விப்பட்டதும் பலர் அதுவும் தமிழ் மக்களே நம்ப மறுத்தார். ஆனால் ஆதாரத்துடன் கூறிய பிறகு ஏற்று கொண்டார்கள். உங்களுக்கு ஆதாரம் வேண்டுமெனில் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். 

Wednesday, 7 December 2011

Who is Bodhidharma ?

போதி தர்மர் இந்த மகானைப் பற்றிதான் அனைவரும் கேள்வி எழுப்பிக் கொண்டு இருகின்றனர்.  யார் இந்த போதி தர்மர் ? கி. பி. 6 ஆம் நூற்றாண்டில் நம் தமிழ் மண்ணில் பிறந்து வாழ்ந்து சீனர்களுக்காகவும் நம் இந்திய மக்கள் நலன் கருதியும் சீன தேசம் சென்று தனது அறிவாற்றலையும், போர்க்கலையையும் சீனர்களுக்கு கற்றுக் கொடுத்தார். அந்த மகான் 16௦ வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்ததாக வரலாற்றால் கூறப்படுகிறது. உண்மையும் அதுவே. சீனாவில் இன்று புத்த மதம் இந்த அளவிற்கு ஓங்கி நிற்பதற்கு காரணமும் அவரே. ஜப்பானிய மற்றும் சீன மக்கள் அவர் மீது கொண்ட பற்றுதல் காரணமாகவும், அந்த கலையை நேசித்தான் மூலமாகவும் 'தாமோ' என்று அவருடைய கலைக்கும் அவருக்கும்  பெயர் சூடி உள்ளனர். மேலும் பல கலைகளுக்கும் வெவ்வேறு தமிழ் பெயர் வைத்தனர். ஆனால் காலப்போக்கில் சீனாவில் ஏற்பட்ட மன்னராட்சி மற்றும் சில காரணங்களால் பொதுவாக 'குங் பு' என்று பெயர் சூடி விட்டனர்.   அத்தகைய போதி தர்மரைப் பற்றி இன்று நமக்கு எத்தனை பேருக்கு தெரியும் ? தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதில்  நம் தவறு எதுவும் இல்லை. ஏனெனில் நமது ஆட்சி முறைகளும் கல்வி திட்டங்களும் அந்த அளவிற்கு உள்ளன. இன்று நேருவைப் பற்றி தெரிந்த அளவிற்கு யாருக்கும் சாவர்கர் பற்றி தெரியாது. காந்தி பற்றி தெரியும் அளவிற்கு யாருக்கும் வாஞ்சிநாதன் பற்றி தெரியாது. நம் தமிழ் பெரியோர்களும் பொக்கிசங்களும் அந்த அளவிற்கு அளிக்கப்பட்டதுடன் மறைக்கவும் பட்டு இருக்கிறது. இந்த அறிய தகவலை இந்த உலகிற்கு தெரியப்படுத்திய முருகதாஸ் அவர்களுக்கு என்னுடைய மற்றும் தமிழ் பற்று உள்ளவர்களின் கோடி நன்றிகள். இந்த ஏழாம் அறிவு திரைப்படத்தைப் பார்த்து விட்டு ஜப்பானில் இருக்கும் போதி தர்மரின் சீடர்களின் வம்ச வழியினை சேர்ந்தவர்களும், அவருடைய ரசிகர்களும் வீரத்திற்கும், பாசத்திற்கும், சிவ வழிபாட்டிற்கும் பெயர் பெற்ற காஞ்சிபுரத்திற்கு வருகை தர உள்ளனர். அங்கு அவரைப் பற்றி மேலும் பல அறிய தகவலை கொடுத்து மானமிகு மகான் போதிதர்மர் நினைவாக ஒரு நினைவு மண்டபம் எழுப்ப உள்ளனர். (எதற்கெடுத்தாலும் அண்டை நாடு உடன் சண்டை போட்டு கொள்வதையும், எல்லாவற்றுக்கும் தாமே மேலாக இருக்க வேண்டும் என்று ஆசைபடும் எண்ணமும், கொண்ட அந்த மக்களே தமிழ்நாட்டிற்கு வந்து போதி தர்மருக்கு நினைவிடம் கட்ட நினைப்பது வரவேற்கத்தக்கது ). உடனே சொல்லுவிங்களே நமாளுங்களும் இருக்கானுங்களே இப்டி ஏதாவது  பன்னுனானுங்கலன்னு உங்க வாய்ஸ் எனக்கு கேட்குது. சும்மா விடுவோமா நாம? போதி தர்மர் பற்றி மேலும் உளவியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருகின்றனர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர். விரைவில் அந்த தமிழ் அமைப்பு " போதி தர்மன் சென்டர் பார் இந்தியன் கிளாஸ் " என்று ஒரு கலை கூடத்தை அமைக்க உள்ளனர். அவர்களுக்கு நம் நன்றிகளை தெரிவித்து கொள்வோம். அங்கு அவருடைய அறிய கலையை கற்று தரப்படும். இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே.

Tuesday, 6 December 2011

கிரிவலம் ஒரு பொன்னான வாய்ப்பு.


கிரிவலம் வருவதன் நன்மைகள் :- உங்கள் அனைவருக்கும் திருவண்ணாமலை நன்றாக தெரியும் என்று நம்புகிறேன்.  அந்த திருவன்னமலையின் மகிமைகளையும், பெருமைகளையும் சொல்ல ஓரிரு பக்கங்கள் போதாது. என்றாலும் அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த மலை முதல் யுகத்தில் தங்க மலையாக இருந்தது என்றும் மனிதர்களின் மனம் மாற மாற மழையும் மாறி விட்டு என்று குறிப்புகள் கூறுகின்றன. திருவண்ணாமலை கிரிவலம் வரும் அனைத்து பக்தர்களுக்கும் வேண்டிய நியாயமான ஆசைகள் நிச்சயம் நிறைவேறும். இன்றளவும் இந்த கலி காலத்திலும் சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மலையை 

நாமும் சற்று வளம் வருவோமா? கிரிவலம் செல்வதன் மூலம் நம் 

நம்முடைய அறியாமல் செய்த பாவங்களை கரைப்பதுடன் நமது 

முன்னோர்கள் செய்த பாவத்தையும் கரைத்து விடலாம். கிரிவலப் பாதை 

15 கிலோ மீட்டர் ஆகும். இந்த பாதை முழுவதும் நாம் வளம் வரும் 

பொழுது யாரிடமும் பேசாமல் அதை ஒரு பாக்கியமாகக் கருதி வளம் 

வந்தால் நமது முற்பிறவி பாவங்கள் அடிப்படியாக விலகி விடும். 

கிரிவலம் செல்லும் பொழுது ஒரு சிறு விசயத்திற்காக கூட மனம் கேட்ட 

விசயங்களை எண்ணுதல் பாவத்திலும் பாவம் ஆகும். மேலும் நீங்கள் 

முன்னர் சொல்லப்பட்ட மந்திர ஜபதினை திருவண்ணமலையில் செய்தல் 

மிக நன்று. ஏனெனில் மந்திர ஜெபங்களை பொறுத்த வரையில் 

பழமையான சிவாலயங்களில் செய்வது, மாட்டு தொளுவகளில் செய்வது, 

மலை மீது உள்ள கோவில்களில் செய்வது அதிக புண்ணியத்தையும் 

விரைவான பலனையும் கொடுக்கும். மானிடனாகப் பிறந்த ஒவ்வொரு 

உயிர்க்கும் மறு பிறவி அறுப்பது சிவபெருமான் அவர்களே. மனித 

உயிர்களின் முக்கிய நோக்கமும் முக்தி அடைவதே .அந்த முக்தி 

அடைவதர்க்காகவே இன்றும் கால பைரவருடைய ஆட்சி பகுதியான 

காசியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறப்பை எதிர்பார்த்து காத்து 

கொண்டு இருகிறார்கள். இந்த கலி உகத்தில் நடக்கும் நியாயங்களையும். 

தீமைகளையும் பார்க்கும் பொழுது யாருக்க்குதான் மனித பிறவி எடுக்க 

புடிக்கும் ? எனவே அனைவர்க்கும் நல்லது செய்வோம் நல்லதே 

நினைப்போம் நல்லதே நடக்கும். திருவண்ணமலையில் கிரிவலம் வரும் 

பொழுது அன்ன தனம் அழிப்பது மிகவும் புண்ணியம் அளிக்கும் 

செயல் ஆகும். மேலும் வஸ்திர தானங்கள், கோதானம்  செய்வதும் பெரும் 

சிறப்பு ஆகும். என்றாலும் எல்லாராலும் கோதானம் செய்வது முடியாட 

காரியம். எனவே அங்கு இருக்கும் சாதுக்களுக்கு அன்ன தானம் அளிப்பது 

கோடிகணக்கான புண்ணியங்களையும் தேடி தரும். இங்கு கிரிவலம் 

வருவதனால் மற்ற பல நன்மைகளும் அடங்கி உள்ளன. மனம் தூய்மைப் 

படும். மூலிகைகள் மலையெங்கும் இருப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் 

நல்லது. அதிர்ஷ்டம் உள்ளவர்களும், புண்ணியம் செய்தவர்களுக்கும் 

சித்தர்களின் தரிசனம், ஆசி  கிட்டும். கிரிவலத்தை பொறுத்த மட்டில் எங்கு 

துவங்குகிரோமோ அங்கே கிரிவலம் முடிக்க வேண்டும். கிரிவலம் 

செல்லும் பாதையில் நவதானியங்கள் தூவுவதும் (நடைபாதையில் 

தூவுடல் கூடாது ) எங்கு தூவினால் தானியங்கள் முளைக்குமோ அங்கு 

இடம் பார்த்து தூவல் வேண்டும். அவ்வாறு செய்தால் அந்த தானியங்கள் 

வளர வளர நமது நவக்ரஹ தோஷங்கள் நிவர்த்தி படும். மேலும் 

நவக்ராஹங்களின் தாக்கங்களும் குறையும். கிரிவலம் செல்லும் பாதை 

முழுவதும் இரண்டு கைகளிலும் இரண்டு ருத்ராட்ஷம் வைத்து கொண்டு 

மஞ்சள் துணி உடுத்தி கொண்டு ஓம் சிவ சிவ ஓம் என்று ஜெபித்தவாறு 

சென்றால் அதை விட பெரும் புண்ணியம் ஒன்றும் இல்லை. மேலும் 

கிரிவல சூட்சுமங்களில் ஒன்று நாம் கிரிவலம் செல்லும் பொழுது 

நம்முடன் சித்தர்களும் தேவர்களும் கிரிவலம் வருவார்கள். நமது 

முற்பிறவி பயன்களின் படி நமக்கு அவர்களின் ஆசி கிட்டும். இந்த 

முறையும் எனக்கு எனது குருநாதரால் அறிமுகம் செய்யப்பட்டது 

ஆகும். அனைவரும் கிரிவலம் செல்க ! மலையே சிவனாக இருக்கும் 

அண்ணாமலையின் அருள் பெருக. எனக்கு இந்த அறிய வாய்ப்பை 

கொடுத்த என் குருநாதருக்கு கோடி நன்றிகளுடன் 

வணக்கங்கள்.

உங்கள் பிரச்சனைகள் விரைவாக தீர இதோ ஒரு எளிய வழிமுறை.

வணக்கங்கள், அன்பான தமிழ் மக்களே தங்கள் அனைவர்க்கும் உள்ள பிரச்சினைகள் நீங்கவும், இறை அருள் கிடைக்கவும் இதோ ஒரு அறிய வாய்ப்பு. இதை என் குருநாதர் உதவியுடன் நான் அறிந்து பல பயன்களை பெற்றுள்ளேன். அதே போல தமிழ் சகோதிரி, சகோதரர்களாகிய உங்களுக்கும் இதை அறிமுகம் செய்து வைப்பதில் பேரு மகிழ்ச்சி அடைகிறேன். முன்பெல்லாம் திரேத யுகத்தில் இறை வழிபாட்டிற்கு மிகுந்த கட்டுபாடுகள் இருக்கும். அனால் இப்பொது சொல்லப்படவுள்ள  இந்த முறை மிகவும் எளிமையான மற்றும் விரைவில் பலன் அளிக்க கூடிய முறையாகவும் இருக்கும். இதற்கு தேவையான கட்டுபாடுகள் 3 மட்டுமே. ஒன்று அசைவ உணவு தவிர்க்க வேண்டும். இரண்டு மது வகைகளை விட்டு விட வேண்டும், மூன்றாவது பேராசை இருத்தல் கூடாது.  இந்த மந்திர ஜபத்தினை ஜெபிக்கும் வழி முறை தெரிந்து கொள்ளுங்கள். முதலில் இரண்டு மஞ்சள் நிற துண்டு மூன்று ருத்ராத்ஷம் (முகங்கள் முக்கியமல்ல) பெரும்பாலும் 5 முகம் கிடைப்பது எளிது . ஒன்று கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். மற்ற இரண்டையும் உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து கொள்ளவும். பூஜை அறை இல்லாத batchelours சுத்தமான இடத்தில வைத்து கொளவும். தினமும் உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் 15 நிமிடங்கள் ஒதுக்கி வைத்து கொள்ள வேண்டும். ஜெபம் தொடங்கும் முன்பாக ஒரு மஞ்சள் நிற துண்டை இடுப்பில் கட்டி கொள்ளவும், மற்றொன்றை தரையில் விரித்து அதன் மேல் அமரவும். மீதம் இருக்கும் இரண்டு ருத்ராத்ஷங்களை இரண்டு உள்ளங்கைகளிலும் வைத்து மடக்கி கொள்ளவும். (கிழக்கு நோக்கி அமர்வது சிறப்பு.)  இப்போது ஓம்  உங்கள் குல தெய்வத்தின் பெயரை சொல்லி நமக என்று சொல்லி கொள்ள வேண்டும் பின் ஓம் கணபதியே நமக என்று சொல்லி கொள்ள வேண்டும் அடுத்து ஓம் உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை சொல்லி நமக என்று சொல்லி விட்டு உங்கள் நியாயமான வேண்டுதலை சொல்லி கொள்ள வேண்டும். உதாரணமாக என் சம்பளம் தற்போது பத்து ஆய்ரமாக உள்ளது விரைவில் அது இருபது ஆய்ரமாக வேண்டும் அல்லது பதவி உயர்வு வேண்டும் என்று சொல்லி விட்டு ஓம் சிவ சிவ ஓம் என்று 15 நிமிடங்கள் மனதிற்குள் கண்களை  மூடிக்கொண்டு ஜெபம் செய்ய துவங்க வேண்டும். உண்மையான பக்திக்கும், பிரார்த்தனைக்கும் கிடைக்காதது ஒன்றுமில்லை என தமிழ் பெரியோர்கள் கூறி இருக்கிறார்கள். முதலில் துவங்கும் பொழுது  சற்று கடினமாக இருக்கும் ஆனால் நாளடைவில் அது பழகி விடும். தொடர்ந்து செய்பவருக்கு முக்தியும், மோட்சமும் கிட்டும். உங்கள் நியாயமான கோரிக்கைகள்  விரைவில் நிறைவேறும். எவ்வளவோ வெட்டி பேச்சு பேசும் நேரத்தையும், சோம்பேறித்தனமாய் செலவு செய்யும் நேரத்தையும் விட்டு விட்டு இதை முயற்சி செய்யலாம். இந்த அறிய மந்திர ஜெபத்தின் மூலம் பலன் அடைந்தவர்கள், அடைந்து கொண்டு உள்ளவர்கள் ஏராளம். நீங்களும் செய்து பலன் பெருக. தங்கள் அனுபவங்கள் மற்றும் சந்தேகங்களையும்  என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவும். இந்த முறையை எனக்கு அறிமுகம் செய்து வைத்த ஆன்மீகப்பெருங்கடலில் முத்து எடுத்து கொண்டு இருக்கும் எனது குருநாதருக்கு கோடனும்கோடி நன்றிகள். நன்றி வணக்கம்.

Monday, 5 December 2011

அனைவர்க்கும் வணக்கம்

அனைவர்க்கும் வணக்கம் 
மக்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். இன்றைய உலகில் மனிதன் வாழ்க்கை என்பது இயந்திர வாழ்க்கை என்றாகி விட்டது. இந்த பரபரப்பான கணினி மாயம் ஆகி விட்ட சூழலில் எனது குருவின் உதவியோடு நான் இந்த நற்சேவையை தொடங்க உள்ளேன். என்னால் இயன்ற அளவு ஆன்மிகம் மற்றும் எனது குருவின் அனுபவங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தங்கள் அனுபவங்களையும் உங்களுக்கு தெரிந்த நல்ல செய்திகளையும் மின்னஞ்சல் செய்தல் இதை வாசிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். அனுப்ப வேண்டிய முகவரி :- 

aanmeegaexpress@gmail.com