Tuesday, 29 January 2013

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?


பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம் !!!

நான் சமீபத்தில் வலைத்தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே என்னை
இந்த பதிவு எழுத தூண்டியதுபுரட்சி கரமான திருமணம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் ஒரு முன்னணி நகரில்
நாடு ரோட்டில் தாலி இல்லாமல்மந்திரம் ஓதாமல்சம்ப்ருதாயங்கள் இல்லாமல் நடத்தினர்என் தாய் தமிழ் நாட்டில் நடந்த இந்த கூத்தைபார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா என தெரியவில்லைதமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மைபொருளும் கலந்தே இருந்தனநானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்ததுஇப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன்இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும்பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பாட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம்ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும்திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர்அதில் யார் எப்படி என்று தெரியாதுஎனவே தான் மனப்பென்னிற்கும்மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர்இதை சில நாடுகளும்தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது.  மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல்காரணங்களுக்காகவேதங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலிதங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா ? மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவேஇதில்வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லைகோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவேகோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவுஇடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும்மேலும் கோபுரகலசங்களும் இடி தாங்கியாகவே செயல் பட்டு வருகின்றனபிறகு ஏன் இடி தாக்குகின்றது என கேட்கின்றீர்களா ? முறையான பராமரிப்புஅற்ற காரனங்களுக்ககவே
அவ்வப்பொழுது அப்படி நடக்கின்றதுமுழுமையான ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்கள் இருக்கும் சில குறிப்பிட்ட
பகுதிகளில்சுற்று வட்டார பகுதிகளில் இடி தாகும் அபாயம் இல்லைசும்மாவா சொன்னாரு பாரதியார் கோவில் இல்லாத
ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று ? இவை எதுவும் தெரியாமல் பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டு தானும் நாசமாவதுடன் மற்றவர்களையும் கெடுக்கின்றனர்.

Monday, 28 January 2013

ஜோதிடக் கேள்விகளும்,அதற்குத் தகுந்த பதில்களும்

?: ஒரு சுனாமியில், ஒரு புயலில், ஒரு விபத்தில் பலர் உயிரிழக்கின்றனர்.அனைவரின் ஜாதகமும் ஒன்றாக அமைகிறதா?
!! தனி மனித ஜாதகத்தைப் போல் நாடுகளுக்கும்,நகரங்களுக்கும் ஏன் கிராமங்களுக்கும் கூட ஜாதகம் உள்ளன.இதனைக் கணித்துக்கூறும் முறைக்கு MUNDANE ASTROLOGY என்று பெயர்.அதன்படியே ஒரு நாட்டுக்கோ அல்லது நகரத்திற்கோ சுனாமி வெள்ளம் போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.ஒட்டு மொத்த பாதிப்பு பற்றி தனி மனித ஜாதகம் கூறுவதில்லை;


? ஜாதகம் பார்த்து திருமணம் செய்த பல ஜோடிகளுக்கு விவாகரத்து ஏற்படுவதற்கு யார் பொறுப்பு?
!!! “திருமணம் செய்வது கூட ஜோதிடர்கள் நன்மைக்காகத் தான்.விவாகரத்தை ஏற்படுத்துவது கூட ஜோதிடர்களால் தான்.இதற்கெல்லாம் ஜோதிடர்களே பொறுப்பு.வரதட்சணை வாங்குவது கூட ஜோதிடர்களே!
பெண்ணை நேருக்கு நேர் பார்த்து மணம் செய்து கொண்ட ஆண் கூட திருமணம் முடிந்ததும், ‘பெண்ணை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று கூற வைப்பது கூட ஜோதிடர்கள் தான்.விவாகரத்து நோட்டீஸ் தயார் செய்து அனுப்பவது  கூட ஜோதிடர்கள் தான்.நீதி மன்றத்தில் டைவர்ஸ் வழங்குவது கூட ஜோதிடர்கள் தான். . .”விட்டால் இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக் கணைகளை அப்பாவி ஜோதிடர்கள் மீது தொடுப்பீர்கள் போலிருக்கிறது.
வரதட்சணை பேரத்தில் சிறிதளவு வாட்டம் ஏற்பட்டாலும், பெண் பிடிக்கவில்லை;பணம் போதவில்லை; என்றெல்லாம் கூறுவதை விட்டுவிட்டு பொருத்தமில்லை என்று ஜோதிடர் கூறிவிட்டார் என்று தட்டிக்கழித்து எதற்கெடுத்தாலும் ஜோதிடர்களையே பழிசுமத்தும் போக்கு என்றுதான் நீங்குமோ தெரியவில்லை;
நூற்றுக்கு எத்தனை சதவீதம் பேர் உண்மையான பொருத்தம் பார்க்க வருகிறார்கள்? எல்லாம்  பேசி முடித்துவிட்டு உப்புக்குச் சப்பாணியாய்  “பொருத்தம் பாருங்கள்; முதலில் திருமணத்திற்கு நல்ல நாளைப்  பாருங்கள்;அதுவும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வேண்டும்” என்று அதிரடி ஆணை பிறப்பிக்கும் பலரின் முன்னிலையில் ஜோதிடர்கள் அற்பங்களாய்த்தான் தெரிவார்கள்.
நம் நாட்டில் மனமொத்த தம்பதிகள் பல கோடி பேர்கள் வாழ்கிறார்கள்;அதற்கெல்லாம் எப்படி ஜோதிடர்கள் காரணமில்லையோ அப்படித் தான் பிரிவினைக்கும் அவர்கள் காரணமில்லை;


?குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் யாருமே கிடையாது;அறிவியல் வளர்ச்சியில் செயற்கைக் கருத்தரிப்பு கூட வந்துவிட்டது;ஜாதகப்படி குழந்தை இல்லை என்று எப்படி கூற முடியும்?
!! செயற்கைமுறையில் கருத்தரிப்பு, விந்து வங்கியின் துணையோடு நடக்குமெனில்,அவருக்கு குழந்தை உண்டு என்று எப்படி கூற முடியும்?


?விதிப்படி தான் எல்லாம் நடக்கும் எனில் ஏன் ஜோதிடம் பார்க்க வேண்டும்?
!! உங்கள் வினா வேடிக்கையாக இருக்கிறது.உணவு  உண்டப்பின்னும் மீண்டும்  பசி வரும் என்பதை அறிந்திருந்தும் ஏன் சாப்பிட வேண்டும்? என்று கேட்பதைப்போல இருக்கிறது.விதிப்படி எல்லாம் நடக்கும் என்பதால் தான் அந்த விதியின் போக்கை ஓரளவு தெரிந்து கொள்ள பார்க்கிறோம்.

ஆன்மீகக்கடலின் கருத்து:விதியை தொடர்ந்த இறைவழிபாடு,மந்திரஜபம்,மனக் கட்டுப்பாடு போன்றவற்றால் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது குறைக்க முடியும்.இதற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன.இந்த முயற்சிகள் மூலம் மனித வாழ்க்கையிலும் ஜனநாயகத்தை  கொண்டு வந்த ஸ்ரீகால பைரவருக்குத் தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.ஒருவேளை அப்படி ஏதும் இல்லாவிட்டால் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் நரகமே!

?பரிகாரம் உண்மையா?
! பரிகாரம் உண்மைதான்.அதைப் பரிகாசம் செய்வதில் தான் உண்மையில்லை;காலில் காயம் பட்டால் பரிகாரமாக கட்டுப்போடுவது கூட பரிகாரம் தானே?


?சோதிடம் தன்னை இகழ் என்று பாரதி கூறியுள்ளாரெ?
! இந்த வினாவை ஒரு சமயம் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் என்னிடம் கேட்டார்.நான் கூறிய பதில், “பாரதி கடவுளை வணங்கச் சொன்னார்; தாங்கள் முதலில் அவரது பாடல்களின் படி கடவுள் நம்பிக்கையை மனதிற்கொண்ட பிறகு இந்த வினாவிற்கு வாருங்கள்;கடவுள் நம்பிக்கை பூரணமாக ஏற்பட்ட பாரதி ஜோதிடத்தை இகழ்வது சித்தர்களது உணர்வை எட்டியதால் தான்.பக்தியாலும் ஒரு மேம்பட்ட நிலை ஏற்படும் போது,
நட்ட கல்லை தெய்வமென்று
நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றிவந்து மொண மொணன்று
சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும்  பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில் என்று பேசத் தோன்றும்.

நன்றி: ஜோதிட அரசு,மாத இதழ்,பக்கம் 70,வெளியீடு பிப்ரவரி 2013

ஓம்சிவசிவஓம்


நன்றிகள் : குருநாதர்.,

ஜாதிகள் வந்தது எப்படி ?


ஜாதிகள்  இந்தியாவில் எப்படி தோன்றின ?

நமது தாய் நாடாம் இந்தியாவில் அந்நியர்களின் வருகைக்கு முன்பு வரை ஜாதி வெறி என்ற கொடூரமோ  கீழ் சாதி மேல் சாதி என்றோ கிடையாது. வெள்ளையன் இங்கு வருகை தந்து நமது ஒற்றுமையை பார்த்தான்.
மெய் சிலிர்த்து போனான். இவ்வளவு இறையாண்மை, ஒற்றுமை, செல்வம், அன்பான மக்கள், இயற்கை வளங்கள் இவற்றை ஒரு பொழுதும் மற்ற நாடுகளில் பார்த்திராத வெள்ளையன் கண்களில் உறுத்தியது. இவர்களை எப்படி ஏமாற்றுவது என திட்டம் தீடப்பட்டதன் விளைவே ஜாதிகள் மற்றும் நாத்திகம். ஜாதி என்ற பெயரில் நம்மிடையில் ஒரு பிளவு ஏற்படுத்தினான். அதில் வெற்றியும் கண்டான். அதற்கு முன்பு வரை ஜாதிகள் எப்படி
இருந்தது தெரியுமா ? சமுதாய அமைப்புகள் ( ஜாதிகள் என்று சொன்னதான் புரியுமோ ) என்பது ஒவ்வொரு அமைப்பினரும் செய்யும் தழிலை வைத்தே நிர்ணயம் செய்யப்பட்டன. உதாரணத்திற்கு தச்சு வேலைகள்
செய்யும் அமைப்பினர் தச்சு ஆசாரி என்று அழைக்கப்பட்டனர், வாணிபம் செய்பவர்கள் வன்னியர் என அழைக்கப்பட்டனர், போர் வீரர்கள் சத்ரியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இதை போன்றே ஒவ்வொருவரும்
தங்கள் செய்யும் தொழில்களை மையமாக வைத்து மட்டுமே அழைக்கப்பட்டனர். ( ஏன் நாம் அழைக்கவில்லையா
பேங்க் மேனேஜர் போறான் பாரு  என்று அது போல தான் ) அவைதான் பின்னாளில் ஜாதிகளாக மாறியது. மேலும் மிகவும் பிரச்டிகாளாக சொல்ல வேண்டுமானால் இன்று ஒரு கம்பெனியில் மேனேஜர், ஹெல்பர்,
டீம் லீடர், ஜூனியர் என பல பிரிவுகளின் கீழ் வேலை செய்கின்றனர். அவர்களிடம் சென்று நீ தான் டீம் லீடர் அதனால் நீ தான் உயர்ந்த சாதி, ஹெல்பர் தாழ்ந்த ஜாதி என்று கூறினால் எப்படி இருக்கும் அப்படிதான் மாற்றினான்.
சிலர் கூறுகிறார்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்போர் முறையே பிரம்மாவின் முகம், தோள், தொடை,
கால்களினின்றும் பிறந்தார்கள் என்பதும் அக்கதைகளுள் ஒன்று. அவை திட்டமிட்டு புனையப்பட்ட மாற்றப்பட்ட ஒரு கூற்று ஆகும். மேலும் இங்கு பிரம்மன் என்பதன் பொருள் என்னவென்றால் மனிதன் என்பது ஆகும். இவை
வேதம் அறிந்தவர்க்கு நன்கு புரியும்ஆக ஜாதிகள் என்பது தனித்தனியாக தோன்றிய  இனம் அல்ல என்பதும், பிற்காலங்களில் பிராமணன், வைசியன்,சத்திரியன், சூத்திரன் என்ற நான்கு வித ஜாதிகளும் ஒவ்வொரு
மனிதனிடம் இருந்துதான் தோன்றுகிறது ( மனிதன் தனக்கு தானே ஏற்படுத்திக் கொண்டான் ) என்ற இரகசிய விளக்கத்தையும் பிரம்மன் என்பது மனிதன்தான் என்ற உண்மையையும் விளக்கமளித்துள்ளது.
மேலும் இன்றைய
ஊடகங்களும், நாத்திகர்களும், அரசியல் வாதிகளும் மேலும் பலரும் இந்த ஜாதி பிரச்னையை மையமாக வைத்து
மட்டுமே பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பது நாம் அறியாமையால் மறந்து விட்ட உண்மை. கடவுள்
இல்லை, இந்து மதத்தில் மட்டுமே சாதிகள் இதனை என்று சொல்லும் சினிமாக்காரர்களும் பகுத்தறிவுவாதிகளும்
இன்றளவும் தங்கள் பெயரில் மட்டும் காட்டி கொள்வது ஏன் ? இந்து மதத்தில் மட்டும் தான் இதனை ஜாதிகள் உள்ளனவா ?
இல்லை அணைத்து மதங்களிலும் உள்ளன. அவற்றோடு ஒப்பிடுகையில் இந்து மதம் பரவா இல்லை என தோன்றுகிறது.
அடுத்த பதிவுகளில் அவை பற்றி காண்போம்.
நன்றிகள் : குருநாதர்.,

Thursday, 24 January 2013

நமது விழிப்புணர்வுக்காக குமுதம் ஜோதிடம் இதழ் 17.02.2012 பதிவுகளில் இருந்து

மேலும் இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட பல கொடுமைகளை நம்மை
ஆளும் அரசு மறைத்ததோடு இல்லாமல் கண்டு கொள்ளாமலும்
வருகின்றது. நாம் எப்பொழுது நம்மையும் நமது முன்னோர்களின்
வரலாற்றையும் விஞ்ஞானத்தையும் உணரப் போகிறோம் ? அந்த நாள்
வெகு விரைவில் வரும்.
நன்றிகள் : குருநாதர்.,