Saturday, 18 February 2012

சிவராத்திரி விசேஷங்கள் :-

இந்நாளிலே தான் பெருமாள் சுதர்ஷன சக்ரத்தை பெற்றார்,
இந்நாளிலே தான் பெருமாள் லட்சுமியை அடைந்தார்,
இந்நாளிலேயே தான் பரம சிவன் பாற்கடலில் அமுதத்தை கடையும் பொழுது வந்த விசத்தை ஏற்றுக்கொண்டு திருவிளையாடல் புரிந்தார்,
மேலும் பல உள்ளன..,
இந்த புந்தமான நாளில் கண்கள் விளித்து இறைவனை பூஜித்து அருள் பெறுவோம்,  யாகங்களுள் சிறந்த அசுவமேத யாகம் செய்த அளவு புண்ணியம் கொடுக்க வல்லது இந்த விரத பூஜை.
எனவே அனைவரும் விரதமிருந்து வழிபாடு செய்து இறைஅருள் பெருக. நன்றிகள் - குருநாதர்.

சிவராத்திரியன்று செய்ய வேண்டியவை - பாகம் இரண்டு :-


சிவராத்திரி அன்று இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்து விசேச வழிபாடுகளுடன் காணப்படும். அந்நாளில் கோவிலுக்கு செல்லும் பொழுது ருத்ராட்சங்கள் இரண்டு கையில் எடுத்துக் கொண்டு சென்று கோவிலை பனிரண்டு முறை ஓம் சிவ சிவ ஓம் என்று சொல்லியவாறு வளம் வரவும். கவனம் சிதறாமல் உங்கள் நியாயமான கோரிக்கைகளை இறைவனிடம் கூறுங்கள், சில நாட்களாக ஓம் சிவ சிவ ஓம் செய்ய இயலாமல் போனவர்களும் இந்த புனிதமான நாளன்று துவங்கலாம். கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் சிவளிங்கதிற்கோ அல்லது சிவபெருமானின் புகைபடதிற்கோ வில்வ இல்லை அர்ச்சனை செய்து மிளகு, ஜீரக சாதம் படையல் இட்டு பக்தியுடன் வேண்டிக் கொள்ளவும். தொடர்ந்து வில்வ இலையினை கொண்டு பூஜை செய்தால் அமது பாவம் நீங்குவதோடு மட்டும் அல்லாமல் நமது முன்னோர்களின் ஏழேழு ஜென்ம பாவங்களும் நீங்கி விடும். ஒரு முறை சிவராத்திரி தினத்தன்று வேட்டையாட ஒரு வேடன் சென்றான் வேட்டையில் அன்றைய பொழுது அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை, போதாதென்று ஒரு புலி வேடனை துரத்தி கொண்டு வந்தது. செய்வதறியாது திகைத்த வேடன் ஒரு மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு புலி செல்லும் வரை காத்து கொண்டு இருந்தான். ஆனால் புலி செல்லவில்லை. இரவு நேரம் என்பதால் தூக்கம் வரக் கூடாது என்று சொல்லி அந்த மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாக பறித்து கீழே போட்டுக் கொண்டு இருந்தான் வேடன். அவன் ஏறியது வில்வ மரம் அவன் கீழே போட்ட இலைகள் அனைத்தும் மரத்தடியில் வைக்கப்பட்டிருந்த லிங்கத்தின் மீது விழுந்தது. எனவே அவ்வேடன் சிவராத்திரியன்று பூஜை செய்ததன் பலனை பெற்றான். சிவபெருமான் அவனுக்கு காட்சி அளித்து ஆட்கொண்டார். இன்றும் அந்த கோவிலில் சிவராத்திரி தினத்தன்று கோவில் கோபுரத்தின் கீழ் வேடன் உருவத்தை நிறுத்து சிவனுக்கு பூஜை செய்து விட்டு வேடனுக்கும் செய்கின்றனர்இந்த அற்புத சம்பவம் நிகழ்த்த இடம் திருவைகாவூர். தஞ்சாவூர் பாபநாசத்தில் இருந்து பனிரெண்டு கிலோ மீட்டர் தொலைவிலும் சுவாமிமலையில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. நன்றிகள் விகடன்குருநாதர்.

சிவராத்திரியன்று செய்ய வேண்டியவை - பாகம் ஒன்று :-


சிவராத்திரியின் பெருமைகளை ஓரிரு பதிவுகளில் சொல்லி விட இயலாது. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த நன்னாள். சாதாரண நாட்களில் நாம் ஓம் சிவ சிவ ஓம் ஜெபித்தால் நமக்கு எவ்வளவு புண்ணியமும், பலன்களும் கிடைக்குமோ அதை விட பல லட்சம் மடங்கு தமிழ் வருட பிறப்பு, கடல் நீரில் ஜெபம் செய்தல், மலை கோவில்களிலும், குகைகளிலும் சித்தர் பீடங்களிலும் செய்தால் கிடைக்கும். ஆனால் நமது மந்திர ஜெபதினை இந்த சிவராத்திரி அன்று எதாவது பழமையான சிவலயங்களிலோ அல்லது சித்தர் பீடங்களிலோ ஜெபித்தால் பல கோடி முறை மந்திரம் ஜெபிப்பதன் பலன் நம்மை அடையும் என்பது மாற்றவே முடியாத உண்மை. எனவே இந்த சிவராத்திரியன்று பக்தர்கள், வாசகர்கள் அனைவரும் ஓம் சிவ சிவ ஓம் ஜெபம் செய்து பலன் அடையுமாறு இந்த வலைப்பூவின் சார்பாக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். ஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்க எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லை. அசைவம் உண்ணுதல் கூடாது, மது அருந்துதல் கூடாது, பொறமை எண்ணமும் பேராசையும் இல்லாமல் உண்மையான அன்போடு நமது உலக தந்தையான கடவுளிடம் உரிமையோடு ஜெபம் செய்ய வேண்டும். பலருக்கு அவ்வாறு நினைத்த காரியம் நடந்ததை எனது அன்றாட வாழ்வில் பார்த்தும், அனுபவித்தும் கொண்டு இருக்கின்றேன். சரி ஏன் அசைவம் உண்ணக் கூடாது என கேட்கிறீர்கள ? அசைவம், மது பழக்கம் உடையவர்கள் ஜெபம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேற பல நாட்கள் ஆகும் மேலும் தூய மந்திர அதிர்வுகள் நம் உடலில் தங்காது. நமது இந்து தருமமே சொல்லும் விஷயம் என்னவென்றால் நீ வாழ பிற உயிர்களை கொள்ளாதே என்று தான். இந்த மந்திர ஜெபதினை எந்த நாட்டை சேர்ந்தவரும் எந்த மததினவரும் செய்யலாம். தவறில்லைமுதலில் இரண்டு மஞ்சள் நிற துண்டு மூன்று ருத்ராத்ஷம் (முகங்கள் முக்கியமல்ல) பெரும்பாலும் 5 முகம் கிடைப்பது எளிது . ஒன்று கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். மற்ற இரண்டையும் உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து கொள்ளவும். பூஜை அறை இல்லாத batchelours சுத்தமான இடத்தில வைத்து கொளவும். தினமும் உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் 15 நிமிடங்கள் ஒதுக்கி வைத்து கொள்ள வேண்டும். ஜெபம் தொடங்கும் முன்பாக ஒரு மஞ்சள் நிற துண்டை இடுப்பில் கட்டி கொள்ளவும், மற்றொன்றை தரையில் விரித்து அதன் மேல் அமரவும். மீதம் இருக்கும் இரண்டு ருத்ராத்ஷங்களை இரண்டு உள்ளங்கைகளிலும் வைத்து மடக்கி கொள்ளவும். (கிழக்கு நோக்கி அமர்வது சிறப்பு.)  இப்போது ஓம்  உங்கள் குல தெய்வத்தின் பெயரை சொல்லி நமக என்று சொல்லி கொள்ள வேண்டும் பின் ஓம் கணபதியே நமக என்று சொல்லி கொள்ள வேண்டும் அடுத்து ஓம் உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை சொல்லி நமக என்று சொல்லி விட்டு உங்கள் நியாயமான வேண்டுதலை சொல்லி கொள்ள வேண்டும். உதாரணமாக என் சம்பளம் தற்போது பத்து ஆய்ரமாக உள்ளது விரைவில் அது இருபது ஆய்ரமாக வேண்டும் அல்லது பதவி உயர்வு வேண்டும் என்று சொல்லி விட்டு ஓம் சிவ சிவ ஓம் என்று 15 நிமிடங்கள் மனதிற்குள் கண்களை  மூடிக்கொண்டு ஜெபம் செய்ய துவங்க வேண்டும். உண்மையான பக்திக்கும், பிரார்த்தனைக்கும் கிடைக்காதது ஒன்றுமில்லை என தமிழ் பெரியோர்கள் கூறி இருக்கிறார்கள். முதலில் துவங்கும் பொழுது  சற்று கடினமாக இருக்கும் ஆனால் நாளடைவில் அது பழகி விடும். தொடர்ந்து செய்பவருக்கு முக்தியும், மோட்சமும் கிட்டும். உங்கள் நியாயமான கோரிக்கைகள்  விரைவில் நிறைவேறும். எவ்வளவோ வெட்டி பேச்சு பேசும் நேரத்தையும், சோம்பேறித்தனமாய் செலவு செய்யும் நேரத்தையும் விட்டு விட்டு இதை முயற்சி செய்யலாம். இந்த அறிய மந்திர ஜெபத்தின் மூலம் பலன் அடைந்தவர்கள், அடைந்து கொண்டு உள்ளவர்கள் ஏராளம். நீங்களும் செய்து பலன் பெருக. தங்கள் அனுபவங்கள் மற்றும் சந்தேகங்களையும்  என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவும். இந்த முறையை எனக்கு அறிமுகம் செய்து வாய்த்த ஆன்மீகப்பெருங்கடலில் முத்து எடுத்து கொண்டு இருக்கும் கை. வீரமுனி அவர்களுக்கு கொடனும்கொடி நன்றிகள்.