Wednesday 14 March 2012

அந்நிய கலாச்சாரங்களால் சிதைந்து வரும் புனிதமான பாரத குடும்பங்கள் நாம் செய்ய வேண்டியவை - பாகம் மூன்று :-


வெளித் தோற்றத்தை வைத்து பலரை மதிப்பீடு செய்கிறார்கள்

 இதனால் பலருக்கு திறமைகள் இருந்தும் சிறந்த பதவிகள் அடைய இயலவில்லை. நமது செயல்களை தீர்மானிப்பது நமது எண்ணமும் சிந்தனைகளும் மட்டுமே. நாம் என்ன நிலையில் இருகிறோமோ அதற்கு நாமே பொறுப்பு. இதை அறியாமல் பலர் தாழ்வு மனப்பான்மையில்
உள்ளனர். மனிதன் உருவத்தை வைத்து யாரையும் எடை போடாதீர்கள். நானே பல இடங்களில் நீரில் பார்த்து இருக்கின்றேன். அய்யர் என்றாலே பலருக்கு ஒரு இளக்காரம் உள்ளதுகிராமத்தில்
இருப்பவனை நகர வாசிகள் கண்டால் அவனையும் கேலி பார்வையாகவே பார்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்தானும் ஒரு விஞ்ஞானிக்கு சமம் என்பதை மறந்து விடாதீர்கள் . இந்த எண்ணம்
எவளவு பெரும் தவறு. கலாய் கிறது    என்ற ஒரு கேவலமான சொல்லால் இன்று பலருக்கு பல வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இந்த கலாய்ப்பதை ஏற்படுத்தியது யார் ? காரணம் ஊடகங்கள்
மட்டுமே என என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஒரு சினிமாவிலோ அல்லது விளம்பரங்களிலோ ஏன் சீரியலும் இதற்கு விதி விளக்கு அல்ல. எல்லாவற்றிலும் மற்றவரை கொச்சைபடுதுவதையும் புன்படுதுவதையும் மட்டுமே இன்று காமெடி என்ற பெயரில் போடுகின்றனர். இதை பார்க்கும் மக்களுக்கும் இந்த எண்ணம் தான் வருகிறதுகல்லூரி மாணவன்
ஆசிரியரை கிண்டல் செய்வது, பொது மக்கள் அதிகாரிகளை கிண்டல் செய்வது மட்டுமே இன்றைய நவீன உலகின் காமெடி. வெள்ளையாக இருப்பவனை பார்த்தாலே ஓடி போய் உதவிகள்
செய்கின்றனர். அவர்கள் எந்த தவறு செய்தாலும் இவன் டீசென்டான ஆளு டா என சொல்லி விடுகின்றனர். ஏன் கருப்பாக இருப்பவன் மனிதன் இல்லையா ? மனிதனை அவனது குணங்களை
வைத்து மதிப்பீடு செய்யுங்கள். குட்டையாக இருந்தா ஒரு ஏகதாள பார்வை, குண்டாக இருந்தால் ஒரு கிண்டல் பார்வை இவற்றை மாற்றுங்கள். மனித மனம் நினைத்தால் அன்பில் இந்த
உலகத்தையே அடக்கலாம். ஆங்கிலத்தில் பேசுபவனை தேவ தூதர் போல பார்கிறார்கள். இது பலருடைய அனுபவங்கலின் தொகுப்பே . மனிதனாக பிறந்தவர் அனைவருக்கும் சமமான அன்புடன் பார்வையை நோக்கி செலுத்துங்கள் நீங்களும் ஞானி ஆகலாம்ஒவ்வொரு நல்ல செயல் மற்றும் தீய செயல் செய்யும் பொழுதும் கர்மம் பற்றி நினைவு கூறுங்கள், தீய செயல்களுக்கு மனம் ஒரு பொழுதும் செல்லாது. கர்ம விதியின் படி நீங்கள் செய்யும் நல்ல செயல்கள் / தீய செயல்களின் தொகுப்பே உங்கள் வாழ்வின் நன்மையையும் தீமையும்

No comments:

Post a Comment