Wednesday, 14 March 2012

இந்து தர்மத்தின் சாஸ்திரங்களும், அதில் உள்ள விஞ்ஞானமும் :- பாகம் 2


பஞ்ச பூதமும் சுனாமியும்

"தைவாந்யஷ்டௌ மஹபயாநி அக்நி உதகம் வ்யாதி: துர்பிக்ஷம் மூஷிகா வ்யாலா ஸர்ப்பா ரக்ஷாம்ஸீதி தேப்யோ ஜநபதம் ரக்ஷேத்!'

மௌரியர்
காலத்தில் நெருப்பு, நீர், நோய்கள், பஞ்சம், எலிகள், கொடியவிலங்குகள், பாம்புகள், ராட்சதர்களால் உண்டாகும் எட்டு மகா பயங்களும்தெய்வத்தால் ஏற்படுபவை என்று கருதப்பட்டன.

கொடிய
பகைவர்களை வென்று மௌரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய சந்திரகுப்தர்,இந்த எட்டு மகா பயங்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியாமல் மிகவும்திணறித்தான் போனார்.

காடுகள்
திடீரென தீப்பற்றி எரிந்தன. நதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.சமுத்திரம் பொங்கியது. எங்கு பார்த்தாலும் பெயர் தெரியாத மர்ம நோய்கள்.விளைநிலங் கள் அழிந்தன. பஞ்சம், பஞ்சம்! களஞ்சியம் முழுக்க எலிகளின்ஆர்ப்பாட்டம். காட்டு விலங்குகள் நாட்டுக்குள் புகுந்து சொல்லொணாத்துன்பத்தை ஏற்படுத்தின. இருக்க இடமின்றி, புறப்பட்ட பாம்புகள்மனிதர்களுக்கிடையே சகஜமாகக் குடியிருக்க வந்துவிட்டன. காடுகளின் மறைவிடங்களில் இருந்த ராட்சதர்கள் நாட்டுக்குள் புகுந்து மக்களை அலற அலறவிரட்டினர்.

இத்தனை
துன்பங்களும் ஒன்று சேர்ந்தால் மௌரிய நாட்டு மக்கள் என்னதான்செய்வார் கள்! கூட்டம் கூட்டமாக அன்றாடம் சந்திரகுப்த மௌரியரின் அரண்மனைமுன்பாக கண்ணீருடன் ஒப்பாரி வைத்தனர்.

எத்தனையோ
முயற்சிகள் மேற்கொண்டும் மன்னரால் இத்துன்பங்களைக் களைய முடியவில்லை. விழி பிதுங்கிப் போய் சாணக்கிய முனிவரிடம் சரணாகதி அடைந்தார் சந்திரகுப்த மௌரியர்.

எல்லாவற்றுக்கும்
வழிகாட்டும் அர்த்த சாஸ்திரம் இத்துன்பங்களுக்கும் வழிகாட்டா மலா போகும் என்ற நம்பிக்கை மன்னருக்கு!

அப்போதுதான்
சாணக்கிய முனிவர் அப்படிக் கூறினார். எட்டு மகா பயங்களும் தெய்வத்தால் ஏற்படுபவை.

""
மௌரிய மன்னா! மழைக்காலங்களில் நதிகளுக்குப் பூஜை செய்ய வேண்டும். மாயா யோகம், அதர்வண வேதம் தெரிந்தவர்கள் ஜபம், ஹோமம் முதலானவற்றால் மழையைக் குறைக்க வேண்டும்.

மழை
பெய்யாது பஞ்சம் ஏற்படும் காலத்தில் இந்திரனுக்கும் மலை களுக்கும் சமுத்திரத்துக்கும் பூஜைகள் செய்ய வேண்டும்.

நோய்களால்
ஏற்படும் பயத்தை ஔஷதப் பிரகரணம் என்று அடுத்துக்கூறப்போவதிலுள்ள நிவாரணங்களைக் கொண்டு நீக்க வேண்டும். வைத்தியர்கள்மருந்துகள் மூலமாகவும், சித்தர்களும் தபஸ்விகளும் சாந்தி,பிராயச்சித்தங்களாலும் நோய்களை நீக்க வேண்டும். அம்மை நோய்க்கும் இப்படியேசெய்ய வேண்டும்.

புண்ணிய
நதிகளில் நீராடல், சமுத்திர பூஜை, பசுக்களை சுடுகாட்டில் வைத்துப்பால் கறத்தல், அரிசி மாவால் திருஷ்டி பொம்மை களைச் செய்து எரித்தல், இரவுநேரங்களில் தேவதா பூஜைகள் முதலானவற்றைச் செய்ய வேண்டும்.

மிருகங்களுக்கு
நோய்கள் ஏற்பட்டால் அவற்றின் இருப்பிடங்களுக்கும் அவைசம்பந்தப்பட்ட பொருட்களுக்கும் கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். அந்தந்தமிருகங்களுக்குரிய தெய்வத்தை வணங்க வேண்டும்.

எலிகளால்
தொல்லை ஏற்பட்டால் பூனைகள், கீரிகள் முதலானவற்றை அந்தப் பகுதி களில் விட்டு வைக்க வேண்டும்.

சதுரக்கள்ளி
என்னும் தாவரத்தின் பாலுக்கு எலிகள் செத்துவிடும். சித்தர்களும் தபஸ்விகளும் சாந்தி கர்மாக்களைச் செய்ய வேண்டும்.

கொடிய
விலங்குகளால் பயம் நேரிட்ட காலத்தில் உபநிஷத் யோகத்தில் சொல்லப் படுவதைப்போல விஷம் கலந்து இறந்த மிருக உடல்களை அங்கங்கே போட வேண்டும்.

பாம்புகளால்
பயம் நேரிட்ட காலத்தில் விஷத்தை அகற்றும் மந்திரம்தெரிந்தவர்கள் மந்திரங்களாலும் மருந்துகளாலும் பாம்பு களால் ஏற்படும்துன்பங்களை நீக்க வேண்டும்.

அதர்வண
வேதம் தெரிந்தவர்கள் பாம்புகளைக் கொல்லும் கிரியைகளைச் செய்ய வேண்டும். அமாவாசை, பௌர்ணமி களில் நாகபூஜை செய்ய வேண்டும்.

ராட்சதர்களால்
பயம் நேரிட்ட காலத்தில் அதர்வண வேத விற்பன்னர்கள், மாயயோகம் அறிந்தவர்கள் ராட்சதர்களின் அழிவுக்கான கிரியைகளைச் செய்ய வேண்டும்.

எனவே
தெய்வத்தால் ஏற்படும் இந்தத் துன்பங்களை நீக்கும் கிரியைகளைச்செய்யவல்ல மாயா யோகங்களறிந்த சித்தர்களும் தபஸ்விகளும் எப்போதும் மன்னரால்போற்றி கௌரவிக்கப் பட்டவர்களாக நாட்டில் வசிக்க வேண்டும்.''

எட்டுவகை
மகா பயங்களை விரட்டிட அர்த்தசாஸ்திர வழிகாட்டல் மூலம் சந்திரகுப்த மௌரியர் உடனடி ஆணைகள் பிறப்பித்து நடவடிக்கை மேற்கொண்டார்.

கௌடில்ய
சாணக்கிய முனிவரின் அர்த்த சாஸ்திரம் மௌரிய சாம்ராஜ்ஜியத்தினை ஒருராஜ மருத்துவச்சியாக காபந்து செய்து வந்தது என்பதை அன்றைய வரலாறு உறுதிசெய்கிறது.

நாட்டு
மக்களின் சுத்தம், சுகாதாரம், நகர ஒழுங்கு யாவற்றையும் கையில்பிரம்பை வைத்துக் கொண்டு அர்த்தசாஸ்திரம் அன்றா டம் ஆட்சி புரிந்துவந்திருக்கிறது.

நினைத்துப்
பார்க்க முடியாத கட்டுப்பாடு களை நடைமுறைப்படுத்திய சட்டப்புத்தக மாக, அர்த்தசாஸ்திரத்திலிருந்து சந்திரகுப்த மௌரியருக்கு அன்றைக்குஆலோசனை தந்து கொண்டிருந்தார் சாணக்கிய முனிவர்.

""
தெருவில் சாம்பல் முதலானவற்றைப் போட்டால் அரைக்கால் வெள்ளிப் பணம் அபராதம். தெருவில் சேறாகத் தண்ணீர் தேங்கு மாறு விட்டால் கால் வெள்ளி அபராதம். இவையே ராஜ வீதியில் நடந்தால் இருமடங்கு அபராதம்.

புண்ணிய
ஸ்தலங்கள், புண்ணிய தீர்த்தங் கள், ஆலயங்கள், அரண்மனைமுதலானவற்றின் அருகில் இயற்கைக் கடன்களைக் கழிப்பவனுக்கு அபராதம் விதிக்கவேண்டும். மருந்து சாப்பிட்டிருந்தாலோ நோயாலோ பயத்தாலோ இவை நடக்குமானால்தண்டிக்கக் கூடாது.

பூனை
, நாய், பாம்பு முதலானவற்றின் இறந்த உடல்களை நகரத்தின் நடுவில்போடுபவனுக்கு மூன்று வெள்ளிகள் அபராதம் போட வேண்டும். கழுதை, குதிரை, பசுபோன்றவற்றின் உடல்களைப் போடுபவனுக்கு ஆறு வெள்ளிகள் அபராதம். மனிதஉடல்களைப் போடுபவனுக்கு 50 வெள்ளிகள் அபராதம்.

பிரேதங்கள்
கொண்டு போக வேண்டிய வழியைத் தவிர்த்து வேறொரு வழியில் கொண்டு போனாலும் அபராதம் விதிக்க வேண்டும்.

சுடுகாடு
தவிர வேறொரு இடத்தில் சவத்தை வைத்தாலோ எரித்தாலோ 12 வெள்ளிகள் அபராதம்.

கோடை
காலத்தில் நெருப்புப் பிடிக்காமல் மக்கள் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். முற்பகல், பிற்பகல் நேரங்களில் நெருப்பு மூட்டக்கூடாது.அப்படி மூட்டு பவனுக்கு அரைக்கால் வெள்ளி அபராதம். அத்தியாவசிய காரணம்என்றால் வீட்டுக்கு வெளியே சமைத்துக் கொள்ள வேண்டும்.

வைத்தியன்
தன்னிடம் ரகசியமாக வந்து காயங்களுக்கு சிகிச்சை பெறுபவனைப்பற்றிய தகவலை அரண்மனை ஸ்தானிகர்களிடம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால்இவர்களும் அவர்களுடைய குற்றங்களுக்கு நிகரான குற்றம் புரிந்தவர்களாகக்கருதப்படு வார்கள்.

காவல்
வீரர்கள் எச்சரிக்கப்பட வேண்டிய வரை எச்சரிக்காது விட்டாலோ,தேவையற்றவனை மிரட்டினாலோ இரண்டரை வெள்ளி கள் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

தாசியாக
இருக்கும் பெண்ணை பலாத்காரம் செய்த காவல் வீரனுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும்.

ஒருவனுக்கென்று
நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காவல் வீரன் பலாத்காரம் செய்தால் 1000 வெள்ளிகள் அபராதம் விதிக்க வேண்டும்.

குலப்
பெண்ணை பலாத்காரம் செய்யும் காவல் வீரனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.

பொற்கொல்லர்கள்
, கைவினைஞர்கள் போன்றோர் தமக்குள் ஒன்றுகூடி பொருட் களின்தரத்தைக் குறைத்தாலும், லாபத்தைக் கூட்டிக் கொண்டாலும் வியாபாரத்துக்குஊறு விளைவித்தாலும் 1000 வெள்ளிகள் அபராதம்.

வணிகர்
அனைவருமாக கூடிக் கொண்டு சரக்கை ஒளித்து வைத்தாலும் அதிக விலைக்கு விற்றாலும் 1000 வெள்ளிகள் அபராதம்.

வணிகர்கள்
தினமும் வரும் லாபத்தைக் கணக்கிட்டு தனக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். விற்றது போக மீந்துவிட்ட சரக்கைவியாபாரிகள் நிலுவையாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் வேறு வகையில் நிலுவையாகவைத்துக் கொண்டால் தானியக் கிடங்கு அதிகாரி அதைப் பறிமுதல் செய்யவேண்டும்.''

சாணக்கியரின்
அர்த்தசாஸ்திரம் மௌரிய சாம்ராஜ்ஜியத்தின் அன்றைய சமூகவாழ்க்கையின் அத்தனை பிரச்சினைகளுக்கும் துருவித் துருவி ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்தது. சந்திரகுப்த மௌரியர் வரலாற்று ஏடுகளில் முத்திரைபதிப்பதற்கு அர்த்தசாஸ்திரமும் காரணம் என்றால் மிகையல்ல!
சாணக்கிய நீதீ
நன்றிகள் குருநாதர், கூகுல்

No comments:

Post a Comment