Wednesday 14 March 2012

சிக்கல்கள் சங்கடங்கள் தீர்க்கும் ஸ்வர்ண பைரவர் :- பாகம் 1


நீங்கள் செய்யும் தொழிலில் இறங்குமுகமாக இருக்கிறீர்களா? அல்லது
கொடுத்த
கடன்/பணம் திரும்ப வராததால் வறுமைக்குள்ளாகிவிட்டீர்களா?
அல்லது தொழிலில்
நொடித்துப்போகும் நிலை வந்துவிட்டதா?(மின்சாரம் வரும் லட்சணத்துக்கு இதை வேற குத்திக்காட்டணுமா? எனக் கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்)

அல்லது


உங்களது
குடும்ப உறுப்பினர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் பிரிந்து வாழ்வதை மாற்றிட விருப்பமா?

அல்லது


அரசியலில்
நீங்கள் நினைக்கும் பதவிக்கு வர விரும்புகிறீர்களா?



தொடர்ந்து
எட்டு தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் சொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னிதியில் வழிபட்டு வர வேண்டும்.வசதியிருந்தால்,தேய்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பாலாபிஷேகம்/இளநீர் அபிஷேகம் செய்வதற்குரிய பொருட்களை வாங்கித் தந்து அவரது சன்னிதியில் வழிபட வேண்டும்.

இன்று
22.3.2011 செவ்வாய்க்கிழமை!!

இந்த
வாரக்கடைசி நாளான 26.3.2011 சனிக்கிழமையன்று தேய்பிறை அஷ்டமி நாளாக அமைந்துள்ளது.

பின்வரும்
தமிழ்நாட்டுக்கோவில்களில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன.(வாசகர்களின் ஊர்களில் சொர்ண பைரவர் சன்னிதி இருந்தால் தகவல் தெரிவிக்கவும்)

இந்த
சன்னிதிகளில் உங்களுக்கு அருகிலிருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று இந்த தேய்பிறை அஷ்டமியிலிருந்து வழிபடத் துவங்கவும்.ஒரே ஒரு தேய்பிறை அஷ்டமியில் வழிபடத் துவங்கினாலே உங்களது பொருளாதார வளர்ச்சியை அடுத்த சில நாட்களில் உணரலாம்.
படப்பை
ஸ்ரீஜெயதுர்கா பீடம், காஞ்சிபுரம் அருகிலிருக்கும் அழிபடைதாங்கி,
சிதம்பரம்
கனகசபை, திருச்சி மலைக்கோட்டை அருகிலிருக்கும்
பெரியகடைவீதி, திருமயம் அருகிலிருக்கும் தபசுமலை,
திண்டுக்கல்
அருகிலிருக்கும் தாடிக்கொம்பு கிராமத்தில் இருக்கும் சவுந்தர
ராஜப்பெருமாள் கோவில், தேவக்கோட்டை,விருதுநகர் ரயில்வே நிலையம்
அருகே,இராஜபாளையம் முடங்கியார் ரோட்டில் இருக்கும் ரேணுகாம்பாள்
ஆலயம்(தாலுகா அலுவலகம் எதிரே குறிப்பிட்ட சமுதாயத்தின் குலதெய்வம்)ராஜபாளையம் தாலுக்கா சிவகிரியிலிருந்து சங்கரன் கோவிலுக்குச் செல்லும் கிராமத்துப்பாதையில் அமைந்திருக்கும் தென்மலை.  நன்றிகள் குருநாதர்

No comments:

Post a Comment