Thursday 13 December 2012

கார்த்திகை மாதத்தின் பெருமைகளை அறிந்து கொள்வோமா ?


கார்த்திகை மாதத்தின் பெருமைகளை அறிந்து கொள்வோமா ?



முதலில் ஆன்மீகப் பொருள் விளக்கம்

ஜோதி வழிபாட்டின் மகிமை விளக்குவதில் சிறப்பான மாதமாக கார்த்திகை உள்ளது.

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப்பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரிகூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்அவர்கள்இருவரும  தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர்திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்

கார்த்திகை தீபம் அது சாதாரண தீபமல்ல. ஏனென்றால் திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய தீபம் மிகச் சிறப்பு மிக்க தீபம்.கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றக்கூடிய தீபம். கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமிநாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களில்பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்

வீடுகளை அலங்கரிக்கும் முறைபௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றிநாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாகஅலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம்கார்த்திகை ஆகும். இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கானநட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமானஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் எனப்படுகிறது.கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகைமாதம். கார் என்றும் கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும்விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.ரமணர் கார்த்திகை தீபத்தை பற்றி மிகப்பெருமையாகப் பேசுவார்


விஞ்ஞானப் பொருள் விளக்கம்

கார்த்திகை மாதம் என்பதே ஒரு சிறப்பு மிக்க மாதம். ஏனென்றால் இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் நம்முடைய உடம்பில்உள்ள நாடி நரம்புகளெல்லாம் சம ஓட்டத்தில் இருக்கும் என்று சொல்வார்கள். அப்படி நாடி நரம்புகள் சம ஓட்டத்தில் இருக்கும்போது தியானம் செய்யாதவர்களுக்கும் ஞானம் சித்தியாகும் உடல் மற்றும் மன வலிமை பெரும் 
ஒரு தமிழ்மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி உதயமாகுமோ,அந்த நட்சத்திரத்தின் பெயரையே அந்த மாதத்தின் பெயராகவைத்தார்கள் நமது முன்னோர்கள்
கார்த்திகை தீபத்திருநாளை அண்ணாமலையில் பல நூறுகோடி ஆண்டுகளாக கொண்டாடி வருகிறோம்.ஆமாம்,பல நூறு கோடிஆண்டுகளாக!! ஏன் பிற பவுர்ணமி நாட்களில் கொண்டாடாமல்,கார்த்திகை மாத பவுர்ணமியை நமது முன்னோர்கள்தேர்ந்தெடுத்தார்கள்?

ஜோதிடத்தின் அடிப்படை அறிந்தவர்களுக்கு இந்த விளக்கம் புரியும்.கார்த்திகை நட்சத்திரத்தின் நான்கு பாதங்களில் முதல் பாதம்மட்டும் மேஷ ராசியில் இருக்கிறது.இரண்டாம்,மூன்றாம்,நான்காம் பாதங்கள் ரிஷப ராசியில் இருக்கின்றன.

குடும்பஸ்தர்களாகிய நமக்கு மகிழ்ச்சியான தாம்பத்தியம் வேண்டுமானால், உடலில் ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டும்.(ரத்தகாரகன் செவ்வாய் பகவான்;அவரது முதல் வீடு மேஷம்);அடுத்த படியாக சுக்கிலம் எனப்படும் நிறமற்றதிரவம் சுறுசுறுப்பாகஇருக்க வேண்டும்.(இதுவே பெண்களுக்கு சுரோணிதம்!)இந்த சுக்கிலமும்,சுரோணிதமும் சுறுசுறுப்பாக இருக்கக் காரணமாகியகிரகம் சுக்கிரன் ஆகும்.இவரது முதல் விடு ரிஷப  ராசி ஆகும்.


ஆக,சுக்கிரனும்,செவ்வாயும் ஒருவரது ஜனன ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால்,அவரது அந்தரங்க வாழ்க்கையும் சிறப்பாகஇருக்கும்.யாருக்கு காமத்தில் போதுமான திருப்தி கிடைக்கிறதோ,அவரே வெளியுலக வாழ்க்கையில் சாதனையாளராகவும்இருப்பார்.


ஆக,கார்த்திகை மாத பவுர்ணமியன்று,அண்ணாமலையாரை நேரில் தரிசித்தாலும்,போட்டோக்கள்/வீடியோக்களில் தரிசித்தாலும்; கார்த்திகை தீபத்தை நினைத்தாலும் புண்ணியமே!


கார்த்திகை மாதம் வரும் பவுர்ணமியன்று அண்ணாமலையாரை அந்த ஒரே நாளில் 5 முறை கிரிவலம்வந்தால்,மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும்;அப்படி சுற்றிய நொடியிலிருந்து அவரது அனைத்து கர்மாக்களும்நாசமாகிவிடும்.இந்தக் கருத்து,பல நூற்றாண்டுகளாக பரப்பப்பட்டு வருகிறது.

இந்த கலியுகத்தில் ஒரு முறை கிரிவலம் செல்லவே நான்கு முதல் ஏழு மணி நேரம் ஆகிறது.ஆனால்,1000 ஆண்டுகளுக்கு முன்புகிரிவலப்பாதையில் நீளம் 150 கிலோ மீட்டர்கள்! 100 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதையில் நீளம் 45 கிலோமீட்டர்கள்.இன்றோ வெறும் 14 கிலோ மீட்டர்கள்!


எனவே, இந்த நாளில் ஒரு மணி நேரமாவது ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;
நன்றிகள் : குருநாதர்

No comments:

Post a Comment