Wednesday 15 May 2013

ருண விமோசனத்தை உறுதியாகத் தரும் ஸ்ரீகால பைரவர்!!!






ஒவ்வொருவரின் பிறந்த ஜாதகத்திலும் லக்னத்துக்கு ஆறாம் இடம் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய ருணம் பற்றி விவரிக்கும்;எட்டாமிடம் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய மிகப் பெரிய வீழ்ச்சி அல்லது எழுச்சியைப் பற்றி சொல்லும்;பனிரெண்டாம் இடம் ஒருவரின் வாழ்க்கையில் எதையெல்லாம் விரையம் செய்வார் என்பதைப் பற்றி கூறும்;இந்த மூன்று இடங்களைப் பற்றியும் முழுமையாக ஆராய்ந்தால் ஒருவரின் வாழ்க்கையின் ரிஸ்க்குகள் எங்கெல்லாம் ஒளிந்திருக்கின்றன? என்பதை கண்டுபிடிக்கலாம்.ஆனால்,வேகமான வாழ்க்கையில் அதைப்பற்றியெல்லாம் ஆராய எத்தனை ஜோதிடர்களுக்கு நேரம் இருக்கும்? அல்லது நமக்குத் தான் அதைப் பற்றி அறிந்து அதற்கு ஏற்றாற் போல நமது வாழ்க்கையை ‘வடிவமைத்து’க் கொள்ளத் தான் நேரம் இருக்கிறதா?

எனது உறவினரின் சோகம் வினோதமானது;அவர் விற்ற வாகனம்  மூன்றே ஆண்டுகளில் பலர் கைமாறிச் சென்று விபத்துக்குள்ளானது.விபத்துக்குள்ளான போது அந்த வாகனத்தை விலைக்கு வாங்கியவர்,தனது பெயரில் வாகனத்தை மாற்றியிருக்கவில்லை;எனது உறவினரின் பெயரிலேயே (சுமார் ஏழு பேர்களின் கை மாறியப் பின்னரும்)இருந்திருக்கிறது;விபத்தின் போது வாகனத்துக்குரியவர் எஸ்கேப்!!! வழக்கோ எனது உறவினரின் மீது எங்கிருந்தோ பாய்ந்தது;இதுவும் எடுத்து வைத்தும்,கொடுக்காமல் ‘சிக்க’ வைத்திருக்கிறது என்ற பழமொழிக்கு உதாரணமாகச் சொல்லலாமா?

தனது வருமானத்துக்குள் வாழ்க்கையை நகர்த்தத் தெரியாதவர்கள்,கடன் என்ற புதைகுழியில் சிக்கிக்கொள்கிறார்கள்;அல்லது சிக்கனமான கணவனுக்கு ஊதாரி மனைவியோ அல்லது சிக்கனமான மனைவிக்கு ஊதாரி கணவனோ அமைவதும் தலைவிதி.சிலருக்கு கடனை உருவாக்கிட அல்லது பல ஆண்டுகளாக குருவி போல உழைத்து சேமித்ததை அழிக்க ஒரே ஒரு வாரிசு போதும்;

ஆக,எப்படிப் பார்த்தாலும் நமது வாழ்க்கையில் ஏற்படும் கடன் அல்லது ருணம் அல்லது சிக்கல்கள் நமது முற்பிறவிகளில் செய்தவையே திரும்பவருகின்றன;அதுவும் எப்போது வருகின்றன தெரியுமா?
ஏழரைச் சனி அல்லது அஷ்டமச்சனி காலத்தில் வருகின்றன;பலருக்கு ஏழரைச்சனி ,அஷ்டமச்சனி இல்லாத காலத்திலும் கடன் அல்லது நோய் அல்லது எதிரிகளால் தொல்லை ஏற்படுவதுண்டு;அவர்களுக்கு லக்னத்துக்கு ஆறாமிடத்து/எட்டாமிடத்து/பனிரெண்டாமிடத்து அதிபதியின் திசை வந்து,லக்னாதிபதி பலமிழந்து இருந்தால்,அம்போதான்!
ஆனால்,நாம் ‘ கடவுளே ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு சோதனையைக் கொடுக்கிறாய்?’ என்று அவர் மீது பழிபோடுகிறோம்.நாம் கற்ற கல்வி மட்டும் நமது ஏழு பிறவிகளுக்கு கூட வருகிறது என்று நினைக்கக் கூடாது;நமது பிறவி சுபாவமும்,பூர்வபுண்ணியமும்,பூர்வபாவமும் தான்!
இதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லையா? என்று நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களிடம் கேட்டதற்கு ஒரு சுலபமான ஆனால்,சக்தி வாய்ந்த சுயபரிகாரத்தைக் கூறியிருக்கிறார்.இந்த சுலபமான பரிகாரத்தை நமது ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.


செவ்வாய்க்கிழமை அன்று காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணிக்குள் அல்லது இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணிக்குள் இந்த சுயபரிகாரத்தைச் செய்ய வேண்டும்.
உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஸ்ரீகால பைரவர் சன்னதிக்கு அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித் தைலம்,பால்,செவ்வரளிமாலை போன்றவைகளுடன் சென்று ஸ்ரீகால பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அபிஷேகம் செய்யும் போது மனதுக்குள் ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.அபிஷேகத்தின் முடிவில் இளநீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகளுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகளுக்கு அபிஷேகம் செய்யும் போது,இடையில் சகுனத் தடை வரத்தான் செய்யும்.அவ்வாறு வந்தாலும்,விட்டுவிட்டாவது ஒன்பது செவ்வாய்க்கிழமைகளுக்கு மட்டும் இந்த சுயபரிகாரத்தைச் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்வதை எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும்,எதற்காக இந்த பரிகாரம் செய்கிறோம்? என்பதை மட்டுமல்ல;இந்த பரிகாரம் செய்வதையே பகிர்ந்து கொள்ளாமல் செய்தால் மட்டுமே நமது நீண்டகால ருணம்/நோய் தீரும்.


யார் இந்த கலியுகத்திலும் நேர்மையைக் கைவிடாமல் இருக்கிறார்களோ,அவர்களுக்காக நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் தரும் ஸ்ரீகாலபைரவரின் ஜன்ம நட்சத்திர நாளுக்கான பரிசு இது!!!

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment