Friday 15 February 2013

இந்தியாவிற்காக பாகிஸ்தானில் உயிர்விட்ட இந்திய ஒற்றன்:ஒரு பிரமிப்பூட்டும் தேசபக்தரின் நிஜக்கதை

இந்தியாவிற்காக பாகிஸ்தானில் உயிர்விட்ட இந்திய உளவாளி




ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரைச் சேர்ந்தவர் கவுசிக்.இவர் படிக்கும்போதே மோனேஆக்டிங் நடிகர்.கி.பி.1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போர்காலத்தில், இவர் தேசபக்தியை வலியுறுத்தி நாடகங்கள் நடத்தினார்.இவரது நாடகங்களைப் பார்க்க வந்த ராணுவ அதிகாரிகளுக்கு கவுசிக்கை ரொம்பவும் பிடித்துப்போனது.காரணம், அந்த நாடகங்களில் கவுசிக் ஏற்றிருந்த வேடம்,உயிரே போனாலும் தேசத்தைக் காட்டிக்கொடுக்காத ஓர் உளவாளி!

உண்மையாகவே ஒற்றனாக ராணுவ அதிகாரிகள் வாய்ப்பு கொடுத்த போது உடனே கவுசிக் அதை தனது கடமையாக ஏற்றுக்கொண்டார்.புது டெல்லி,அபுதாபி,துபாய் என சுற்றி கடைசியாக பாகிஸ்தான் வந்தார்.நபி அஹமத் என்ற பெயரில் அங்கே சட்டக்கல்லூரியில் சேர்ந்தார்.ஒரு பாகிஸ்தானியப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பக்கா பாகிஸ்தானியனாக வாழ்ந்த கவுசிக், பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார்.அங்கே இருந்து கொண்டு, இந்திய ராணுவத்திற்குப் பல முக்கியமான தகவல்களை அனுப்பிக்கொண்டே இருந்தார்.
ஒரு முறை இந்திய பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவைச் சேர்ந்த் இன்னும் ஒரு ஒற்றனை பாகிஸ்தானை விட்டுப் பத்திரமாக வெளியேற்றிவைக்க இந்திய ராணுவத்திலிருந்து அவருக்கு அசைன்மெண்ட் தரப்பட்டது.எதிர்பாராத விதமாக,அந்த இந்திய ஒற்றன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார்.பாகிஸ்தான் ராணுவத்தின் சித்திரவதையைத் தாங்கமுடியாத அவர்,கவுசிக் பற்றிய உண்மைகளை கொட்டிவிட்டார்.இதனால்,மாட்டிக்கொண்டார் கவுசிக்.

மொத்தம் 19 ஆண்டுகள் பாகிஸ்தானின் முல்டான் சிறையில் கவுசிக்கை பாகிஸ்தான் ராணுவம் சித்ரவதை செய்தது.அவரைப் பற்றி இந்திய அரசியல்வாதிகள் வாயைத் திறக்கவில்லை.(எப்போதுமே 
இந்திய அரசியல்வாதிகள் இப்படித்தான். நயவஞ்சக சுயநலத்தின் முழுசொரூபம் இந்திய அரசியல்வாதிகள்) (இந்தியாவுக்காக பாகிஸ்தான் சென்று உளவு பார்த்த கவுசிக் உளவாளியைப்பற்றி ‘மிஷன் டு பாகிஸ்தான்’ என்ற புத்தகத்தினை கிருஷ்ணா தர் என்பவர் எழுதி வெளியிட்டார்.அந்த புத்தகத்தில் அந்த உளவாளி கவுசிக்தான் என்பதை கிருஷ்ணா தர் சொல்லவே இல்லை.
கி.பி.2002 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ஜெயிலில் நபி அஹமத் என்ற பெயரில் இறந்துபோனது ரவிந்திர கவுசிக் என்ற இந்தியர்தான் என்பதை இந்துஸ்தான் டைம்ஸ் பிரகடனப்படுத்தியது.)

கடைசியாக,தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில், “நான் இதே வேலையை அமெரிக்காவுக்காகச் செய்து இருந்தால்,கைது செய்யப்பட்ட மூன்றே நாட்களில் வெளியே வந்திருப்பேன்” என்று மனம் நொந்து அழுதிருந்தார்.அதற்கடுத்த மூன்றாவது நாளில் கவுசிக் இறந்துவிட்டார்.
நன்றி மறக்குமா இந்தியா? மாதா மாதம் கவுசிக்கின் தாய்க்கு செலவுத் தொகை அனுப்பி வைக்கிறது.எவ்வளவு தொகை தெரியுமா? ரூ.500/-
இந்திய அரசு ஓடோடிச் சென்று தனது செல்வ மகனான கவுசிக்கைக் காப்பாற்றாமல், சாகும்வரை வேடிக்கை பார்த்துவிட்டு,கவுசிக்கின் வாழ்க்கைக்கு வெறும் ரூ.500/-ஆக மதிப்பிட்டுவிட்டது.சே!
நன்றி: ஆனந்த விகடன்,இணைப்பு:உளவாளி விகடன் பக்கம் 133,வெளியீட்டு நாள்: 23.12.2009.
 
SOURCE:http://intelligencenews.wordpress.com/2009/12/08/03-217/

நன்றிகள் : குருநாதர்

No comments:

Post a Comment