Wednesday 16 January 2013

God's gift to INDIA is "SWAMIJI VIVEKANANDA"




எழுதப்படாத வரலாற்றுக்கு முன்பிருந்தே இந்த பூமி முழுவதும் ஹிந்து தர்மம் பரவியிருந்தது;மஹாபாரத காலத்தில்,பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜீனனின் மனைவியரில் ஒருத்தி மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவள் ஆவாள்.வரலாறு என்பதை மேல்நாட்டினர் எழுதத் துவங்கியதால் தான் ,நமது ஹிந்து தர்மத்தின் பெருமைகளை வேண்டுமென்றே மறைத்துவிட்டனர்;அதை உணரும் பக்குவத்தை நாம் இன்றும் அவ்வளவாகப் பெறவில்லை;இந்த அறியாமையால் தான் கொள்ளையடிப்பவர்களெல்லாம் நமது ஆட்சியாளர் நிலைக்கு உயர்ந்துவிட்டனர்;எப்போது ஹிந்து தர்மத்தின் பெருமைகளை இந்தியாவின் ஒவ்வொரு இளைஞனும்,இளம் பெண்ணும் உணர்ந்துகொள்கிறார்களோ,அப்போது முதல் இந்த தேசத்தை நேசிப்பவர்கள் மட்டுமே ஆள முடியும் என்ற சூழ்நிலை  உருவாகும்.இந்த இலக்கை அடையவே ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் செயல்பட்டுக்கொண்டு வருகிறது.சுதந்திரம் வாங்கியது முதல் ஐம்பது ஆண்டுகளுக்கு அனைத்து கடவுள்களையும் வழிபடுவதையும் நிறுத்திவிட்டு பாரதமாதாவை மட்டுமே நாம் வழிபட வேண்டும்;அப்படி வழிபட்டால் தான் நாம் இந்த உலகிற்கே வழிகாட்டும் குருவாக ஆக முடியும்.நமது சந்ததியினர் வளமான,சிறப்பான,தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக வாழ முடியும் என்பதை சுவாமி விவேகானந்தர் தெரிவித்திருக்கிறார்.

12.1.1863 அன்று இன்றைய கொல்கொத்தாவில் விஸ்வநாத தத்தர் என்ற வழக்கறிஞருக்கும்,புவனேஸ்வரிக்கும் காலை ஆறு மணி முப்பத்து மூன்றாம் நிமிடம்,முப்பத்து மூன்றாம் விநாடியில் தனுசு லக்னம்,கன்னி ராசி,ஹஸ்தம் நட்சத்திரம்,கிருஷ்ண சப்தமி திதியும்,பொங்கல் திருநாளும் கூடிய சுபயோக சுபதினத்தில் நரேந்திரன் சிவபெருமானின் அம்சமாகப் பிறந்தார்.காசி வீரேசுவர சிவபெருமானின் அருளால் பிறந்தமையால்,இவரது பெற்றோர்கள் இவருக்கு வீரேசுவரன் என்று பெயர் வைத்தனர்.இவரைச் செல்லமாக பிலே என்று அழைத்தனர்.


ஷண்மதக்கொள்கையே ஹிந்து தர்மத்தின் அடிப்படை! விநாயகரை வழிபடும் முறைக்கு காணபத்தியம் என்று பெயர்;குமரக்கடவுளை வழிபடும் மதத்திற்கு கவுமாரம் என்றும்,சிவனை வழிபடும் முறைக்கு சைவம் என்றும்,விஷ்ணுவை வழிபடும் மதத்தை வைஷ்ணவம் என்றும்,அம்மனை வழிபடும் முறைக்கு சாக்தம் என்றும்,சூரியனை வழிபடும் முறைக்கு சவுரம் என்றும் ஆறு மதப்பிரிவுகளாக இறைவனை அடையும் வழிமுறைகள் இருந்தன;இந்த ஆறு வழிபாட்டுமுறைகளும் சில லட்சம் ஆண்டுகளில் எழுபத்தாறு முறைகளாக பெருகிவிட்டன;இந்த எழுபத்தாறு வழிமுறைகளையும் மீண்டும் ஆறு மத வழிபாடாக மாற்றுவதற்கு சதாசிவனின் ஆணைப்படி பூமியில் பிறந்தவரே ஆதி சங்கரர் ஆவார்.தனது 33ஆம் வயதுக்குள் ஆதிசங்கரர் இந்தியாவை மூன்று முறை வலம் வந்தார்;அக்கால வழக்கப்படி,இந்த எழுபத்தாறு மத ஆச்சாரியார்களிடம் வாதம் செய்து அனைவரையும் தனது சீடர்களாக ஏற்றுக்கொண்டார்.இதன் மூலம் இந்து தர்மம் மீண்டும் புத்துயிர் பெற்றது.
அவருக்கு அடுத்தபடியாக,உலகத்திற்கு இந்து தர்மத்தின் பெருமைகளை புரிய வைப்பதற்காக சிவ கணங்களாக இருந்தவர்களை ஸ்ரீராமகிருஷணராக முதலில் அவதரிக்க வைத்தார் சதாசிவன்;அடுத்தபடியாக சுவாமி விவேகானந்தரை பிறக்க வைத்தார்;ஸ்ரீராமக்ருஷ்ணர் தமது தவ ஆற்றல் முழுவதையும் தனது சீடரான சுவாமி விவேகானந்தருக்கு வழங்கினார்.


சுவாமி விவேகானந்தர் ஆரம்ப காலத்தில் நாத்திகராக இருந்தவரே! தனது சிறுவயதிலிருந்தே மணிக்கணக்காக தியானம் செய்து வந்தவர்;சுவாமி விவேகானந்தர் கடவுளை நேரில் பார்க்க விரும்பினார்;எனவே,ஆன்மீகத்தைப் பற்றியும்,கடவுளைப் பற்றியும் தன்னிடம் யாரெல்லாம் பேசுவார்களோ,அவர்களிடம் அவர்களிடம் கடவுளை நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா? என்றும்,நீங்கள் பார்த்திருந்தால்,எனக்கு காட்டுவீர்களா? என்றும் கேள்வி கேட்பார்.சரியான பதில் பலரிடம் கிடைக்கவில்லை;


இந்த சூழ்நிலையில் ஒருவர் சுவாமி விவேகானந்தரிடம் , தட்சிணேஸ்வரத்தில் காளி கோவில் பூசாரியாக இருக்கும் ராமகிருஷ்ணரை சந்தித்தால்,உன் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று வழிகாட்டினார்.
ஸ்ரீராமகிருஷ்ணரை நேரடியாக சந்தித்த சுவாமி விவேகானந்தர்,
“நீங்கள் கடவுளை நேரில் சந்தித்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.
“ஆம்.”
“அவரை எனக்கு காட்ட முடியுமா?”என்று தனது ஆவலை  வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதற்கு ஸ்ரீராமக்ருஷ்ணர், “காட்டுவதென்ன; உன்னிடம் பேசுவது போல,அவரிடம் பேசியிருக்கிறேன்;அதே போல நீயும் கடவுளிடம் பேச முடியும்.நீ நினைக்கும்போதெல்லாம் பேச முடியும்” என்று சொல்லியிருக்கிறார்.


இவரது உறுதியான பதிலைக் கேட்டு நரேந்திரன்(சுவாமி விவேகானந்தரின் நிஜப்பெயர்!) திகைத்துப்போனார். பிற்காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரால் நரேன் கடவுளை நேரில் சந்தித்திருக்கிறார்.பேசியிருக்கிறார்.
இந்த உலகம் முழுவதும் வாழும் அனைத்து இன மக்களுக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவமே கதி மோட்சம் அளிக்கும் மதம் என்பதை அறிவிக்கவே சிகாகோவில்  11.9.1893 திங்கட்கிழமையன்று சர்வமத சபையை கூட்டினர்.


ஆனால்,அவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை;மாறாக ஹிந்து தர்மத்தின் பெருமைகள் உலகறிய ஒரு வாய்ப்பாகிவிட்டது.ஆதி சங்கரருக்குப்பிறகு,ஹிந்து தர்மத்தின் பெருமைகளை உலகம் அறியவும்,ஹிந்து தர்மத்தின் ஆபத்துக்களை ஹிந்துக்கள் புரிந்து கொள்ளவும் சுவாமிவிவேகானந்தரை சதாசிவன் பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.


ஒரு ஹிந்து மதம் மாறிவிட்டால்,ஹிந்துக்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்துவிட்டதாக அர்த்தம் அல்ல;ஹிந்து எதிரி ஒருவன் அதிகரித்துவிட்டதாக அர்த்தம்.


சுவாமி விவேகானந்தரின் பெருமைகளைத் தமிழில் அறிய இங்கே சொடுக்கவும்;
ஆங்கிலத்தில் அறிய இங்கே சொடுக்கவும்.


ஓம்சிவசிவஓம்

குறிப்பு : இந்த பதிவினை விவேகானந்தர் பிறந்த தினத்தன்று வெளியிட இயலாமைக்காக ஆன்மீக எக்ஸ்பிரஸ் மிகவும் வருத்தப்படுகிறது.
மேலும் ஆன்மீக அன்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது.
நன்றிகள் : குருநாதர் 

No comments:

Post a Comment