Monday 28 January 2013

ஜாதிகள் வந்தது எப்படி ?


ஜாதிகள்  இந்தியாவில் எப்படி தோன்றின ?

நமது தாய் நாடாம் இந்தியாவில் அந்நியர்களின் வருகைக்கு முன்பு வரை ஜாதி வெறி என்ற கொடூரமோ  கீழ் சாதி மேல் சாதி என்றோ கிடையாது. வெள்ளையன் இங்கு வருகை தந்து நமது ஒற்றுமையை பார்த்தான்.
மெய் சிலிர்த்து போனான். இவ்வளவு இறையாண்மை, ஒற்றுமை, செல்வம், அன்பான மக்கள், இயற்கை வளங்கள் இவற்றை ஒரு பொழுதும் மற்ற நாடுகளில் பார்த்திராத வெள்ளையன் கண்களில் உறுத்தியது. இவர்களை எப்படி ஏமாற்றுவது என திட்டம் தீடப்பட்டதன் விளைவே ஜாதிகள் மற்றும் நாத்திகம். ஜாதி என்ற பெயரில் நம்மிடையில் ஒரு பிளவு ஏற்படுத்தினான். அதில் வெற்றியும் கண்டான். அதற்கு முன்பு வரை ஜாதிகள் எப்படி
இருந்தது தெரியுமா ? சமுதாய அமைப்புகள் ( ஜாதிகள் என்று சொன்னதான் புரியுமோ ) என்பது ஒவ்வொரு அமைப்பினரும் செய்யும் தழிலை வைத்தே நிர்ணயம் செய்யப்பட்டன. உதாரணத்திற்கு தச்சு வேலைகள்
செய்யும் அமைப்பினர் தச்சு ஆசாரி என்று அழைக்கப்பட்டனர், வாணிபம் செய்பவர்கள் வன்னியர் என அழைக்கப்பட்டனர், போர் வீரர்கள் சத்ரியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இதை போன்றே ஒவ்வொருவரும்
தங்கள் செய்யும் தொழில்களை மையமாக வைத்து மட்டுமே அழைக்கப்பட்டனர். ( ஏன் நாம் அழைக்கவில்லையா
பேங்க் மேனேஜர் போறான் பாரு  என்று அது போல தான் ) அவைதான் பின்னாளில் ஜாதிகளாக மாறியது. மேலும் மிகவும் பிரச்டிகாளாக சொல்ல வேண்டுமானால் இன்று ஒரு கம்பெனியில் மேனேஜர், ஹெல்பர்,
டீம் லீடர், ஜூனியர் என பல பிரிவுகளின் கீழ் வேலை செய்கின்றனர். அவர்களிடம் சென்று நீ தான் டீம் லீடர் அதனால் நீ தான் உயர்ந்த சாதி, ஹெல்பர் தாழ்ந்த ஜாதி என்று கூறினால் எப்படி இருக்கும் அப்படிதான் மாற்றினான்.
சிலர் கூறுகிறார்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்போர் முறையே பிரம்மாவின் முகம், தோள், தொடை,
கால்களினின்றும் பிறந்தார்கள் என்பதும் அக்கதைகளுள் ஒன்று. அவை திட்டமிட்டு புனையப்பட்ட மாற்றப்பட்ட ஒரு கூற்று ஆகும். மேலும் இங்கு பிரம்மன் என்பதன் பொருள் என்னவென்றால் மனிதன் என்பது ஆகும். இவை
வேதம் அறிந்தவர்க்கு நன்கு புரியும்ஆக ஜாதிகள் என்பது தனித்தனியாக தோன்றிய  இனம் அல்ல என்பதும், பிற்காலங்களில் பிராமணன், வைசியன்,சத்திரியன், சூத்திரன் என்ற நான்கு வித ஜாதிகளும் ஒவ்வொரு
மனிதனிடம் இருந்துதான் தோன்றுகிறது ( மனிதன் தனக்கு தானே ஏற்படுத்திக் கொண்டான் ) என்ற இரகசிய விளக்கத்தையும் பிரம்மன் என்பது மனிதன்தான் என்ற உண்மையையும் விளக்கமளித்துள்ளது.
மேலும் இன்றைய
ஊடகங்களும், நாத்திகர்களும், அரசியல் வாதிகளும் மேலும் பலரும் இந்த ஜாதி பிரச்னையை மையமாக வைத்து
மட்டுமே பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பது நாம் அறியாமையால் மறந்து விட்ட உண்மை. கடவுள்
இல்லை, இந்து மதத்தில் மட்டுமே சாதிகள் இதனை என்று சொல்லும் சினிமாக்காரர்களும் பகுத்தறிவுவாதிகளும்
இன்றளவும் தங்கள் பெயரில் மட்டும் காட்டி கொள்வது ஏன் ? இந்து மதத்தில் மட்டும் தான் இதனை ஜாதிகள் உள்ளனவா ?
இல்லை அணைத்து மதங்களிலும் உள்ளன. அவற்றோடு ஒப்பிடுகையில் இந்து மதம் பரவா இல்லை என தோன்றுகிறது.
அடுத்த பதிவுகளில் அவை பற்றி காண்போம்.
நன்றிகள் : குருநாதர்.,

1 comment:

  1. நான் எதிர்பார்த்தது எனக்கு கிடைத்தது. நன்றி சகோ 😍🙏🙏😘😍

    ReplyDelete