Monday 3 March 2014

சித்தர்கள் வருகைக்கான அறிகுறி

கி.பி.2006 ஆம் ஆண்டில் இந்தோனேஷியாவை மையமாகக் கொண்டு சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை உலகின் பல நாடுகளைத் தாக்கியது;இதற்கு புவியியல் வல்லுநர்கள் பெரிய பெரிய விளக்கங்களைக் கொடுத்தனர்;ஆனால்,முன்கூட்டியே அவர்களால் எப்போது,எங்கே  ஆழிப்பேரலை வரும்? அது எந்த நாடுகளைத் தாக்கும்? என்பதை கணிக்கமுடியவில்லை;தமிழினத்தின் ஆதி இருப்பிடமான குமரிக்கண்டம்,இன்றைய இலங்கைக்குத் தெற்கே சுமார் 2000 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கும்,சுமார் 24,000 கிலோ மீட்டர்கள் அகலத்திற்கு(கிழக்கே ஆஸ்திரேலியாவிலிருந்து மேற்கே ஆப்ரிக்கா வரையிலும்) பரவியிருந்தது.மனதின் சக்தியை முழுமையாக பயன்படுத்துவதில் நமது தமிழினம் தேர்ச்சிபெற்றிருந்தனர்;இன்றைய திரைப்படமான ஏழாம் அறிவில் காட்டப்படும் நோக்கு வர்மத்தின் பரம்பரை நாம் மட்டுமே!!! 



இன்றும் ஒரு சில ஆன்மீகக் குழுவினருக்கு நோக்கு வர்மம் தெரியும்;இந்த குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர்களையும்,குமரிக்கண்டத்தையும் ஆழிப்பேரலை தாக்கியது.இன்றைய சேலம் போன்று இருந்த கன்னியாகுமரி,தற்போது முக்கடலும் சந்திக்கும் இடமாக உருவாகி,ஓராயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன.


2006 ஆம் ஆண்டில் வந்த ஆழிப்பேரலைக்கு ஆன்மீகரீதியான காரணம் தினத்தந்தியில் முழுப்பக்க கட்டுரையாக வெளிவந்தது.கடலுக்குள் காகபுஜண்டர் என்னும் சித்தர் பல லட்சம்(?!?) ஆண்டுகளாக தவம் செய்துவந்தார்;கடலோரம் நிகழ்ந்த காமக் குற்றங்களால்,அவர் கோப ஆவேசத்தோடு எழுந்தார்;அதனால்,ஆழிப்பேரலை என்னும் சுனாமி வந்தது.அதன்பிறகு, கி.பி.2010இல் சித்தர்களின் வீடாகிய சதுரகிரியில் சித்தர்களின் மாநாடு நடைபெற்றது.இதன் முடிவாக சித்தர்களின் ஆசி பெற்ற ஒருவன்,இந்தியாவின் தலைமை பீடத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவான்;அவனது ஆட்சிக்காலத்தில் இந்து தர்மம் உலகம் முழுவதும் பரவும் என்று அடிக்கடி செய்திகளாக பல ஜோதிட இதழ்களில் வெளிவந்தது.குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஏ.எம்.ராஜகோபால் ஐயா அவர்கள் கூட இது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.அதில்,
“வட நாட்டைச் சேர்ந்த ஒரு மாவீரன்,தென் நாட்டைச் சேர்ந்த ஒரு துறவியிடம் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறான்.அவன் வெகுவிரைவில் இந்தியாவை ஆளத் துவங்குவான்;அவனது ஆட்சி சர்வாதிகார ஆட்சியாக இருக்கும்;அதே சமயம்,அவனது ஆட்சியில் நேர்மையாக வாழ்ந்து வருபவர்கள் போற்றப்படுவார்கள்;அக்கிரமம்,அநீதி செய்தவர்கள் அனைவரும் மீளமுடியாத கஷ்டத்துக்கு ஆளாகப் போகிறார்கள்”

1 comment: