Friday 1 November 2013

நமது ஆன்மீக குரு சிவநிறை.சகஸ்ரவடுகர் அவர்களின் தீபாவளி(2.11.13 சனி) வாழ்த்துக்கள்!!!






விஜய வருடத்தின் தீபாவளி 2.11.2013 சனிக்கிழமை அன்று கொண்டாட இருக்கிறோம்;இந்த நன்னாளில் நாம் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து,கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்;ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று மட்டும் இந்தியாவில் இருக்கும் அனைத்து நீர்நிலைகளிலும் கங்கை நதி வரும் என்பது கோடிக்கணக்கான இந்துக்களின் லட்சக்கணக்கான ஆண்டு கால நம்பிக்கை!
சூரியன் உதயமாவதற்குள் காலைக் கடன்களை முடித்துவிடவேண்டும்;முதல் நாளே கடையில் வாங்கிய பிரட் பாக்கெட்டுகளை(இரண்டு) ஒரு தாம்பாளத்தில் கொட்டி சிறு சிறு துண்டுகளாக ஆக்க வேண்டும்;அத்துடன் கால் கிலோ பூந்தியை கலந்து கொள்ள வேண்டும்;வீட்டின் மொட்டை மாடி அல்லது வாசலில் மேடான பகுதியில் அல்லது வீட்டில் முன்பகுதியில் காக்கைக்கு சாதம் வைக்கும் இடத்தில் இந்த கலவையை வைக்க வேண்டும்;அதிகபட்சமாக காலை 7 மணிக்குள் வைக்க வேண்டும்;இப்படிச் செய்வதன் மூலமாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதாக அர்த்தம்.அதுவும் தீபாவளித் திருநாள் அன்று செய்தால் முன்னோர்கள் மட்டுமல்ல;பித்ருக்கள் உலகத்தின் அதிதேவதைகளும்,தர்மராஜனும் மகிழ்ச்சியடைவார்கள்;நம்மை ஆசிர்வாதிப்பார்கள்!!!
பிறகு,சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்;
இதைச் செய்வதற்குள் ஐந்து இட்லிகள்+எள்ளுப்பொட்டலம் கலந்த பார்சல்கள் குறைந்தது ஐந்து(வீட்டில் அம்மா/மனைவியிடம் சொல்லி) தயார் செய்து கொள்ள வேண்டும்.காலை எட்டு மணிக்குள் அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று அங்கே வாசலில் அமர்ந்திருப்பவர்களுக்கு தானமாகத் தர வேண்டும்;ஐந்து சாதுக்கள் அல்லது நிராதரவான குழந்தைகளுக்கு அல்லது தனித்து வாழும் முதியவர்களுக்கு அல்லது அனாதைகளுக்குத் தர வேண்டும்;அருகில் கோவில் இல்லாவிடில்,அனாதை இல்லங்களில் தரலாம்;அல்லது அனாதையாக இருப்பவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றும் தரலாம்.குறைந்தது ஐந்து பேர்களுக்கு(அதிகபட்சமாக ஐந்தின் மடங்குகளில்= 10 பேர்கள்/15 பேர்கள்/20 பேர்கள்/25 பேர்கள்)
காலல 10 மணி முதல் 12 மணிக்குள் அல்லது மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் நமது குல தெய்வம் கோவிலுக்குச் சென்று,குலதெய்வத்தின் சன்னிதானத்தில் இரண்டு நெய்தீபங்கள் ஏற்றி மனப்பூர்வமாக நமது தேவைகளை/கோரிக்கைகளை/வேண்டுதல்களை வேண்டிக்கொண்டு வீடு திரும்ப வேண்டும்.
குலதெய்வம் வெகுதூரத்தில் இருந்தால் இஷ்ட தெய்வத்தின் சன்னதியில் இது போல வழிபாடு செய்ய வேண்டும்.
இதன் மூலமாக கங்கையின் ஆசி,முன்னோர்களின் ஆசி,குல தெய்வத்தின் ஆசி,குருவின் ஆசி கிட்டும்.
இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்கு இந்த கணத்தில் கூகுள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்;
 "நீங்கள் ஒவ்வொருவரும் சகல வளங்களும்,அனைத்து நலங்களும் பெற்று வளமோடு வாழ்க! உங்கள் அனைவருக்கும் எமது தீபாவளி சிவவாழ்த்துக்கள்!!!"= சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள்

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment