Friday 13 April 2012

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியைப் பயன்படுத்துவோம்;

தமிழ்ப்புத்தாண்டு நந்தன,கிறிஸ்தவ தேதியான 13.4.12 வெள்ளியன்று பிறக்கிறது.அதே நாளில்,நந்தன ஆண்டின் முதல் தேய்பிறை அஷ்டமியும் வருகிறது.
13.4.2012  வெள்ளிக்கிழமையன்று காலை 10.34 முதல் 14.4.2012 சனிக்கிழமை 10.34 வரையிலும் தேய்பிறை அஷ்டமி அமைந்திருக்கிறது.இதில் ஆச்சரியமான ஒற்றுமை என்ன வெனில்,வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரையிலும், சனிக்கிழமை காலை 9 முதல் 10.30 வரையிலும் ராகு காலம் அமைந்திருப்பதுதான்!!!
நமக்குச் செல்வ வளத்தை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு காலத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவரின் சன்னதியில் வழிபட்டுக்கொண்டிருப்பார்கள்;அதே நேரத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவரை வழிபட்டால்,அவரின் அருளாசியால் நமது பல பிறவிகளின் கர்மவினைகள் குறையத்துவங்கும்;அதே சமயம்,உடனடியாக நமது பொருளாதாரச் சிக்கல்கள் தீரத் துவங்கும்;இது அனுபவ உண்மை.
கடவுளர்களில் மும்மூர்த்திகளுக்கும் மேலாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவர் இருப்பதாலும், ‘பைரவர் வழிபாடு கைமேல் பலன்’என்பது அனுபவ உண்மையாக இருப்பதாலும்,தேய்பிறை அஷ்டமியன்று இவரை குறைந்தது 12 தேய்பிறை அஷ்டமிகளுக்கு தொடர்ந்து வழிபட்டு வரவேண்டும்.இதன் மூலமாக நமது தினசரி வாழ்க்கையில்,போதுமான செல்வச் செழிப்பை அடைந்துவிடுவோம் என்பது உறுதி.
தமிழ்நாட்டில் ஒரு சில ஊர்களில் மட்டுமே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவரின் சன்னதிகள் இருக்கின்றன.அவைகளின் பட்டியல்:
1.சென்னையின் அருகே இருக்கும் படப்பையில் அருள்மிகு ஸ்ரீஜெயதுர்கா பீடம்.
2.சென்னையின் அருகே இருக்கும் வானகரம் என்னும் ஊரில்.
3.சென்னை பள்ளிக்கரணையில் ஒரு அறக்கட்டளையினர் ,திருமண மண்டபத்தினுள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபட்டுவருகின்றனர்.அனைவரும் சென்று வழிபடலாம்.
4.திருஅண்ணாமலை கோவிலின் உட்பிரகாரம்.
5.திருஅண்ணாமலையிலிருந்து காஞ்சி செல்லும்(காஞ்சிபுரம் அல்ல) சாலையில் இருக்கும் காகா ஆஸ்ரமத்தில் சித்தர் முறைப்படி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
6.காஞ்சிபுரம்
7.சிதம்பரம்
8.திருச்சி மலைக்கோட்டைக்கு அருகில்.
9.திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் தபசுமலை
10.காரைக்குடிக்கு அருகில் இருக்கும் இலுப்பைக்குடி
11.காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் இருக்கும் பிள்ளையார்ப்பட்டி அருகே இருக்கும் வயிரவன்பட்டி
12.திண்டுக்கலில் இருந்து கரூர் செல்லும் வழியில் இருக்கும் தாடிக்கொம்பு.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவரை தேய்பிறை அஷ்டமியன்று விரதமிருந்து வழிபடலாம்;சிகப்பு அரளிமாலையினை சாற்றிவிட்டு,ராகு காலம் முழுவதும் அவரது சன்னதியில் அமர்ந்து அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்கலாம்.
(ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சகவம்ஸ ஆபத்துதோராணாய
அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மமதாரித்ரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹாபைரவாய நமஹ)

கோவிலுக்குச் சென்று வழிபட முடியாதவர்கள்,எம்மிடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் போட்டோவும்,வீட்டில் வழிபாடு செய்யும் முறையையும் கேட்டு வாங்கலாம்.வழிபடலாம்.
ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம்

No comments:

Post a Comment