Friday 13 April 2012

தமிழ்ப்புத்தாண்டின் முதல் நாளில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்!!!

 உலகில் எந்த நாட்டையும் விட ,வானியலில்  முழுமையான தேர்ச்சி பெற்றவர்கள் நமது முன்னோர்கள்.சூரியனை நீள்வட்டப்பாதையில் பூமி சுற்றுகிறது என்பதை கோபர்நிகஸ் கண்டுபிடிப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே,நமது முன்னோர்களாகிய ரிஷிகள்,சித்தர்கள்,மகான்களுக்குத் தெரியும்.அது மட்டுமல்ல,உலகத்தை ஆளப்போவது பாரத நாடுதான்.பாரத நாட்டின் சனாதன தர்மம் மட்டுமே!!! இந்த வாழ்க்கை முறையே உலகில் வாழும் அனைத்து மனித இனங்களுக்கும்,அனைத்து மக்களுக்கும் வாழ்வியல் நெறிகளை உருவாக்கித் தந்திருக்கிறது.இந்த நெறிகள் இந்த வருடம் நிறைவடைவதற்குள் உலகமெல்லாம் பரவிவிடும்.

ஒவ்வொரு சித்திரை மாதமும் சூரியனை பூமி நெருங்கிவருகிறது.இந்த வானியல் நடைமுறையின் அடிப்படையிலேயே பல லட்சம் வருடங்களாக பாரதம் எனப்படும் இந்தியா  முழுவதும் (அனைத்து மொழிகளிலும்,அனைத்து மாநிலங்களிலும் சிற்சில நாட்கள் வித்தியாசத்தில்)  புத்தாண்டு கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்த நன்னாளில் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் முதன்மையானது குலதெய்வ வழிபாடு ஆகும்.அடுத்தபடியாக இஷ்ட தெய்வ வழிபாடும் ஆகும்.மூன்றாவதாக நாம் தினமும் ஜெபிக்கும் மந்திரத்தை,பிரம்ம முகூர்த்தம் எனப்படும் காலை 4.30 முதல் 6 மணிக்குள்; மற்றும் குரு ஓரைகளில் ஜபிப்பது அல்லது இவற்றில் ஏதாவது ஒரு நேரத்தில் ஜபிப்பது ஆகும்.

மிகவும் திட்டமிட்டு யோசித்துப்பார்த்தால்,ஏதாவது ஒரு கோவிலுக்குள்ளே காலை 4.30 முதல் 6 அல்லது 7 மணிக்குள் ஒரு சில நிமிடங்களாவது ஜபிப்பது மிகவும் அவசியம்;இப்படி ஜபிப்பதன் மூலமாக நாம் ஜபிக்கும் மந்திரம் அளவற்ற தெய்வீக சக்தியை ஈர்த்துத் தரும் என்பது எதிர்காலத்தில் நிரூபிக்கப் போகிற உண்மையாகும்.
எனவே,நந்தன ஆண்டின் முதல் நாளான சித்திரை 1 ஆம் நாளன்று காலை 5 முதல் 6 மணிக்குள் நமது வீட்டில் அல்லது நமது கோவிலில் அல்லது நமது குல தெய்வம் இருக்கும் கோவிலில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;இதனால் நமது வாழ்க்கை இந்த வருடம் நிறைவடைவதற்குள்  பொருளாதாரத் தன்னிறைவு மிக்கதாக உயர்ந்துவிடும்!!!
 ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment