Tuesday, 5 March 2013

ஆன்மீகக் கேள்விகளும் பதில்களும்:-


கேள்வி : மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் திருவிழா சமயங்களில் ஆடு, மாடு, கோழி பலியிடுகின்றனரே, இது நியாயமா ? இறைவன் இதை விரும்புகிறானா ?

இறைவன் விரும்புகிற காரியங்களை மட்டுமே மனிதன் செய்வதானால் முதலில் பொய் சொல்லக் கூடாது, பொய் சொல்லாமல் இருந்தால் அரசியல் கட்சிகள் நடத்துவது எப்படிஇவை எல்லாம் காலம் காலமாக மக்கள் செய்து கொண்டிருக்கும் தவறுகளில் ஒன்று தான். அவற்றை கோவில்களில் வெட்டினால் என்ன, கடைகளில் வெட்டினால் என்ன? பெரிய வித்தியாசம் இல்லை. பாவம் பாவமே, முஸ்லிம்கள் பிஸ்மில்லாஹ் என்று சொல்லி தானே குர்பானி வெட்டுகின்றனர்.

கேள்வி : இந்து மதத்தின் மீது விழிப்புணர்ச்சியும் அதிகப் பற்றும் கொண்டவர்கள் இந்தியாவின் தென் பகுதியை விட வட பகுதியில் அதிகம் உள்ளதாக நினைக்கிறேன். அது பற்றி தங்கள் கருத்து என்ன ?

பதில் : மதத்தை அப்படியே கண்ணை மூடிக் கொண்டு உற்சாகமாய் பின்பற்றுபவர்கள் வட பகுதியில் அதிகம்; வறட்டு விமர்சகர்கள் தென் பகுதியில் அதிகம். அதனால் தான் மதப் பிரச்சாரம் தென் பகுதிக்கே அதிகம் தேவைப்படுகின்றது.

கேள்வி : முற்பிறவி நினைவுகள் சிலருக்கு மட்டும் வருகின்றதே; எல்லோருக்கும் முற்பிறவி நினைவுகளை ஆண்டவன் கொடுக்காதது ஏன் ?

பதில் : எல்லோருக்கும் அந்த நினைவை கொடுத்து விட்டால் உலகம் பூராவும் பைத்தியக்கார விடுதி ஆகிவிடும். ஒருவனும் பிறந்த இடத்தில இருக்க மாட்டான் மாட்டான், பழைய இடத்திற்கே ஓடுவான். போன ஜென்மத்தில் மனிதனாக பிறந்த ஒருவன் இந்த பிறவியில் நாயாகப் பிறக்கக் கூடும். அந்த நாய்க்கு ஜென்ம ஞாபகம் வந்து பழைய மாளிகையை ஆக்ரமித்துக் கொண்டால் என்ன ஆவது ?

கேள்வி : கோவில்களில் இறைவனுக்கு பூஜைகள் செய்வதில் ஆண்கள் மட்டுமே செய்கின்றனர், பெண்கள் ஏன் செய்வதில்லை ?

பதில் : இது நல்ல யோசனை. ஆனால் மாதத்தில் சில நாட்கள் அவர்களால் பூஜை செய்ய செய்ய இயலாமல் போய் விடும். பெண்கள் நம்மால் பூஜிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் பூஜை செய்யக் கூடாது.

நன்றிகள் : குருநாதர்




No comments:

Post a Comment