Tuesday, 19 March 2013

ஓம்சிவசிவஓம் ஜபித்தவர்களுக்கு கிடைத்துவரும் அனுபவங்கள்

OMSHIVASHIVAOM EXPERIENCE


பல வாரங்களாக ஓம்சிவசிவஓம் ஜபித்துவருபவர்களின் அனுபவங்கள் எமக்கு மின் அஞ்சல்களாகவும்,போனிலும் கிடைத்துவருகின்றன.ஆனால்,அவைகளை நமது தளத்தில் வெளியிட முடியாத அளவுக்கு மிகவும் உயர்வான அனுபவங்களாகவும்,தெய்வீக உணர்வுகளின் வெளிப்பாடுகளாகவும் இருக்கின்றன.இதற்கு மேல் அவைகளை விவரிக்க இயலவில்லை;இருப்பினும் மேலோட்டமாக கொஞ்சம் பார்ப்போமா:


பல ஆன்மீக எக்ஸ்பிரஸ்  வாசகர்களுக்கு ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்போதே பழைமையான சிவாலயம் தென்பட்டுவருகிறது.(அது அண்ணாமலை அல்ல;)சில ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு சித்தர் அல்லது துறவியின் உருவம் தெரிவது போலவும்,அவர்கள் பேசுவதுபோலவும் தெரிந்திருக்கிறது;தெரிந்து வருகிறது.


ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் தொடர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்களுக்கு மட்டுமே இம்மாதிரியான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.

அதே சமயம்,கடுமையான பிரச்னைகளுடன் போராடுபவர்கள் அந்த சிந்தனையை காலையில் 30 நிமிடமும்,மாலையில் /இரவில் 30 நிமிடமும் வராமல் பார்த்துக்கொண்டு ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தாலே,அவர்களுக்கு எதிரான சூழ்நிலை மாறிவிடுகிறது.

மேலும்,பிரச்னையில் சிக்கியிருப்பவர்களின் தீய எண்ணங்கள்,தவறான மனோபாவம்/பொறாமை/ஆத்திரமான மன நிலை/தற்கொலை எண்ணங்கள் அடியோடு விலகியிருக்கின்றன.ஆக,மனத்தை சுத்தப்படுத்தும் மந்திரமாகவும் ஓம்சிவசிவஓம் இருக்கிறது.

ஓம்சிவசிவஓம்
நன்றிகள் : குருநாதர்கள்
 


No comments:

Post a Comment