Saturday, 16 March 2013

சுய கவுரவத்துடன் வாழ்வதற்கு ஒரு வழிகாட்டி புத்தகம்:

விழிமின், எழுமின்.வெளியீடு:விவேகானந்தா கேந்திரம்,கன்னியாகுமரி.விலை ரூ.25/-



^^இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் யாரையும் எப்போதும் எதற்காகவும் நம்பாமல் தன்னை மட்டும் நம்பி வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்.அப்படி வாழ்வதற்கு முதலில் தேவை தனது முன்னோர்களைப் பற்றிய பெருமைகளை முழுமையாக அறிவதே!
(இன்றைய பாடத்திட்டம் இங்கிலாந்தையும்,அமெரிக்காவையும் புகழ்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.அதே சமயம்,நமது முன்னோர்கள் எதற்கும் லாயக்கிலாதவர்கள் என்ற மாய பிம்பத்தை கி.பி.1947 முதல் உருவாக்கிவிட்டது.அதெல்லாம் பொய் என்பதை நிரூபிப்பதே ஆன்மீக எக்ஸ்ப்ரஸின் நோக்கம்)

^இப்போது இந்த புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:
‘உத்திஷ்ட ஜாக்ரத ப்ராப்ய வாரன்னிபோதத’ இந்த சம்ஸ்க்ருத வாசகம் கட உபநிஷத்தில் இருக்கின்றது.இந்த வாசகத்தை இந்து தேசத்தின் நவீன அல்டிமேட் ஸ்டார் சுவாமி விவேகானந்தர் அடிக்கடி பயன்படுத்தியுள்ளார்.

இதன் தமிழ் அர்த்தம் ‘உன்னுடைய லட்சியத்தை அடையும் வரை சிறிதும் அயராமல் உழை’ என்பதாகும்.

^இந்து தீர்க்கதரிசிகள் எதிர்காலத்தில் (கி.பி.3000 க்கும் மேல்) நடக்க இருக்கும் சம்பவங்கள் அனைத்தையும் குறித்து வைத்தனர்.அதைப் புரிந்து கொண்டு பாராட்டவே மேல்நாடுகளுக்கு பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும்.

நமது பாரத நாடு சீரழியக்காரணம் நமது புராதன இந்து மரபு மற்றும் சட்டதிட்டங்களை கடைசிவரைப் பின்பற்றாததுதான்.

^அன்பைப் பிரவாகமாக வெளிப்படுத்திய ஈசா எனப்படும் யேசுகிறிஸ்து’ ‘உனது எதிரியையும் ஆசிர்வாதி.உனது வலது கன்னத்தில் உன்னை ஒருவன் அடித்தால் நீ அவனிடம் உனது இடது கன்னத்தைக்காட்டு’ என போதித்தார்.

இந்துக்களின் வேதநூலான பகவத்கீதையில், கிருஷ்ணபரமாத்மா, ‘எப்போதும் மிகுந்த உற்சாகத்துடன் வேலை செய்; உனது எதிரி யாராக இருந்தாலும் அப்பா அம்மா சகோதரன், சகோதரி, தாத்தாவாக இருந்தாலும் நீ அவர்களை அழித்துவிடு.ஏனெனில் போர்க்களத்துக்கு வந்த பின்னர் பாசம் தேவையா?’ என நமக்கு உபதேசம் செய்தார்.

ஆனால், கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான அமெரிக்கா பகவத்கீதையை அப்படியே பின்பற்றிவருகின்றது.
அகிம்சையின் மனித உருவமான புத்தரின் கொள்கையைப் பின்பற்றும் இலங்கை கூட பகவத்கீதையைப் பின்பற்றுகிறது.

நாம், இந்துதேசம் என இந்தியாவை அழைப்பதைக் கூட அவமானமாகக் கருதுகிறோம்.ஆனால்,ஏசு கிறிஸ்துவின் கொள்கைகளை 101% பின்பற்றுகிறோம்.

^வெள்ளைக்காரர்களின் லட்சியம்: தனி மனித சுதந்திரம் (அதனால்தான் அங்கே ஓரினசேர்க்கையாளர்களுக்கு தனி எம்.எல்.ஏ., எம்.பி. இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.)
அதன் மொழி: பணம் திரட்டும் கல்வி (அட நம்ம கல்வித் தந்தைகள் விஸ்வரூபமெடுத்தது இதனால்தான்)
அதற்கு வழி:அரசியல் (இந்தியாவை நாசக்காடாக்குவது அரசியல் என்பது புரிகின்றதா?தேசப்பாதுகாப்பு விஷயத்தில் கூட அரசியல் புகுந்து நாம் அசிங்கப்பட்டுக்கொண்டிருப்பதுதான் அதிகம்)

நமது இந்துதர்மத்தின் லட்சியம்*: முக்தி
அதற்கான மொழி : வேதம் ரிக்,யஜீர்,சாமம்,அதர்வணம்
அதற்கான வழி: துறவு
இந்த வழிமுறை* தற்போது வெளிநாட்டில் பின்பற்றத்துவங்கியுள்ளனர்.


^ஒருவன் போகங்களை அனுபவித்துத் தீர்க்காமல் போனால் அவன் கடவுளை அடையமுடியாது.இது உறுதி.நாம் இன்னும் கிளிப்பிள்ளைகளாக இருக்கிறோம் பல விஷயங்களில்!!!
இதற்குக்காரணம் உடல் பலவீனம்.அப்படி உடல் பலவீனமாக இருப்பதன் ஆதாரம் பலமில்லாத மூளை.

^ நம்மில் ஒருவன் எழுந்து பெரியவனாக முயன்றால் அவனை நாம் அனைவரும் இழுத்துக் கீழே ஒடுக்கிவிடுகிறோம்.ஆனால்,அன்னியன் ஒருவன் நம் அனைவரையும் அடித்து உதைத்தால் பரவாயில்லை.(ஏ! எனது சுயநலமிக்க தமிழினமே! மலேஷியாவிலும், சிங்கப்பூரிலும், வளைகுடாவிலும், இலங்கையிலும் நமது ரத்தங்கள் செத்துக்கொண்டிருந்தும் நமக்குச் சொரணையில்லையா? மானமும் வீரமும் நமது அடையாளம் என்பது இப்போது எங்கே?
ஏ! எனது இந்து இனமே! அமெரிக்காவிடமும் சீனாவிடமும் அவமானப்படுவதற்கா நமது முன்னோர்கள் நம்மை இவ்வளவு பெருமைமிக்க இந்துதர்மத்தில் வளர்த்தார்கள்.
அமெரிக்கா நம்மிடம் ‘நீங்கள் அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், மின்சார உற்பத்திக்குத் தேவையான அணு மூலப்பொருளை உலகில் எந்த நாட்டிடமும் நான் வாங்கித் தருகிறேன்’ என நம்மிடம் பசப்புவார்த்தை சொல்லி நம்மை அடிமைப்படுத்தியது.
அணுஅயுதப்பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும்,நமக்கு அணுமின்சார மூலப்பொருள் வாங்கித்தருவதிலிருந்து அமெரிக்கா எஸ்கேப்.ஆக அவனவனுக்கு அவன் காரியம் மட்டுமே முக்கியம்)
^மூன்று இந்துக்கள் ஒன்று சேர்ந்து வெறும் ஐந்து நிமிடம் வரை ஒரு காரியத்தை முடிக்கும் பொறுமை நமக்கு இல்லை.
அந்த ஐந்து நிமிடத்தில் ஒருவனை ஒருவன் தூற்றவும், முந்தவும் செய்வதால்தான் நமது இயக்கங்கள் தோற்றுவிடுகின்றன.

^ஐயமும்,பயமும் நம்மை முட்டாளாக்கும்.முதலில் நம்மிடையே இருக்கும் பொறாமையை ஒழித்துக் கட்டுவோம்.

^நாம் உண்மையில் உண்மைக்காக பணிபுரிந்தால் நமது பாரதம் வெறும் 25 ஆண்டுகளில் சர்வசக்திவாய்ந்த நாடாக மாறிவிடும்.(அப்படி மாறாமல் பார்த்துக்கொள்வதில் காங்கிரஸ்,திக,கம்யூனிஸ்டுகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன)

^இன்றைய கல்வி ஒரு குப்பை.அது திமிரும் அகம்பாவமும் நிறைந்த மனிதர்களை உருவாக்கியுள்ளது.மனதை மலரச்செய்யும் வேலை சிறிதும் இல்லை.
பிறரை மட்டம்தட்டும் போக்கு பிற வெளிநாட்டுமதங்களிடமிருந்து நம்மிடம் பரவியது.
மனிதனை மனிதனாக்கும் கல்வியே நமக்குத் தேவை.

^கிழக்கிந்தியக்கம்பெனி நமது இந்துக்கருவூலமான ரிக் வேதத்தை வெளியிடுவதற்கு கி.பி.1750களில் ஒன்பது லட்ச ரூபாய்களை (இன்று கி.பி.2009.இந்தப்பணம் எத்தனை கோடிகள்?) செலவழித்தது.

அதற்கு முகவுரை எழுதி ரிக் வேதத்தை வரிசைபடுத்துவதற்கு 20 ஆண்டுகள் ஆயின.

அதன்பிறகு அவற்றை அச்சிடுவதற்கு 25 ஆண்டுகள் ஆயின.
கி.பி.1000 துவங்கும் வரை இந்து தேசமான நம் பாரதத்தில் ஜாதிக்கொடுமைகள்  கிடையாது.எல்லா ஜாதி மக்களும் சமஸ்க்ருதம் பயின்றனர்.பெண்களில் துறவிகள், மகான்கள், மன்னர்கள்,காவலர்கள், ஜோதிடர்கள்,உளவாளிகள்,ரவுடிகள் என அனைவரும் இருந்தனர்.
இஸ்லாம் மதம் நம்மிடம் 800 ஆண்டுகளாக தீராத இம்சை கொடுத்து இங்கே வளர்ந்தது.மதுரை மீனாட்சியம்மன் கோவில் 45 ஆண்டுகள் பூட்டிக்கிடந்தது.
300 ஆண்டுகள் கிறிஸ்தவம் இங்கிலாந்து ஆளுமை என்ற பெயரில் நம்மை செல்லரித்தது.நமது பரந்த மனப்பான்மையால் அது இப்போது செய்யும் அழிவு வேலைகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.
எப்போது நாம் நமது குழந்தைகளுக்கு நமது இந்துதர்மம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கப்போகிறோம்?
ஒவ்வொரு இந்துவும் இந்த புத்தகத்தைப்படித்தால் விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும் பல மடங்கு பெருகும்.
புத்தகம் கிடைக்கும் இடம்:
செயலாளர்,
விவேகானந்த கேந்திரம்,
விவேகானந்தபுரம்,
கன்னியாகுமரி-629702.

இணையதளம்:www.vkendra.org/

இந்துவாகப்பிறந்த ஒவ்வொரு இளைஞரும்,இளம்பெண்ணும் இந்தப்புத்தகத்தை வாசிக்க வேண்டும்.அப்படி வாசித்தால், குடும்பப்பிரச்னை,அலுவலகப்பிரச்னை, நட்புப்பிரச்னை,காதல் பிரச்னை,கல்யாணத்தொல்லைகள்,கணவன் மனைவிபிரச்னை,அரசியல் பிரச்னை,சுகாதாரப்பிரச்னை இவை அனைத்தும் தீர்ந்துவிடும்.
அது எப்படி ஒரேபுத்தகத்தில் தீரும்? வாங்குங்கள்.வாசியுங்கள்.விடை இந்தப்புத்தகத்தில் ஒளிந்திருக்கின்றது.

No comments:

Post a Comment