Tuesday, 26 March 2013

தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீக நடைமுறைகள்!!!





ஒவ்வொருவரும்  தினமும் ஏழுமணி நேரம் தூங்க வேண்டும்;இதை விடவும் குறைவான மணிநேரம் தூங்கினால் மனமும்,உடலும் விரைவில் களைத்துப்போகும்;அதைவிடவும் அதிகமான நேரம் தூங்கினால்,சோம்பேறித்தனத்தை நாம் வரவேற்கிறோம் என்று பொருள்.(நோயாளிகளுக்கும்,குழந்தைகளுக்கும்,வயதானவர்களுக்கும் இது பொருந்தாது)/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
அடுத்தவரை மனம் நோக வைத்தோ,அழ வைத்தோ,நமது அறிவாற்றலால் ஏமாற்றியோ அல்லது அதிகாரத்தைக் கொண்டு மிரட்டியோ பணம் சம்பாதிக்கக் கூடாது;அப்படி சம்பாதிக்கும் பணம் பெருமளவு சேர்ந்ததும்,பதினைந்து ஆண்டுகளுக்குள் மொத்தமாக காணாமல் போய்விடும்;நாம் வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டோம் என்று முதுமையை வரவேற்கும்போது,இவ்வாறு சம்பாதித்தவர்களை வறுமை இறுக அணைத்துக் கொள்ளும்.
சட்டத்துக்குப்புறம்பாகவோ,தர்மத்துக்குப் புறம்பாகவோ பணம் குவித்தாலும்,அத்துடன் தீராத கர்ம நோயும் வந்துவிடும்;இப்படிப்பட்டவர்களுக்கு மிக நெருங்கிய நட்புவட்டாரத்தில் இவர்களின் கர்மநோயை குணப்படுத்தும் மருத்துவர்,முலிகை மருத்துவம் அல்லது மருந்துகள் இருக்கும்;ஆனால்,அதை ஒருபோதும் நாம் அறிய முடியாது;அல்லது நம்பமாட்டோம்;

ராகு மஹாதிசையில் அபூர்வமான ராகு மஹாதிசையும்,தர்மகர்மாதிபதி திசையும்,யோகம் தரும் கிரகத்தின் திசையும் ஒருவரது பிறந்த ஜாதகப்படி அல்லது அவரது மகன்/ள் பிறந்த ஜாதகப்படியோ வந்தால் அவர்கள் குறுகிய காலத்தில் பெரும் செல்வச் செழிப்பை அடைந்துவிடுவார்கள்.அப்படிப்பட்ட செல்வச் செழிப்பு மட்டுமே நிலைக்கும்.யோகம் தரும் சனி மஹாதிசை வந்தால்,நிரந்தரமான சொத்துக்களை வாங்க வைக்கும்;அந்த சொத்துக்களை மூன்று தலைமுறைகள் வரை அடமானம் கூட வைக்கமுடியாது;இதையெல்லாம் அனுபவம் மிக்க ஜோதிடர்கள் மூலமாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நமது குழந்தையின் ஏழு வயதுக்குள் அடிக்கடி கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்;சனி,ஞாயிறு,அரசு விடுமுறைகள்,உள்ளூர் விடுமுறைகளில் தொடர்ந்து நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும்;ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளின் வரலாற்றையும்,வழிபடும் முறையையும் சொல்லித் தர வேண்டும்;இப்படிச் சொல்வதை எப்படி ஏழுக்குட்பட்ட வயதுடைய குழந்தை புரிந்துகொள்ளும்? நமது புரிந்துகொள்ளும் திறனை விடவும் அதற்கு புரிந்து கொள்ளும் திறன் அதிகம்;(அது புரிந்து கொண்டதை நம்மால் அதன் டீன் ஏஜில் தான் அறிந்து கொள்ளவே முடியும்)முடிந்தவரையிலும் எளிய தமிழில் சொல்லி விளக்கினால் போதும்;அது கேட்கும் சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் சொல்லிப் பழக வேண்டும்;அது கேட்கும் கேள்விகள் நமது ஆன்மீக அறிவை விசாலமாக்கிவிடும்!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நம்மில் பலர் தொடர்ந்து கோவில்,சித்தர்வழிபாடு,தியானம்,அன்னதானம் என்றெல்லாம் தொடர்ந்து ஏதாவது மாதக்கணக்கிலோ வருடக்கணக்கிலோ பின்பற்றிக்கொண்டே இருப்பார்கள்;ஆனால்,அவர்களின் வாழ்வில் ஒருசிறு முன்னேற்றமும் இராது;இப்படிப்பட்டவர்களுக்கு அவர்களின் பிறந்த ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கும்;அல்லது முன்னோர்களின் சாபம் இருக்கும்;அதைக் கண்டறிந்து அதற்குரிய பூஜைகளையும்,பரிகாரங்களையும் செய்யாதவரையில் ஒரு இஞ்ச் கூட வாழ்வில் உயர முடியாது;இப்படிப்பட்டவர்கள் ஒரே ஒரு சித்தர் அல்லது ஒரே ஒரு தெய்வ வழிபாட்டில் அளவுகடந்த வெறியுடன்/ஈடுபாட்டை மட்டுமே காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தபோது உணர முடிந்தது;

அல்லது

தனது வாழ்க்கைத் துணையைத் தவிர,வேறு ஒரு துணையோடும் வாழ்ந்து வருவார்கள்:அல்லது பணம் கொடுத்து சுகம் வாங்கும் சுபாவம் இவர்களுக்கு இருக்கும்;இப்படிப்பட்டவர்களுக்கு இறைவழிபாட்டுக்கான பலன்கள் வந்து சேரும்;ஆனால்,நிலைக்காது;ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் உறுதியாக இல்லாத வரை இந்த துரதிஷ்டம் தொடரத் தான் செய்யும்.. . . .. ###############################################################
நாம் செய்யும் பரிகாரபூஜைகளைப் பற்றியும்,செய்ய இருக்கும் தானங்களைப்பற்றியும் எவரிடமும்,எப்போதும் தம்பட்டம் அடிக்கக்கூடாது;இவைகளைச் செய்தப்பின்னரும்,வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தால் தான் முழுப்பலன்களும் நம்மை வந்து சேரும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


தூங்கி எழுந்திருக்கும் வேளையில் கண்விழித்த உடனே நமது வலது கையை நோக்க வேண்டும்;அவ்வாறு நோக்கும்போது ஏதாவது ஒரு இறைவனை நினைக்க வேண்டும்;எல்லோருக்கும் ஏற்ற இறைவன் அருணாச்சலேஸ்வரரே!
 ஓம் அருணாச்சலாய நமஹ;ஓம் அஷ்டபைரவப் பெருமான்களே நமஹ என்று மூன்று முறை நினைத்துவிட்டு,படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.படுக்கையை விட்டு எழுந்ததும்,நமது வீட்டின் சுவற்றை உற்று நோக்க வேண்டும்;அப்படி உற்று நோக்குமிடத்தில் ஓடும் குதிரைகள் படத்தை ஒட்டியிருக்க வேண்டும்;குறிப்பாக கும்பலாக ஓடும் வெள்ளைக்குதிரைகள் படம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்;இப்படி ஒருநிமிடம் வரை உற்று நோக்கிக் கொண்டே வந்தால்,நம்மைப் போல சுறுசுறுப்பாக வேறு யாரும் அன்று தினசரிக்கடமைகளைச் செய்ய முடியாது;

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
பல் துலக்கிட இன்று பலவிதமான பற்பசைகள் சந்தையில் கிடைக்கின்றன;அவை அனைத்தும் நமக்குத் தொண்டைப்புற்றுநோயை உருவாக்குபவை;சில இனிப்பு பற்பசைகளும் கிடைக்கின்றன;அவை நமது பற்களின் வலிமையை வெகுசீக்கிரமே நிர்மூலமாக்குபவை;எனவே,பற்பசைகளை ஒதுக்கிவிட்டு பற்பொடிகளைப் பயன்படுத்துவதே நமது நீண்டகால ஆரோக்கியத்துக்கு உகந்தது;கிராமங்களில் இருப்பவர்கள் அடுப்புக்கரி(இருக்குமா?) அல்லது வேப்பங்குச்சி,ஆலங்குச்சி,அரசங்குச்சியைப் பயன்படுத்துவது நல்லது;உள்ளூர் தயாரிப்புகள் நமது பற்களை பத்திரமாக பாதுகாப்பவை;நாமோ அதிகவிலையுள்ளவையே ஆரோக்கியம் தரும் என்ற மேல்நாட்டு மாயையில் இருக்கிறோம்;டிவி விளம்பரங்களும் நம்மை அடிமுட்டாளாக்குகின்றன;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
பிறந்தது முதல் இறக்கும் நாள் வரையிலும் இடுப்பில் அரைஞாண் கயிறு ஒவ்வொரு ஆணும்,பெண்ணும் கட்டியிருக்க வேண்டும்;இது குடலிறக்க நோயை வராமல் தடுக்கக் கூடியது;அரைஞாண் கயிறு கட்டாமல் இருந்து,ஆவேசமாக தாம்பத்தியம் செய்வதால் தான் குடலிறக்க நோய் உண்டாகிறது;எத்தனை முறை இந்த அரைஞாண் கயிறு அறுந்தாலும் அடுத்த மூன்று நாட்களுக்குள் புதிதாகக் கட்டுவது அவசியம்;ஒருபோதும் இது இல்லாமல் இருக்கக் கூடாது;அரைஞாண்  கயிறு சிகப்பு நிறத்தில் இருப்பது மிகவும் அவசியம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இதே போலத்தான் ருத்ராட்சமும்! பள்ளி/கல்லூரியில் பயிலும் மாணவ,மாணவியர் மட்டும் ஆறுமுக ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொள்வது அவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும்;மற்ற அனைவரும் ஐந்துமுக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வது அவசியம்;கழுத்தில் கட்டப்படும் ருத்ராட்சம் நமது(ஆண்கள்) தொண்டைக்குழியில் இருக்குமாறு சிகப்புக் கயிற்றில் மட்டும் கட்ட வேண்டும்;இறக்கும் நாள் வரையிலும் ஒருபோதும் இதைக் கழற்றிவிடக் கூடாது;கயிறு நைந்து போனாலோ,அறுந்து போனாலோ அதிகபட்சமாக ஏழு நாட்களுக்குள் புதுக்கயிற்றில் கட்டிவிட வேண்டும்;நீங்கள் ருத்ராட்சம் கட்டினால் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களைக் கேலி செய்யத்தான் செய்வார்கள்;பிறகு,அட்வைஸ் செய்வார்கள்;பல பிறவிகளாக சிவவழிபாடு செய்தால் மட்டுமே இப்பிறவியில் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும்;பெண்களும் அணியலாம்;மணமானவர்கள்,தாலிக்கொடியோடு சேர்த்துக் கொள்ளலாம்;மாதவிலக்கிற்கும் இதை அணிவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை;தாம்பத்தியத்திற்கும் இதை அணிந்திருப்பதற்கும் தீட்டு கிடையாது;
ருத்ராட்சங்களைக் கொண்ட மாலைகள் இருக்கின்றன;ஒரு ருத்ராட்ச மாலையில் 12,21,51,108 என்ற எண்ணிக்கையில் இருக்கும் ருத்ராட்சமாலைகளில் ஏதாவது ஒன்று அணியவே பலவிதமான சிவநெறிகளை நாம் பின்பற்ற வேண்டும்;குளிக்கும்போதும்,டாய்லெட் போகும்போதும்,தாம்பத்தியத்தின் போதும்,மது சிகரெட் பழக்கத்தின்போதும் கழற்றி வைக்கவே நேரம் போதாது;

ருத்ராட்சம் அணிந்தப்பின்னர்,அசைவம் சாப்பிடக்கூடாது;ருத்ராட்சம் அணிந்தவரை நோக்கி மாந்திரீக ஏவல் ஏவினால் அது செயலிழந்து போகும்;பேய் ,பிசாசு அண்டாது;துர்தேவதைகள் நெருங்காது;
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஒருபோதும் நிர்வாணமாகக் குளிக்கக் கூடாது;தூங்கக்கூடாது;நிர்வாணமாகப் படுத்துக் கொண்டு போர்வையை போர்த்திக் கொண்டும் தூங்கக் கூடாது;வெட்டவெளியில் பகலிலோ/இரவிலோ தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளக் கூடாது;அவ்வாறு செய்தால் நிச்சயம் துஷ்டசக்திகள் நமது உடலுக்குள் புகுந்துவிடும்;அப்படிப் புகுந்ததை நம்மால் உணர முடியாது;தாம்பத்திய உறவு முடிந்ததும்,கண்டிப்பாக(குறைந்தது பதினைந்து நிமிடம் கழித்து) குளிக்க வேண்டும்;

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

பெண்கள் தொப்புளிலும் மருதாணி என்ற மெஹந்தியை இட்டுக் கொள்வது அவசியம்;இதனால்,துர் ஆவிகள் உடலுக்குள் புகாமல் தடுக்கப்படும்;ஒட்டியாணம் அணிவதும் ஆவிகள் தொப்புள் வழியாக உடலுக்குள் தடுக்கவே!!!


உடல் அதிகப்படியான உஷ்ணம் இருந்தால்,தொப்புள் மீது சிறிது விளக்கெண்ணையைத் தடவினால்,சிறிது நேரத்திலேயே உடல் குளிர்ந்துவிடும்;இதெல்லாம் பாட்டி வைத்தியம் என்பதை அறியக்கூட நமக்கு நேரமில்லை;எதை நோக்கி ஓடுகிறோம் என்றே தெரியவில்லை;
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
நாம் ஒவ்வொருவருமே குளிக்கச் சென்றதும்,நமது உடலின் முன்பக்கத்தில் இருக்கும் மஹாலட்சுமியும்,பின்பக்கத்தில் இருக்கும் மூதேவியும் நம்மை விட்டு வெளியேறுகிறார்கள்;எனவே,குளித்து முடித்ததும்,நாம் முதலில் துவட்ட வேண்டிய உடல்பாகம் முதுகு! இவ்வாறு செய்யாமல் உடலில் வேறு எதாவது ஒருபகுதியை துவட்டினால் அங்கே மூதேவி புகுந்துகொள்வாள்;இதனாலும்,நம்மில் பலருக்கு பலவிதமான உடல் சோர்வுகள்,மனப்பதட்டங்கள் உருவாகின்றன;பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இதை நமது முன்னோர்கள் ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சகுன சாஸ்திரம் தமிழர்களுக்கே உரியது;ஒரு நல்ல காரியத்துக்கு நமது இருப்பிடத்திலிருந்து புறப்படுகிறோம்;அப்போது விதவை,ஒற்றைப் பிராமணன்,விறகு,விறகு மூட்டை,பூனை போன்றவை எதிர்ப்பட்டால் அதை கெட்ட சகுனமாகக் கருதுகிறோம்;நாம் புறப்படும் இடத்தில் இருந்து நூறு மீட்டர்களுக்குள் இவைகளில் ஏதாவது ஒன்று எதிர்ப்பட்டால் மட்டுமே சகுனத்தடை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்;அதற்குப் பிறகு,வந்தால் அது சகுனத்தடை அல்ல;கன்னிப்பெண்,கர்ப்பிணிப்பெண்,ஒன்றுக்கும் மேற்பட்ட பிராமணர்கள்,இல்லத்தரசி,நித்தியசுமங்கலி,ஒரே ஒரு ஆசிரியர்/ஆசிரியை, வங்கியில் பணிபுரிவோர்,ஒரு பூசாரி,ஒரு ஜோதிடர்,ஒரு அருள்வாக்கு சொல்பவர்,ஒரு குறி சொல்பவர்,சாமியாடிகளில் ஒரே ஒருவர், பணத்தைப் பொருளாகக் கொண்ட நிறுவனத்தில் பணிபுரிவோர் எதிர்ப்பட்டால் அது சகுன லாபம் என்று எடுத்துக் கொள்ளலாம்;இதுவும் அதே நூறு மீட்டர்களுக்குள் வந்தால் மட்டுமே சகுன லாபம் என்று கருத வேண்டும்;
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வீடு ஒரே ஒரு அறையாக இருந்தாலும் சரி;ஒன்றுக்கும் மேற்பட்ட அறைகளுடன் இருந்தாலும் சரி! வீட்டிற்குள் நுழையும் போது நறுமணம் கமழ வேண்டும்;துர்நாற்றம் வீசக் கூடாது;வீட்டிற்குள் ஆடைகள்,புத்தகங்கள்,பொருட்கள் அலங்கோலமாக சிதறிக்கிடக்கக்  கூடாது;அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்;அவ்வாறு இந்தால் மட்டுமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் அருள் நமக்குக் கிட்டும்;
துணிதுவைப்பதற்காக ஆடைகளை ஊற வைத்தால் அதிகபட்சமாக இரண்டு நாட்களுக்குள் துவைத்து காயப்போட்டுவிட வேண்டும்;இல்லாவிட்டால்,ஒருபோதும் வீட்டில் பணம் தங்காது;தினசரிச் செலவுக்கே திண்டாட வேண்டியிருக்கும்;

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

தினமும் ஒவ்வொருவரும் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஆரோக்கியக்குறிப்புகளில் ஒன்று.இரவு மட்டுமல்ல;மூன்று வேளைகளும் சாப்பாடு சாப்பிடும் முன்பு ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு சாப்பாடு சாப்பிடுவது நன்று;மதிய உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம்;டிவி விளம்பரங்கள் மூலமாக பிரபலமாகிவரும் பன்னாட்டு குளிர்பானங்களை & உணவுவகைகளை ஒருபோதும் அருந்தாதீர்கள்;அமெரிக்க உணவு வகைகள்,எம்.எல்.எம்மில் பிரபலமடையும் உணவு/மூலிகை உணவுகளை விடவும் சக்தி வாய்ந்த உணவு & மூலிகை உணவுகள் நமது நாட்டில் கிடைக்கின்றன;
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிறு நகரங்களிலும் இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட அரிசி,காய்கறிகள்,தானியங்கள்,பயிறுவகைகள் பிரபலமாகி வருகின்றன;இவைகள் சாப்பிடும்போது ருசியின்றி இருக்கலாம்;இருந்தாலும் இந்த உணவுகளைச் சாப்பிடப் பழகிக்கொள்வதன் மூலமாக ஆரம்ப நிலையில் இருக்கும் நோய்கள் நிரந்தரமாக குணமாகிவிடும்;முற்றிய நிலையில் இருக்கும் நோய்கள் தனது வலிமையை இழந்து ஆரோக்கியத்தைப் பெறலாம்;இவைகளின் விலை கொஞ்சம் அதிகம் தான்;இருப்பினும்,டாக்டருக்குச் செல்வழிப்பதற்குப் பதிலாக உணவுக்குச் செலவழிக்கலாம்;இணையத்தில் ஆர்கானிக் ஃபுட்(Organic Food in your City) என்று தேடிப்பார்த்தால் முகவரிகள் கிடைக்கும்;கடைகள் வைக்காத தனி மனிதர்களை தீர விசாரித்து முன்பணம் தருவது நல்லது;
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எப்போதும் சாப்பிடும்போது போனிலோ/நேரிலோ பேசவேக் கூடாது;அது நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்கவிடாமல் செய்து விடும்;சாப்பிடும் போதும்,சாப்பிட்ட உடனேயும் தண்ணீர் அருந்தவேக்  கூடாது;அசைவ உணவுகளில் சகிக்க முடியாத கெட்டுப்போன அசைவங்கள் (ஒரு ஆட்டின் கறி அளவுக்கு ஒரு குதிரையின் கறி அளவு அல்லது இறந்த எல்லா மிருகங்களின் . . .உவ்வே!?!?!??)சேர்ப்பது எங்கும் நடக்கிறது;எனவே,அதை நிரந்தரமாகக் கைவிடுவது அவசியம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நாம் குருவாக ஏற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு நம் மேல் திருப்தி வராத வரைக்கும் தெய்வத்தின் கடாட்சம் கிடையவே கிடையாது;
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பணத்தை நோக்கமாகக் கொண்டு வேலை செய்தால்(பன்னாட்டு நிறுவனங்களின் பேராசையைப் போல) மனம் உலக விவகாரங்களில் ஆழ்ந்துவிடுகிறது;ஆகவே,உலகியல் காரியங்களை மிகவும் கவனத்துடன் பகவானுடைய ப்ரீதிக்காகவே செய்ய வேண்டும்;இவ்விதமான செயல்களையும் கூட அதிக அளவில் செய்யக் கூடாது;ஏனெனில்,வேலைகள் அதிகமாவதால் நோக்கத்திலும் மாறுதல் ஏற்பட்டுவிடுகிறது.உலகமயமாக்கலினால் ஜி.8 நாடுகள் வெகுவிரைவில் அழிவுகளை சந்திக்க இருக்கின்றன;

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இன்றைய பெண்கள் தோடு,மூக்குத்தி,மோதிரம்,வளையல்,திருமாங்கல்யம் தவிர இதர நகைகள் அணியும் முறையே மறைந்துவிட்டது;இதனால்,குடும்ப அமைப்பு சிதைந்து சின்னாபின்னமாகிவருகிறது.இனி, யாரும் யாருக்கும் கட்டுப்பட மாட்டார்கள்;இன்னும் 300 ஆண்டுகளில் நவக்கிரகங்களின் செயல்பாடுகள் நின்றுவிடும் என்று வீரப்பிரம்மம் அவர்கள் கணித்துள்ளார்;அதை நோக்கியே கலியுகம் நகர்கின்றது;இன்னும் 500 ஆண்டுகளுக்குள்ளேயே கலியுகம் (அரிதாக) நிறைவடைந்துவிடும்;ஒவ்வொரு நூறு ஆண்டுகளிலும் மனித இனத்தில் உருவாக வேண்டிய மாற்றம் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் மாறி வருவதை அவரது தீர்க்கதரிசனங்கள் உணர்த்துகின்றன;
#################################################################################
கும்கி படத்தில் ஐயய்யய்யோ ஆனந்தமே என்று ஒரு பாடலை வைத்துள்ளார்கள்;இந்த பாடல் பிரபலமாகிவிட்டது;பலர் இதை தனது செல் போனில் ரிங்டோனாக வேறு வைத்துள்ளார்கள்;மனிதர்களின் ஆயுளை முடித்து,அவர்களின் உயிரை எடுப்பவர் எமதர்ம ராஜா.இவர் சனிபகவானின் சகோதரர் ஆவர்.இந்த எமதர்ம ராஜாவின் மனைவியின் பெயர் ஐயோ! அடிக்கடி ஐயய்யய்யோ என்ற பாடலை செல்போனிலும்,டிவி சானல்களிலும் ஒலி/ஒளிபரப்பிக் கொண்டே இருக்க எமதர்மராஜாவின் மனைவி பூமிக்கு வந்துவிடப்போகிறாள்;எமதர்மராஜாவின் மனைவி வந்தால் கூடவே எமதர்மராஜாவும் வந்துவிடுவார்;இது போன்ற அசுபமான வார்த்தைகளில் பாடல்கள் எழுதாமல் இருப்பார்களா?


இந்தப் பாடலை ரிங்டோனாக வைத்திருப்பவர்கள் நிறைய்ய கஷ்டங்களையும்,காரியத்தடைகளையும் அனுபவித்து வருகிறார்கள்;வேண்டுமெனில்,இதை ரிங்டோனாக வைத்து டெஸ்ட் செய்து பாருங்களேன்!(இதை வைத்திருக்கும் கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம்,கடக ராசியினர் அதிகம் கஷ்டப்படுவதை உணரமுடிந்திருக்கிறது)
********************************************************************************
நெருங்கிய உறவுகள் மரணமடைகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்;அப்போது அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நமது வழிபாடு தடைபடும்.அப்போது நாம் பின்பற்ற வேண்டிய சம்பிரதாயங்கள்:-


நம்மை உருவாக்கியவர்கள் நம்மை விட்டு மறைந்தால்,ஒரு மாதம் வரையிலும் மந்திரஜபம்,இறைவழிபாடு,வீட்டில் இறைவழிபாடு செய்யக் கூடாது;31 ஆம் நாளன்று அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்குச் சென்று ஒரு அருகம்புல் மாலை வாங்கி,அவருக்கு அணிவிக்க வேண்டும்;அவரை ஒன்பது சுற்று சுற்றி வந்துவிட்டு,ஒன்பதுமுறை தோப்புக்கரணம் போட்டுவிட்டு,நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்;இதைச் செய்தப் பின்னர்,நமது வழக்கமான வழிபாடுகளைச் செய்யலாம்;


இவர்களைத் தவிர,மற்றவர்கள் மறைந்து,அந்த துக்கத்தில் கலந்து கொண்டால்,இரண்டுவிதமான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது;இறந்தவரை அவரது இருப்பிடத்திலிருந்து அகற்றும் முன்பே கலந்து  கொண்டால் பதினாறு நாட்கள் வரையிலும்,அகற்றியப் பின்னர் கலந்து கொண்டால்(அன்றே கலந்துகொண்டாலும்) ஐந்து நாட்கள் வரையிலும் இறைவழிபாட்டை விலக்க வேண்டும்;



இதுவே ஒரு புதிய ஜனனம் நிகழ்ந்து அந்த ஜனனத்தை அன்றே சென்று பார்த்தால் ஐந்து நாட்கள் இறைவழிபாட்டிற்கு விடுப்பு விட வேண்டும்;ஜனித்ததில் இருந்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு  சென்று பார்த்தால் இரண்டு நாட்கள் மட்டும் விடுப்பு விட்டால் போதும்;ருதுவான வீட்டிற்கு அன்றே சென்றால் மூன்று வாரங்கள் இறைவழிபாட்டைத் தவிர்க்க வேண்டும்;ஒரு மாதம் கழித்துச் சென்று கலந்து கொண்டால்,அதற்கு எந்தவித இறைவழிபாட்டு விடுமுறையும் இல்லை;
ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment