அமெரிக்கவைச் சார்ந்த Go4Guru ஆன்லைன் கல்வி நிறுவனம் தமிழ் வகுப்புகளை இலவசமாக துவக்குகிறது. இந்த ஆன்லைன்வகுப்புகளுக்காக தமிழ் நாட்டில் பல அனுபவம் வாய்ந்த தமிழ் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆன்லைன்பயிற்சியளிக்கப்பட்டு உள்ளது. ஆறு வயதிற்கு மேற்ப்பட்ட மாணவர்கள் இந்த வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம். உலகத்தில் எந்தமூலையில் இருந்தாலும் தமிழ் கற்று கொள்ள இது ஒரு அறிய வாய்ப்பு. வெப் கேமிரா மற்றும் மைக் வசதிகளுடன் இந்த ஆன்லைன்வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்கள் ஆசிரியர்களை பார்த்து பேசிக் கற்றுக்கொள்ள முடியும். இந்த வகுப்புகள் முற்றிலும்இலவசமானது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே இந்த வகுப்புக்களில் பங்கேற்கலாம் . இந்த இலவச ஆன்லைன்வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் Go4Guru.com என்ற இணைய தளத்தில் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த தமிழ்ஆன்லையன் வகுப்புகள் மார்ச் 15ம்
தேதி முதல் ஆரம்பமாகிறது.
- தினமலர் வாசகர் காயாம்பூ ராமலிங்கம்
No comments:
Post a Comment