Tuesday, 26 March 2013

வெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோமே!!!

நமது ஆன்மீக  குரு திரு.சகஸ்ரவடுகர் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக செயல்பட்டுவருகிறார்.இதுவரை சுமாராக ஆயிரம் ஆத்மாக்களின் கர்மவினைகள் தீர ஆன்மீக வழிகாட்டுதல் செய்து அனைவருக்கும் நிம்மதியும்,மகிழ்ச்சியும் கிடைத்திருக்கிறது.சென்ற வாரம் 20.2.13 புதன் கிழமையன்று மாலைநேரத்தில் நமது ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்திருந்தபோது ஸ்ரீகாலபைரவரின் சக்தி வெளிப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.அந்த புதன்கிழமையில் இருந்து  தொடர்ந்து ஆறு புதன்கிழமைகளுக்கு இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வெளிப்படும்  என்பதையும் தமிழ்நாடு முழுவதும் தெரிவித்து எப்படி வழிபட வேண்டும்? என்பதையும் தெரிவித்தார்.(அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டால் மட்டுமே இந்த வழிபாடு பலன் தரும் என்பதை மறவாதீர்கள்;ஏனெனில்,ஜீவ காருண்யமே ஸ்ரீகாலபைரவருக்கு விருப்பமான அம்சம் ஆகும்)


இந்த நேரத்தில் நாம் நமது வீடுக்கு அருகில் இருக்கும் சிவாலயம்/அம்மன் ஆலயம்/முருகன் ஆலயம்/குலதெய்வ ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்கு மரிக்கொழுந்து மாலை அல்லது உதிரி,செவ்வரளி மாலை மற்றும் உதிரி,அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகள்,இரண்டு நெய்தீபங்களுடன் சென்று,முதலில் இரண்டு நெய்தீபங்களையும் ஒருவரே ஏற்றி வைக்க வேண்டும்.பிறகு,கொண்டு வந்திருக்கும் பூ/மாலையை பூசாரியிடம் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.
அர்ச்சனை முடிந்தப்பின்னர்,இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் நேரங்கள் நிறைவடையும் வரை அவரது சன்னதியின் முன்பாக அமர்ந்து நமது தேவைகளை மனதார வேண்ட வேண்டும்.நமக்கு என்னென்ன பிரச்னைகள் தொல்லை செய்கின்றனவோ அதை நினைத்து வேண்டி,அவை விரைவாக நீங்கிவிட வேண்டும் என்று வேண்டிவிட்டு வேறு எந்தக் கோவிலுக்கும்/வீட்டிற்கும் செல்லாமல் நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.புறப்படும் போது பிரித்து வைத்த அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகளில் பாதியை அங்கே வந்திருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு,மீதியை நமது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்;நாம் புறப்படும் போது கொஞ்சமாவது ஸ்ரீகாலபைரவரின் சன்னதியில் டயமண்டு கல்கண்டுகள் வைத்துவிட்டுப்போவது நல்லது;


(சில கோவில்களில் நாம் அர்ச்சனை செய்ய பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளைக் கொடுத்துவிட்டு,அர்ச்சனை முடிந்ததும் அதிலிருந்து கொஞ்சம் கேட்டாலும் அர்ச்சகர்/பூசாரி தருவதில்லை;அப்படிப்பட்ட இடத்தில் பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளை மட்டும் தர வேண்டாம்.நீங்களே ஸ்ரீகாலபைரவரின் முன்பாக சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு எடுத்துக் கொள்ளவும்.அவ்வாறு எடுக்கும்போது கொஞ்சம் ஸ்ரீகால பைரவரின் சன்னதியில் அவரது பாதத்துக்கு அருகில் கொட்டி விட்டு வந்துவிடவும்)


இதன் மூலமாக நமது நமது நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் நிறைவேறும்.இந்த ஆறு புதன்கிழமைகளில் எதாவது ஒரு நாளில் மட்டும் ஜபித்தாலும் உங்கள் கோரிக்கை நிறைவேறும்.ஐந்துபுதன்கிழமைகளிலும் ஜபித்தாலும் நிறைவேறும்.நைவேத்தியமாக அவல் பாயாசம் வைக்கலாம்;அவல் பாயாசத்தையும் டயமண்டு கல்கண்டுகளைப் போலவே பயன்படுத்தவும்.


27.3.2013 புதன் மாலை 6.11 முதல் இரவு 8.11 வரை பவுர்ணமியும் புதன் கிழமையும் சேர்ந்து வருவதால் இந்த புதன் கிழமை மிகவும் சக்தி வாய்ந்த பைரவ புதனாக இருக்கப் போகிறது;பிரார்த்தனை செய்து உங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள்;கடன்களை அடைத்துக் கொள்ளுங்கள்;நீண்டகால (நியாயமான) லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளுங்கள் (அந்தந்த நாடுகளில் இதே நேரத்தைப் பின்பற்றுங்கள்;அதுதான் சரி)
                                                            கடந்த ஆறு புதன்கிழமைகளில் ஏதாவது ஒரே ஒரு புதன் கிழமையன்று மட்டும் ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்குச் சென்று முறைப்படி வழிபட்டவர்களும்;ஒன்றுக்கும் மேற்பட்ட புதன்கிழமைகள் வழிபட்டவர்களுக்கும் ஏராளமான நற்பலன்கள் கிடைத்துவருகின்றன;தியான தீட்சைகளை பலவிதமான ஆன்மீக பயிற்சி அமைப்புகள் கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு வழங்கி வருகின்றன;அவைகளில் ஏதாவது ஒன்றில் தீட்சை எடுத்தவர்கள்,இந்த புதன்கிழமைகளில் ஏதாவது ஒரு புதன் கிழமையன்று ஸ்ரீகால பைரவரை வழிபடச் சென்றிருக்கின்றனர்;அருள் வாக்கு சொல்பவர்கள்,தனது முற்பிறவிகளால் தவ ஆற்றலை இயற்கையாகவே பெற்றவர்கள் என பலரும் ஸ்ரீகாலபைரவரை வழிபடச் சென்ற போது,பலருக்கு பல்வேறு விதங்களில் ஸ்ரீகால பைரவர் காட்சியளித்திருக்கிறார்;பலருக்கு அவர்களுடைய கடன்கள் தீர சந்தர்ப்பம் அமைந்துவிட்டது;                            யாரெல்லாம் அடுத்தவர்களுக்காக பிரார்த்தனை செய்தார்களோ அவர்களுக்கு அந்த பிரார்த்தனை உடனே நிறைவேறியிருக்கிறது.உங்களில் யாருக்கெல்லாம் இது போன்ற அனுபவங்கள் கிடைத்தனவோ அவைகளை எமது மின் அஞ்சல் முகவரிக்கு aanmeegaexpress@gmail.com அனுப்பினால் அதற்கான விளக்கங்கள் பதிலாக அனுப்பி வைக்கப்படும்;                        ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment