பைரவர் வழிபாட்டு மந்திரமும் அதன் பொருளும்:-
பாடல் :
" விரித்த பல்கதிர் கொள்சூலம், வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல கால பைரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒன்டிரு மணிவாய் விள்ள
சிறிதருள் செய்தோர் சேரிச் செந்நிறச் செல்வனாரே"
பொருள் : திருச்சேறை தலத்தில் உள்ள செந்நெறி என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் அழகிய கால பைரவர் வடிவம் கொண்டு, விரித்த பல கதிர்களை கொண்ட சூலம், வெடி போல சதம் கேட்கும் டமருகம் (உடுக்கை) கங்கை முதலியவற்றை தரித்து வேழ வடிவில் வந்த அசுரனின் தோலை உரித்தார். அதை கண்டு அஞ்சிய உமையவளை நோக்கி தனது மணிவாய் பொலிந்து தோன்ற அட்டகாசமாய் சிரித்தார்.
நன்றிகள் : குருநாதர்
No comments:
Post a Comment