மழுசூலம் கரத்தேந்தி- மறை வாகனத்தேறி-மாந்தர்
காக்கும் விழுதான தீச்சிகையும்-வெற்றிமிகு
புன்னகையும்-
விண்ணோர் வேந்தின் பழுதானபகை நீக்கி-சுரர்
சேனை
அழிவித்து-பாரைக்காத்து-தொழுவோர்க்கு துணைசெய்யும்
தோன்றல் எம் பைரவரே-துணைத்தாள் காப்பு
காலத்தை வென்றவனே! காசிக்குச் சென்றவனே! கயிலை
வாழும் மூலத்தை காட்டியவா! சூலத்தை நீட்டியவா!
ஞமலி வேதக்கோலத்தை காட்டியவா! கோபம் கொண்டு
வேழத்தை உரித்தவனே! பைரவா! பணிகின்றோம்
வினைகள் தீர்ப்பாய்
வெண்தலை மாலை வாழி- விலையிலா பணிப்பூண் வாழி-
புண்தலை கருமுள் பாசம் பொருதொடி கபாலம் வாழி-
மண்டு அலை வாரி வாய்பெய் மணி அரிச்சிலம்பு
வாழி
கண்டு அலை மொழி மார்பன் தோல்கரிய கஞ்சுகமும்
வாழி
வாக்கிய விலாழி வாய்த்து மணியணி மிடற்றது
இம்பர் நோக்கிய
கட்டு நீலநொறில் வயப்புரவி வாழி! தூக்கிய
துளிர் மென்
தாலுச்சுருண்டவால் சுணங்கன் வாழி பாக்கிய
வடுகநாத
பைரவர் வாழி! வாழி!
ஒரு கையில் உடுக்கு மற்றொரு கையில் நாகபாசம்
ஒரு
கையில் முத்தலைச்சூல் ஒரு கையில் கபாலம் கொண்டீர்
ஒரு கையும் குரைப்பாமோத்தை இசைக்கு நாய்சூழ
வில்வம் இருகையும் சூழ்வனத்தில் இயல் வைரவன்
தாள்போற்றி!
மதியிருக்கும் சடைமுடியும் மூன்று கண்ணும்
மணிமாலை
திருக்கரமும் திருநீற்றுப் பூச்சும் விதியெழுதும்
வேதனவன்
கபாலம் சூடும் வியன்கழுத்தும் முப்புரிநூல்
விரிந்த மார்பும்
பதிபுகழ் சூலமுடன் விளங்கக் காட்டி-பார்புரக்கும்
பரம்பொருளே,நிதிவழங்கி புதுவாழ்வு தருபவனே-
திருமெய்ஞானபுரிக்கோயில் பைரவனைப் போற்றி
வாழ்வோம்
நன்றி:தலபுராணங்கள்
ஓம்சிவசிவஓம்நன்றிகள் : குருநாதர்
No comments:
Post a Comment