ஒரு முறை சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஒரு மேடையில் இந்து மதத்தின் பெருமைகளைப் பற்றியும் அதன் கலாசார முறைகள் பற்றியும் சொற்பொழிவு கொண்டு இருந்தார். சொற்பொழிவினை கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்த ஒரு இளம் பெண் சொற்பொழிவின் முடிவில் விவேகானந்தரை சந்தித்து கேட்டாள். உங்கள் பேச்சும் அதில் புதைந்துள்ள உண்மைகளும் என்னை மிகவும் கவர்ந்து உள்ளன. எனக்கு உங்களை மணந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா ? ஒரு சின்ன புன்முறுவலுடன் சுவாமிஜி கேட்டார். எதற்காக உங்களுக்கு என்னை பார்த்து இப்படி ஒரு எண்ணம் தோன்றியது என்று ? அதற்கு அந்த வெள்ளைகார பெண்மணி கூறினாள். தங்கள் மிகுந்த அறிவு வளம், மன வலிமை, திறமை, மெய்பொருள் கொண்டு உள்ளீர்கள். உங்களை மணந்து கொண்டால் உங்களை போலவே ஒரு சிறந்த மனித மகான் எனக்கு பிறப்பான் என்று. அதற்கு நமது சுவாமி விவேகானந்தர் கூறினார். ஏன் என்னை மணந்து என் மூலம் பிள்ளை பெற்றுக் கொள்வதை விட என்னையே உங்கள் பிள்ளையாக ஏற்றுக் கொள்ளுங்கள். இப்பொழுது முதல் உங்களை நான் அன்னை என்றே அழைக்கிறேன் என்று கூறி விடை பெற்றுக் கொண்டார். ஒரு சாதாரண மனிதனிடமும் கூட ஒரு மிகப்பெரும் துறவி அவருடைய கேள்விக்கு அவர்களின் மனதை புண்படுத்தாமலும் கடும் சொற்களாலும் பேசாமலும் அன்புடன் பேசி அவர்களின் மனதில் இடம் பிடிக்கும் தன்மை நமது சுவாமி விவேகனந்தர் அவர்களிடம் மட்டுமே காண முடியும். ஆனால் இன்று அந்த வீரத் துறவி விவேகானந்தரையே அவமதிக்கும் விதமாக தி ஹிந்து பத்திரிக்கை நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. இதை இந்து மதத்தினர் மட்டுமலாமல் விவேகானந்தரின் உண்மை பொருள் அறிந்த எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்தக் கட்டுரையை வெளியிட்ட தி ஹிந்து பத்திரிக்கைக்கும் அதன் ஆசிரியருக்கும் ஆன்மீக எக்ஸ்ப்ரஸின் சார்பாக எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற செய்திகளை இனி வெளியிட்டால் அந்த நிறுவனம் மீது அவமதிப்பு வழக்கு, மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுதல் பிரிவின் கீழ் வழக்கு தொடருவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலைப் போராட்டக் காலத்தில்
துவங்கப்பட்ட பாரம்பரியச் சிறப்பு மிக்க பத்திரிகையான 'தி
ஹிண்டு', பல
அற்புதமான இதழியல்
பணிகளுக்கு முன்னுதாரணமானது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு
மேலாக அநதப்
பத்திரிகையின் தடம்புரளல் அதன் வாசகர்களை மிகவும்
வருந்தச் செய்திருக்கிறது.
குறிப்பாக மார்க்சிஸ்ட்
கட்சியின் ஊதுகுழலாகவும்
சீனாவின் அடிவருடியாகவும்
தேசிய நலனுக்கு எதிராக
எழுதுவதே தி
ஹிண்டுவின் பாதையாக மாறி இருக்கிறது. இதற்கு
அதன் முன்னாள்
ஆசிரியர் என்.ராம் முக்கியமான
காரணம். அண்மையில்
அந்தப் பத்திரிகையின்
ஆசிரியர்
குழுவில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்பிறகு,
அதன்பிறகு, தி ஹிண்டு மாறும் என்ற எதிர்பார்ப்பு
அனைவருக்கும் இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதன்
பாதை தொடர்ந்து
தடம்
புரண்டு வருகிறது.
இதற்கு மிக முக்கியமான உதாரணம்
தான், அண்மையில்
சஞ்சய் ஸ்ரீவத்சவா
என்ற
பேராசிரியர் எழுதிய கட்டுரை.
'Taking the aggression out of masculinity'
என்ற அந்தக் கட்டுரையில் இந்தியாவில் நிகழும்
கற்பழிப்பு, பாலியல் வன்முறை போன்ற சமூக
களங்கங்களுக்கு நாட்டில் நிலவும் ஆண்மைய ஆதிக்க உணர்வும், ஆண் என்றால்
ஆண்மையின் வடிவம்
என்ற கருத்துருவாக்கமும்
தான் காரணம்
என்று கூறி
இருக்கிறார். அத்துடன் நிறுத்தி இருந்தால் அவரது
எழுத்தின் பின்புலம்
நமக்கு தெரியாமல்
போயிருக்கும்.
ஜனவரி 3 ம் தேதி
வெளியான 'Taking the aggression out of
masculinity' என்ற அந்தக் கட்டுரையில்,
ஆடவரை பெண்கள்
வணங்கும் பண்பாடு
இந்தியாவில் ஊறிப் போயிருப்பதற்கு 'கார்வ் பண்டிகை'யை முன்வைத்த
சஞ்சய், ஆண்மையின்
(masculinity) இலக்கணமாக ஆண்கள் முன்னிறுத்தப்படுவதே பெண்களை
வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கு காரணம் என்ற தனது மிகப் பெரிய கண்டுபிடிப்பை
நிகழ்த்தி இருக்கிறார்.
இதற்கு அவர்
உதாரணமாகக் காட்டியது சுவாமி விவேகானந்தர் என்பது
தான் வம்பான விஷயம்.
சுவாமி விவேகானந்தரின் வீரம்
ததும்பும் தோற்றம்
நமது சமுதாயத்தில்
உள்ள -ஆண்மைத்தனத்தின் (அதாவது
பெண்களை மதிக்காத
தன்மையின் என்று
புரிந்து கொள்ளவும்)
அடையாளம் என்று
சஞ்சய் குறிப்பிட்டிருக்கிறார்
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு
போடுவது எப்படி
என்பதை
தி ஹிண்டு
பத்திரிகையிடமும் தான் கற்க வேண்டும்.
அடிமைப்பட்ட தேசத்தில் நாட்டு
மக்களுக்கு நாம் யார் என்பதைப் புரியச்
செய்த சுவாமி
விவேகானந்தரை, நாடு இளைஞர்களின் எழுச்சி நாயகனாகக்
கொண்டாடுகிறது. இளைஞர்கள் என்றால் ஆண்கள் மட்டுமல்ல,
இளைஞிகளுக்கும் அவர் தான் ஆதர்ஷ புருஷர்.
ஆனால்,
தி ஹிண்டு
பத்திரிகை, அவரது
150 வது பிறந்ததின
ஆண்டுவிழா கொண்டாடப்படும்
தருணத்தில் வேண்டுமென்றே களங்கப்படுத்தி
இருக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
கருத்து சுதந்திரம்
என்பது, என்னவாயினும்
எழுதக் கொடுக்கப்பட்ட
உரிமையல்ல என்பதை
தி ஹிண்டு
பத்திரிகைக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தி ஹிண்டு பத்திரிகை
அவ்வப்போது இவ்வாறு ஹிந்து அடையாளங்களையும் தேசிய
அடையாளங்களையும் அவமதித்து
குதூகலிப்பது வழக்கமே. ஆயினும், மகாத்மா
காந்தி முதல்,
நாட்டின் எண்ணற்ற
தலைவர்களுக்கு ஒளிவிளக்காக வழிகாட்டிய சுவாமி விவேகானந்தரையும்
வம்புக்கு இழுத்திருப்பது
யாரும் எதிர்பாராதது.
ஆட்டைக் கடித்து,
மாட்டைக் கடித்து,
கடைசியில் மனிதனையே
கடித்த கதையாக
தி ஹிண்டுவின் அன்னிய
அடிவருடித்தனம் எல்லை கடந்திருக்கிறது. இதற்கு நாடு
முழுவதும் பலத்த
எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
தமிழகத்தில் கோவை, மதுரை
உள்ளிட்ட பல
இடங்களில் இந்த
கழிசடைப் பத்திரிகையை
எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள்
நிகழ்ந்திருக்கின்றன. ஹிந்து இயக்கங்களும்
விவேகானந்த பக்தர்களும் இதில் முன்னணி
வகித்திருக்கின்றனர்; பல இடங்களில்
தி ஹிண்டு
பத்திரிகை எரிப்பு
போராட்டம் நடைபெற்றிருக்கிறது.
சென்னையில் நாளை ( 06.12.2012) காலை, அண்ணா சாலையில்
உள்ள தி ஹிண்டு தலைமை அலுவலகத்திற்கு
நேரில் சென்று
அதன் ஆசிரியரிடம்
தங்கள் எதிர்ப்பை
பதிவு செய்ய
விவேகானந்த பக்தர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களுக்கு
நமது நன்றி.
மிக சாதுவான இலக்குகளை
தாக்குவதே ஆங்கில
இதழியல் அறமாக
நமது நாட்டில்
மாறிவிட்டிருக்கிறது. இந்த கபட
வேடதாரிகளின் முன்னோடியான தி ஹிண்டு பத்திரிகை
- திருவாளர் கஸ்தூரி ஐயங்கார் உள்ளிட்ட தனது
முன்னோர்கள் வகுத்துத் தந்த பாதையை மறந்து-
தேச விரோதமான
செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டுவது கவலை அளிக்கிறது.
ஒரு வாசகன்
என்ற முறையிலும்,
நாட்டின் குடிமகன்
என்ற முறையிலும்,
தி ஹிண்டு
பத்திரிகையின் இந்த நயவஞ்சக கட்டுரைக்கு எதிர்ப்பு
தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
தன்னுனர்வுள்ள, விழிப்பான வாசகனே
இதழியலின் அடிப்படை.
அந்த வகையில்
தி ஹிண்டு
பத்திரிகை தனது
போக்கை மாற்றிக்
கொள்ள வேண்டும்
என்று இந்த
இடுகையின் மூலமாக
தேசிய சிந்தனைக்
கழகம்
வேண்டுகோள் விடுக்கிறது. நமது
வழிகாட்டிகளை இகழ்ந்துவிட்டு நாம் பெறுவது எந்த
லாபமும் இல்லை.
இது உச்சாணி
மரத்தில் அமர்ந்துகொண்டு
அடிமரத்தை வெட்டும்
வேலை. இந்த
முட்டாள்தனத்தை வன்மையாகக் கண்டிப்போம்!
'தி ஹிண்டு' என்ற
பெயரில் ஹிந்து
விரோதமாகவே செயல்படும் அதன் உரிமையாளர்களுக்கு நல்ல புத்தி வர அந்த
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தான் அருள் புரிய
வேண்டும்.
காண்க:
1. 'Taking
theaggression out of masculinity' - Sanjai Srivastava (The Hindu -03.01.2013)
http://www.thehindu.com/ opinion/op-ed/taking-the- aggression-out-of-masculinity/ article4266007.ece
2. இந்த கட்டுரைக்கு
சிந்தனையாளர் அரவிந்தன் நீலகண்டன் செண்டர்ரைட் இணையதளத்தில் எழுதிய பதிலடிகட்டுரை
3. கோவை நண்பர்எஸ்.ஆர்.சேகர் தனது வலைப்பூவில்
எழுதிய பதிலடிகட்டுரை
No comments:
Post a Comment