நாம் முன்பு சொன்ன மெக்கலே நாச வேலைக்கான ஆதாரங்கள் சில
புராதனமான இந்துக்கல்வி முறைக்கு குருகுலக் கல்விமுறை, ஆஸ்ரமக் கல்வி முறை என்று பிரிக்கப்பட்டு இருந்தது; இந்த இரண்டு கல்வி முறையிலும் 6 வயது முதல் 18 வயது வரை என 12 ஆண்டுகள் தேர்ந்தெடுத்து கல்வி புகட்டப்பட்டது. குருகுலக்கல்வியில் அரசவையின் குலகுரு அரச குடும்பத்துக் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவார்; அதற்காக அரச குடும்பத்துப் பிள்ளைகள் குல குருவின் குருகுலத்தில் உள்ளுறைப் பயிற்றுவித்தல் மூலம் குலகுருவுக்கும் அவர்தம் பத்தினியாருக்கும் தேவையான சேவைகள் செய்துகொண்டும் அவரவர்களுக்கு விருப்பமான பாடங்களைப் பயிலுவர். அங்கும் அனைவருக்கும் பொதுவான பாடமாக கவன ஈர்ப்பு என்ற மனதை ஒருமுகப்படுத்தும்,குண்டலினி சக்தி எழுச்சிக்காக சில மூச்சுப்பயிற்சிகளே கற்றுக்கொடுக்கப்பட்டன. கவனத்தில் நிலைத்த தன்மை உட்சென்று வெளிவரும் சுவாசத்தைப்பொறுத்து அமைகிறது. மனம் அடங்கி ஒன்றில் நிலைப்பதற்கு மூச்சுப்பயிற்சி மிக அவசியம்.மூச்சு அடங்க மனம் அடங்கும். மனம் அடங்கினால்,பிரபஞ்சமே அடங்கிவிடும்.
ஒரு குருகுல மாணவனின் செயல்பாடு எப்படி இருக்கும்?
என்பதை அறிய வேண்டுமானால்,சாண்டில்யன் அவர்கள் எழுதிய விலைராணி, ஜலமோகினி, ஜலதீபம் மூன்றுபாகங்கள், முதலான சரித்திர நாவல்களை வாசித்தால் உணரலாம்; இந்த சரித்திரநாவல்களில் கதையின் கதாநாயகன் ஓ! தமிழில் சொன்னால் தான் புரியும் இல்லையா? கதையின் ஹீரோவின் செயல்பாடுகளை எழுத்தில் கொண்டு வந்திருப்பார் சாண்டில்யன்.இந்த நாவல்களை வாசித்து முடித்ததும், நமக்கு ஒரு சந்தேகம் வரும்?
இவ்வளவு திறமைசாலியாகவா நமது முன்னோர்கள் இருந்தார்கள்?
சந்தேகமில்லாமல் நமது முன்னோர்கள் இந்த நாவலில் சித்தரித்திருப்பதை விடவும், அதி மேதாவிகள்; திறமைசாலிகளே! இருந்தும் கூட நம்மிடம் இவர்களிடம் இருக்கும் திறமையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லையே? ஏன்?
அதுதான் ஆங்கிலேயன் இந்தியாவில் செய்த அழிவு வேலையின் இறுதிகட்டம்!!! ஆமாம்! இவ்வ்வ்வளவு சிறப்புமிக்க குருகுலக் கல்வி முறையை தனது கல்வி முறையாக மாற்றிக்கொண்டுவிட்டான்;
அதே சமயம்,வீணாகப்போன,தேவையில்லாத,முழுக்க முழுக்க நமது நினைவுத்திறனை சோதிக்கும் விதமான பாடத்திட்டத்தை நம் மீது திணித்துவிட்டான்.1947 இல் சுதந்திரம் வாங்கியது முதல், இன்று வரையிலும் இந்த குப்பை நிறைந்த பாடத்திட்டத்தை மாற்றிட நமது ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை;மாற்றிட வேண்டும் என்ற மனோபாவம் உருவாகவில்லை;மாற்றிவிட முயன்ற அரசாங்கத்தை மேற்கு நாடுகள் பலகோடி டாலர்கள் செலவழித்து வீழ்த்துகின்றன. (ஆமாம்,அவர்களால் இந்த உலகில் இந்தியாவைத் தவிர வேறு எங்கு போய் சுதந்திரமாகக் கொள்ளையடிக்க முடியும்?)
நவீன கல்வித் திட்டம் எனப்படும் மெக்காலே கல்வித் திட்டமானது, அகங்காரம் நிறைந்த மனிதர்களை நம் இந்தியாவில் உருவாக்கிவருகிறது; அகங்காரம் நிறைந்த மனிதர்களால் பொறுப்பில்லாத சமுதாயம் உருவாகிவிட்டது; (பொறுப்பில்லாத, தொலைநோக்கு திட்டமில்லாத தலைவர்களையே நாம் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறோம்). பொறுப்பில்லாத சமுதாயத்தினால், தனது முன்னோர்களின் அறிவுப் பொக்கிஷத்தின் பெருமையை உணரக் கூட முடியவில்லை; எனவே, பல அரிய பொக்கிஷங்களை நாம் இழந்து வருகிறோம் இன்று வரையிலும்!!!
1990கள்வரையிலும் பி.எஸ்.ஸி,, பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜி போன்ற பட்டப்படிப்புகளே
இருந்தன; இந்தப் பட்டப்படிப்புகளை படித்து முடிப்பவர்கள், மேல்நாடுகளின் வாழ்க்கை முறைக்கு, மேல்நாடுகளின் தொழில்களுக்கு மட்டுமே தயார் செய்யப்படுகின்றனர் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?
இன்றைய கல்வித்திட்டத்தில் தெருவுக்கு ஒரு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியும், ஊருக்கு ஒரு பொறியியல்(என் ஜினியரிங்) கல்லூரியும் வந்துவிட்டன; வெகு விரைவில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரியும் வந்துவிடும். இந்தக் கல்வித்திட்டத்தில் மனதை மலரச் செய்யக்கூடிய பாடங்கள் மருந்துக்கு கூட இல்லை; நான் ஒரு பி.ஈ; நான் ஒரு பி.டெக்., நான் ஒரு எம்.பி.ஏ., என்ற அகங்காரம்தான் ஒவ்வொரு பட்டதாரிக்கும் உருவாகிவருகிறது. யாருக்குமே அடங்காத பட்டதாரிகள், காமத்துக்கும் பணத்துக்கும் புகழ்ச்சிக்கும் மட்டுமே பணிகிறார்கள். எனவே, கள்ளத்தனம் உருவாகிறது. இந்த கள்ளத்தனத்தின் உச்சகட்டமே இன்று நாம் காணும் அரசியல் இழிநிலை!!!
எப்போது அன்புக்கும், பக்திக்கும், விட்டுக்கொடுத்தலுக்கும் மதிப்பில்லையோ அப்போது முதலே நமது நாடு அழிவை நோக்கி நகர்ந்து வருகிறது என்பதே உண்மை. நாம் நமது வேர்களை இழந்தோம்; இன்று அரசியலானது, அதர்மத்தின் சொரூபமாகி இந்தியத் தன்மையை
(பெண்களை மதித்தல், கோவில்களையும்,
கோவில் வழிபாட்டுமுறைகளையும் பாதுகாத்தல், சுற்றுச்சூழலை வளர்த்தல்) சிதைத்து வருகிறது.
மெக்காலே கல்வித் திட்டமானது, நமது அப்பா, அம்மாவை முட்டாளாக பார்க்க வைக்கிறது; நமது தாத்தா பாட்டியை அப்பாவியாக எதிர்கொள்ள வைக்கிறது; நமக்கு எல்லாலே தெரியும் என்ற அகங்காரத்தை மட்டுமே தருகிறது; அதே சமயம், நமது மனதைத் தொடும் விதமாக எதுவும் செய்ய வில்லை;
மெக்காலே கல்வித் திட்டத்தின் விளைவாக நமது அறிவுச்செல்வங்களான புராதனமான பல்லாயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளை இழந்துவிட்டோம்; இவை அனைத்தும் தற்போது ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆராயப்பட்டுவருகின்றன. அவைகளில் மருத்துவம், ஜோதிடம், அணுசக்தி, வானியல், வாஸ்து சாஸ்திரம், மரணமில்லாமல் வாழும் கலை;வேறு நட்சத்திர மண்டலங்களுக்கு சில நாட்களில் சென்று வரும் சூட்சுமப்பயண வழிமுறை, நிர்வாகம், போர்க்கலை, அரசியல் நிர்வாகம், நகரமைப்பு, யோகாசனத்தின் அவசியம், மூலிகைகளின் மருத்துவ அறிவு, பூமி பற்றிய முழுமையான அறிவு, கதிர்வீச்சை எதிர்கொள்ளும் திறன் போன்றவைகள் இருக்கின்றன.
மெக்காலே கல்வித் திட்டத்தால்,நமது 6 தலைமுறையினர்
(சுமார் 200 ஆண்டுகள்)நமது முன்னோர்களின்
பெருமைகளை சிறிதும் அறியாமல் போய்விட்டனர். இதை அப்போதே எதிர்த்தவர்கள் ராஜாராம் மோகன் ராய், சுவாமி விவேகானந்தர்,சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றவர்கள் ஆவர். இவர்களே மெக்காலே கல்வித் திட்டத்துக்கு மாற்றாக நமது இந்து தர்மப் பெருமைகளை உணரவைக்கும் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார்கள். அவைகளே ராமக்ருஷ்ண மிஷன் பள்ளிகள், சின்மயா மிஷன் பள்ளிகள், குருகுல முறைப்படி உருவாக்கப்பட்ட ஏராளமான பள்ளி, கல்லூரிகள் ஆகும். இவைகளின் பரவல் இந்தியாவின் மக்கள் தொகைக்கு ஒரு சதவீதம் கூட இல்லை என்பதுதான் கொடுமை!!!மாற்றம் என்பதே மாறாத நிரந்தரம் ! என்று இருந்தாலும், மாற்றத்தை ஏற்றிடும் பாரம்பரியமும்,பாரம்பரியத்தை கைவிடாத மாற்றமுமே நமது இந்தியப் பாரம்பரியம் ஆகும். அப்பேர்ப்பட்ட இந்தியப்பாரம்பரியத்தை நமது கல்வித் திட்டத்தில் எப்போது நாம் கொண்டு வரப் போகிறோம்?
ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம்
நன்றிகள் : குருநாதர்
No comments:
Post a Comment