Wednesday, 19 December 2012

ஓம் சிவ சிவ ஓம் ஜெபித்தவர்களின் அனுபவங்கள் மற்றும் அவர்கள் பெற்ற பலன்கள் - பகுதி இரண்டு :-


பல வாரங்களாக ஓம்சிவசிவஓம் ஜபித்துவருபவர்களின் அனுபவங்கள் எமக்கு மின் அஞ்சல்களாகவும்,போனிலும் கிடைத்துவருகின்றன. ஆனால்,அவைகளை நமது தளத்தில் வெளியிட முடியாத அளவுக்கு மிகவும் உயர்வான அனுபவங்களாகவும், தெய்வீக உணர்வுகளின் வெளிப்பாடுகளாகவும் இருக்கின்றன. இதற்கு மேல் அவைகளை விவரிக்க இயலவில்லை;இருப்பினும் மேலோட்டமாக கொஞ்சம் பார்ப்போமா:


பல ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்போதே பழைமையான சிவாலயம் தென்பட்டுவருகிறது.(அது அண்ணாமலை அல்ல;)
சிலருக்கு சித்தர் அல்லது துறவியின் உருவம் தெரிவது போலவும்,அவர்கள் பேசுவதுபோலவும் தெரிந்திருக்கிறது; தெரிந்து வருகிறது.


ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் தொடர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்களுக்கு மட்டுமே இம்மாதிரியான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. அதே சமயம்,கடுமையான பிரச்னைகளுடன் போராடுபவர்கள் அந்த சிந்தனையை காலையில் 30 நிமிடமும்,மாலையில் /இரவில் 30 நிமிடமும் வராமல் பார்த்துக்கொண்டு ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தாலே, அவர்களுக்கு எதிரான சூழ்நிலை மாறிவிடுகிறது. மேலும்,பிரச்னையில் சிக்கியிருப்பவர்களின் தீய எண்ணங்கள்,தவறான மனோபாவம்/ பொறாமை/ ஆத்திரமான மன நிலை/தற்கொலை எண்ணங்கள் அடியோடு விலகியிருக்கின்றன.ஆக,மனத்தை சுத்தப்படுத்தும் மந்திரமாகவும் ஓம்சிவசிவஓம் இருக்கிறது.

ஓம்சிவசிவஓம்
நன்றிகள் : குருநாதர்

No comments:

Post a Comment