மனித குல வரலாற்றில் இதுவரை யாருமே உணர வாய்ப்பே இல்லாத காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்; இது நீங்கள் நம்பாவிட்டாலும், உணராவிட்டாலும் உண்மைதான்!!! இன்றிலிருந்தாவது அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தவும்; முழுமையாக நிறுத்தவும்; நிறுத்திவிட்டு இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளபடி வழிகாட்டுதலைப் பின்பற்றினால் உங்களுடைய அனைத்து கருமவினைகளும் வெறும் ஐந்தே ஐந்து நாட்களில் கரைந்து காணாமல் போய்விடும்; ஒருவேளை அசைவம் சாப்பிடுவதை நிறுத்த முடியாதவர்கள் இந்த பதிவை வேடிக்கை பார்த்துவிட்டு மட்டும் போய்விடவும்,ஒருபோதும் விளையாட்டுக்காக இந்த மந்திர ஜபத்தைச் செய்ய வேண்டாம்;அப்படி ஜபிக்க ஆரம்பித்தால் கடுமையான ,யாராலும் பாதுகாக்க முடியாத எதிர்விளைவு உண்டாகும்.ஜாக்கிரதை!!!
தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருபவர்கள்,அதை தொடர்ந்து ஜபித்தவாறே இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;
தினமும் ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்து வருபவர்களும் அதைப் பின்பற்றியவாறு இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;
தினமும் வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வருபவர்களும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;
தினமும் வேறு எந்த ஒரு மந்திரஜபத்தையும் செய்து வருபவர்களும்,வேறு எந்த ஒரு தெய்வ வழிபாட்டை பின்பற்றிவருபவர்களும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;
இந்த மந்திரத்தை டிசம்பர் 21,22,23,24,25-2012 என்று ஐந்தே ஐந்து நாட்கள் மட்டுமே ஜபிக்க வேண்டும்; இந்த ஐந்து நாட்களில் பயணம் செய்யும் நேரம் தவிர,வீட்டில்/அலுவலகத்தில் / உறவினர் வீட்டில் / கோவிலில் என எங்கும் ஜபிக்கலாம்; ஏதாவது ஒரு விரிப்பில் அமர்ந்தவாறு ஜபிப்பது நல்லது;மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து ஜபிப்பது நல்லது;வசதி இருந்தால் மஞ்சள் பட்டுத் துண்டின் மீது அமர்ந்து,இரு கைகளிலும் தலா ஒரு ஐந்து முக ருத்ராட்சத்தை
வைத்துக் கொண்டு ஜபிப்பதும் மிக மிக மிக நல்லது;
இந்த ஐந்து நாட்களிலும் ஒரு வேளைக்கு நூற்றி எட்டு முறைவீதம் மூன்று வேளைகளும் ஜபிப்பது அவசியம்;
வசதியும்,ஓய்வும்,அதிக நேரமும் உள்ளவர்கள் குறைந்தது மூன்று மணி நேரமும்,அதிகபட்சமாக இருபத்து நான்கு மணி நேரமும் ஜபிக்கலாம்; அவ்வப்போது இடையிடையே இளநீர் அல்லது செவ்விளநீர்(சிகப்பு இளநீர்) அல்லது தண்ணீர் அருந்தலாம்;
இந்த மந்திரஜபத்தால் ஒரே நேரத்தில் பதினெட்டுச் சித்தர்களின் அருளாசியும் நமக்குக் கிட்டும்;அதே சமயம் நமது முந்தைய ஐந்து பிறவிகளின் கர்மப்பதிவுகளும், நமது முன்னோர்களின் ஐந்து தலைமுறைப்பதிவுகளும் முழுமையாக கரைந்துவிடும் என்பது சத்தியம்!!!
இந்த அரிய அற்புத மந்திரத்தை நமக்கு அருளியவர் நமது ஆன்மீக குரு திரு. சகஸ்ரவடுகர் ஆவார். அவருக்கு நாம் ஜன்மாந்திர கடமைப்பட்டிருக்கிறோம்;
“ஓம் க்லீம் சிவசக்தி யோக ஸ்வரூப தேவாய நமஹ”
நன்றிகள் : குருநாதர்
No comments:
Post a Comment