Wednesday, 14 March 2012

பெரியாரின் பகுத்தறிவு எந்த அளவுக்கு ஆழமானது?


இது என்ன, இந்தக் கேள்வி  சின்னப் புள்ளத் தனமா  இல்லை இருக்கு  என்கிறீர்களா?
தமிழ் நாட்டை பொறுத்தவரையில் பகுத்தறிவு என்கிற வார்த்தையை பிரபலம் ஆக்கியதில் முக்கிய பங்கு வகித்தது பெரியார் தான்! ஆனால் அதற்க்கு மேலே பெரியார் என்ன செய்தார், பெரியாரின் பகுத்தறிவு எந்த அளவுக்கு ஆழமானது?

இந்து மதத்தின் மேலே சில பல மூட நம்பிக்கைகளை தூசியாகப் படிந்து இருந்தன.   பெரியார் அவற்றை சுட்டிக் காட்டி  பகுத்தறிவுவாதி என்று எளிதாக பெயர் எடுத்து விட்டார்.

கடவுள் இல்லை என்று சொல்வது எளிதான விடயம், யார் வேண்டுமானாலும் சொல்லலாம். நீங்கள் கூட சொல்ல முடியும். நானும் சொல்ல முடியும்.

புத்தர் கூட கடவுளைப் பற்றிக் கவலைப் படாத, கடவுள் கோட்பாட்டை இக்னோர் செய்தவர்தான். ஆனால் அவர் மனிதர்களின் வாழ்க்கை இன்னல்கள் நிறைந்தது என்பதை உணர்ந்து கொண்டு, அதற்க்கு விடிவு தேட முயற்சியும் செய்து அதற்க்கு ஒரு சொல்யூசனையும் கொடுத்து இருக்கிறார். புத்தர் அதற்காக கடுமையாக உழைத்தார். தன்னுடைய சுகங்களையும் துறந்தார். ஆதி சங்கரர் , சாக்ரடீஸ்போன்றவர்களும் அப்படியே.

ஆனால் பெரியார் மனித வாழ்க்கையின் துன்பங்களுக்கு தீர்வு எதையும் காண முயலவில்லை. மனித உயிர் பற்றிய ஆராய்ச்சியையும் செய்யவில்லை. அப்படியே சொகுசாக காலம் கடத்தி விட்டார்.

ஆனால் உண்மையில் மனிதன் ஏன் இவ்வளவு கஷ்டப் படுகிறான்? அதற்கு காரணம் என்ன? ஏன் ஒருவன் குருடனாகப் பிறக்க வேண்டும், ஏன் மற்றொருவன் எந்தக் குறையும் இல்லாமல் செல்வந்தர் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறான்?

உண்மையான பகுத்தறிவுவாதி மனித வாழ்க்கையின் போக்கு , அதன் காரணிகள் ஆகியவற்றை ஆராய்வான். மனிதர்கள் துன்பத்தில் இருந்து விடுபட அமைதியான வாழ்க்கை வாழ அவனால் இயன்ற தீர்வை அளிப்பான்.

சிறந்த பகுத்தறிவு வாதிகளான புத்தர், சாக்ரடீஸ், இயேசு, ஆதி சங்கரர், பட்டினத்தார், விவேகானந்தர்…. போன்றவர்கள அதைத்தான் செய்தனர்.

பகுத்தறிவு என்பது பெரிய கடல். பெரியார் அதன் கரை ஓரமாக நின்று காலை மட்டும் நனைத்துக் கொண்டதோடு முடித்து விட்டார்.

இதை நாம் சொல்லுவது ஏன் என்றால்,  தமிழர்கள் பகுத்தறிவு என்றாலே அது பெரியார் சொன்னதுதான் என்கிற ரீதியிலே அரைத்த  மாவையே அரைத்துக் கொண்டுஒரு குட்டையிலே மூழ்கிக் கிடைக்காமல், சுதந்திர சிந்தனையாளர்களாக , இப்போதைய கால  கட்டத்திலே மக்களுக்கு தேவையான பகுத்தறிவு சிந்தனைகளை உருவாக்கவில்லை

நீண்ட அராய்ச்சி செய்து நான் இன்ன இன்ன வழிகளில் கடவுளை காண முயற்சி செய்தேன், அனால் அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று தான் தேடிய வழிகளை சான்றுகளுடன் வெளியிட்டு சோதனையின் முடிவில் அப்படி ஒன்று இல்லை என்று கூறுவது உண்மை நாத்திகம்.கடவுளை பற்றி அப்படி எதுவும் ஆராய்ச்சிசெய்து கூறவில்லை

வெறுமனே கடவுள் இல்லை அதுவும் இந்து கடவுள் மட்டும் இல்லை மற்ற கடவுள் உண்டு என்று கூறுவது,பெரும் அபத்தம்.

பிள்ளையாரும்,ராமரும் பிறந்தது வட இந்தியாவில் அதனால் எதிர்க்கிறோம் என்பதும்,

வேறு நாட்டிலே பிறந்த மகான்கள் கண்ட மதத்தை மட்டும் ஒன்றும் சொல்லாமல் எதிர்க்காமல் நாதிகத்திலே பாரபட்சம் காட்டுவதும் எப்படிப்பட்ட நாத்திகம்.

எந்த தவறையும் வெளிப்படையாக செய்தால் அது சரி என்று ஆகிவிடாது.

இவரை தலைவர் இவர் கொள்கைகளே எங்கள் வாழ்க்கை என்று வாழும் நண்பர்கள் நம்மை நம் வழிபாட்டை இழித்துரைப்பதும் கேவலபடுத்துவதும் எந்த வகையில் நியாயம். அதுவும் இவர்கள் பின்பற்றும் தலைவரே சுய வாழ்வில் பல தவறுகளை செய்தவர்,பின்னர் ஏன் அவர் வால் பிடித்து அவரை தூக்கி நிறுத்திக்கொண்டு நம் கடவுள்களை வந்து சாடுகிறார்கள்?

பிற மதத்திற்கும் இந்துக்களுக்கும் மோதல் வர காரணமே இவர்கள் நம்மை கேவலமாக சித்தரிப்பதுதான்.ஏன் பாரதியார்,விவேகானந்தர்,ராமானுஜர் எல்லாம் செய்யாத சீர்திருத்தமா? அவர்களுக்கு இல்லாத முற்போக்கு சிந்தனையா?

பெரியார் பிறக்காத மாநிலங்கள் எல்லாம் இன்னும் பகுத்தறிவு பெறாமல் உள்ளதா? தீண்டாமை என்பது கொடிய நோய் அதற்கு குரல் கொடுத்த பல பெரியவர்களுள் இவரும் ஒருவர் என்பதை தவிர வேறு எந்த சிறப்பும் தெரிய வில்லை

இந்து நம்பிக்கைகளை அடியோடு ஒழிக்கவில்லை தேவையான திருத்தங்களை மட்டுமே செய்தார்கள். இந்து மதமே பகுத்தறிவான மதம்தான்,இதனை நீங்கள் மறுக்கிறீர்களா? நாமும் இங்கே உள்ள தவறான விசயங்ககளுக்கு வக்காலத்து வாங்கவில்லை.மனிதநேயமற்ற செயல்கள் எங்கு இருந்தாலும் நாம் அதனை எதிர்க்க வேண்டும். இவர்கள் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவது மனித நேயமற்ற செயலாக உங்களுக்கு தெரியவில்லையா?

நன்றி: திருச்சிக்காரார்,
குருநாதர்

No comments:

Post a Comment