Sunday, 4 March 2012

அந்நிய கலாச்சாரங்களால் சிதைந்து வரும் புனிதமான பாரத குடும்பங்கள் நாம் செய்ய வேண்டியவை - பாகம் ஒன்று :-



1 ,
சகிப்புத்தன்மை நமது குடும்பங்களில் பெருமளவு இருக்க வேண்டும். அந்நியர்களிடம் இருக்கக் கூடாது. அன்னையைக் காட்டிலும் பெரிய தெய்வம் உண்டோ இந்த பூமியில் ? அந்த புனிதமான அன்னையின் வார்த்தைக்கு  மதிப்பு அளியுங்கள். அவர்கள் உங்கள் நன்மைக்காகவே சொல்வார்கள். ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் பொழுது ஒரு தாய் படும் கஷ்டங்கள் உங்களுக்கு தெர்யுமா ? 202  எலும்புகள் ஒரு நேரத்தில் உடைந்தால் எவளவு வலி இருக்கும் , அவ்வளவு வலி பிரசவத்தின் பொழுது ஒரு தாய்க்கு ஏற்படும். அத்தகைய தாய் சிறிது கோபித்துக் கொண்டால் திட்டாதீர்கள். ஒரு தாய் ஒரு காரியத்தை பிள்ளைகளிடம் செய்யாதே என்று சொன்னால் காரணம் இல்லாமல் சொல்ல மாட்டாள். அதை புரிந்து கொண்டு தாய்தந்தையிடம் முழுமையான விளக்கம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். பெற்றோரிடம் மனம் விட்டு பேசுங்கள், குறிப்பிட்ட காலம் வரையில் அவர்கள் தான் உங்கள் உலகம். அந்த உண்மை நாளை நீங்கள் ஒரு பெற்றோர் ஆகும் பொழுது தான் தெரியும். கர்ம வினைகளின் அடிப்படையில் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு தீய செயலின் விளைவுகளே உங்களையும் உங்கள் சந்ததிகளையும் பாதிக்கும்.

2  ,
குடும்பங்களில் ஒற்றுமை மிகவும் முக்கியம், அது இல்லாததால் தான் இன்று இந்த நாட்டிற்கே பிரச்சனை. குடும்பங்களில் ஒற்றுமை இல்லையெனில் தன மீது ஒருவன் கொண்டுள்ள நம்பிக்கை இழப்பான். அது கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, பெற்றோர் பிள்ளைகளாக இருந்தாலும் சரி, இன்னும் பல உறவுகளாக இருந்தாலும் சரி ஒற்றுமை நம்பிக்கை வேண்டும். ஒருவர் தீயவராகவே இருந்தாலும் சரி அவர்களின் மீது நாம் அளவற்ற நம்பிக்கை மற்றும் பாசங்கள் வைத்து இருந்தால் அவர்களாகவே நல்லவர்களாக மாறிவிடுவார்கள். ஏன் பாரதியார் ஒரு முறை ஒரு பைதியக்காரரை தன வீட்டுக்கு அழைத்து வந்து பாசம் செலுத்தி கட்டி தழுவி அன்பு செலுத்தியதன் விளைவாக அவருக்கு ஒரே வாரத்தில் பைத்தியம் குணம் ஆனது. அன்புக்கு மட்டுமே அனைத்தையும் மாற்றும் சக்தி உள்ளது. இதை நன்கு உணர்ந்த தமிழர்கள் இன்னும் சிலர் இருகிறார்கள் . அவர்களைப் போன்றவர்களால் மட்டுமே இந்த பாரதம் ஏதோ இந்த அளவிற்கு சில நல்ல விசயங்களை கொண்டுள்ளது.

3  ,
பெற்றோரை திட்டுவதை இன்று நாகரிகமாக பல பெருநகரங்களில் நினைக்கிறார்கள். தன சக நண்பர்களிடம் என் அப்பன் ஒரு குடிகாரன், எங்காத்தா எல்லாத்துக்கும் திட்டிட்டு இருப்பாஅவர்களுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது, போன்ற வார்த்தைகள் இன்று பலர் பொது இடங்களில் பேசுவதை நானே பல முறை கேட்டுக் கொண்டு இருக்கிறேன். ஆனால் அப்போது எல்லாம் என்னால் அறிவுரை மட்டுமே சொல்ல முடியும். இன்றைய திரைப்படங்கள் அந்த அளவிற்கு உள்ளது. பக்தி, ஒழுக்கம், விழிப்புணர்வு, அறிவு தர வேண்டிய ஊடகங்கள் இன்று குடும்ப அமைப்புகளை கொச்சைபடுத்தும் நோக்கத்துடனும் காதல் மட்டுமே உலகில் சிறந்தது என்று நாளைய பாரத தூண்களான இளைஞர்களை யோசிக்க விடாமல் தடுத்து கொண்டு இருக்கிறது. அவர்களை காதல், காமம், வன்முறை போன்ற கொடிய ஆயுதங்களால் கட்டி வைத்து விட்டனர். இன்று பலருக்கு காதலின் அர்த்தமே தெரியவில்லை. அக்காலங்களில் காதல் செய் என கவிஞர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னது காதல் செய் உன் பெற்றோரை, காதல் செய் உன் நாட்டை, காதல் செய் உன் மனதை, காதல் செய் நமது இயற்கையை, காதல் செய் மனதை.., இவ்வாறுதான் கூறினார்கள் நாம் தான் அவற்றை மாற்றி விட்டு வெறும் சிற்றின்பத்திற்கு ஆசைப்பட்டு பெண்ணை போகப்பொருளாக பார்த்து காதல் என்ற பெயரால் கயமைத்தனம் புரிந்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டாமா ? நன்றிகள் - குருநாதர்

No comments:

Post a Comment