இன்று ஹனுமான் மற்றும் ராமபிரானை நினைத்து விரதம் இருப்பது மிகவம் நன்மை அளிக்கும் செயல் ஆகும். மேலும் ஹனுமான் மற்றும் பைரவரை வழிபடும் பக்தர்களை சனிபகவான் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். முதல் யுகத்தில் அதாவது த்ரேத யுகத்தில் ஒரு நாள் வாயு புத்திரனின் மைந்தனாகிய ஹனுமனை சனி பகவான் பிடிக்கச் சென்றுள்ளாராம். உடனே சனி பகவான் ஹனுமனது தலையில் அமர்ந்து கொண்டு உன்னை பிடிக்கப் போகிறேன் என்று கூறினாராம். அப்போது ஹனுமான் மிகப்பெரிய பாறைகளை தனது தலையில் ஒன்றன் மீது ஒன்றாக தூக்கி வைத்தாரம், பாரம் தாங்காத சனிபகவான் தன்னை விட்டு விடும் படி கேட்டுக் கொண்டாராம். ஹனுமனும் விட்டு விட்டார். ஆனாலும் சனிபகவான் கடமை தவறாதவர் அல்லவா ! மற்றொரு முறை மீண்டும் ஹனுமனை பிடிக்க வந்து ஹனுமனிடம் கேட்டார் , உன்னை எங்கிருந்து பிடிக்க வேண்டும் என்று ? அதற்கு ஹனுமான் முதலில் காலில் இருந்து பிடித்துக் கொள் என்றாராம். சனிபகவானும் அவரது காலைப் பிடிக்க செல்லும் பொது ஹனுமான் அவரை காலுக்கு கீழே வைத்து அழுத்த தொடங்கினாராம். மீண்டும் சனிபகவான் தன்னை விட்டு விடும் படி கேட்டுக் கொண்டாராம். அதற்கு ஹனுமான் என் பக்தர்களையும், ராம பக்தர்களையும் ஒன்றும் செய்யக் கூடாது என்று சத்தியம் செய் என்றாராம். சத்தியம் வாங்கிக் கொண்டு சனிபகவானை விட்டாராம். எனவே ஆஞ்சநேயரையும் ராமரையும் இன்று வழிபாடு செய்யுங்கள். உளுந்து வடிகள், பாயாசம் செய்து படையல் இடுங்கள். நல்லதே நடக்கட்டும். மேலும் ஆஞ்சநேயருக்கு செவ்வாய் கிழமை தோறும் குங்குமம் அபிசேகம் மற்றும் வெண்ணை சாற்றுதல் மிகச் சிறப்பு. ஆஞ்சநேயரை வணங்கும் பொழுது முதலில் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லி விட்டு பின்பு தான் அனுமன் பற்றி பாடல்கள், துதிகள் சொல்ல வேண்டும். ஏன் எனில் அந்த அளவுக்கு ராமர் மீது அவர் பற்று வைத்து உள்ளார். ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஆஞ்சநேயா.
ஓம் சிவ சிவ ஓம். -- நன்றிகள் என் குருநாதருக்கு.
No comments:
Post a Comment