வணக்கங்கள், அன்பான தமிழ் மக்களே தங்கள் அனைவர்க்கும் உள்ள பிரச்சினைகள் நீங்கவும், இறை அருள் கிடைக்கவும் இதோ ஒரு அறிய வாய்ப்பு. இதை என் குருநாதர் உதவியுடன் நான் அறிந்து பல பயன்களை பெற்றுள்ளேன். அதே போல தமிழ் சகோதிரி, சகோதரர்களாகிய உங்களுக்கும் இதை அறிமுகம் செய்து வைப்பதில் பேரு மகிழ்ச்சி அடைகிறேன். முன்பெல்லாம் திரேத யுகத்தில் இறை வழிபாட்டிற்கு மிகுந்த கட்டுபாடுகள் இருக்கும். அனால் இப்பொது சொல்லப்படவுள்ள இந்த முறை மிகவும் எளிமையான மற்றும் விரைவில் பலன் அளிக்க கூடிய முறையாகவும் இருக்கும். இதற்கு தேவையான கட்டுபாடுகள் 3 மட்டுமே. ஒன்று அசைவ உணவு தவிர்க்க வேண்டும். இரண்டு மது வகைகளை விட்டு விட வேண்டும், மூன்றாவது பேராசை இருத்தல் கூடாது. இந்த மந்திர ஜபத்தினை ஜெபிக்கும் வழி முறை தெரிந்து கொள்ளுங்கள். முதலில் இரண்டு மஞ்சள் நிற துண்டு மூன்று ருத்ராத்ஷம் (முகங்கள் முக்கியமல்ல) பெரும்பாலும் 5 முகம் கிடைப்பது எளிது . ஒன்று கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். மற்ற இரண்டையும் உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து கொள்ளவும். பூஜை அறை இல்லாத batchelours சுத்தமான இடத்தில வைத்து கொளவும். தினமும் உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் 15 நிமிடங்கள் ஒதுக்கி வைத்து கொள்ள வேண்டும். ஜெபம் தொடங்கும் முன்பாக ஒரு மஞ்சள் நிற துண்டை இடுப்பில் கட்டி கொள்ளவும், மற்றொன்றை தரையில் விரித்து அதன் மேல் அமரவும். மீதம் இருக்கும் இரண்டு ருத்ராத்ஷங்களை இரண்டு உள்ளங்கைகளிலும் வைத்து மடக்கி கொள்ளவும். (கிழக்கு நோக்கி அமர்வது சிறப்பு.) இப்போது ஓம் உங்கள் குல தெய்வத்தின் பெயரை சொல்லி நமக என்று சொல்லி கொள்ள வேண்டும் பின் ஓம் கணபதியே நமக என்று சொல்லி கொள்ள வேண்டும் அடுத்து ஓம் உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை சொல்லி நமக என்று சொல்லி விட்டு உங்கள் நியாயமான வேண்டுதலை சொல்லி கொள்ள வேண்டும். உதாரணமாக என் சம்பளம் தற்போது பத்து ஆய்ரமாக உள்ளது விரைவில் அது இருபது ஆய்ரமாக வேண்டும் அல்லது பதவி உயர்வு வேண்டும் என்று சொல்லி விட்டு ஓம் சிவ சிவ ஓம் என்று 15 நிமிடங்கள் மனதிற்குள் கண்களை மூடிக்கொண்டு ஜெபம் செய்ய துவங்க வேண்டும். உண்மையான பக்திக்கும், பிரார்த்தனைக்கும் கிடைக்காதது ஒன்றுமில்லை என தமிழ் பெரியோர்கள் கூறி இருக்கிறார்கள். முதலில் துவங்கும் பொழுது சற்று கடினமாக இருக்கும் ஆனால் நாளடைவில் அது பழகி விடும். தொடர்ந்து செய்பவருக்கு முக்தியும், மோட்சமும் கிட்டும். உங்கள் நியாயமான கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும். எவ்வளவோ வெட்டி பேச்சு பேசும் நேரத்தையும், சோம்பேறித்தனமாய் செலவு செய்யும் நேரத்தையும் விட்டு விட்டு இதை முயற்சி செய்யலாம். இந்த அறிய மந்திர ஜெபத்தின் மூலம் பலன் அடைந்தவர்கள், அடைந்து கொண்டு உள்ளவர்கள் ஏராளம். நீங்களும் செய்து பலன் பெருக. தங்கள் அனுபவங்கள் மற்றும் சந்தேகங்களையும் என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவும். இந்த முறையை எனக்கு அறிமுகம் செய்து வைத்த ஆன்மீகப்பெருங்கடலில் முத்து எடுத்து கொண்டு இருக்கும் எனது குருநாதருக்கு கோடனும்கோடி நன்றிகள். நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment