அட என்னப்பா ! கடவுளாவது இருக்கிறதாவது, கடவுள் இருந்தா அவரை எனக்கு முன்னாடி ஒரு தடவ வர சொல்லு பார்க்கலாம். நாத்தீகவாதிகளும், பிரார்த்தனைப் பற்றி தெரியாதவர்களும் அடிக்கடி கூறும் கருத்து இது. இந்த கருத்து அவர்களின் இயலாமையை குறிக்கிறது. அவர்கள் பேசுவது அந்தக் கடவுள்ளுக்கே கேட்டு விட்டதோ என்னவோ பரம்பொருளின் மைந்தனாகிய அந்த முருகப் பெருமானே தன்னுடைய பக்தருக்காக நேரில் வந்து வைத்தியம் பார்த்துள்ளார். என்ன நம்ப முடியலையா ? பொய்ய சொன்னாலும் பொறுக்க மாதிரி சொல்லனும்னு நெனைக்ரிங்களா ? சில பேரு நெனச்சாலும் நெனைப்பாங்க. ஏன்னா கலி காலம் அப்டி. எதயுமே சன் டிவி இல்ல சயின்ஸ் இல்ல வெள்ளைக்காரன் சொன்ன தானே நம்புவிங்க. இந்த சம்பவம் நிகழ்ந்தது வேறு எங்கும் இல்லை சென்னையில் தான். ஆம் சென்னை எழும்பூர் அருகில் உள்ள ஒரு பிரபல அரசு பொது மருத்துவமனையில் சரியாக 83 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது. இங்கு பாம்பன் சுவாமிகள் ஒரு நோயினால் அவதியுற்று சேர்க்கப்பட்டார். தீவிர முருக பக்தரான அவர் தமிழில் புலமை பெற்றும் திகழ்ந்தவர் ஆவார். அந்த நோயின் வலி தாங்காமல் ஒரு நாள் மதிய வேலையின் பொழுது அவர் முருகா என்ன இது சோதனை ? உன் பக்தன் எனக்கே இவ்வளவு சோதனை தருகிறாய் ? நோயை தீர்த்து விடு என்று புலம்பி விட்டு உறங்கி விட்டாராம். அவர் கேட்டுக்கொண்டதடற்கு இணங்க சரியாய் அரை மணி நேரப் பொழுதிலேயே சாட்சாத் அந்த முருகப் பெருமானே அந்த மருத்துவமனைக்கு வந்து அவருக்கு வைத்தியம் செய்தார். அவருடைய நோய் முற்றிலும் குணமாகியது. முருகருக்கு நன்றி சொல்லி விட்டு அவர் மீண்டும் ஆன்மீகப் பணிகளை துவங்கி விட்டார். என்ன ஒரு அற்புதம் பார்தீர்கள ? இதில் இருந்து நீங்கள் உணர வேண்டியது என்னவென்றால் அதாவது இந்த கலி காலத்திலேயே அதுவும் இவ்வளவு வக்கிரக்காரர்கள் இருக்கும் அந்த சென்னையிலேயே 83 வருடத்திற்கு முன்னால் கடவுளே தன பக்தனுக்காக வந்தார் என்றால், உண்மையான பக்திக்கு கடவுள் எப்போதும் எந்நேரமும் காட்சி அளித்து துயர் தீர்ப்பார். இன்றும் அந்த மருத்துவமனையில் பாம்பன் சுவாமிகள் சிறப்பு பிரிவு ( PAAMBAN SWAAMIGAL SPECIAL WARD ) என்றே அழைக்கப்படுகிறது. வாழ்க தமிழ் முன்னோர்கள். இந்த செய்தி இன்னைக்கு எதனை பேருக்கு தெரியும் இந்த சென்னையில் ? முதல் முறை கேள்விப்பட்டதும் பலர் அதுவும் தமிழ் மக்களே நம்ப மறுத்தார். ஆனால் ஆதாரத்துடன் கூறிய பிறகு ஏற்று கொண்டார்கள். உங்களுக்கு ஆதாரம் வேண்டுமெனில் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment