Tuesday, 13 December 2011

மரம் நடுவோம்

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் சுகாதாரத்திற்கும் முக்கிய பங்கு அளிப்பது இயற்கை வளங்களே. அத்தகைய வளங்கள் இன்று நம் நாட்டில் அதாவது தமிழ்நாட்டில் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை தடுக்க அரசு முன்வர வேண்டும். அண்மையில் மக்கள் நலம் பேணும் ஜெயலலிதா அரசு பதினாறு லட்சம் மரக்கன்றுகளை நட முன்வந்துள்ளது. இது மிகவும் வரவேற்க்கத்தக்க விஷயம் ஆகும். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலைகளுக்கு இது போதாது. நமது முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் 2020 ஆண்டிற்குள் இந்தியாவில் 100 கோடி மரம் நட வேண்டும் என பாடுபட்டு வருகிறார். இதற்கு ஒத்துழைப்பு தரும் விதமாக பல்வேறு அமைப்புகளும், மனிதர்களும் இந்த புண்ணிய செயலை செய்து வருகின்றனர். இவர்களோடு நாமும் சற்று கை கோர்ப்போமா? ஆம் நீங்களும் மரம் நடலாம். இது பெரும் புண்ணிய செயல்களில் ஒன்று. மரம் வளர்த்தல், ஏழைக்கு கல்வி அறிவித்தல், அன்ன தானம் செய்தல், முதியோர், உணமுற்றோர்க்கு, உதவி செய்தல் மிகப் பெரும் புண்ணிய செயல்கள் ஆகும். இவர்களால் இவர்களது தலைமுறைகளும் நலம் பெறுவார்கள். காரணம் இல்லாமலா நம் முன்னோர்கள் கோவில்களிலும், பொது இடங்களிலும் மரம் நட்டு வளர்த்தனர். நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயல்களிலும் ஆன்மீகமும், அறிவியலும் சேர்ந்து இருக்கிறது பெருமைப்பட வேண்டிய விஷயம் ஆகும். எனவே தான் இன்று ஆஸ்திரேலியர்கள் அரச மரம் நாடும் முயற்சியில் களம் இறங்கி உள்ளனர். எதற்கு? சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க! இன்று உலக நாடுகள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் முக்கியமானது புவி வெப்பமடைதல். அதை தடுக்க மரம் நடுவது மட்டுமே தீர்வு. உங்களுக்கும் விருப்பம் இருந்தால் www.greenkalam.in என்ற இணையத்தளத்தில் தொடர்பு கொள்ளவும். இத்திட்டத்தை தமிழ்நாட்டில் துவங்கி வைத்தவர் நமது சின்னக்கலைவாணர் விவேக் அவர்களே. அவர்களுக்கு நம் மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். மரம் வளர்ப்போம், மலை பெறுவோம், மனித நேயம் காப்போம். இந்த ஆன்மீக எக்ஸ்பிரஸ் வலைப்பூவை உருவாக்கும் திட்டத்தை எனக்கு அளித்த என் குருநாதருக்கு என்றும் என் நன்றிகள்.

No comments:

Post a Comment