எனது குருநாதரின் வழிகாட்டுதலின் படி ஓம் சிவ சிவ ஓம் ஜெபித்தவர்கள் பல மகத்தான அனுபவங்களை பெற்றுள்ளனர். அவற்றை உங்கள் பார்வைக்காக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
என் சக அலுவலக ஊழியர் ஒருவர் தினமும் ஓம் சிவ சிவ ஓம் ஜபித்து வருகிறார். மிகவும் நேர்மையான மற்றும் தெய்வ நம்பிக்கை கொண்ட அவர் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.
கடந்த மூன்று மாதங்களாக இந்த மந்திர ஜெபத்தினை செய்து வருகிறார். சரியாக 15 நிமிடங்கள் தினமும் செய்வார். முதலில் செய்யும் பொழுது சற்று தடுமாற்றம் மற்றும் தடங்கல் இருந்து கொண்டு வந்தது.
ஆனால் இப்பொழுது அவை இல்லை. தன்னுடைய தங்கைக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த அவசரமாக பணம் தேவைப்பட்டது. அதை மனதில் நினைத்துக் கொண்டு ஜெபம் செய்து வந்தார். சரியாக 14 நாட்கள்
கழித்து ஒரு நாள் அலுவலக முதலாளியின் தங்கை அவரை வேலை நிமித்தமாக வீட்டிற்கு அழைத்து உள்ளார். வேலை முடிந்ததும் முதலாளியின் தங்கை எதுவும் கேட்காமல் திடீரென 4000 ரூபாய் அவர் கையில் கொடுத்துள்ளார். இத்தனைக்கும் இவர் முதலாளியின் தங்கையிடம் பணம் எதுவும் இதற்கு முன்பு கேட்கவும் இல்லை அவரும் கொடுத்தது இல்லை. அதே சமயம் அவர் தங்கையுன் பள்ளிக் கல்வி கட்டணம் சரியாக 4000 இது முதல் அனுபவம், இரண்டாவது அவருடைய வீட்டில் பொருளாதாரப் பிரச்சனைகள் பெருமளவில் குறைந்துள்ளன. நன்றிகள் எனது குருநாதர் :- ஓம் சிவ சிவ ஓம்.