Friday, 18 October 2013

இந்து தர்மத்தின் அரணாய் விளங்கிய வீரச் சிங்கம் சிவாஜி

மராட்டிய மாவீர‌ன் சிவாஜி வாழ்வில் நடந்த நிகழ்வு …


நட்புக்கரம் நீட்டி வரவைழத்த ஒளரங்கசீப், நயவஞ்சகமாகத் தன்னையும் தன் மகனையும்  கைதுசெய்து சிறையில் அடைப்பான் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திராத மராட்டிய மாவீர‌ன் சிவாஜி, அடிபட்ட புலி போல ஆக்ரா சிறையில் உறுமிக்கொண்டு இருந்தார்.
 சிவாஜி : மகனே‘‘ஒவ்வொரு வியாழனும் ஏராளமான பழங்கள் வைத்து பூஜித்து,அதைத் தானம் செய்வது வழக்கம் என்று சிறை அதிகாரிகளிடம் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்’’
 மகன்(சம்பாஜி ):‘‘தந்தையே! நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். இப்போது எதற்காக பூஜை?’’
 சிவாஜி: ‘‘மகனே! நீ அச்சத்தின் பிடியில் அகப்பட்டுவிட்டாய் என நினைக்கிறேன். அச்சப்பட்டவர்கள் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் கிடையாது. நான் இங்கிருந்து தப்பிக்கத்தான் வழி சொல்கிறேன்’’
 மகன் (சம்பாஜி ): ‘‘முகலாயர்களிடம் இருந்து தப்புவதா… அது முடியுமா? (சந்தேக‌த்துடன்)’’
சிவாஜி : ‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ (உறுதியோடு) அதன்பின்,சிறைக்கு பழக்கூடைகள் வருவதும் போவதும் வழக்கமாயிற்று. அந்தக் கூடைக்குள் அமர்ந்துதான் சிவாஜியும் சம்பாஜியும் ஒருநாள் தப்பித்தார்கள்.
 பூனேவுக்கு அருகே, 1630-ல் சிவானி கோட்டையில் பிறந்தார் சிவாஜி. தந்தை ஷாஜி, பூனே சுல்தானின் படைப்பிரிவில் மேஜராகப் பணியாற்றி வந்ததால், தாய் ஜீஜாபாய் மற்றும் தளபதி ஷாயாஜியின் மேற்பார்வையில் வளர்ந்தார் சிவாஜி.
 சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாட்ப்போர், வில் வித்தை, குஸ்தி போன்ற வீர‌ தீர விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார். இந்துக்களை அடக்கி ஆண்ட முகலாய ஆட்சியின் மீது அவருக்கு இயல்பாகேவ வெறுப்பு இருந்தது. தாய் ஜஜீ போய் சொன்ன வீர‌க்கதைகளும், சுவாமி ராமதாசரின் ஆசீர்வாதமும், இந்து சாம்ராஜ்யம் நிறுவ சிவாஜிக்கு ஆர்வமும் ஊக்கமும் தந்தன.
‘‘மாபெரும் படை கொண்ட முகாலையர்களை என்னால் வெல்ல முடியுமா?’’ என்று சிவாஜி கேட்டேபாது, அவரது தாயும், சுவாமி ராமதாசரும் ஒரு சேரச் சொன்ன பதில். ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’.
 பூனாவுக்கு அருகே மலைகளில் வசித்து வந்த ‘மாவலி’ மக்களிடமிருந்து இளைஞர்கைளத் திரட்டி, ‘கொரில்லா’ படை அமைத்தார் சிவாஜி. முகலாயர்களின் பிடியில் இருந்த ரோஹிதேசுவரர் ஆலயத்தையும், தேரான் கோட்டையையும் கைப்பற்றினார்.
 சிவாஜியின் இந்த வெற்றி, இந்துக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது படையில் இணைந்தார்கள். அதன்பின் குபா கோட்டை, இந்திரபுரி, ஜாவ்லி என கிட்டத்தட்ட முந்நூறு கோட்டைகள் சிவாஜி வசமாயின. ஒவ்வொரு முறையும் போருக்குப் புறப்படும் முன், தனது படையினரிடம், ‘‘தோல்வியில்லை, தோல்வியில்லை… துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’என்று உற்சாகக் குரல் கொடுப்பார் சிவாஜி. துணிந்து கிளம்பும் அந்தப் படை வெற்றி வாகை சூடி வரும்.
 ஒருமுறை, சிவாஜியின் கோட்டை முன் பெரும் கடெலன முகலாயர் படை நின்றது. போரைத் தவிர்க்க விரும்பினால்,சிவாஜி நிராயுதபாணியாக தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்த வரேவண்டும் என அழைப்பு விடுத்தான் தளபதிஅப்சல்கான். தனிமையில் போக‌வண்டாம் என அனைவரும் தடுத்தபோதும்,‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ எனப் புன்னைகத்தவாறு பகைவனைத் தேடிப் புறப்பட்டார் சிவாஜி. ஆயுதமின்றித் தனிமையில் வந்த சிவாஜியைப் பார்த்துக் கேலியாகச் சிரித்த அப்சல்கான், ‘‘உன்னிடம் சமாதானம் பேசவா இத்தனை படையுடன்வந்திருக்கிறேன்’’ என்றபடி சரேலென‌ தன்னுடைய வாளை உருவி, சிவாஜியின் மார்பில் செலுத்தினான். உள்ளே கவசம் அணிந்திருந்த சிவாஜி, கண் இமைக்கும் நேரத்தில் அப்சல் மீது பாய்ந்து, தன் கைகளில் மறைத்து வைத்திருந்த விஷம் தேய்த்த புலி நகங்களால் அவைனக் கீறிக் கொன்று போட்டார். தலைவன் இல்லாத படைகளைப் பந்தாடியது மராட்டிய சேனை. மாபெரும் வீர‌னாக, ‘சத்ரபதி’ என முடிசூடினார் சிவாஜி.
 1680-ம் ஆண்டு மரணமைடயும் வரையில், சிவாஜியைத் தோல்வி என்பது நெருங்கவே இல்லை. காரணம், ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லைஎன்கிற அவரது தாரக மந்திரம்தான்.

ஆடி மாதம் வைக்கப்படும் கூழ்-???

நம்முடைய  முன்னோர்கள் உருவாக்கிய பழக்க வழக்கங்கள் அனைத்திற்கும் காரணங்கள் பல உண்டு..
அது போல், ஆடி மாதம் வைக்கப்படும் கூழிற்கும் காரணம் உண்டு.. தினத்தந்தி யின் ஆன்மீக இதழில் இருந்து…
சூரியன் தன் கதிர்வீச்சு திசையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றுகிறது. அதன்படி ஆடி மாதத்தில் சூரியக் கதிர்கள் திசை மாறுகிறது. இந்தியாவை பொறுத்தவரை உஷ்ணம் நிறைந்த கோடைக் காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர் காலமாக மாறுகிறது.. இத்தருணத்தில் வைரஸ் போன்ற கிருமிகளால் ஏற்படும் நோய்கள் அதிக அளவில் பரவும் என்பது அறிவியல் சொல்லும் செய்தி..
அதன்படி ஆடி ஆடிமாதத்தில் சின்ன அம்மை, தட்டம்மை அதிக அளவில் பரவும். அப்படி வரக்கூடிய கிருமிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதற்கே கேழ்வரகு கூழ் உற்றும் வழக்கத்தை கொண்டு உள்ளனர்.
இந்த கூழ் உடலை குளிர்விக்க கூடிய உணவு மற்றும் அருமருந்தும். இரும்பு சத்தும் ,கால்சியம், நார்ச்சத்து ஆகியவை இதில் உள்ளது..
அம்மைகளில் இருந்து காக்கும் கடவுளாக நாம் நம்புவது மாரியம்மனை. இவரை வணங்கி கூழ் உற்றுவதின் மூலம் அம்மை உஷ்ணத்தில் இருந்து காத்துக்கொண்டுள்ளனர்.  மேலும், கூழ் பானையை சுற்றி மஞ்சளும் வேப்பிலையும் வைப்பார்கள்.. இவையும் கிருமி நாசியே.. நோய் பரவாமல் தடுக்கும்.
 நம் முன்னோர்களின் பழக்கங்கள் ஏதும் கண்மூடித்தனமானது அல்ல. காரணங்களை அலசினால் விளக்கங்கள் ஆச்சரியமூட்டும்..

இந்து மத கோவில்கள் Facts Behind Hindu Temples

இந்து மத கோவில்கள்
இந்து ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல் உண்மை அவசியம் படிக்க!

இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் உண்டுஆனால் அவையனைத்தும் வேத வழியில் கட்டப்பட்டுள்ளதாஎன்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோஅங்கு கட்டப்பட வேண்டும்அது கிராமமாகவோநகரமாகவோமலை மீதோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.பூமியின் வட தென் துருவ காந்த அலை எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு கட்டப்பட வேண்டும்.

முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் (மூலஸ்தானத்தில் இந்த அலை அதிகமாக இருக்கும்சரியாகச்சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம் பெற்ற பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும்இந்த இடத்தில்தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் செதுக்கி புதைக்கப்படும்.

இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்றால் காந்த அலைகளை அது சுற்றிலும் பரப்பவேஎனவே ஒருவர் தொடர்ந்துகோவிலுக்கு சென்று சிலையை வலப்புறமாக சுற்றி வந்தால் அவர் பூமியின் காந்த ஆற்றலைப் பெறுவார்அவரின்உடல் அந்த ஆற்றலை கிரகித்துக் கொள்ளும்இவ்வாற்றல் அவர் நலமுடன் வாழ வழி வகுக்கும்இது அறிவியல்பூர்வமான உண்மை.

மேலும் கர்ப்பக்கிரகம் மூன்று திசையிலும் மூடப்பட்டுள்ளதால் ஆற்றலை அதிகப்படுத்தும்மூலஸ்தானத்திலிருக்கும்விளக்கும் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும்மணியோசை பக்தர்களின் மனதினை அலைபாய விடாமல்ஒன்றியிருக்கச் செய்யும்இது மன அழுத்தினைக் குறைக்கும்.

மேலும் மணம் வீசும் மலர்கள் ஒருவிதமான நல்ல ஆராவை (Aura – ஒருவரைச் சுற்றியுள்ள மனித காந்த சக்தி)வெளிப்படுத்தும்கடவுளின் சிலைகளை கற்பூரம்துளசி மற்றும் பிற பொருள்களைச் சேர்த்து கழுவி அந்த நீரைதீர்த்தமாகத்தருவார்கள்அதில் மிக அதிகமான காந்த சக்தியுள்ளதுஅத்தீர்த்தத்தினை தாமிரப் பாத்திரத்திலிட்டுத்தருவார்கள்இது பற்சொத்தை மற்றும் சளிஇருமல் மற்றும் வாய் துர் நாற்றத்தினைப் போக்கவல்லதுஇதன் மூலம்நமது முன்னோர்கள் பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளார்கள்

மேலும் தீபாரதனை காட்டும் போது மிக அதிகமான சக்தி வெளிப்படும் எனவேதான் ஆண்களை சட்டையில்லாமலும்பெண்களை அதிக அணிகலன்களோடும் கோவிலுக்கு வரச் சொன்னார்கள்

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்

கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

இந்து மதம் – கேள்வி பதில்

ஹிந்துத்துவம் என்பது என்ன?

பதில் : “யாரும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஹிந்துத்துவம். “நீ வேறு, உன்னை அழிப்பதே எனது கடவுள் எனக்கு சொல்லிக் கொடுத்தது” என்று சொன்னால் அந்த கூட்டம் ஹிந்துத்துவத்திற்கு எதிரானது. மனிதநேயத்தின் இன்னொரு பெயர் ஹிந்துத்துவம்.
ஹிந்து மதம் எப்போது தோன்றியது?
பதில் : எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.
ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?
பதில் : ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவேண்டும்? எல்லையில்லா இறையை நமது புரிதலுக்கேற்ப புரிந்து கொள்கிறோம். அந்த புரிதல் ஆளுக்காள் மாறுபடும் அல்லவா? எல்லா பாதைகளும் நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. எந்த தெய்வத்தை வணங்கினாலும் நாம் இறையையே வணங்குகிறோம் என்பதே நமது ஹிந்துநெறியின் அடிப்படைக் கொள்கை. இதுவே நம்மை மிகவும் சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும், அமைதியையும், அன்பையையும் கொண்டிருக்கும் அற்புதமான சமுதாயமாகவும் வைத்திருக்கிறது. எப்போதெல்லாம் ஒரே கடவுள் என்ற கருத்து மக்களிடையே பரவுகிறதோ, உடனடியாக அந்த மக்கள் கூட்டம் அசுர சக்தியாக மாறி, மற்றவர்களை அழிக்க துவங்கிவிடுவதை நாம் சரித்திரத்தில் பார்க்க முடிகிறது.
சிறுதெய்வ வழிபாடு என்பதை ஹிந்து மதம் ஏற்றுக்கொள்கிறதா?
பதில் : ஆம். அதிலென்ன சந்தேகம். சிறு தெய்வ வழிபாடு நமது வழிபாட்டு முறையின் பிரிக்கவியலா அங்கம்.
புராணங்கள் உண்மையா பொய்யா?
பதில் : உண்மை. பல சமயங்களில் அவற்றில் உயர்வு நவிற்சியும், சில கதைகளும், கற்பனைகளும் கலந்திருக்க வாய்ப்புண்டு. புராணம் என்றாலே சரித்திரம் என்றுதான் அர்த்தம்.
புண்ணியம் – பாவம் என்பது என்ன?
பதில் : நல்லது செய்தால் புண்ணியம். கெட்டது செய்தால் பாவம்.
மகாபாரதம் கூறுகிறது -
श्रूयतां धर्मसर्वस्वं श्रुत्वा चैव अवधार्यताम् ।
परोपकार: पुण्याय पापाय परपीडनम् ॥
ஸ்ரூயதாம் தர்ம ஸர்வஸ்வம், ஸ்ருத்வா சைவாவதார்யதாம் |
ப்ரோபகார: புண்யாய, பாபாய பரபீடனம் ||
“தர்மத்தின் சாரம் முழுவதையும் கூறுகிறேன், கேள், கேட்டு அதன்படி நட. பிறருக்கு நன்மை செய்தல் புண்ணியம். பிறருக்கு தீமை செய்தல் பாவம்”
தர்மம் என்பது எது?
பதில் : இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின், கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்.
ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்? தீயவர்கள் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்கிறார்கள்?
பதில் : நல்லது , கெட்டது குறித்த myopic பார்வையே இது குறித்த கேள்வியை எழுப்புகிறது. நாமெல்லாம் ஒரு பெரும் பிரபஞ்சத்தின் அங்கங்கள். இங்கே செய்யும் செயல்கள் பலன்களை தருவதற்கு காலம் பிடிக்கின்றன. இந்த சுழற்சியில் கெட்டது செய்துவிட்டு தப்புபவர்கள் நரக நிலையிலோ அல்லது அடுத்த பிறவியொலோ தமது தீய செயல்களுக்கான பலன்களை அனுபவிக்கின்றார்கள்.
சோதிடம் உண்மையா?
பதில் : உண்மைதான் என்று அனுபவப்பட்ட பலர் சொல்கிறார்கள். உண்மையில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். இது அவரவர் அனுபவம் சார்ந்தது.
“சாமி” வந்து விட்டது என்று ஆவேசம் வந்து ஆடுபவர்களை நம்பலாமா?
பதில் : அது ஆவேசம் வந்து சாமி என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது.
தீமிதித்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் போன்றவை தேவைதானா?
பதில் : மற்றவர்களை தீயில் தள்ளாதவரை, மற்றவர்களை குத்தாதவரை – நம்மை வருத்தி இறைவனை அடைய முயற்சிக்கும் முயற்சிகளில் என்ன தவறு இருக்கிறது?
ஹிந்து என்றால் உண்மையில் என்ன அர்த்தம்?
பதில் : இயல்பானவர்கள் என்றர்த்தம்.

Thursday, 17 October 2013

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள்




காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.பெரிய பெரிய மரங்கள் வேரோடு சாய்க்கின்ற்து.அதே சமயம் சிறிய நாணற்புற்கல் வளைந்து கொடுக்கின்றன.வெள்ளம் நின்றவுடன் நிமிர்ந்து கொள்கிறது.இதே போன்றதுதான் நம் வாழ்க்கைச்சக்கரம்.யார் “ஓம்”, “ஓம்”, “ஓம்” என்று சதா ஜெபிக்கின்றார்களோ அவர்கள் நவக்கிரகங்களின் கதிர்வீச்சுகளால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை;நெருக்கடி காலத்தில் வளைந்து கொடுத்து பின் நிமிர்ந்து கொள்கின்றனர். “ஓம்” ஜெபிக்காதவர்கள் அடியோடு வீழ்கின்றனர்.இதை நாம் அனேகர் வாழ்க்கையில் காணலாம். “ஓம்” என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.இந்த மும்மூர்த்திகளை கிறிஸ்தவர்கள் பிதா,சுதன்,பரிசுத்த ஆவி என அழைக்கின்றனர்.ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம்,வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.



வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும்.இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம்.கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று.மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும்.மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும்,குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும்.வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும்.இளநீரில் ஓதிக்கொடுக்க உடல் காங்கை தணியும்.பிறரை ஆசிர்வாதிக்கும்போது “ஓம்” என்னும் மின்சக்தி தான்,நம் கைகளில் இருந்து வெளியே பாய்கிறது.பிறருக்குண்டான குறைகள் நீக்குகின்றன.


ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும்.பின் “ஒம்”., “ஓம்”, “ஒம்” என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும்.கர்ப்பமான தாய்மார்கள் “ஒம்” , “ஓம்”, “ஓம்” என சதா காலமும் ஜபித்துவந்தால் தெய்வக்குழந்தைகள் பிறக்கும்.


வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது.மீறி ஜபித்தால், உடல் தள்ளாடி விபத்து உண்டாகலாம்.மூச்சை உள்ளே இழுக்கும் போது “ஓம்” “ஓம்” “ஓம்” என ஜெபிக்கலாம்.அப்படி ஜெபிக்கும்போது மூச்சை உள்ளே இழுப்பதும்,வெளியே விடுவதும் ஒரே சீராக இருக்க வேண்டும்.ஊசியில் மருந்தை ஏற்றிய பின் இறக்குவது மாதிரி அமைய வேண்டும்.எக்காரணம் கொண்டும் மூச்சை அடக்கக் கூடாது.அதாவது கும்பகம் செய்யக்கூடாது.மந்திரங்களுக்கேற்றது சைவ உணவுதான்.சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு வருவதால் விரைவில் பலன் கிடைக்கும்.


ஆத்மார்த்தமான நன்றிகள்:மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் எழுதிய ஆன்மீகப்பயணம் பாகம் 1,பக்கம் 218,219.

நவகிரக பைரவர்கள் - சொர்ண பைரவர் (சூரியன்)

சூரியனின் பிராண தேவதை: சொர்ணாகர்ஷண பைரவர் + சொர்ணதாதேவி


ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷணாய தீமஹி
தந்நோஹ் சொர்ணபைரவ ப்ரசோதயாத்:


ஓம் த்ரிபுராயை ச வித்மஹே
பைரவ்யை ச தீமஹி
தந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்:

கிழமை
ஞாயிறு
ஓரை
சூரிய ஓரை
எண்ணிக்கை
1 ன் மடங்குகள்
இடம்
பைரவர் சந்நிதி

உங்களின் ஜனன ஜாதகத்தில் சூரியன் பலமின்றி இருந்தால்,இவரை முறைப்படி வழிபட்டு வர வேண்டும்;அதன் மூலம் சூரிய பலவீனம் நீங்கிவிடும்.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்;மது,ஒழுங்கீனம் இரண்டையும் கைவிடுபவர்கள் இந்த வழிபாடு செய்வதன் மூலமாக இவரின் அருளை விரைவாகப் பெற முடியும்.



தென்னாடுடைய சிவனே போற்றி…!
 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
 ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
 ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
 
நன்றிகள் : குருநாதர்

நவகிரக பைரவர்கள் - கபால பைரவர் (சந்திரன்)

சந்திரனின் பிராண தேவதை: கபால பைரவர் + இந்திராணி


ஓம் கால தண்டாய வித்மஹே
வஜ்ர வீராய தீமஹி
தந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்



ஒம் கஜத்வஜாய வித்மஹே
வஜ்ர ஹஸ்தாய தீமஹி
தந்நோ: இந்திராணி ப்ரசோதயாத்


 

கிழமை
திங்கள்
ஓரை
சந்திர ஓரை
எண்ணிக்கை
2 ன் மடங்குகள்
இடம்
பைரவர் சந்நிதி

விருச்சிக ராசியில் பிறந்தவர்களும்,பிறந்த ராசியில் சந்திரனுடன் பாவக்கிரகங்கள் சேர்ந்திருந்தால் இவரை முறைப்படி வழிபட்டு வர வேண்டும்;இதன் மூலமாக சந்திரனின் பலம் அதிகரிக்கும்;முற்காலத்தில் மனநலம் பாதித்தவர்கள் அதிலிருந்து முழுமையாக மீள அவர்களின் ரத்த உறவுகள் கபால பைரவ வழிபாடு செய்திருக்கிறார்கள்.
பைரவ வழிபாடு தொடர்ந்து செய்தால் அனைத்து கர்மவினைகளும் கரைந்து போய்விடும்;அதே சமயம்,பைரவ வழிபாடு செய்ய விரும்புவோர் பின்பற்ற வேண்டிய முதல் விதி:ஜீவகாருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிடுவதே!!! மது,ஒழுங்கீனம் இவைகளையும் கைவிடுவதன்  மூலமாக பைரவ அருள் எளிமையாகக் கிட்டிடும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
 
நன்றிகள் : குருநாதர்