உலகின் தொன்மையான மதமும் அறிவியல் பூர்வமான பகுத்தாய்வு சிந்தனையுடனும்
கருத்துடனும் கூடிய ஒரே மதம் இந்து மதம் என்பதை வெளிநாட்டு விஞ்ஞானிகள்
பலர் ஒப்புக் கொண்டு விட்டனர். இதற்கு ஒரு படி மேலே பொய் சில விஞ்ஞானிகள்
ஆணித்தரமாக தங்களது ஆராய்ச்சி முடிவுகளை கூறி உள்ளனர். இந்து மதம் என்பது
வெறும் மதம் மற்றும் வழிபாடு இல்லை. அவை ஒவ்வொரு மனிதன் மற்றும் உயிர்கள்
வாழ தேவையான விஞ்ஞான கூறுகள் அடங்கிய ஒரு சாரம்சமே என்று. தற்போதைய கால
கட்டத்தில் பல வெளிநாட்டு மக்கள் இந்து கலாசாரங்களாலும் அதன் தொன்மை
மற்றும் புனிதங்களாலும் ஈர்க்கப்பட்டு இந்தியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
ஆனால் நாமோ அந்நியக் கலாச்சாரங்களுக்கு அடிமைப்பட்டுக் கொண்டு
இருக்கின்றோம். இது தான் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். அவர்கள்
நம்மிடம் உள்ள நல்ல விசயங்களை எல்லாம் எடுத்துக் கொள்கின்றனர். நாம்
அவர்களிடம் உள்ள கெட்ட விசயங்களை எல்லாம் எடுத்துக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment