Wednesday, 15 May 2013

பிரிந்தவர் சேர உதவும் திருவொற்றியூர் நட்சத்திர லிங்க வழிபாடு!!!







சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் வடக்கு நோக்கியவாறு இருபத்தேழு நட்சத்திரங்களும் சிவலிங்க வடிவில் அமைந்திருக்கின்றன;தெற்கு நோக்கி  அரிய பைரவர் அருள்பாலிக்கிறார்.பல சித்தர்கள்,மகான்கள் ஒவ்வொரு யுகத்திலும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டிருக்கிறார்கள்;சில மகான்கள் இங்கேயே சிவசமாதி(ஜீவ சமாதி) ஆகியிருக்கின்றனர் என்பதும் தெரிகிறது.தற்போதும் பல மகான்கள்,சித்தர்கள் சாதாரண மனித வடிவில் இங்கே வந்து வழிபாடு செய்வதாக இங்கே வசிப்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


கர்மவினைகளாலோ,பிறரின் சூழ்ச்சியாலோ பிரிந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்காக ஒரு எளிய சுயபரிகாரத்தை வழங்கியிருக்கிறார்.வாழ்க்கையில் ஒரு சிறு முன்னேற்றம் கூட இல்லையே என்று ஏங்குபவர்களுக்கும் இந்த சுயபரிகாரம் கைகொடுக்கும்.


இந்த சுயபரிகாரத்தைச் செய்ய விரும்புவோர்,கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டிருக்க வேண்டும்;நமது பிறந்த நட்சத்திர நாள் மாதம் ஒரு முறை/இருமுறை வரும்;மாதம் ஒரு நாள் வீதம் ஏழு மாதத்திற்கு விடாமல் செய்து முடிக்க வேண்டும்.இவ்வாறு பின்பற்றினால் மட்டுமே இந்த வழிபாடு பலன் தரும்.


நமது பிறந்த நட்சத்திரம் வரும் நாளை நமக்கு அறிமுகமான ஜோதிடரிடம் ஒரு வருடத்திற்கு எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்.ஒரு தமிழ் மாதத்திற்கு ஒருமுறை நமது பிறந்த நட்சத்திரம் வரும்;சில மாதங்களில் இரண்டு முறை வரும்.அதற்கு மேல் வராது.நமது நட்சத்திரம் வரும் நாளானது ஒரு முழு நாளில் இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது.அதாவது பூராடம் நட்சத்திரம் நமது பிறந்த நட்சத்திரம் எனில்,இன்று காலையில் இருந்து நாளை காலை வரை இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது;இன்று மதியம் ஆரம்பித்து,நாளை மதியம் வரை இருக்கும்;அல்லது இன்று மாலை ஆரம்பித்து நாளை மாலை வரை  இருக்கலாம்.

எப்படி இருந்தாலும்,நமது நட்சத்திரம் இருக்கும் நாளில்,நமக்கு வசதியான நேரத்தில் சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு பால்,ஐந்து முகருத்ராட்சம் ஒன்று(வசதியிருந்தால் ஒன்றுக்கும் மேல்) கொண்டு சென்று நட்சத்திர லிங்கம் அமைந்திருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.அங்கே இருக்கும் பூசாரியிடம் பாலைக் கொடுத்து நமது நட்சத்திர லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும்.பூசாரிக்கு மனதார நம்மால் முடிந்த தட்சிணையைத் தர வேண்டும்;(குறைந்தது ரூ.51/-)அபிஷேகம் செய்யும் போது அந்த லிங்கத்தின் மேல் நாம் கொண்டு வந்திருக்கும் ருத்ராட்சத்தை வைக்க வேண்டும்;(பூசாரியிடம் சொல்லியும் அந்த பாலுடன் சேர்த்து அபிஷேகம் செய்ய வைக்கலாம்)அபிஷேகம் செய்யும் போது மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என்று ஜபிக்க வேண்டும்.அபிஷேகம் முடிந்தப் பின்னர்,நமது நட்சத்திர லிங்கத்திற்கு எதிராக அமர்ந்து நூற்றி எட்டு முறை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.பிறகு,நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.(வேறு எந்தக் கோவிலுக்கும் போகக் கூடாது)


இவ்வாறு தொடர்ந்து மாதம் ஒரு ஜன்ம நட்சத்திர நாள் வீதம் ஏழு மாதங்கள் விடாமல்(சகுனத் தடையில் சிக்காமல் இருப்பது மிகவும் அவசியம்!) வழிபாடு செய்ய வேண்டும்.செய்து முடித்த நூறு நாட்களுக்குள் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வதற்கு சந்தர்ப்பம் அமையும்.வாழ்க்கையில் ஒரு சிறு முன்னேற்றம் கூட இல்லாதவர்களுக்கும் முன்னேற்றம் கிட்ட ஆரம்பிக்கும்.


நாம் வாழும் கலியுகத்தில் பொறாமை யார் படுவார்கள் என்று எவருக்குமே தெரியாது;எனவே,இந்த வழிபாட்டை தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லி,அவர்களையும் அழைத்துச் சென்று அவர்களையும் செய்ய வைக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.நீங்கள் மட்டும் செய்யுங்கள்.இவ்வாறு வழிபாடு செய்வதை பரம ரகசியமாக செய்து முடித்துவிடுங்கள்;செய்து முடித்தப் பின்னரும்,எவரிடமும் சொல்லாதீர்கள்;நீங்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேறுங்கள்;
மேலும்,இந்த ஆலயத்தில் புனர்நிர்மாண பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன;நம்மால் ஆன பொருள் உதவி,பண உதவி,உழவாரப்பணி செய்வது மிகவும் அவசியம்.


இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்கு நமது ஆன்மீக எக்ஸ்பிரஸ் ாசகர்கள் சார்பாக கூகுள் (1க்குப்பின்னால் நூறு சைபர்கள்) நன்றிகளைத் தெரிவித்துக்  கொள்கிறோம்.

மேலும் பல அற்புத விசயங்கள் இத்தளத்தில் உள்ளன. அவற்றை கூற குரு உத்தரவு இல்லை. சித்தர் தேடல் மற்றும் ஆன்மீக நேசிப்பாளர்கள் அனைவரும் இங்கு ஒரு முறை சென்று விட்டு தங்கள் அனுபவத்தை கூறவும். முக்கியமான விஷயம் மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு செல்லவும்.

ஓம்சிவசிவஓம்

1 comment:

  1. உங்கள் நட்சத்திரமே உங்கள் விருப்பங்களைநிறைவேற்றும் ரகசியம்
    http://saramadikal.blogspot.in/2013/06/10.html
    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
    இவண்

    சாரம் அடிகள்
    94430 87944

    ReplyDelete