Saturday, 16 March 2013

அவசியமான மறுபதிவு:தமிழ்ப்பண்பாடுதான் இந்துப்பண்பாடாக பரிணமித்திருக்கிறது!!!



பூர்வத்திலேயே தமிழ்நாட்டுப் பிராமணர்கள் பலர் வடக்கே போயிருக்கிறார்கள்.ஆந்திரர்களுக்கும் சோழர்க்கும் கல்யாண கொள்வினை, கொடுப்பினை இருந்த காலத்தில் இப்படி பலர் வடக்கே போயிருக்கிறார்கள்.இப்போது வட நாட்டில் திராவிட் (Dravid)என்று குடும்பப்பெயர் போட்டிருக்கிறார்கள்.
ஆனால் வெளிமாநிலங்களில் குடியேறிய இந்த திராவிடர்களுக்கு தமிழ் மொழி போகப் போக தெரியவில்லை.
ஒரு பகுதியில் குடியேறும் பிற பகுதி மக்கள் நாளாவட்டத்தில் தம் தாய் மொழியை மறந்துவிடுகிறார்கள்.
ஆரியர் திராவிடம் என்ற பேதம் இரு வேறு இனமாக பேதப்படுத்தப்பட்டதற்கு ஆதாரமில்லை.பஞ்ச திராவிடர்கள் என்பது பிரதேச ரீதியாக பிரிக்கப்பட்டதேயன்றி வேறில்லை;பிற்காலத்தில்தான் இதை அரசியல் சுயநலத்திற்காக இனப்பாகுபாடாக்கிவிட்டனர்.
ஆதாரம்:463-464,தெய்வத்தின் குரல் பாகம்-1
காஞ்சிப் பரமாச்சாரியார் அவர்கள்.வானதிப் பதிப்பகம் வெளியீடு.

பாரதம் அன்றும் இன்றும்:அவசியமான மறுபதிவு

பாரதம் அன்றும் இன்றும்



கடந்த 10,000 ஆண்டுகளாக எந்தநாட்டின் மீதும் பாரதம் படையெடுக்கவில்லை.

கணக்கிடுவதற்குத் தேவையான பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தது பாரதம் தான்.பூஜ்ஜியத்திற்கு மதிப்பைக் கண்டறிந்தவர் தமிழ்நாட்டுக் கணிதமேதை ராமானுஜம்தான்.

உலகின் முதல் பல்கலைக்கழகம் தட்சசீலம் ஆகும்.இது கிறிஸ்து பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது.
உலகம் முழுவதுமிருந்து 10,500 மாணவர்கள் இங்கு பயின்றனர்.600 க்கும் மேற்பட்ட பாட வகைகள் இங்கு கற்பிக்கப்பட்டன.

ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் தாய்மொழி சமஸ்க்ருதம் தான்.கணிப்பொறி எனப்படும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயாரிக்க ஏற்ற மொழி சமஸ்க்ருதம் தான் அமெரிக்கப் பத்திரிகையான
போர்ப்ஸ் 1987 ஜீலை மாத வெளியீட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

ஆதிகாலத்தில் மனிதன் கண்டறிந்த முதல் வைத்திய முறை ஆயுர்வேதம் தான்.இதை சரகர் என்ற இந்து ரிஷி கண்டுபிடித்து முறைப்படுத்தினார்.இன்று இங்கிலாந்தின் அரசி எலிசபெத் யோகாசனம் சார்ந்த ஆயுர்வேத வைத்திய முறையை பின்பற்றி வருகிறார்.45 வயதான பாப் பாடகி மடோனாவின் குரல் வளமும், கட்டுடலும் யோகாசனப்பயிற்சியால் பாதுகாக்கப்பட்டுவருகிறது.

நாவிகேஷன் என்ற சொல்லப்படும் கப்பல்,படகு செலுத்தும் கலையை 6000 ஆண்டுகளுக்கு முன் சிந்து நதிக்கரையில் நிகழ்த்திக்காட்டியவர்கள் இந்துக்கள்.நவ்கத் என்ற சமஸ்க்ருத சொல்லே ஆங்கிலத்தில் நாவிகேஷன் ஆனது.

அதே போல தீ என்றால் நெருப்பு.ஆதிகாலத்தில் தீயை தமிழர்கள் வழிபட்டார்கள்.ஆங்கிலத்தில் கடவுள் என்ற வார்த்தைக்கு thee என்று பெயர்.எழுதப்படாத வரலாற்றுக்கு முன்பே இந்துயாவுடன் இங்கிலாந்து வாணிகத் தொடர்பு இருந்ததற்கு இந்த வார்த்தை ஒரு ஆதாரமாகும்.

பூமி சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்ததாக கூறுவதற்கு முன்பே கி.பி.5 ஆம் நூற்றாண்டிலேயே பாரதத்தின் பட்டாச்சாரியார் கண்டுபிடித்துவிட்டார்.மிகச்சரியாக
365.258756584 நாட்களாகிறது என்பதை பட்டாச்சாரியார் கண்டுபிடித்தார்.

கணிதத்தில் பையின் மதிப்பை கணிக்கிட்டவர் போதாயனார் என்ற பாரத ரிஷி ஆவார்.ஐரோப்பிய கணித மேதைகள் பிதோகரஸ் தேற்றத்தை விளக்குவதற்கு முன்பே அதாவது 6 ஆம் நூற்றாண்டிலேயே போதயனார் விளக்கிவிட்டார்.

கணிதத்தில் அல்ஜீப்ரா,டிரிக்னாமெட்ரி,கால்குலஸ் ஆகியவை பாரதத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டன.குவார்ட்ராடிக் சமன்பாடுகள் ஸ்ரீதராச்சாரியார் என்ற பாரதீயரால் 11 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டன.

கம்பியில்லாத தகவல் தொடர்பை பாரதத்தின் ஜகதீஷ் சந்திர போஸ் முதலில் கண்டுபிடித்தார்.மார்க்கோனி அல்ல என அமெரிக்க நிறுவனமான I.E.E.E. உறுதியாக கூறுகிறது.

சுஸ்ருதர் என்ற பாரதீயர் 2600 வருடங்களுக்கு முன்பே சிசேரியன்,கேடராக்ட்,செயற்கைக்கால்,கை, கால் எலும்புமுறிவு, மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.
அறுவைசிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்துவ சிகிச்சையும் செய்து இருக்கிறார்.125 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக் கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.

அமெரிக்க டாக்டர்களில் 38%,விஞ்ஞானிகளில் 12% நாசாவில் 36%, மைக்ரோசாப்டில் 34%, இன் டெல்லில் 17%,சிராக்ஸ் ஸில் 13%, ஐ.பி.எம்மில் 28% இந்தியர்கள் பணிபுரிகிறார்கள்.
இவ்வளவு பெருமைகள் இருந்தும் நாம் ஏன் இந்த பூமியை ஆளக்கூடாது? நமக்கு இப்போதையத் தேவை; தேச பக்தி நிறைந்த சர்வாதிகாரி!!!

உங்கள் குழந்தையை(எதிர்காலத் தலைமுறையை)முறையாக உருவாக்குவது எப்படி?





நமது குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்?
நன்றி:உளவியலாளர்,டாக்டர் பெர்வீன் தாதாசஞ்சி

உங்கள் குழந்தையை உள்ளபடி ஏற்றுக்கொள்ளுங்கள்.எதையும் திணிக்க வேண்டாம்.

குழந்தையை அணுகும்விதத்தில் ஒரே மாதிரியாக நடந்துகொள்ளுங்கள்.

குழந்தையின் செயலை விமரிசியுங்கள்.
குழந்தையை விமர்சிக்க வேண்டாம்.

ஒரு குடும்பமாக செயல்படுங்கள்.

குழந்தையை ஒப்பிட்டுப் பேசாமல் அவர்களிடையே இணக்கத்தை உருவாக்குங்கள்.

குழந்தையை மிரட்டினால் தொடர்ந்து கவனியுங்கள்.

நீங்கள் குழந்தையுடன் இருப்பதைவிட பெரியபரிசு எதுவும் கிடையாது.

நீங்கள் குழந்தையை அடிப்பது அது மற்றவர்களை அடிக்கத் தூண்டும்.

ஒரு முன்மாதிரியாக இருந்து குழந்தைகளிடம் நல்ல மதிப்பீடுகளை விதையுங்கள்.
ஒரு வேளையாவது குழந்தையோடு சேர்ந்து சாப்பிடுவது பந்தம் உருவாக உதவும்.

குழந்தை பொறுப்புள்ளவனா/ளாக மாறியதும் அவன/ளது சுதந்திரத்தை அதிகப்படுத்துங்கள்.

குழந்தையிடம் நிபந்தனையில்லாத பரிபூரண அன்பு செலுத்துங்கள்.

குழந்தையை விமரிசிப்பதைவிட புகழ்ந்து ஊக்கப்படுத்துங்கள்.

குழ்ந்தையுடன் பேரம் பேசுவது ஒன்றும் உங்கள் பலவீனம் அல்ல.


சில யோசனைகளைச் சொல்லுங்கள்.ஆனால் குழந்தை முடிவு செய்யட்டும்.

குழந்தை முக்கியமாக நினைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கெடுங்கள்.

குறும்புப்பையன், கவனமில்லாதபெண் என்ற வார்த்தைகளை ஒரு போதும் பயன்படுத்தாதீர்கள்.

வீடியோ, டி.வி.,கணினி விளையாட்டுக்களைக் குறைத்துவிடுங்கள்.
வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் குழந்தையுடன் அதிக நேரம் செலவழியுங்கள்.

வசதிகளால் பின்விளைவுகள் ஏற்படும் என்பதை குழந்தையிடம் சொல்லுங்கள்.

படுக்கையில் இருக்கும்போது பகலில் என்ன நடந்தது என்பதைப் பேசுங்கள்.

குழந்தை வளர்ந்ததும் இருக்கவேண்டிய பண்புகளை நினைத்துப் பாருங்கள்.

முறையான பழக்கவழக்கத்தை ஏற்படுத்தி அதனைக் கண்காணியுங்கள்.

புத்தகங்கள் கொடுத்து அவற்றின்மீதான ஆர்வத்தை வளர்த்தெடுங்கள்.

குழந்தை பாதுகாப்பாக உணர்வதற்கு வரம்புகளை விதியுங்கள்.

குழந்தையின் குறைகளை கேலி செய்வது அதன் சுயமதிப்பை குறையச் செய்யும்.
இந்தக்கருத்துக்கள் உங்கள் குடும்பத்தில் மிகச்சிறந்த அடுத்த தலைமுறையை நிச்சயம் உருவாக்கும்.

மற்றவர்களை வெற்றிகொள்வது எப்படி?


மற்றவர்களை வெற்றிகொள்வது எப்படி?



ஆலோசனை தருபவர்:மனநலப் பேராசிரியர்,ஹார்வார்டு பல்கலைக்கழகம்,மனோதத்துவத்துறை.
(இந்தக்குறிப்புக்களை நான் கி.பி.1992 ஆம் வருடம் எனது கல்லூரி நாட்களில் எனது டைரியில் எழுதிவைத்தேன்.இந்த குறிப்புகள் எனது ஆளுமைத்திறனை உருவாக்கின)

அ)உங்களுக்கென்று உள்ள கருத்துக்களைக்கொண்டு மற்றவர்களை மதிப்பிட்டு விடாதீர்கள்.
ஆ)வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்ய வேண்டாம்.பழகி முடிவு செய்யுங்கள்.
இ)பிற மனிதர்கள் கூறுவதை உன்னிப்பாக கவனிக்கவும்.
ஈ)எல்லோருக்கும் தலைக்கனம் உண்டு.அதற்காக பிறரை வெறுக்க வேண்டாம்.

உ)குறைவாகப் பேசுங்கள்;அதனால் நிறைய கற்றுக் கொள்வீர்கள்

ஊ)ஒருவரிடம் கேள்வி கேட்டப்பின் அவர் என்ன கூறுகிறார் என்பதை பொறுமையாக கவனியுங்கள்.நீங்களே உடனே விடை கூற முற்படாதீர்கள்.

எ)பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்க வேண்டாம்.பிறர் உங்களுடைய நேரத்தை வீணாக்க அனுமதிக்காதீர்கள்.

ஏ)ஒருவருக்கு ஓர் உதவியை செய்யும்முன், அதில் சிறிது சந்தேகம் இருந்தாலும், அதைச் செய்ய ஒப்புக்கொள்ளாதீர்கள்.

ஐ)(உங்களிடம் பணிபுரிவர்களிடம்) முடிவு செய்தல், செய்த முடிவை மாற்றுதல்,வேலையை முடித்தல் இவற்றில் முழுச்சுதந்திரம் கொடுங்கள்.

ஒ)மற்றவரின் குழந்தைகளிடம் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.இதனால் அவர்களிடம் நீங்கள் நன்மதிப்பு பெற முடியும்.

ஓ)ஒருவரைப் பாராட்டும்போது தாராளமாக பாராட்டுங்கள்.போலியான பாராட்டுக்களை வாரிவிடவேண்டாம்.

ஒள)தவறுகள் மனிதர்களிடம் சகஜம்.அதை அனுமதியுங்கள்.மீண்டும் ‘அப்படி’ நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.

ஃ)உங்களைச் சுற்றியிருப்பவர்களே உங்கள் கூட்டாளிகள்.(உங்கள் உலகமே அவர்கள்தான்)அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பகைத்துக்கொள்ளவேண்டாம்.

க) உங்களுக்குத் தெரியாவிட்டால், உரியவரிடம் உண்மையைச் சொல்லிவிடுங்கள்.தெரியும் என்ற நடிப்பு வேண்டாம்.
ங)தவறிழைத்தால் அதை ஒப்புக்கொள்ளத்தயங்காதீர்கள்! இதனால் மற்றவர்களுக்கு உங்களைப் பிடித்துப்போகும்.
ச)வெற்றியை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

சுய கவுரவத்துடன் வாழ்வதற்கு ஒரு வழிகாட்டி புத்தகம்:

விழிமின், எழுமின்.வெளியீடு:விவேகானந்தா கேந்திரம்,கன்னியாகுமரி.விலை ரூ.25/-



^^இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் யாரையும் எப்போதும் எதற்காகவும் நம்பாமல் தன்னை மட்டும் நம்பி வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்.அப்படி வாழ்வதற்கு முதலில் தேவை தனது முன்னோர்களைப் பற்றிய பெருமைகளை முழுமையாக அறிவதே!
(இன்றைய பாடத்திட்டம் இங்கிலாந்தையும்,அமெரிக்காவையும் புகழ்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.அதே சமயம்,நமது முன்னோர்கள் எதற்கும் லாயக்கிலாதவர்கள் என்ற மாய பிம்பத்தை கி.பி.1947 முதல் உருவாக்கிவிட்டது.அதெல்லாம் பொய் என்பதை நிரூபிப்பதே ஆன்மீக எக்ஸ்ப்ரஸின் நோக்கம்)

^இப்போது இந்த புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:
‘உத்திஷ்ட ஜாக்ரத ப்ராப்ய வாரன்னிபோதத’ இந்த சம்ஸ்க்ருத வாசகம் கட உபநிஷத்தில் இருக்கின்றது.இந்த வாசகத்தை இந்து தேசத்தின் நவீன அல்டிமேட் ஸ்டார் சுவாமி விவேகானந்தர் அடிக்கடி பயன்படுத்தியுள்ளார்.

இதன் தமிழ் அர்த்தம் ‘உன்னுடைய லட்சியத்தை அடையும் வரை சிறிதும் அயராமல் உழை’ என்பதாகும்.

^இந்து தீர்க்கதரிசிகள் எதிர்காலத்தில் (கி.பி.3000 க்கும் மேல்) நடக்க இருக்கும் சம்பவங்கள் அனைத்தையும் குறித்து வைத்தனர்.அதைப் புரிந்து கொண்டு பாராட்டவே மேல்நாடுகளுக்கு பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும்.

நமது பாரத நாடு சீரழியக்காரணம் நமது புராதன இந்து மரபு மற்றும் சட்டதிட்டங்களை கடைசிவரைப் பின்பற்றாததுதான்.

^அன்பைப் பிரவாகமாக வெளிப்படுத்திய ஈசா எனப்படும் யேசுகிறிஸ்து’ ‘உனது எதிரியையும் ஆசிர்வாதி.உனது வலது கன்னத்தில் உன்னை ஒருவன் அடித்தால் நீ அவனிடம் உனது இடது கன்னத்தைக்காட்டு’ என போதித்தார்.

இந்துக்களின் வேதநூலான பகவத்கீதையில், கிருஷ்ணபரமாத்மா, ‘எப்போதும் மிகுந்த உற்சாகத்துடன் வேலை செய்; உனது எதிரி யாராக இருந்தாலும் அப்பா அம்மா சகோதரன், சகோதரி, தாத்தாவாக இருந்தாலும் நீ அவர்களை அழித்துவிடு.ஏனெனில் போர்க்களத்துக்கு வந்த பின்னர் பாசம் தேவையா?’ என நமக்கு உபதேசம் செய்தார்.

ஆனால், கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான அமெரிக்கா பகவத்கீதையை அப்படியே பின்பற்றிவருகின்றது.
அகிம்சையின் மனித உருவமான புத்தரின் கொள்கையைப் பின்பற்றும் இலங்கை கூட பகவத்கீதையைப் பின்பற்றுகிறது.

நாம், இந்துதேசம் என இந்தியாவை அழைப்பதைக் கூட அவமானமாகக் கருதுகிறோம்.ஆனால்,ஏசு கிறிஸ்துவின் கொள்கைகளை 101% பின்பற்றுகிறோம்.

^வெள்ளைக்காரர்களின் லட்சியம்: தனி மனித சுதந்திரம் (அதனால்தான் அங்கே ஓரினசேர்க்கையாளர்களுக்கு தனி எம்.எல்.ஏ., எம்.பி. இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.)
அதன் மொழி: பணம் திரட்டும் கல்வி (அட நம்ம கல்வித் தந்தைகள் விஸ்வரூபமெடுத்தது இதனால்தான்)
அதற்கு வழி:அரசியல் (இந்தியாவை நாசக்காடாக்குவது அரசியல் என்பது புரிகின்றதா?தேசப்பாதுகாப்பு விஷயத்தில் கூட அரசியல் புகுந்து நாம் அசிங்கப்பட்டுக்கொண்டிருப்பதுதான் அதிகம்)

நமது இந்துதர்மத்தின் லட்சியம்*: முக்தி
அதற்கான மொழி : வேதம் ரிக்,யஜீர்,சாமம்,அதர்வணம்
அதற்கான வழி: துறவு
இந்த வழிமுறை* தற்போது வெளிநாட்டில் பின்பற்றத்துவங்கியுள்ளனர்.


^ஒருவன் போகங்களை அனுபவித்துத் தீர்க்காமல் போனால் அவன் கடவுளை அடையமுடியாது.இது உறுதி.நாம் இன்னும் கிளிப்பிள்ளைகளாக இருக்கிறோம் பல விஷயங்களில்!!!
இதற்குக்காரணம் உடல் பலவீனம்.அப்படி உடல் பலவீனமாக இருப்பதன் ஆதாரம் பலமில்லாத மூளை.

^ நம்மில் ஒருவன் எழுந்து பெரியவனாக முயன்றால் அவனை நாம் அனைவரும் இழுத்துக் கீழே ஒடுக்கிவிடுகிறோம்.ஆனால்,அன்னியன் ஒருவன் நம் அனைவரையும் அடித்து உதைத்தால் பரவாயில்லை.(ஏ! எனது சுயநலமிக்க தமிழினமே! மலேஷியாவிலும், சிங்கப்பூரிலும், வளைகுடாவிலும், இலங்கையிலும் நமது ரத்தங்கள் செத்துக்கொண்டிருந்தும் நமக்குச் சொரணையில்லையா? மானமும் வீரமும் நமது அடையாளம் என்பது இப்போது எங்கே?
ஏ! எனது இந்து இனமே! அமெரிக்காவிடமும் சீனாவிடமும் அவமானப்படுவதற்கா நமது முன்னோர்கள் நம்மை இவ்வளவு பெருமைமிக்க இந்துதர்மத்தில் வளர்த்தார்கள்.
அமெரிக்கா நம்மிடம் ‘நீங்கள் அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், மின்சார உற்பத்திக்குத் தேவையான அணு மூலப்பொருளை உலகில் எந்த நாட்டிடமும் நான் வாங்கித் தருகிறேன்’ என நம்மிடம் பசப்புவார்த்தை சொல்லி நம்மை அடிமைப்படுத்தியது.
அணுஅயுதப்பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும்,நமக்கு அணுமின்சார மூலப்பொருள் வாங்கித்தருவதிலிருந்து அமெரிக்கா எஸ்கேப்.ஆக அவனவனுக்கு அவன் காரியம் மட்டுமே முக்கியம்)
^மூன்று இந்துக்கள் ஒன்று சேர்ந்து வெறும் ஐந்து நிமிடம் வரை ஒரு காரியத்தை முடிக்கும் பொறுமை நமக்கு இல்லை.
அந்த ஐந்து நிமிடத்தில் ஒருவனை ஒருவன் தூற்றவும், முந்தவும் செய்வதால்தான் நமது இயக்கங்கள் தோற்றுவிடுகின்றன.

^ஐயமும்,பயமும் நம்மை முட்டாளாக்கும்.முதலில் நம்மிடையே இருக்கும் பொறாமையை ஒழித்துக் கட்டுவோம்.

^நாம் உண்மையில் உண்மைக்காக பணிபுரிந்தால் நமது பாரதம் வெறும் 25 ஆண்டுகளில் சர்வசக்திவாய்ந்த நாடாக மாறிவிடும்.(அப்படி மாறாமல் பார்த்துக்கொள்வதில் காங்கிரஸ்,திக,கம்யூனிஸ்டுகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன)

^இன்றைய கல்வி ஒரு குப்பை.அது திமிரும் அகம்பாவமும் நிறைந்த மனிதர்களை உருவாக்கியுள்ளது.மனதை மலரச்செய்யும் வேலை சிறிதும் இல்லை.
பிறரை மட்டம்தட்டும் போக்கு பிற வெளிநாட்டுமதங்களிடமிருந்து நம்மிடம் பரவியது.
மனிதனை மனிதனாக்கும் கல்வியே நமக்குத் தேவை.

^கிழக்கிந்தியக்கம்பெனி நமது இந்துக்கருவூலமான ரிக் வேதத்தை வெளியிடுவதற்கு கி.பி.1750களில் ஒன்பது லட்ச ரூபாய்களை (இன்று கி.பி.2009.இந்தப்பணம் எத்தனை கோடிகள்?) செலவழித்தது.

அதற்கு முகவுரை எழுதி ரிக் வேதத்தை வரிசைபடுத்துவதற்கு 20 ஆண்டுகள் ஆயின.

அதன்பிறகு அவற்றை அச்சிடுவதற்கு 25 ஆண்டுகள் ஆயின.
கி.பி.1000 துவங்கும் வரை இந்து தேசமான நம் பாரதத்தில் ஜாதிக்கொடுமைகள்  கிடையாது.எல்லா ஜாதி மக்களும் சமஸ்க்ருதம் பயின்றனர்.பெண்களில் துறவிகள், மகான்கள், மன்னர்கள்,காவலர்கள், ஜோதிடர்கள்,உளவாளிகள்,ரவுடிகள் என அனைவரும் இருந்தனர்.
இஸ்லாம் மதம் நம்மிடம் 800 ஆண்டுகளாக தீராத இம்சை கொடுத்து இங்கே வளர்ந்தது.மதுரை மீனாட்சியம்மன் கோவில் 45 ஆண்டுகள் பூட்டிக்கிடந்தது.
300 ஆண்டுகள் கிறிஸ்தவம் இங்கிலாந்து ஆளுமை என்ற பெயரில் நம்மை செல்லரித்தது.நமது பரந்த மனப்பான்மையால் அது இப்போது செய்யும் அழிவு வேலைகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.
எப்போது நாம் நமது குழந்தைகளுக்கு நமது இந்துதர்மம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கப்போகிறோம்?
ஒவ்வொரு இந்துவும் இந்த புத்தகத்தைப்படித்தால் விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும் பல மடங்கு பெருகும்.
புத்தகம் கிடைக்கும் இடம்:
செயலாளர்,
விவேகானந்த கேந்திரம்,
விவேகானந்தபுரம்,
கன்னியாகுமரி-629702.

இணையதளம்:www.vkendra.org/

இந்துவாகப்பிறந்த ஒவ்வொரு இளைஞரும்,இளம்பெண்ணும் இந்தப்புத்தகத்தை வாசிக்க வேண்டும்.அப்படி வாசித்தால், குடும்பப்பிரச்னை,அலுவலகப்பிரச்னை, நட்புப்பிரச்னை,காதல் பிரச்னை,கல்யாணத்தொல்லைகள்,கணவன் மனைவிபிரச்னை,அரசியல் பிரச்னை,சுகாதாரப்பிரச்னை இவை அனைத்தும் தீர்ந்துவிடும்.
அது எப்படி ஒரேபுத்தகத்தில் தீரும்? வாங்குங்கள்.வாசியுங்கள்.விடை இந்தப்புத்தகத்தில் ஒளிந்திருக்கின்றது.

Saturday, 9 March 2013

சிவராத்திரியன்று(தொலைதூரத் தமிழ்சகோதரர்களுக்காக)வழிபட சிறப்பான சிவலிங்கங்கள்!!!

















ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு
ஆயிரம் திருநாமம்
அயன் திருமாற்கு அரிய சிவம் உருவந்து
பூதலத்தோர் உகப்பு எய்தக் கொண்டருளி(திருவாசகம்)


நன்றிகள் : குருநாதர்

Shivaratri 2013 சிவராத்திரியன்று நாம் செய்ய வேண்டியவை




சிவராத்திரியன்று நாம் செய்ய வேண்டியவை

ஒவ்வொரு தமிழ் ஆண்டும் வரும் மாசி மாதத்து சிவராத்திரியே மஹாசிவராத்திரி எனப்படும்.இந்த நன்னாளில் மட்டும் இரவில்,நமது வீட்டில் ஒருமுறை ஓம்சிவசிவஓம் ஜபித்தாலே,பத்தாயிரம் தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்தமைக்கான பலன்களைப் பெறலாம்.பழமையான ஆலயங்களில் அல்லது மலைமீதிருக்கும் ஆலயங்களில் அல்லது பழமையான ஜீவசமாதிகளில் ஒரே ஒருமுறை ஓம்சிவசிவஓம் ஜபித்தால் ஒரு லட்சம் தடவை ஜபித்தமைக்கான பலன்களைப் பெறலாம்.



அதுவும் நமது குலதெய்வக்கோவில் வளாகம் அல்லது சித்தர்களின் ஜிவசமாதிகளில் சிவராத்திரி இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,நமது ஜப ஆற்றலால் நமது குலதெய்வத்தின் சக்தி பலகோடி மடங்கு அதிகரிக்கும்;நமது ஆத்மபலமும் அதிகரிக்கும்.குலதெய்வம் தெரியாதவர்கள் அருகில் இருக்கும் சித்தர்களின் ஜீவசமாதியில் ஜபிப்பது நல்லது.



இந்த நந்தன வருடம்,சிவராத்திரி மாசி 26 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை(10/3/13) அன்று இரவு வருகிறது.இந்த நாளில் நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரையிலும் நமது குல தெய்வக்கோவில் வளாகம் அல்லது சித்தர் ஜீவசமாதி அல்லது சதுரகிரி அல்லது அண்ணாமலை கிரிவலப்பாதை அல்லது காசி அல்லது திருக்கையிலாயம் அல்லது நமது வீட்டு பூஜையறையில் கிழக்கு நோக்கி அமரவேண்டும்;ஒரு மஞ்சள்துண்டை விரித்து,அதற்குள்ளாக அமர்ந்து கொள்ள வேண்டும்;இருகைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு,கைகளை மடக்கிக் கொள்ள வேண்டும்;முதலில் நமது குலதெய்வத்தை நினைக்க வேண்டும்.(உதாரணமாக,ஓம் முனீஸ்வராய நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்);

 பிறகு,ஓம் கணபதியே நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்;பிறகு,நமது இஷ்டதெய்வத்தை நினைத்துக் கொள்ள வேண்டும்;

(ஓம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவாய நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்) பிறகு ஓம்சிவசிவஓம் ,ஓம்சிவசிவஓம் என்று வேகமாக ஒப்பிப்பது அல்லாமல்,மெதுவாக ஜபிக்க வேண்டும்.ஜபத்தின் முடிவில்

ஓம் அருணாச்சலாய நமஹ
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் நந்தீசாய நமஹ
ஓம் திருமூலதேவாய நமஹ
ஒம் கருவூர் தேவாய நமஹ
ஓம் ராமலிங்க தேவாய நமஹ
ஓம் காகாசிவமே நமஹ

என்று ஜபித்துவிட்டு,ஜபத்தை முடிக்க வேண்டும்.ஒருவேளை இந்த மூன்றுமணி நேரமும் ஜபிக்க முடியாவிட்டால்,10/3/13 ஞாயிறு நள்ளிரவு 12 முதல் 12.30 வரையிலும்,1 முதல் 1.30 வரையிலும்,    2 முதல் 2.30 வரையிலும் ஜபிக்க வேண்டும்.இவ்வாறு,ஜபித்து முடித்தப்பின்னர்,கோவில் பிரசாதமாக அபிஷேகத் தீர்த்தம் அல்லது (சித்தர் ஜீவசமாதி எனில்) கொண்டு வந்திருக்கும் இளநீரை அருந்த வேண்டும்.



இந்த நாளில் மட்டும், நள்ளிரவு நேரத்தில் விண்வெளியில் இருந்து ஆல்பா,பீட்டா,காமாக் கதிர்கள் பூமியில் இருக்கும் புனித இடங்களை நோக்கிப் பாயும்;இந்தக்கதிர்களுக்கு அறிவியல் பூர்வமான சுபாவங்கள் இருந்தாலும்,அதைவிட அபூர்வமான ஆன்மீக பேராற்றல்களும் இருக்கின்றன; பாராசைக்காலஜி கற்றவர்களிடம் கேட்டால் மணிக்கணக்காக இது தொடர்பான விளக்கங்களை அளிப்பார்கள்;அவ்வாறு பாயும் போது மேலே கூறிய வழிமுறைப்படி ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,சதாசிவனின் அருளாற்றல் முழுமையாகக் கிட்டும்.சிவராத்திரி முடிந்த மூன்று நாட்களுக்கு 14/3/13 வரை யாரிடமும்,எக்காரணம் கொண்டும் கோபப்படாமல் இருந்தால் நிச்சயமாக உங்களது ஓம்சிவசிவஓம் ஜப ஆற்றலானது உங்களது உடலையும் ஊடுருவிச் சென்று ஆத்மாவுக்குள் நிரம்பிவிடும்.

           இந்த ஆன்மீக  ரகசியத்தை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகருக்கு கூகுள் நன்றிகள்!!!

ஓம்சிவசிவஓம்

நன்றிகள் : குருநாதர்