சிவன்
வழியில் சித்தர்கள் தெரிந்துகொண்ட இந்த வர்மக்கலை
மர்மமாகவும்,சூட்சுமரீதியாகவும் இன்றளவும் வாழ்ந்துகொண்டு தான்
இருக்கிறது.ஆனால்,அதை எல்லா மக்களும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக
யாரும் தர முன்வரவில்லை.வர்ம ஆசான்களால் ஒவ்வொரு விஷயங்களாக மறைக்கப்பட்டு
மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது.
இந்த
வர்மக்கலை சேர , சோழ, பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் போர்க்கலையாக
இருந்தது.இது எல்லோருக்கும் தெரிந்தால் நட்டில் தன்னைக் காத்துக்கொள்ள
பயன்படுத்தாமல் ஒரு சிறிய பிரச்னைக்குக் கூட இதைப் பயன்படுத்தி அழிக்க
நினைப்பார்கள் என்ற எதார்த்தத்தின் காரணமாக ஆசான்கள் யாரும் எவருக்கும்
முழுமையாகக் கற்றுத்தரவில்லை.
வர்ம
ஆசான்கள் முதலில் மருத்துவத்தை மட்டுமே கற்றுக்கொடுத்தார்கள்.இதில்
காயம்,வீக்கம்,ரத்தக்கட்டு,சுளு க்கு மற்றும் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு
வியாதிகளுக்கு கஷாயம்,எண்ணெய்,தைலம்,குளிகை போன்ற மருந்து வகைகளைத்
தயாரிக்கவும்,பயன்படுத்துமுறையை யும் சொல்லிக்கொடுத்தார்கள்.இதில் முழுமையான
பயிற்சியளிக்கவே மூன்று ஆண்டுகள் ஆகிவிடும்.
ஒரு
மாணவன் முழு வர்மக்கலையும் அறிந்துகொள்ள 12 ஆண்டுகள் ஆகும்.அத்தனைக்
காலங்கள் ஒரு மாணவன் பொறுமையோடு காத்திருந்தால் தான் ஒரு வர்மானியாக
முடியும்.பொறுமையில்லாத மாணவர்கள் பாதியிலேயே செல்ல
ஆரம்பித்துவிட்டார்கள்.புதிதாக ஆர்வப்பட்டு அதிகம் பேர் இதை நோக்கி வரவும்
இல்லை.
வர்ம
ஆசான்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை;ஓர் உன்னதமான வர்மக்கலை
கண்டவர்களிடம் எளிமையாக சென்று சேரக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக
இருந்தார்கள்.
இந்தக்
கலையின் சூட்சுமத்தை சாதாரணமாக சொல்லிக் கொடுத்து,செல்வம்
சேர்க்கவோ,பொருளீட்டவோ விரும்பவில்லை.ஆனாலும் அவர்கள் தேவையானதை இந்த
வர்மக்கலையை சூட்சுமரீதியில் பயன்படுத்தி பலனடைந்தார்கள்.இதை யாரும் தடுக்க
முடியாது.அது இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.இது தான்
உண்மை.வர்மத்தை பயன்படுத்தி,என்னவெல்லாம் அடையலாம் என்று கேட்டால்,
1.ஒருவனை வீழ்த்த முடியும்- அதே சமயம் இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும்.
2.ஒருவனை பல்வேறு பிரச்னைகளில் சிக்க வைக்கமுடியும்.அதிலிருந்து விடுதலையாக்கவும் முடியும்.(அனுபவத்தில் கண்ட உண்மை)
3.வர்மக் கலையால் ஒரு காரியத்தில் செய்லவடிவத்தை முன்கூட்டியே உணரமுடியும்.(முன் உணர்வு)
4.மனிதனின் சகலவிதமான நோய்களில் இருந்து நிரந்தர தீர்வைப் பெறலாம்.
5.நியாயமான முறையில் என்னவெல்லாம் நினைக்கிறாயோ அதையெல்லாம் கண்டிப்பாக அடைய முடியும்.
உலகியல்
நடைமுறையில் கண்திருஷ்டி என்று பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.ஒரு சிலர்
அதற்காக பரிகாரங்களையும் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.என்ன பரிகாரம்
செய்தாலும் அதை நிவர்த்தி செய்ய முடியாது.
ஏன்
என்றால் உங்களுக்குப் பிடிக்காதவர்கள் ஓர் வக்ர பார்வையோடு உங்கள்
குடும்பத்தையோ, தொழிலையோ,நிறுவனத்தையோ பார்க்கும்போது அங்குதான் நோக்கு
வர்மம் 1/1000 மடங்கு அங்கே சாதாரணப் பார்வையில் செயல்படத்துவங்கும்.அதையே
வாழ்க்கையில் நீங்கள் தாங்கமுடியாமல் திண்டாடிக்கொண்டிருப்பீர்கள். அவ்வாறு
மீண்டும் மீண்டும் பார்வைபடும்போது அதிலிருந்து உங்களால் எந்த வகையிலும்
மீள முடியாது.இதிலிருந்து விடுதலை பெற வர்மக்கலையில்
எந்திரங்கள்,மூலிகை,மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன.
மேலும்,சித்தர்கள் அடர்ந்த காடுகளில்,கொடிய விலங்குகளிடம் இருந்து தங்களை நோக்கு வர்மத்தை பயன்படுத்தியே காத்துக்கொண்டார்கள்.
இந்தக் கட்டுரையை ஜோதிடபூமி,பிப்ரவரி 2012 இல் பக்கம் 27
No comments:
Post a Comment