Saturday, 23 February 2013

வெயிலோடு விளையாடு!!!

வெயிலோடு விளையாடு!!!

வெயிலோடு விளையாடும் வேளை வந்துவிட்டது. சேனல்கள், எஃப்.எம்-கள், விளம்பர ஹோர்டிங்குகள் என எங்கெங்கும், 'தாகம் எடுத்தால் தண்ணீரைத் தேடக் கூடாது... எங்கள் நிறுவன குளிர்பானத்தைத்தான் தேட வேண்டும்!’ என்ற விளம்பர வெள்ளம் நுரை ததும்பப் பாயும். இந்தியாவில் சராசரியாக ஒருவர் வருடத்துக்கு 12 லிட்டர் கோலா பானம்தான் அருந்துகிறார்களாம். ஆனால், இதுவே அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1,665 லிட்டர். இந்தியாவிலும் கோலா உறிஞ்சலை அந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சினிமா பாட்ஷா முதல் கிரிக்கெட் கேப்டன் வரை அந்த குளிர்பானங்களைக் குடிக்கச் சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அந்த பானங்கள் உண்டாக்கும் கேடுகளைப் பற்றி அவர்கள் மறந்தும் வாய் திறக்கமாட்டார்கள்.
 சமீபத்தில் 'தி சன்’ பத்திரிகை இது போன்ற குளிர்பானங்களை அருந்துவதால் உண்டாகும் கேடுகளைப் பட்டியலிட்டு இருந்தது. ஒரு பாட்டில் கோலாவில் குறைந்தபட்சம் 67 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கப்படுவதால் மிக விரைவிலேயே தாக்கும் சர்க்கரை நோய், புளித்த சுவை தரும் பாஸ்பேட் உப்பு உண்டாக் கும் சருமப் பாதிப்பு, எலும்புகளை அரிக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் சிக்கல், பெண்களின் மாதவிடாய் சுழற்சியைக் கன்னாபின்னா எனச் சிதைக்கும் சினைப்பை நீர்க்கட்டித் தொல்லை, கணையப் புற்று என மிரட்டலாக நீள்கிறது அந்தப் பட்டியல். இவை அனைத் துக்கும் மேலாக, இது போன்ற கோலா பானங் களை அருந்தும் நபருக்கு, பிறரைக் காட்டிலும் 61 சதவிகிதம் இதய நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.
விஷயம் தெரிந்த பலர் இப்போது இந்த 'ஃபிஸ்ஸி’ பானத்தை (உடல் நலத் துக்கு உலைவைக்கும் இது போன்ற குளிர்பானங்களின் செல்லப் பெயர்!) விட்டு விலகி, பழச்சாறே ஆரோக்கியம் என்று முடிவு எடுத்துச் செயல்படுவதை உணர்ந்துகொண்ட கோலா நிறுவனங்கள், தற்போது அதற்கு ஏற்பத் தங்கள் சந்தைத் திட்டங்களையும் மாற்றிக்கொண்டு உள்ளன. இப்போது அந்த நிறுவனங்கள் பழச்சாறையே விதவிதமாக சந்தைப்படுத்தத் தொடங்கி இருக்கின்றன.
'தோட்டத்தில் இருந்து நேராக’ என்ற விளம்பரத்துடன், டெட்ராபேக்கில் 'கெமிக்கல் பிரிசர்வேட்டிவ் இல்லவே இல்லை. அப்படியே பழத்தைப் பிழிந்து உருவாக்கிய பழச்சாறுபோலவே’ என அறிவிக்கும் இந்தப் பழச் சாறு சமாசாரம் நமக்குப் பல கேள்விகளை எழுப்புகிறது. 'அவர்கள் சொல்வதுபோல பழச் சாறில் செயற்கை சமாசாரம் எதுவுமே சேர்க்கப்படவில்லையா?’ என்றால் அதன் தொழில்நுட்பம் இல்லை என்றுதான் சொல்கிறது. ஆனால், அந்தத் தொழில்நுட்பமே 'மர்மப் பின்னணி’யுடன் செயல்படும் ரகசியம்.
பழத்தைக் கழுவி(washing), சாறு பிழிந்து (extracting) அல்லது சாறு எடுத்து, ஒன்றாகக் கலந்து (blending), பழத்தின் எண்ணெய்த் தன்மையை நீக்கி (de-oiling) விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க ஆக்சிஜனை வெளியேற்றி (deaerating), பால் பதப்படுத்துவதுபோலப் பதப்படுத்தி (paste urize), கசப்பு நீக்கி (debittering)  அமிலத்தன்மையைக் குறைத்து அல்லது கூட்டி (acid stabilization), ஆடை அல்லது மேகம் போல் படர்வதைச் சீராக்கி (cloud stabilization), கொதிக்கவைத்து (evaporating) பிறகு குளிர்வித்து ( freezing)  திடப்படுத்துகிறார்கள். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் பல இயந்திரங்களில் இந்தப் பழங்களைப் படுத்தி எடுத்து, கடைசியாக பழச் சாறின் அடர்வை (concentrate)  பெறுகின்றனர். இந்தப் பழ கான்சன்ட்ரேட்டைத்தான் நம் ஊரின் பழ குளிர்பான நிறுவனங்கள் வாங்கி, நீரும் சில நேரத்தில் அமிலச் சீராக்கிகளும் சேர்த்து, டெட்ராபேக்கில் அடைத்து கடையில் விற்கிறார்கள். பிரேசில், பெரு, ஐரோப்பா எனப் பல நாடுகளில் இருந்து வரும் கான்சன்ட்ரேட் சத்துக்கள் பெரும் குளிர்க்கிடங்கு வசதிகொண்ட கப்பல்களில் இங்கே இறக்குமதி செய்யப்பட்டு, இறுதியாக இந்தியத் தண்ணி தெளிக்கப்பட்டு, 'இது இயற்கை பானம்’ என்ற அடைமொழியுடன் விற்பனைக்கு வருகிறது.
இப்படித் துவைத்து, பிழிந்து, காயப்போட்டு வரும் பழச்சாற்றினை விட, பழத்தை அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியமாகும்.  பழங்களில் பொதிந்திருக்கும் உயிர்ச் சத்துக்களில் பலவும் சில ஆன்ட்டி-ஆக்சிடென்ட்டுகளும் இந்த உழவாரப்பணியில் ஊக்கம் இழந்துவிடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எப்போதேனும் அவசரத்துக்கு அந்தப் பானங்களால் தாகம் தணித்துக்கொள்வது சரி. ஆனால், பெட்டி பெட்டியாக வாங்கி வந்து குளிர்சாதனப் பெட்டியில் புதைத்து அதை உறிஞ்சிக்கொண்டே இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. சீஸனுக்கு சீஸன் மாறுபடும் பழத்தின் அமிலத் தன்மையையும், இனிப்புச் சுவையையும் ஈடுகட்ட இந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் உத்திகள் உங்கள் உடம்புக்கு நல்லதும் இல்லை. பழத் துண்டுகளை அப்படியே சாப்பிடுவதால் அதில் உள்ள கரையும், கரையாத நார்ப் பொருட்கள் கொழுப்பைக் குறைப்பது முதல், மலச்சிக்கல் தீர்ப்பது வரையில் கொடுக்கும் பலன்கள் காம்போ ஆஃபர்! பதப்படுத்துதல், பத்திரப்படுத்துதல், பயணித்தல், பாதுகாத்தல் என வரிசையாகச் சூழலைச் சிதைக்கும் நடவடிக்களை மேற்கொண்டு பளபளப்பான பாட்டிலில் வரும் திரவத்தைக் காட்டிலும் சந்தைத் திடலில் வாசலில் கூவிக் கூவி விற்கப்படும் கொய்யாவை வாங்கிக் கழுவிச் சாப்பிடுவது சூழலுக்கும் சேர்த்து சுகம் தரும்.
மோரும், இளநீரும், பதநீரும் மேலே குறிப்பிடப்பட்ட எந்தப் பிரச்னையும் இல்லாதவை. கூடுதல் மருத்துவ மகத்துவம்கொண்டவை. சூழல் சிதைக்காதவை. பலர் நினைப்பதுபோல இளநீர் வெறும் இனிப்பும் உப்பும் தரும் உடனடி பானம் மட்டும் அல்ல; சமீபத்திய ஆராய்ச்சிகள், இளநீரில் உள்ள அற்புதமான நொதிகளின் ஆற்றலைக் கண்டு வியப்புத் தெரிவித்துள்ளன. இளநீரில் உள்ள 'சைட்டோகைனின்’ வயதாவதைத் தடுத்து, புற்று வளர்ச்சியையும் தடுக்கிறதாம். பதநீர், நரம்பை உரமாக்கும் வைட்டமின் சத்து நிரம்பிய அற்புதமான பானம்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... ஒன்று புரியும்... எப்போதும் பாரம்பரியம் கரிசனத்துடன்தான் பரிமாறப்படும் என்பது!
- பரிமாறுவேன்...நன்றி:ஆனந்தவிகடன்,பக்கங்கள் 36,37; வெளியீடு:27/2/13,
குருநாதர்

Friday, 22 February 2013

sani pradosham 2013

சனிப்பிரதோஷத்தன்று ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;விரைவான சிவகடாட்சத்தைப் பெறுவோம்!!


 

22.2.13 மற்றும்  9.3.13 என இரண்டு சனிப்பிரதோஷ நாட்கள் அருகில் வர இருக்கின்றன.நம்மைப் படைத்த சக்தியை வழிபடுவது நமது கடமைகளில் ஒன்று.அதுவும் அவரது திருவிளையாடல்கள் நிகழ்ந்த நாள் அல்லது நட்சத்திரம் வரும் நாளில் வழிபட,நமது கடுமையான கஷ்டங்கள் நீங்கிவிடும் என்பது பல கோடி ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ள சிவவாக்கின்படி,ஒரு சனிப்பிரதோஷ தினத்தன்று நாம் பிரதோஷ வழிபாடு செய்தால் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு தினமும் சிவாலயம் சென்று சிவவழிபாடு தரிசனம் செய்த புண்ணியம் கிட்டும்.ஏனெனில்,இந்தப் பிரபஞ்சத்தில் முதன் முதலில் பிரதோஷம் ஒரு சனிக்கிழமையன்றுதான் நிகழ்ந்தது.
இந்த நன்னாளில் நாம் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்திற்கு மாலை நான்கு மணிக்குள் சென்று கோவிலின் ஏதாவது ஒரு பகுதியில் மஞ்சள் துண்டு விரித்தவாறு நந்தி பகவானை தரிசிக்கும் விதமாக அமர்ந்து கொள்ள வேண்டும்;மாலை ஆறு மணி ஆகும் வரை மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்துக் கொண்டே இருக்க வேண்டும்;இந்த சனிப்பிரதோஷ நாளில்,பிரதோஷ நேரத்தில் இவ்வாறு தொடர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிப்பதற்கே பூர்வபுண்ணியம் வேண்டும்.இதைச் செய்ய இயலாதவர்கள் தமது வீடு/அலுவலத்தில் அவரவர் இருக்கையில் அமர்ந்த நிலையில் ஜபிக்கலாம்;முடிந்தால் அண்ணாமலை போன்ற ஆலயங்களுக்கு சென்று ஜபிக்கலாம்;வெகுநாட்களாக தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருபவர்கள் இந்த நாளில் கோவிலுக்குச் செல்ல இயலாவிட்டால்,இந்த நேரத்தில் நமது இருப்பிடத்தில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு மானசீகமாக நாம் விரும்பும் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும்;அங்கே நந்தியை மானசீகமாக தரிசித்தவாறே மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்துவர வேண்டும்.இது எல்லோராலும் இயலாத காரியமே.இருப்பினும்,இவ்வாறு தொடர்ந்து பிரதோஷ நேரம் முழுவதும் ஜபித்தால் சிவதரிசனத்தோடு,நந்தி தரிசனமும் வேறுசில சித்தர்கள் தரிசனமும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.                                மாலை ஆறு மணிக்கு மேல் கொஞ்சம் இளநீர் அல்லது தண்ணீர் அருந்தினால்,அது  வரை நாம் ஜபித்த ஓம்சிவசிவஓம் நமது உடலுக்குள் பதிவாகிவிடும் என்பதை நமது ஆன்மீககுரு தனது அனுபவத்தை போதித்திருக்கிறார்.
அண்ணாமலைக்குச் செல்வோர் சனிப்பிரதோஷம் நிறைவடைந்ததும்,கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு ஆகும்.
இதே சனிப்பிரதோஷ நேரத்தில் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.அந்த ஜீவசமாதியினுள் உறைந்திருக்கும் மகானின் அருட்பார்வை வெகு விரைவில் கிட்டும்.ஓம்சிவசிவஓம்
 
நன்றிகள் : குருநாதர்

Thursday, 21 February 2013

உலகின் நிஜமான ஹீரோ:நாராயணன் கிருஷ்ணன்,மதுரை:நன்றி தினமலர் 31.10.2010


மதுரை : ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 "ரியல் ஹீரோக்களில்' ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.
நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக "அக்ஷயா டிரஸ்ட்' என்ற அமைப்பையும் "ஸ்பான்சர்கள்' உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மந்திரங்கள் எப்படி செயல்படுகின்றன?

மந்திரங்கள் எப்படி பலன் தருகின்றன ?

 

இந்த வலைப்பூவை இப்போது நீங்கள் வீட்டில் உள்ள உங்களது மடிக்கணினியிலோ(லேப்டாப்),அல்லது இணையதள மையத்திலோ(பிரவுசிங் சென் டரிலோ)வாசிக்கிறீர்கள்.இந்த இடத்தில் செல்போன் அலைகள் இருப்பது நிஜம்தானே? அதுவும் இன்று 25.5.2009 10 செல்போன் நிறுவனங்கள் செல்போன் சேவை தருகின்றன.பி.எஸ்.என்.எல்., டாடா,ரிலையன்ஸ்,ஓடபோன்,ஏர்செல்,ஏர்டெல்,எம்.டி.எஸ்.,ஆரஞ்சு இவை அனைத்தின் செல்போன் அலைகள் 24 x 7 என்ற அளவில் பரவிக்கொண்டே இருக்கின்றன.அதற்குரிய செல்போன் நாம் வாங்கி இயக்கத்தில்(on செய்து) வைத்திருந்தால் நமக்கு மற்றவரின் அழைப்பு வருகிறது.அதே போலத்தான்.
நாம் குழந்தையாக பிறந்தது முதல் 9 கிரகங்களின் கதிர்வீச்சு நம் மூளையை விண்வெளியிலிருந்து வந்தடைந்து கொண்டே இருக்கின்றன.
இத்தனாம் வயதில் இது நிகழும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது.ஒரு எதிர்பாராத பிரச்னை அல்லது விபத்திலிருந்து தப்பிப்பதற்கு மந்திர ஜபம் அல்லது குறிப்பிட்ட சித்தர் வழிபாடு அல்லது மகான் வழிபாடு அவசியமாகிறது.
ஒரு மந்திரம் உள்ளது.ஓம் சர்வ சர நமச்சிவய நம(சிவாய அல்ல) :இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால் நமது வீண் செலவுகள் குறையும் என மகான்கள் கூறியுள்ளனர்.
நாம் தினமும் 30 நிமிடம் நமது வீடு/அலுவலகம்/மொட்டை மாடியில் காலையிலும் மாலையிலும் இந்த மந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஜபித்துக்கொண்டே இருக்கிறோம்.என்னாகும்?
100 ஆம் நாளிலிருந்து நமது செலவுகள் குறையும்.வருமானம் மிச்சமாகும். எப்படி?
நமது மூளையில் இந்த மந்திர அதிர்வுகள் பதிவாகும்.அந்த பதிவுகள் நவக்கிரக அலைகளில் ஒரு பாதிப்பை உருவாக்கும்.நமது தலைக்குமேலே
சுமார் ஆயிரம் கிலோமீட்டர்கள் உயரத்தில் மந்திர அலைகளுக்கான அடுக்கு உள்ளது.அங்கு நமது தினசரி ஜபம் 100ஆம் நாளில் போய் வேலை செய்து நமது நம்பிக்கையை நிஜமாக்கும்.
ஒவ்வொரு மனிதனும் சுயமாக உணரமட்டுமே முடியக்கூடிய விஷயங்களில் ஒன்று இது:

கொலை, கொள்ளை, கற்பழிப்பு,ஏமாற்றுதல்,பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.இதனால் ஏற்படும் பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது.இதை நீக்க ஒரு சிவ மகாமந்திரம்:
ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்
இந்த மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால் நாம்- அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்தபாவங்கள் உடனே நீங்கிவிடும்
.


நன்றிகள் : குருநாதர்

சித்தர்களின் காயத்ரி மந்திரங்கள்

ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி

ஓம் அகதீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்


ஸ்ரீதிருமூலர் சித்தரின் காயத்ரி

ஓம் ககன சித்தராய வித்மஹே
பிரகாம் சொரூபினே தீமஹி
தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்

ஸ்ரீபதஞ்சலி காயத்ரி

ஓம் சிவ தத்துவாய வித்மஹே
யோக ஆத்ராய தீமஹி
தந்நோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்

ஸ்ரீவியாக்ரபாதர் காயத்ரி

ஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே
ஈஸ்வரசிஸ்யா தீமஹி
தந்நோ வியாக்ரபாத ப்ரசோதயாத்

ஸ்ரீ போகர் சித்தர் காயத்ரி

ஓம் நவயாஷாவைகடாய வித்மஹே
மன்மத ரூபாய தீமஹி
தந்நோ பிரபஞ்ச சஞ்சார சீனபதிரிஷி 
ப்ரசோதயாத்

ஸ்ரீகாலங்கிநாதர் சித்தர் காயத்ரி

ஓம் வாலை உபாசகாய வித்மஹே
புவனேஸ்வ்ரி சிஷ்யா தீமஹி
தந்நோ காலங்கிநாத ப்ரசோதயாத்

ஸ்ரீபுண்ணாக்கீசர் சித்தர் காயத்ரி

ஓம் ஈசத்தவாய வித்மஹே
ரண நாவாய தீமஹி
தந்நோ முக்தி புண்ணாக்கீச ப்ரசோதயாத்

ஸ்ரீசிவவாக்கியர் சித்தர் ப்ரசோதயாத்

ஓம் திருமழிசையாழ்வராய வித்மஹே
தத்துவ புருஷாய தீமஹி
தந்நோ சிவாக்யை சித்த ப்ரசோதயாத்

ஸ்ரீகருவூரார் சித்தர் காயத்ரி

ஓம் ராஜமூர்த்தியாய வித்மஹே
சவுபாக்ய ரத்னாய தீமஹி
தந்நோ வாதகாயை கருவூர் சித்த ப்ரசோதயாத்

ஸ்ரீதன்வந்திரி காயத்ரி

ஓம் ஆதி வைத்யாய வித்மஹே
ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி
தந்நோ தன்வந்திரீ ப்ரசோதயாத்


நன்றிகள் : குருநாதர்

சூப்பர் ஸ்டாரின் உருக்கமான பேச்சு!!!

சென்னை:""அரசியலுக்கு வருவேன் என பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு நான் தயாராக இல்லை. அரசியல் என்பது பெரிய கடல்; அது குறித்து, இப்போது என்னால், எதுவும் கூற முடியாது,'' என நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

சென்னை ரஜினி தலைமை ரசிகர் மன்றம் சார்பில், ரஜினியின் 63வது பிறந்தநாள் விழா, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:கடந்த, 1996ம் ஆண்டு, சட்டசபை பொதுத்தேர்தலின்போது, சில கருத்துக்களை நான் தெரிவித்தேன். அது தீயாக பற்றிக் கொண்டு, ஆட்சி மாற்றத்திற்கு உதவியது. தமிழகம் மற்றும் தேசிய தலைவர்கள் கட்டாயப்படுத்தியதால், நான் தேர்தல் தொடர்பான அறிக்கையை வெளியிட்டேன். அதன்பின், நான் அரசியலுக்கு வரவில்லை.எனது படம் ஒன்றை குறித்து, அரசியல் தலைவர் ஒருவர் விமர்சித்ததால், அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. 

பதில் சொல்லாமல் இருந்தால், என்னை கோழை என்று நினைத்து விடுவார்கள். நான் என்றும் கோழையாக இருக்க விரும்பவில்லை. அதனால், எதிர்கருத்தை பதிவு செய்தேன்.இதன் பின், எந்த அரசியல் நடவடிக்கைகளிலும், நான் பங்கேற்கவில்லை. காமராஜர் போன்ற ஒரு தலைவர் தோற்கடிக்கப்பட்டார் என்றால், அதற்காக அவர், நேர்மையற்றவர் என சொல்ல முடியாது. அவருக்கு நேரம் கூடிவரவில்லை. அதனால், தோற்கடிக்கப்பட்டார்.

அரசியலை நடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. அரசியலுக்கு வருவேன் என பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு நான் தயாராக இல்லை. அரசியல் என்பது பெரிய கடல்; அது குறித்து, இப்போது என்னால், எதுவும் கூற முடியாது.பொதுவாக, அரசியல் கட்சி நடத்துபவர்கள் யாரும் நிம்மதியாக இல்லை. அரசியல் கட்சி தலைவர்களை வாழ வைப்பதும், வீழ்த்துவதும் அவர்களது தொண்டர்கள்தான். எனது ரசிகர்கள் என்னை வாழவைத்துக் கொண்டு உள்ளார்கள். 

என்னைப் பொறுத்தவரை, எனது ரசிகர்கள் நிம்மதியாக வாழ வேண்டும்; அவர்களது வீட்டை, அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். அதன்பின்தான், மற்றவையெல்லாம்.நான் எல்லா கட்சிக்கும் பொதுவானவன். எனது பிறந்த நாளுக்கு செல்ல வேண்டுமென, இவர்கள் தாங்கள் சார்ந்துள்ள கட்சி தலைமையிடம் அனுமதி கேட்டிருந்தாலும், அனுமதித்திருப்பார்கள். 

கோபாலபுரத்திற்கும், போயஸ்கார்டனுக்கும் நான் பொதுவானவன்.நாட்டின் தலையெழுத்து என்று ஒன்று உள்ளது. தெய்வசக்திதான் முக்கியமான முடிவுகளை நம் வாழ்க்கையில் நிர்ணயிக்கிறது.இதற்கு மேல், நான் அரசியல் பேச விரும்பவில்லை. எனது ரசிகர்கள், நலமுடன் இருக்கவே, நான் விரும்புகிறேன். நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது, எனக்காக பிரார்த்தனை செய்த உள்ளங்கள்தான், என் மறுவாழ்வுக்கு காரணம். அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன் எனத் தெரியவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.

"மது, சிகரெட்டை விட்டு விடுங்கள்':மது, சிகரெட் பழக்கத்தை விட்டுவிடுங்கள். இதனால், எனது வாழ்க்கை பாதிக்கப்பட்டு, இப்போது மறுபிறவி எடுத்துள்ளேன். வாழ்க்கையில் சந்தித்த, கெட்ட நண்பர்கள் மூலம், குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன். என் திருமணத்திற்கு பிறகு, குடியை குறைத்துக் கொண்டேன்.ஆனால், முழுமையாக விடவில்லை. அதே போல், சிகரெட் பழக்கமும், என்னை விட்டு, அகலவில்லை. 

கடந்த ஆண்டு, எனது நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுயநினைவை இழந்துவிட்டேன்.இதற்கு சிகிச்சையளிக்கும் நேரத்தில், எனது சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. இரண்டிற்கும் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றேன். இதற்காக, அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளினால், எனது உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு விட்டது.இந்த எதிர்விளைவில் இருந்து, கடந்த இரு மாதங்களாகத்தான், விடுபட்டுள்ளேன். எனவே, ரசிகர்கள் மது மற்றும் சிகரெட் பழக்கத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள் என ரஜினி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

விஜய(1.1.2013 TO 13.4.2014) ஆண்டின் மைத்ர முகூர்த்த நாட்களின் பட்டியல் !!!



கலியுகம் என்றாலே துன்ப யுகம் என்றுதான்
 
அர்த்தம்;எனவே,இந்த கலியுகத்தில் மனிதனாகப்
 
பிறந்த ஒவ்வொருவரையும் கடன் அல்லது நோய் 
 
அல்லது எதிரி அல்லது கர்மவினை வாழ்நாள் 
 
முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும்.இதை 
 
சரிசெய்ய ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.


நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்; அந்த ஆளு ஒரு 
 
வீடு கட்டுனான்பா! அன்னிலிருந்து இன்னிக்கி 
 
வரைக்கும் வீடுகளாக கட்டிக்கிட்டே 
 
இருக்கான்பா;பத்து வருஷமாக வீடாகக் 
 
கட்டி,இப்போ கோடீஸ்வரனாகிட்டான்பா! 
 
எங்கியோ அவனுக்கு மச்சம் இருக்குது;ஹீம் 
 
அதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்.
 
 
இந்த குடுப்பினை நம்  அனைவருக்குமே 
 
இருக்கிறது.வீணாப்போன நாத்திகத்தால் இந்த 
 
அரிய அறிவுப்பொக்கிஷத்தை நாம் நம்புவதில்லை; 
 
ஒரு வேளை நம்பி செயல்படுத்திட ஆரம்பித்த 
 
பின்னர்,நான் இப்படிச் செய்யுறேன்னு நம்மைச் 
 
சுற்றியுள்ளவர்களிடம் நம்மால் 
 
பெருமையடிக்காமல் 
 
இருக்கமுடிவதில்லை;நம்மோடு இருப்பவர்கள் 
 
நமக்கு நன்மை மட்டுமே செய்வர் என்றுதான் 
 
நம்புகிறோம்;அவர்கள் பொறாமைப்படுவர் என்பதை 
 
உணருவதில்லை;நாம் இப்படி 
 
பெருமையடித்ததும்,அவர்கள் நுணுக்கமான ஒரு 
 
பொய்யை நம்மிடம் சொல்வதன் மூலமாக நமது 
 
ஜோதிட முயற்சியை பாதியிலேயே 
 
நிறுத்திவிடுகின்றனர்.  “ஆமாம்,இவன்/ள் மட்டும் 
 
இந்த ஜோதிட ஆலோசனையைப் பின்பற்றி பெரிய 
 
ஆளாயிட்டா. . .” தமிழ்நாடு முன்னேறாமல் 
 
போனதற்கு காரணமே இதுதான் காரணம்.



2008 முதல் மைத்ர முகூர்த்த நேரப் பட்டியலை 
 
வெளியிட்டுவருகிறேன்.இதனால்,பல தமிழ் 
 
ஹீமோகுளோபின்களின் மலையளவு 
 
கடன்கள்,கடுகளவாக சிதறிப்போயிருப்பதை 
 
அவர்களின் நன்றியுணர்வுடன் கூடிய மின் 
 
அஞ்சல்கள் தெரிவித்துக்கொண்டே 
 
இருக்கின்றன.ஏழு ஆண்டுகளாக ரூ1 கோடி 
 
கடனுடன் போராடிய ஒரு இலங்கை 
 
நிறுவனம்,நமது மைத்ர முகூர்த்த நேரத்தைப் 
 
பலமுறை பின்பற்றியதால்,இன்று கடனே இல்லாத 
 
நிறுவனமாக பரிணமித்துவிட்டது.விளைவு? 
 
இரண்டே இரண்டு நாடுகளில் கால் பதித்திருந்த 
 
அந்த நிறுவனம்,இன்று ஆறு நாடுகளில் 
 
கிளைபரப்பியிருக்கிறது.


இந்த மைத்ர முகூர்த்த நேரம் இந்தியாவில் 
 
தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மற்றும் 
 
கேரளா,இலங்கை,மாலத்தீவு,லட்சத்தீவு,அந்தமான் 
 
பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.பிற நாடுகளில் 
 
வசிப்போர் இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் 
 
நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பொறுத்து 
 
மாறுபடும்.உதாரணமாக,இன்று காலை 9 முதல் 11 
 
வரை ஒரு மைத்ர முகூர்த்த நேரம் இருப்பதாக 
 
வைத்துக்கொண்டால்,இங்கிலாந்தில் ஒருவர் இதே 
 
மைத்ர முகூர்த்த நேரத்தைப் 
 
பயன்படுத்திட,இந்தியாவின் நேரத்திலிருந்து 5.30 
 
மணி நேரம் முன்னதாக வரும் நேரத்தைப் 
 
பயன்படுத்திக்கொள்ளலாம்.
 
 
இந்தியாவுக்குள் கடன் தீர்க்கும் நேரமாக இதைக் 
 
கணித்திருக்கிறோம்.கனடாவில் வசிக்கும் 
 
ஒருவர்,இந்தியாவில் வாழும் ஒருவரிடம் கடன் 
 
வாங்கியிருந்தால்,இந்திய நேரப்படி 
 
கனடாவிலிருந்து,இந்தியாவில் இருப்பவரின் 
 
வங்கிக்கணக்கில் அசலை இந்த மைத்ர முகூர்த்த 
 
நேரத்தில் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் செய்ய 
 
வேண்டியது:மாரிமுத்து என்பவரிடம் நான் 
 
ரூ.2,00,000/-கடனை 2007 இல் 
 
வாங்கியிருக்கிறேன்.இன்று வரையிலும் வட்டி 
 
மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறேன் 
 
எனில்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரப்பட்டியல் 
 
நேரங்களில் மாரிமுத்துவிடம் வாங்கிய கடனில் 
 
அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த 
 
வேண்டும்.அது ரூ.1000/- ஆக இருந்தாலும் 
 
சரி,ரூ.500/- ஆக இருந்தாலும் சரி;அப்படி ஒரே ஒரு 
 
முறை அசலில் ஒரு பகுதியை திருப்பிச் 
 
செலுத்தினாலே,மீதி ரூ.1,99,000/- அல்லது 
 
ரூ.1,99,500/- வெகு சீக்கிரமாக தீர்ந்துவிடும்.இந்த 
 
நேரத்தில் வட்டியை செலுத்தக் 
 
கூடாது.கந்துவட்டிக்கு இது பொருந்தாது;மீட்டர் 
 
வட்டி,கடப்பாறை வட்டி போன்றவைகளுக்கும் இது 
 
பொருந்தாது.


நந்தன & விஜய ஆண்டின் மைத்ர முகூர்த்தப் 
 
பட்டியல்:

19.1.13 சனி மதியம் 12.55 முதல்  2.55 வரை;

15.2.13 வெள்ளி காலை 10.41 முதல் மதியம் 12.41 வரை;

23.2.13 சனி காலை 9.30 முதல் 11.30 வரை;மதியம் 3.30 முதல் 5.30 வரை;  இரவு 9.30 முதல் 11.30 வரை;

9.3.13 சனி காலை 8.45 முதல் 10.45 வரை;மதியம் 2.45 முதல் 4.45 வரை; இரவு 8.45 முதல் 10.45 வரை;

31.3.13 ஞாயிறு இரவு 9.09 முதல் 11.09 வரை;

11.4.13 வியாழன் காலை 6.20 முதல் 8.20 வரை;
 
 27.4.2013 சனி இரவு 7.05 முதல் 9.05 வரை;

8.5.2013 புதன் விடிகாலை 5.51 முதல் 6.21 வரை;

9.5.2013 வியாழன் விடிகாலை 4.25 முதல் 6.25 வரை;

25.5.2013 சனி மாலை 6.44 முதல் 8.44 வரை;

21.6.2013 வெள்ளி மதியம் 4.21 முதல் 6.21 வரை;

18.7.2013 வியாழன் மதியம் 3.30 முதல் 4.00 வரை;

20.7.2013 சனி காலை 6.12 முதல் 8.12 வரை;மதியம் 
 
12.12 முதல் 2.12 வரை;மாலை 6.12 முதல் இரவு 8.12 
 
வரை;

29.7.2013 திங்கள் இரவு 11.44 முதல் நள்ளிரவு 1.44 
 
வரை;

15.8.2013 வியாழன் மதியம் 12.12 முதல் 2.12 வரை;

25.8.2013 ஞாயிறு இரவு 10.36 முதல் 12.36 வரை;

11.9.2013 புதன் காலை 10.20 முதல் 12.20 வரை;

21.9.2013 சனி இரவு 8.16 முதல் 10.16 வரை;

22.9.2013 ஞாயிறு இரவு 8.20 முதல் 8.27 வரை;(ஏழே 
 
நிமிடங்கள் தான்!)

9.10.2013 புதன் காலை 8.36 முதல் 10.36 வரை;

19.10.2013 சனி மாலை 6 முதல் 8 வரை;

4.11.2013 திங்கள் காலை 7.08 முதல் 9.08 வரை;

15.11.2013 வெள்ளி மாலை 4.04 முதல் 6.04 வரை;

30.11.2013 சனி காலை 9 முதல் 11 வரை;மதியம் 3 
 
முதல் 5 வரை;இரவு 9 முதல் 11 வரை;

13.12.2013 வெள்ளி மதியம் 2.34 முதல் 4.34 வரை;

14.12.2013 சனி காலை மற்றும் இரவு 9 முதல் 11 
 
வரை;மதியம் 3 முதல் 5 வரை;

30.12.2013 திங்கள் காலை 4.34 முதல் 6.34 வரை;

9.1.2014 வியாழன் மதியம் 12.20 முதல் 2.18 வரை;

6.2.2014 வியாழன் காலை 10.32 முதல் 12.32 வரை;

22.2.2014 சனி இரவு 12.40 முதல் 2.40 வரை;


5.3.2014 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை;

21.3.2014 வெள்ளி இரவு 10.24 முதல் 12.24 வரை;

1.4.2014 செவ்வாய் காலை 6.44 முதல் 8.44 வரை;

12.4.2014 சனி காலை மற்றும் மாலை 6.08 முதல் 8.08 வரை;
 
மதியம் 12.08 முதல் 2.08 வரை;

இந்த நேரத்தின் மைய பாகத்தைப்  பயன்படுத்துவது 
 
மிகவும் நன்மை பயக்கும்;பல முறை இந்த மைத்ர 
 
முகூர்த்த நேரத்தைப்பயன்படுத்திட,விரைவில் 
 
கடனில்லாத வாழ்க்கை நமக்கு 
 
அமைந்துவிடும்.பலரிடம் நாம் கடன் 
 
வாங்கியிருந்தால்,ஒவ்வொருவருக்கும் 
 
தனித்தனியே இந்த நேரத்தைப் பயன்படுத்திட 
 
வேண்டும்;வங்கிக்கடன்களை தீர்க்கவும் இந்த 
 
மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம்; 



ஓம்சிவசிவஓம்
 
நன்றிகள் : குருநாதர்