Thursday, 15 November 2012

World's Largest Temple உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?



உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?


ஆம் அது தான் "கம்போடியாநாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்கோயில்
இரண்டாம் "சூர்யவர்மன்இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது.ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, "விஷ்ணுகடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்டவழிபாட்டுத்தலங்களிலேயே "பெரியது "! இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர்இந்தகோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள்இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானதுபனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியதுஇருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்இறக்கும் சில ஆண்டுகள் முன்புஇதன் வேலைகள் நிறைவடைந்தது
இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்தவழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்தவழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றதுபதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டதுஅடர்ந்த காட்டுக்குள் இதுகட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.
பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டதுஅதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்றுகூறியுள்ளார்பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும்பரவத்தொடங்கியதுஅவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்றுகுறிப்பிட்டுள்ளார்பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது
இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூடஇப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒருபொறியாளர் கூறி உள்ளார்ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொருசிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாகபொறிக்கப்பட்டுள்ளதுஇதை பற்றி எழுத சொன்னால்இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம்ஆனால்இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால்,இதை இதோடு முடித்துக் கொள்கிறேன்
கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்கமுடியவில்லைவானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றதுஇவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தஇடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லைகுறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும்கேள்விக்குறியே?


மேலே இருக்கும் புகைப்படம் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்டது


நன்றிகள்  :- குருநாதர்

Wednesday, 14 November 2012

தேசியமும் தெய்வீகமும் நமது இரு கன்களாக இருக்க வேண்டும்


நாம் ஒவ்வொருவருமே தேசபக்தியும்,தெய்வபக்தியும் பெற வேண்டும்!!! ஏன் தெரியுமா? 

தேச பக்தி இல்லாத தெய்வபக்தியால் தான் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நமது நாட்டின் நிலப்பரப்பை இழந்தோம்;இந்த கருத்தின் அடிப்படையில் சுமார் 100 பி.எச்.டி.ஆய்வுப்பட்டம் முடிக்க முடியும்.அந்த அளவுக்கு நமது பாரத நாட்டின் வரலாறு பரந்துவிரிந்து இருக்கிறது; அதே சமயம் பல நாட்டு உளவுத்துறைகளின் நயவஞ்சகத்தினால் நமது இந்து தர்மத்தின் பெருமைகளும்,மரபுகளும் சின்னாபின்னப்படுத்தப்பட்டு இருக்கிறது.

தெய்வபக்தி இல்லாத தேசபக்தி நமது நாட்டின் அண்டை நாடுகளுக்கும்,நம்மோடு பழகி நமது செல்வ வளம்,மனித வளம்,ஆற்றல் வளங்களை கைப்பற்றும் நாடுகளுக்கும் இருக்கின்றன.அதனால் தான் நாம் நவீன கொத்தடிமைகளாக மாறிக்கொண்டிருக்கிறோம்;
இந்த இரண்டு கருத்தின் அடிப்படையிலேயே உலக அரசியலே செயல்பட்டுவருகிறது.

நன்றிகள்  :- குருநாதர்

Monday, 1 October 2012

போகரின் ஆசியோடு ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று 15.12.12க்குள் எழுதி அனுப்புவோம்;

அகத்தியரின் கோவிலுக்கு நமது எழுத்துக்கள் அஸ்திவாரமாக இருக்கட்டும்!!! 


கோவையின் அருகில் இருக்கும் வெள்ளாடை சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கும் திருச்சிற்றம்பலேஸ்வரர் ஆலய வளாகத்தில்(கேரளாவில்) சித்தர்களின் தலைவர் அகத்தியருக்கு ஒரு  கோவில் கட்டத் துவங்கியிருக்கின்றனர்.
இந்தக் கோவிலை சற்று வித்தியாசமாக கட்டும் திட்டம் இருக்கிறது.கோவில் அஸ்திவாரமாக ஓம் அகத்தீசாய நமஹ
என்று எழுதப்பட்ட ஒரு கோடி மந்திர லிகிதங்களை பயன்படுத்தும் திட்டமே அது!!!
இந்த ஒரு கோடி மந்திர லிகிதங்களை யார் எழுதுவது?எப்படி ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதுவது?
ஆன்மீக நண்பர்கள், அன்பர்கள், ஆன்மீக வேட்கை உள்ள வாசக,வாசகிகளின் கூட்டு முயற்சியால் மட்டுமே முடியும்.
ஒரு நாளுக்கு நூற்றி எட்டு முறை ஓம் அகத்தீசாய நமஹ என்று ஒரு மாதமோ,இரண்டு மாதமோ ,மூன்று மாதமோ, நூற்றி எட்டு நாட்களோ எழுதி அனுப்பி வைக்கலாம்;
இதுவரை யாரெல்லாம் ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதினார்களோ அவர்களில் பலருக்கு சித்தர்களின் தலைவர் அகத்தியரின் ஆசி கிடைத்திருக்கிறது. பலரது அதிகாலைக் கனவில் அகத்தியர் வந்து ஆசிர்வாதம் செய்திருக்கிறார்.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவர்,90 நாட்களுக்கு தினமும் நூற்று எட்டுமுறை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதிக்கொண்டு வந்திருக்கிறார்;91 ஆம் நாளில் அவர் பணிபுரியும் நிறுவனத்தில்,அவரை ஒப்பந்தப்பணியிலிருந்து நிரந்தரப்பணியாளராக நியமனம் செய்துவிட்டனர்;இந்த  நியமனம் அந்த நிறுவனத்தின் விதிகளையும் மீறி
நிகழ்ந்திருக்கிறது என்பதுதான் அந்த கிறிஸ்தவ அன்பருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தந்திருக்கிறது!!
தினமும் நூற்றி எட்டு முறை வீதம் காலையும் மாலையும் எழுதி வந்த ஒருவருக்கு அவ்வாறு எழுதிய 18 வது நாளிலேயே அவருடைய 27 வித கோரிக்கைகளை அகத்தியர் நிறைவேற்றி வைத்துவிட்டார்.
இந்த அகத்தியர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடி ஜோதிடம் பார்த்ததில் “அகத்தியரின் சீடர் போகர் நாடியில் வருகை தந்து மகிழ்ச்சியோடும்,பெருமிதத்தோடும் ஆசி வழங்கியிருக்கிறார்;ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுத தாம் பக்கபலமாக இருப்பதாக” என்பதைக் கேள்விப்படும்போது மெய்சிலிர்த்துப் போனேன்.
15.12.2012 (கார்த்திகை மாதத்தின் கடைசி நாள்) வரை இவ்வாறு ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்பலாம்.எழுதும்
நாட்களில் அசைவம் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;எந்த தாளிலும்,நோட்டிலும் எழுதி அனுப்பி வைக்கலாம்;
நாமும்,நமது  குழந்தைகளையும் இவ்வாறு எழுதி அனுப்புவோமா?
அனுப்ப வேண்டிய முகவரி:கி.முரளிதரன்,டோடல் ஆயில் இந்தியா பிரைவேட் லிமிடெட்,3,முதல் தளம்,பாரதி பூங்கா வீதி 2,
சாய்பாபா காலனி,கோயம்புத்தூர் 11.    

PROPER ADDRESS: in English:Mr.K.MURALIDARAN,TOTAL OIL INDIA P LTD,3,First Floor, Bharathi Park Cross Road-2,Saibaba Colony,COIMBATORE-11.
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம்சிவசிவஓம்
நன்றிகள் : குருநாதர் 

Saturday, 25 August 2012

சைதாபேட்டை கடும்பாடி அம்மன் கோவில் வரலாறு :-

அப்பொழுது கிறித்துவ ஆட்சி பாரதத்தில் நடந்து கொண்டு இருந்த காலம் அது.ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அதிசய உண்மை சம்பவத்தைஉங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அப்பொழுது சைதாபேட்டைகலெக்டராக இருந்தவர் ஒரு சமயம் அம்மன் கோவிலை கடந்து சென்று கொண்டுஇருந்தார்அப்பொழுது ஆங்கிலேயர்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு இந்துகோவில்களை பார்த்தாலே ஒரு இளக்காரம் தோன்றும். ( இப்பொழுதும் அப்பிடிதான்என்று சொல்கிறீர்களா ? ) சரி விசயத்திற்கு வருவோம்அவ்வாறு கடந்துசெல்கையில் கோவிலைப் பார்த்து ஒரு எகத்தாளப் பார்வையுடன் மனதில்கேலியுடனும் அங்கு வழிபடுவர்களை இழிவான பார்வையுடனும் பார்த்து விட்டுசென்றான்சரியாக கோவிலை கடந்து செல்லும் பொழுது மழை பெய்தது போன்றஒரு உணர்வு அந்த கலெக்டருக்கு ஏற்பட்டதுஅதை பொருட்படுத்தாமல் கடந்துசென்றான்வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்கத் தோன்றியது அவனுக்குவீட்டிற்குசென்று அமரும் வேளையில் மனு அளிக்க சிலர் வந்து இருந்தனர்உள்ளே இருந்துஅவர் மனைவி இன்று அவருக்கு உடல் நலம் சரி இல்லை எனவே இன்றுகலெக்டரை பார்க்க அனுமதி இல்லை என்று கூறினார்மேலும் கலெக்டர் மழைபெய்யும் போல உள்ளதுவிரைவில் வீட்டிற்கு திரும்புங்கள்இப்பொழுதுதான் நான்தூரலில் நனைந்து வந்தேன் என்று சொன்னான்வந்திருந்தவர்களுக்கோ குழப்பம்,இந்த பருவத்தில் மழையா என்றுஅவசரமான விஷயம் கலெக்டரை சந்திக்கவேண்டும் என வற்புறுத்தி கேட்டுக் கொண்டனர்அவரும் சம்மதித்தார்உள்ளேசென்றவர்களுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது.கலெக்டரின் உடம்பெங்கும் பொக்கலாமாக இருந்ததுவந்திருந்தவர் சொன்னபிறகே அந்த விஷயம் அவனுக்கே தெரிந்ததுதிடீரென்று மனைவிக்கு வாயிற்றுவலி வேறுநம்மவர்கள் நடந்ததை வினவினார்கள்அப்பொழுது தான் தெரிந்தது அதுமழை இல்லை என்று அது அம்மன் கொடுத்த அம்மை என்று. பிறகு நடந்ததவறுக்காக மன்னிப்பு கேட்கும் படி கூறினார்கள் நம்மவர்கள் அம்மனிடம்அவனும்அவ்வாறே மனமுருகி நம்பிக்கையுடன் வேண்டினான்மூன்று நாட்களில் அம்மைசரி ஆனதுமனைவியின் வாயிற்று வழியும் கானாமல் போனதுபிறகு நடந்ததிற்குமனிப்பு கேட்டு அந்த கோவிலிற்கு சிறிது நிதி அளித்து பூஜைகள் செய்தான். அந்தகோவிலை அது வரை பரமாரித்து வந்த குறிப்பிட சமூகத்தை சேர்ந்த கடைசிநபருக்கு வாரிசு இல்லாமல் போகவே அவர் அம்மனிடம் முறையிட்டார்இனி இந்ததிருப்பணியை பராமரிக்கும் உரிய நபரை நீயே தேர்ந்து எடுத்துக் கொள் என்று.அன்று இரவு அவருடைய கனவில் அம்மன் தோன்றி சென்னை அருகில் இருக்கும்கடும்பாடி எனும் கிராமத்தில் ஒரு காட்டிற்குள் சிதிலமடைந்து ஒரு கோவிலில்இருக்கும் சிலையை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்அடுத்த வாரிசு தன்னால்அமையும் என்று கூறினார். அம்மன் சொல்லியவாறே செய்தனர் அவர்அதன் பிறகுதான் அந்த கோவிலிற்கு கடும்பாடி சினம்மன் என்ற பெயர் வந்ததுஅதற்கு முன்புஅம்மன் கோவில் என்று மட்டுமே கூறு வந்தனர்மேலும் பல ஆச்சர்யங்களும்,வரலாறும் இந்த கோவிலிற்கு உள்ளது இன்றும் அந்த கடும்பாடி அம்மனுக்குஅருகிலேயே சிறிய அளவிலான அந்த பழைய அம்மன் சிலை நிறுவப்பட்டு இருஅம்மனுக்கும் ஒரே வேளையில் பூஜைகள் நடைபெறுகின்றதுஇந்த அம்மனை ராகுகாலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிக சிறந்தாகும்அவ்வாறு தொடந்துசெய்வதால் பெண்களால் ஏற்படும் அவமானங்கள்குடும்ப பிரச்சனைகள் நீங்கும்.இந்த அளவிற்கு வரலாறுகளையும்சிறப்பம்சங்களையும் கொண்ட இந்த கோவில்கடந்த இருபது ஆண்டுகளாக குறிப்பிட்ட சிலரின் சில செயல்கள் காரணமாககும்பாபிசேகம் செய்யப்படாமல் உள்ளதுஆணிக அன்பர்கள் தங்களால் இயன்றமுயற்சிகள் மேற்கொண்டு கும்பாபிசேகம் செய்வது ஊருக்கும் நமது இந்துதர்மத்திற்கும் நலம் பயக்கும்இன்னும் பல வரலாறுகள் அடங்கிய நூல் கோவில்அறையில் உள்ளதுபிரச்னை காரணமாக அந்த அரை கோர்ட்டால் சீல் வைக்கப்பட்டுஉள்ளதுநமது வரலாறு நமது முதுகெலும்பு போன்றதுஅதை இருபதுவருடங்களாக  மறந்து விட்டு தவிக்கிறோம்நமது வரலாறை நாம் உணர்ந்தால்மதமாற்றத்திற்கு வேலை இறுக்காதுநமது முன்னேற்றத்தையும் தடுக்க இயலாது. 
 இந்த கோவிலை அறநிலையத்துறை ஏற்று நடத்த வேண்டும்என்பது ஆன்மீக எக்ஸ்ப்ரஸின் தாழ்மையான வேண்டுகோள்.
நன்றிகள் : குருநாதர்