அப்பொழுது கிறித்துவ ஆட்சி பாரதத்தில் நடந்து கொண்டு இருந்த காலம் அது.ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அதிசய உண்மை சம்பவத்தைஉங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அப்பொழுது சைதாபேட்டைகலெக்டராக இருந்தவர் ஒரு சமயம் அம்மன் கோவிலை கடந்து சென்று கொண்டுஇருந்தார். அப்பொழுது ஆங்கிலேயர்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு இந்துகோவில்களை பார்த்தாலே ஒரு இளக்காரம் தோன்றும். ( இப்பொழுதும் அப்பிடிதான்என்று சொல்கிறீர்களா ? ) சரி விசயத்திற்கு வருவோம். அவ்வாறு கடந்துசெல்கையில் கோவிலைப் பார்த்து ஒரு எகத்தாளப் பார்வையுடன் மனதில்கேலியுடனும் அங்கு வழிபடுவர்களை இழிவான பார்வையுடனும் பார்த்து விட்டுசென்றான். சரியாக கோவிலை கடந்து செல்லும் பொழுது மழை பெய்தது போன்றஒரு உணர்வு அந்த கலெக்டருக்கு ஏற்பட்டது, அதை பொருட்படுத்தாமல் கடந்துசென்றான். வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்கத் தோன்றியது அவனுக்கு. வீட்டிற்குசென்று அமரும் வேளையில் மனு அளிக்க சிலர் வந்து இருந்தனர். உள்ளே இருந்துஅவர் மனைவி இன்று அவருக்கு உடல் நலம் சரி இல்லை எனவே இன்றுகலெக்டரை பார்க்க அனுமதி இல்லை என்று கூறினார். மேலும் கலெக்டர் மழைபெய்யும் போல உள்ளது, விரைவில் வீட்டிற்கு திரும்புங்கள், இப்பொழுதுதான் நான்தூரலில் நனைந்து வந்தேன் என்று சொன்னான். வந்திருந்தவர்களுக்கோ குழப்பம்,இந்த பருவத்தில் மழையா என்று, அவசரமான விஷயம் கலெக்டரை சந்திக்கவேண்டும் என வற்புறுத்தி கேட்டுக் கொண்டனர். அவரும் சம்மதித்தார். உள்ளேசென்றவர்களுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது.கலெக்டரின் உடம்பெங்கும் பொக்கலாமாக இருந்தது. வந்திருந்தவர் சொன்னபிறகே அந்த விஷயம் அவனுக்கே தெரிந்தது. திடீரென்று மனைவிக்கு வாயிற்றுவலி வேறு. நம்மவர்கள் நடந்ததை வினவினார்கள். அப்பொழுது தான் தெரிந்தது அதுமழை இல்லை என்று அது அம்மன் கொடுத்த அம்மை என்று. பிறகு நடந்ததவறுக்காக மன்னிப்பு கேட்கும் படி கூறினார்கள் நம்மவர்கள் அம்மனிடம். அவனும்அவ்வாறே மனமுருகி நம்பிக்கையுடன் வேண்டினான். மூன்று நாட்களில் அம்மைசரி ஆனது. மனைவியின் வாயிற்று வழியும் கானாமல் போனது. பிறகு நடந்ததிற்குமனிப்பு கேட்டு அந்த கோவிலிற்கு சிறிது நிதி அளித்து பூஜைகள் செய்தான். அந்தகோவிலை அது வரை பரமாரித்து வந்த குறிப்பிட சமூகத்தை சேர்ந்த கடைசிநபருக்கு வாரிசு இல்லாமல் போகவே அவர் அம்மனிடம் முறையிட்டார். இனி இந்ததிருப்பணியை பராமரிக்கும் உரிய நபரை நீயே தேர்ந்து எடுத்துக் கொள் என்று.அன்று இரவு அவருடைய கனவில் அம்மன் தோன்றி சென்னை அருகில் இருக்கும்கடும்பாடி எனும் கிராமத்தில் ஒரு காட்டிற்குள் சிதிலமடைந்து ஒரு கோவிலில்இருக்கும் சிலையை கொண்டு வந்து பிரதிஷ்டை செய், அடுத்த வாரிசு தன்னால்அமையும் என்று கூறினார். அம்மன் சொல்லியவாறே செய்தனர் அவர். அதன் பிறகுதான் அந்த கோவிலிற்கு கடும்பாடி சினம்மன் என்ற பெயர் வந்தது. அதற்கு முன்புஅம்மன் கோவில் என்று மட்டுமே கூறு வந்தனர். மேலும் பல ஆச்சர்யங்களும்,வரலாறும் இந்த கோவிலிற்கு உள்ளது. இன்றும் அந்த கடும்பாடி அம்மனுக்குஅருகிலேயே சிறிய அளவிலான அந்த பழைய அம்மன் சிலை நிறுவப்பட்டு இருஅம்மனுக்கும் ஒரே வேளையில் பூஜைகள் நடைபெறுகின்றது. இந்த அம்மனை ராகுகாலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிக சிறந்தாகும். அவ்வாறு தொடந்துசெய்வதால் பெண்களால் ஏற்படும் அவமானங்கள், குடும்ப பிரச்சனைகள் நீங்கும்.இந்த அளவிற்கு வரலாறுகளையும், சிறப்பம்சங்களையும் கொண்ட இந்த கோவில்கடந்த இருபது ஆண்டுகளாக குறிப்பிட்ட சிலரின் சில செயல்கள் காரணமாககும்பாபிசேகம் செய்யப்படாமல் உள்ளது. ஆணிக அன்பர்கள் தங்களால் இயன்றமுயற்சிகள் மேற்கொண்டு கும்பாபிசேகம் செய்வது ஊருக்கும் நமது இந்துதர்மத்திற்கும் நலம் பயக்கும். இன்னும் பல வரலாறுகள் அடங்கிய நூல் கோவில்அறையில் உள்ளது. பிரச்னை காரணமாக அந்த அரை கோர்ட்டால் சீல் வைக்கப்பட்டுஉள்ளது. நமது வரலாறு நமது முதுகெலும்பு போன்றது, அதை இருபதுவருடங்களாக மறந்து விட்டு தவிக்கிறோம். நமது வரலாறை நாம் உணர்ந்தால்மதமாற்றத்திற்கு வேலை இறுக்காது. நமது முன்னேற்றத்தையும் தடுக்க இயலாது.
இந்த கோவிலை அறநிலையத்துறை ஏற்று நடத்த வேண்டும்என்பது ஆன்மீக எக்ஸ்ப்ரஸின் தாழ்மையான வேண்டுகோள்.
நன்றிகள் : குருநாதர்
இந்த கோவிலை அறநிலையத்துறை ஏற்று நடத்த வேண்டும்என்பது ஆன்மீக எக்ஸ்ப்ரஸின் தாழ்மையான வேண்டுகோள்.
நன்றிகள் : குருநாதர்
No comments:
Post a Comment