Thursday, 17 October 2013

நவகிரக பைரவர்கள் - சண்ட பைரவர் (செவ்வாய்)

செவ்வாயின் பிராண தேவதை: சண்ட பைரவர் + கவுமாரி


ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்



ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: கவுமாரி ப்ரசோதயாத்



கிழமை செவ்வாய்
ஓரை செவ்வாய் ஓரை
எண்ணிக்கை 9 ன் மடங்குகள்
இடம் பைரவர் சந்நிதி



தென்னாடுடைய சிவனே போற்றி…!
  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
  ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
 
நன்றிகள் : குருநாதர்

சதய நட்சத்திர பைரவர் சங்கரன்கோவில் சர்ப்ப பைரவர்!!!


சங்கர் என்னும் நாகராஜன் சதாசிவன் மீது அளவற்ற பக்தியுடன் இருந்தார்;அதேபோல,பதுமன் என்ற நாகராஜன் திருமால் மீது அளவற்ற பிரேமையுடன் இருந்தார்;இருவருக்குமே சதாசிவன் பெரியவரா? திருமால் பெரியவரா? என்ற வாதம் அடிக்கடி எழுந்தது;இவர்கள் இருவருமே தீர்ப்பு வேண்டி ஆதிபராசக்தியிடம் முறையிட்டனர்;இருவருமே சமசக்தி கொண்டவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்விக்க,இருவரும் இணைந்து காட்சி தரும்படி ஆதிபராசக்தி தவமிருந்தாள்.இதையடுத்து இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சிதந்தனர்.பின்னர்,ஆதிபராசக்தியின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் சங்கரலிங்கமாக எழுந்தருளினார்.
நாகராஜாக்கள் இருவரும் சங்கரலிங்கத்தை வழிபட்டு வந்தனர்.இந்தச் சம்பவம் நடைபெற்று சில ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன;காலப் போக்கில் இந்த சங்கரலிங்கத்தை புற்றுமூடிவிட்டது.நாகராஜாக்கள் அதனுள் இருந்தனர்;பக்தர் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது,உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டிவிட்டார்.ரத்தம் வெளிப்பட்டது.அதிர்ந்தவர் புற்றுக்குள் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டார்;தகவல் பாண்டிய மன்னனுக்குச் சென்றது லிங்கம் இருந்த இடத்தில் அவர் கோவில் எழுப்பினார்.
ஆதிபராசக்தி சிவ விஷ்ணுவை சங்கரநாராயணராக காட்சி தர வேண்டி தவமிருந்த அவர்களின் காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு ஆகும்.(தபஸ் என்ற சமஸ்க்ருதச் சொல்லுக்கு தவம் என்ற அர்த்தம் உண்டு)
இவ்விழா 12 நாட்கள் திருநெல்வேலிமாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெறும்;ஆதிபராசக்தி இங்கே கோமதி அம்பாள் என்று அழைக்கப்படுகிறாள்.இந்த 12 நாட்களில் 11 நாட்கள் அம்பாள் மட்டும் தேரில் எழுந்தருவாள்.12 வது நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள்.மாலையில் சங்கரநாராயணன் இவளுக்கு காட்சி தருகிறாள்.அதன் பின் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோவிலுக்குள் செல்வார்.
மதுரை செங்கோட்டை ரயில் மார்க்கத்தில் ராஜபாளையத்துக்கு அடுத்த நிறுத்தமே சங்கரன்கோவில் ஆகும்.மதுரையில் இருந்து ராஜபாளையம் வந்து,திருநெல்வேலி செல்லும் சாலை மார்க்கமாகவும் சங்கரன்கோவிலுக்குச் செல்லலாம்.
சதய நட்சத்திரத்துக்குரிய சர்ப்ப பைரவரை இங்கே தரிசிக்கலாம்;எப்பேர்ப்பட்ட ஆளையும் சீர்திருத்தி நேர்மையானவராக மாற்றும் திறன் சதயத்தில் பிறந்தவர்களுக்கு உண்டு;இவர்களை மதிப்பிடுவதும் இவர்களின் சாமர்த்தியத்தை கணக்கிடுவதும் முடியாத காரியம்;அகத்தியர் கும்பலக்னத்தில் சதயம் 3 ஆம் பாதத்தில் பிறந்தவவர்;அலெக்ஸாண்டருக்கு முன்பே உலகை ஆட்சி புரிந்தவர் நமது ராஜராஜசோழ மன்னன் பிறந்தது சதயம் நட்சத்திரத்தில் தான்!
படத்தில் நீங்கள் பார்ப்பது சங்கரன்கோவில் சர்ப்ப பைரவர் ஆவார்.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ!!!
 
நன்றிகள் : குருநாதர்

சுவாதி நட்சத்திர பைரவர் திருவரங்குள(பொற்பனைக் கோட்டை) பைரவர்!!!

புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் 6 கி.மீ.தூரத்தில் திருவரங்குளம் அமைந்திருக்கிறது.இந்த ஊரின் பழைய பெயரே பொற்பனைக்கோட்டை! பொற்பனை இருந்த இடத்தில் சிவலிங்கத்தைக்கண்ட அரசன் கோவிலையும் கோட்டையையும் கட்டியதாக செவிவழிச்செய்திகள் தெரிவிக்கின்றன.
சுவாதியில் பிறந்தவர்கள் தனது ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் இராகு காலத்திற்கு முந்தைய முகூர்த்தத்தில்  இங்கே இருக்கும் மூலவருக்கும்,அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.ராகு காலம் துவங்கும்போது இங்குள்ள பைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அப்போது பைரவ சஷ்டிக்கவசம் பாட வேண்டும்;இப்படி குறைந்தது ஒன்பது சுவாதி நட்சத்திர நாட்களுக்கு வழிபாடு செய்துவிட்டால்,அனைத்துக் கர்மாக்களும் நீங்கி வளமோடு வாழ்வர் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்!!!
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ!!!
 
நன்றிகள் : குருநாதர்

திருமயம் கோட்டை பைரவரே விசாக நட்சத்திர பைரவர்!!!

திருப்பத்தூர் டூ புதுக்கோட்டை சாலையில் திருமயம் நகருக்கு வெளியே அமைந்திருக்கும் கோட்டை பைரவரே விசாக நட்சத்திரத்துக்குரிய பைரவப்பெருமான் ஆவார்.
பல சித்தர்களும்,ஞானிகளும்,மகான்களும் விசாகத்தில் பிறந்துள்ளனர்.செவ்வாயின் அதிதேவதை என்று அழைக்கப்படும் முருகக்கடவுளும்,அன்பையும் மனிதத்தன்மையையும் வலியுறுத்தி ஒரு புதியமதத்தைத் தோற்றுவித்த புத்தரும் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களே!!!
விசாக நட்சத்திரம் வரும் நாட்களில் அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளி மாலை,பால்,மரிக்கொழுந்து போன்றவைகளுடன் இவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது நன்று.தொடர்ந்து  ஒன்பது விசாக நட்சத்திர நாட்களில் இவ்வாறு வழிபட்டால்,பைரவ அருள் விசாகத்தில் பிறந்தவர்களுக்குக்கிட்டும்.
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
 
நன்றிகள் : குருநாதர்

ஏன் தேசபக்தியும் தெய்வபக்தியும் சேர்ந்தே இருக்க வேண்டும்?

Wednesday, 21 November 2012 10:08
 ஏன் தேசபக்தியும் தெய்வபக்தியும் சேர்ந்தே இருக்க வேண்டும்? ஏன் இந்தியர்களுக்கு மட்டும் தேசபக்தியும் தெய்வபக்தியும் சேர்ந்தே இருக்க வேண்டும்? ஏனெனில், இந்து தர்மம் தான் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும், நாட்டு மக்களுக்கும் எப்படி வாழ வேண்டும்? என்பதை மனித யுகம் நாகரீகமடைந்ததிலிருந்து இன்று வரையிலும் போதித்திருக்கிறது; போதித்துக் கொண்டேஇருக்கிறது,
இந்த போதனைகளின் தொகுப்பே உலக வரலாறு என்பதே சத்தியம் ஆகும். நாம் ஒவ்வொருவரும் இந்து என்ற உணர்வு ஏற்படும்போது மட்டுமே இந்த கட்டுரையில் இருக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மனம் வரும்.

தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், அவன் பணிபுரியும் நிறுவனத்தின் நிலை உயரும், அவனைச் சுற்றி வாழும் மனிதர்களிடம் சிறந்த தாக்கத்தை அவன் உருவாக்குவான் . இந்த தாக்கம் அப்படியே அவனைச் சார்ந்திருக்கும் தெரு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு என்று பரவி ஒரு முன்னுதாரணமான உலகத்தை உருவாக்கிட முடியும்.

800 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட இஸ்லாமியர்களால் இந்து தர்மத்தின் வேரைக் கண்டறிய முடியவில்லை; ஆனால்,வெறும் 250 ஆண்டுகள் சுரண்டிய ஆங்கிலேயன், இந்துதர்மத்தின் வேர், ஆத்மா இரண்டையும் சிதைக்கத் திட்டமிட்டான். அதற்கான உலகளவில் ஒருங்கிணைந்தும் செயல்படத் துவங்கினான். அதனாலேயே மகத்தான வெற்றியும் பெற்றான். இந்த அழிவுப்பணி இன்றும் தொடர்கிறது. இதை எதிர்கொள்ளுமளவுக்கு நாம் இன்னும் போதிய விழிப்புணர்வு பெறவில்லை. நமது மக்கள் தொகையில் ஒரு சதவீதம்கூட இந்த விழிப்புணர்வைப் பெறவில்லை.

தேசபக்தி இல்லாத தெய்வபக்தியின் விளைவால் தான் கி.பி.1000 முதல் இன்று வரையிலும் நாம் நமது இந்துப் பண்பாட்டின் முக்கியத்துவமான இடங்களை இழந்தோம். மஹாபாரதத்தில் அரசியாக இருந்த காந்தாரி பிறந்த காந்தாரம் இன்று ஆப்கானிஸ்தானாக நமது பக்கத்து நாட்டின் நாடாக போய்விட்டது. சமஸ்க்ருதத்தை நமது நாட்டில் பரப்பிய பாணினி என்ற துறவியின்பிறந்த நாடான பாகிஸ்தானை ( பிரிட்டனின் நயவஞ்சகத்தால்) பிரித்துக் கொடுத்தோம். நமது நாட்டில் பிறந்த மாமனிதர் புத்தர். அவர் உருவாக்கிய அன்பு மதம் புத்தம்! !புத்த மதத்தை தமது தேசியமாக கொண்டிருக்கும் திபத்தின் சுயமரியாதையை இழப்பதற்கு நாம் (தொலைநோக்கு சிந்தனை இல்லாத நமது தலைவர்களால்) காரணமாக இருந்தோம். அதன்விளைவாக, நமது பாதுகாப்புக்கவசத்தையும் இழந்தோம். திபத் என்ற அற்புதமான நண்பனையும் இழந்தோம். உலகத்தின் ஒரே இந்து நாடாக இருந்து வந்த நேபாளத்தில் டிராகனின் வால் பதிவதற்கும் நாம் காரணமானோம்.

எந்த மாநிலப் பகுதிகளில் இருந்து அளவற்ற தேசபக்தர்கள் உண்டானார்களோ அந்தப் பகுதியை ஆங்கிலேயன் . நம்மை நமது ஆத்ம செல்வங்களை, நமது அறிவுக் களஞ்சியங்களை முற்ற முழுக்கத் திருடியப்பின்னர், நமக்கு சுதந்திரம் தரும்போது அந்த மாநிலப்பகுதிகளை இரண்டு பகுதிகளாக பிரித்தே தந்தான்.ஆமாம்!

பஞ்சாப் பகுதியிலிருந்து அளவற்ற தேசபக்தர்கள் பிறந்தார்கள். அதே போல வங்காளத்தில் அந்தக் காலத்தில் படித்தவர்கள் மிக அதிகம்; அதனால் அங்கேயிருந்தும் ஏராளமானவர்களிடமிருந்து தேசபக்தி கனலாகப் பரவிக்கொண்டே இருந்தது. (எப்போதெல்லாம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் வருமோ, அப்போதெல்லாம் தேசபக்தி நிறைந்த பாகிஸ்தான் சீக்கியர்களும், இந்திய சீக்கியர்களும் தத்தமது நாடுகளுக்காக கடுமையாகப் போராடுவார்கள்.சகோதரராக இருந்தாலும்,அவர்களுக்குள் தீராப்பகையை உருவாக்கியது நாம் அல்ல. நமது இந்து தர்மம் சார்ந்த விழிப்புணர்வு இன்மையே!!!) நமது சுதந்திரப்போராட்ட வரலாற்றை முழுக்க வாசித்தால் புரிந்து கொள்ள முடியும்.

இந்து தர்மத்தின் வேர்களாக பசுக்கள், விவசாயம், பெண்கள், கோவில் போன்றவை இருந்தன; 1900 வரையிலும் இந்த ஐந்தும் மிகவும் மரியாதைக் குரியவையாக போற்றப்பட்டன. இந்த நான்குமே இந்து தர்மத்தின் வேர்கள் என்று மட்டும் நாம் நினைப்பது தவறு. எந்த ஒரு நாடாக இருந்தாலும் அந்த நாடு சுபிட்சமாகவும், குறையேதுமின்றியும் இருக்க வேண்டுமெனில்,அந்த நாட்டின் விவசாயம் செழிப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அந்த நாடு உணவுக்காக எந்த ஒரு நாட்டையும் சார்ந்திருக்காது. (சோமலியாவை நினைத்துப்பாருங்கள்). விவசாயி மன நிம்மதியோடு விவசாயம் செய்தால் தான் விளைச்சல் கொட்டோ கொட்டு என்று கொட்டும். சுதந்திரம் வாங்கியது முதல் இன்று வரையிலும் வந்த அரசுகள் (ஒன்றிரண்டைத்தவிர) விவசாயி, விவசாயத்தை விட்டே ஒடும் விதமாகவே செயல்பட்டு வந்திருக்கின்றன . எந்த ஒரு மத்திய திட்டக்கமிஷனும், அதன் அதிகாரிகளும், ஆள்பவர்களும் இந்தியாவின் ஆத்மா விவசாயம் என்பதை உணர்ந்துகொள்ளவே இல்லை;(ஏனெனில், அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல்நாட்டுப் பல்கலைக் கழகங்களான ஆக்ஸ்போர்டு அல்லது ஹார்வேர்டில் படித்ததால் நமது விவசாயத்தின் பெருமைகள் புரிவதில்லை ) இதன்  விவசாயத்தின் பெருமைகள் விளைவாக சுதந்திரம் வாங்கியபோது நமது நாட்டில் ஆறு லட்சம் கிராமங்கள் இருந்தன . தற்போது இரண்டரை லட்சம் கிராமங்களே இருக்கின்றன. இதனால்,உணவு உற்பத்தி குறைந்துகொண்டே வருகிறது. அதனால் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது . மேலும் பல அரிய உணவுப் பொருட்களின் விளைச்சல் காணாமல் போய்விட்டன.

ஒருவேளை இந்தியாவில் இனி உணவுப் பஞ்சம் ஏற்பட்டால், உலகத்தில் இருக்கும் 240 நாடுகளும் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டாலும், இந்தியாவின் பசியைத் தீர்க்க முடியாது. உலகத்து பொருளாதாரமே ஸ்தம்பித்துப் போய்விடும். இந்த உண்மை , ஆக்ஸ்போர்டில் & ஹார்வேர்டில் படித்த அறிவு ஜீவிகளுக்குப் புரிவதே இல்லை;

ஒரு பசுவை ஒருவன் கொன்றுவிட்டால் அடுத்த 12 ஆண்டுகளுக்கு அந்த பசு கொல்லப்பட்ட பகுதியிலிருந்து ஐந்து சதுரகி.மீ. தூரத்தில் இருக்கும் கிராமங்களில் வாழும் பெண்களுக்கு அவமானம் வரும். இதற்கான காரணங்கள் ஆன்மீக ரகசியமாக இருப்பதால் வெளிப்படுத்த குருமுகமாக அனுமதியில்லை. இதை தெரிந்துகொண்ட ஆங்கிலேயன் பசுவதைக் கூடங்களை இந்தியாவில் தனது அரசியல் திமிர்த்தனத்தால் நிறுவத் துவங்கினான். கி.பி.1800களில் இந்தியாவின் மக்கள் தொகை 20 கோடியாக இருந்தது. ஆனால் பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகளின் எண்ணிக்கை 60கோடிகளாக இருந்தன. இதன் மூலமாக இயற்கைச் சமநிலையும். நீர்நிலைகளில் பயோ வித் கவ் டைவர்சிட்டியும் பாதுகாக்கப்பட்டு வந்தது;

மக்களிடையே ஆங்கிலேயன் பரப்பிய பொய் என்ன தெரியுமா? உயிருள்ள ஜீவன்கள் மனிதனுக்கு உணவாகப் படைக்கப்பட்டிருக்கின்றன . அந்த ஜீவன் இந்தியாவில் பசு என்பதை ஆழமாக பதியச் செய்தான். இதற்கென்றே நாடு  நெடுக ஆங்கிலேய அதிகாரிகளை நியமித்தான். இதன்விளைவாக இன்று 2012 இல் நமது நாட்டில் இருக்கும் பசு வதைக் கூடங்களின் எண்ணிக்கை 30,000!!!

இவைகளால் ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பசுக்களை உயிரோடு கொன்று தேவை(?)யானவைகளை பிரித்து பதப்படுத்த முடியும். இந்த ஒரு கருத்திலிருந்துதான் இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் பிரிவினை விதையை ஆங்கிலேயன் விதைத்தான். அது பெரிய விருட்சமாக வளர்ந்து இன்று பாகிஸ்தானாகி விட்டது. ஆன்மீகத்தை எப்படி கிரிமினல்தனமாக பயன்படுத்தி நமது இந்து தர்மத்தின் நடுமண்டையில் அரசியல் அடித்திருக்கிறான் ஆங்கிலேயன்!!!

ஆங்கிலேயன் 1900களில் மதுரையில் (சுதந்திர)தர்ணாப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப்பெண்களை நிர்வாணப்படுத்தி ஓட வைத்தான். உதட்டுச்சாயம் என்ற லிப்ஸ்டிக் இந்தியாவில் விற்பனை செய்வதற்காகவே சினிமாவை அறிமுகப்படுத்தினான். சுத ந்திரம் வாங்கியப்பின்னரும்,இன்று வரையிலும் பெண் இனத்தை போகப்பொருளாக பார்க்குமளவுக்கு சினிமா, டிவி, டிவி விளம்பரங்கள் நம்மிடையே பரவிக்கொண்டே இருக்கின்றன.சினிமாவிலும் இவையெல்லாம் மேல்நாட்டு நாகரீகமே சிறந்தது என்று நமது நாட்டுப் பெண்கள் ஏற்றுக்கொள்ள வைக்கும் விதமாக நமது கல்வித்திட்டம் இன்னும் இருக்கிறது.அந்தக் கல்வித்திட்டத்தின் பெயரே மெக்காலே கல்வித்திட்டம்!!

மெக்காலே கல்வித்திட்டம் நமது சந்ததியினரின் மனப்பாடத்திறனை சோதிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது;நமது குருகுல கல்வித்திட்டம் நமது சந்ததியினரின் சிந்திக்கும் திறனையும், பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனையும் மேம்படுத்திக்கொண்டே செல்கிறது.மெக்காலே கல்வித்திட்டத்தால் நான் என்ற அகங்காரம் பிடித்த சமுதாயத்தை கடந்த 200 ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.அதே சமயம், குருகுலக் கல்வித்திட்டம் கடந்த 20 நூற்றாண்டுகளாக உலகத்திலேயே தலைசிறந்த சமுதாயத்தை நமது நாட்டில் தான் உருவாக்கிவந்தது;மெக்காலே கல்வித்திட்டத்தால் மனிதர்கள் மனிதத்தன்மையோடு உருவாகவில்லை. ஈகோ பிடித்த பிடிவாதம் நிறைந்த மனிதர்களை மட்டுமே உருவாக்க முடிகிறது. அதுதான் இன்று இந்தியா முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இப்போது இருக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணமே மெக்காலே கல்வித்திட்டமே! இன்று குருகுலக் கல்வித்திட்டத்தை இங்கிலாந்து பின்பற்றிவருகிறது. அவர்களின் உதவாக்கரைத்திட்டமான மெக்காலே கல்வித்திட்டத்தை பின்பற்றி நமது நாட்டின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இந்த எதிர்கால சந்ததியினரிடம் இருப்பது நான் என்ற அகங்காரமும், சுயநலமும் தான்! இதுபோக ஆங்கிலவழிக்கல்வியை ஒன்றாம் வகுப்பிலிருந்து அறிமுகப்படுத்தி சுமார் 40 ஆண்டுகள் ஓடிவிட்டன. இதன் பின்விளைவு என்ன தெரியுமா?

தோலால் மட்டும் இந்தியர்கள்! ஆனால்,சிந்தனையால் செயல்பாடுகளால் மேல்நாடுகளுக்கு ஒரு அடிமைக் கூட்டத்தை உருவாக்கிவிட்டோம். அவர்களுக்கு நமது பண்பாட்டின் பெருமைகள் புரியாது. குடும்ப அமைப்பின் அமைப்பு ரகசியமும் தெரியாது. இதன் விளைவுகளே இன்று திருமணமான ஒரே வருடத்தில் மணவிலக்கு கோரி நீதிமன்றங்களில் கூடும் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டம்!!! இந்தக் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.பள்ளி ஆசிரியர்கள் தம்மிடம் கல்வி பயில வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்குமளவுக்கு சமுதாயச் சீரழிவு உருவாகிவிட்டது.மாதா,பிதா,குரு என்ற வரிசையெல்லாம் மெக்காலே கல்வித்திட்டத்தினால் அழிந்து வரும் மரபாக மாறிவருகிறது.

ஒரு சர்வே எடுக்கவேண்டும்: ஒரு மாவட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு நகரத்திலும் இருக்கும் நீதிமன்றங்களிலும் ஒரு வருடத்தில் பதிவாகும் மணவிலக்கு வழக்குகளின் பட்டியலை எடுக்க வேண்டும்;அந்த பிரிந்திருக்கும் தம்பதியரின் வாழ்க்கைப்பின்னணி, அவர்களின் பெற்றோர்களின் வாழ்க்கை முறை, அந்த பிரிந்த தம்பதியரின் கல்வி கற்ற விதம் போன்றவைகளை ஆராய்ந்து பார்த்தால், பெரும்பாலும் ஆங்கில வழிக்கல்வியை பயின்றவர்களே அ திகமானவர்கள் இருப்பார்கள் என்பது புலனாகும்.

உலகத்தில் எந்த ஒரு மூலையிலும் ஒரு சித்தாந்தம் அல்லது தத்துவம் உண்டானாலும், அந்த தத்துவம் அல்லது மதம் எந்த விதமான எதிர்ப்பும் இன்றி வாழும் இடம் நமது பாரதம் மட்டுமே! சகிப்புத் தன்மையும், விட்டுக்கொடுத்தலுமே இந்து தர்மத்தின் அடையாளங்கள்!

இதோ ஒரு நேரடி ஆதாரமும் நமக்கு குமுதம் ரிப்போர்ட்டர் என்ற அரசியல் வார இதழ் 1.11.2012 ஆம் வெளியீட்டில் கிடைத்திருக்கிறது.இதுபோல,அடிக்கடி ஏராளமான நேரடி ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தாலும், நாம் அதன் பின்னணியின் கோர முகத்தை உணர்வதே இல்லை;அது என்ன அந்த நேரடி ஆதாரம்? பார்ப்போமா:-

தலைப்பு: ஐயா வைகுண்டரை சீண்டினால் . . .



கட்டுரை: "சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக 18 ஆம் நூற்றாண்டிலேயே புரட்சிகளைச் செய்தவர் அய்யா வைகுண்டர்.ஆனால்,மத்திய அரசின் சி.பி.எஸ்.சி.பாடத்திட்டத்தில் அவரைப் புறக்கணித்துவிட்டு, ஆங்கிலேயர்களுக்குத் துதி பாடியிருப்பது என்ன நியாயம்? எனக்கொதிக்கிறார்கள்,தமிழகமெங்கும் உள்ள அய்யா வழி பக்தர்கள்!!!

இந்த விவாதத்தைக் கிளப்பிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் நம்மிடம், 'மெட்ரிக் பாடத்திட்டங்களில் பல மாநிலங்களில் இப்போது குழப்பம் நிலவுவதால், மத்திய அரசின் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்திற்கு ஏராளமானோர் மாறிக் கொண்டிருக்கின்றனர்.இந்தச் சூழலைப் பயன்படுத்தி பள்ளிக் குழந்தைகளின் மத்தியில் விஷத்தை விதைத்து வருகிறது மத்திய அரசின் கல்வித் துறை. அம்பேத்கர் குறித்து ஆட்சேபகரமான வகையில் கார்ட்டூன் வெளியிட்டது. பாலகங்காதர திலகரை தீவிரவாதியாகச் சித்தரித்தது எல்லாம் இந்த ரகம் தான். இப்போது அதே வரிசையில் 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் அய்யா வைகுண்டரை அவமானப்படுத்தியிருக்கிறது ஒரு பாடம்.

ஜாதிக்கொடுமையும் ஆடை மாற்றமும் என தலைப்பிட்டுள்ள அந்தப் பாடத்தில், 'திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் சாணார்(தற்போது நாடார்) பெண்கள் மேலாடை அணிய மாட்டார்கள். நாயர் நிலப்பிரபுக்களின் நிலங்களில் வடிப்புத்(கள் இறக்கும்)தொழில் செய்வதற்காக வந்து குடியேறியவர்கள் அவர்கள்.செருப்புப் போடக் கூடாது நகைகள் அணியக் கூடாது; குடை பிடிக்கக் கூடாது ஆகிய கட்டுப்பாடுகள் இருந்தன.1820 இல்கிறிஸ்தவ மிஷனரிகளின் வருகைக்குப் பின்னர் மதம் மாறிய பெண்கள்,மேல்சாதியினரைப் போல் தைக்கப்பட்ட ரவிக்கைகள் அணிந்தனர்.இதனால் மேல்சாதியினர், நாடார் பெண்களின் மேலாடைகளைக் கிழித்து எறிந்தார்கள் ' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடார் சமூகத்தினரை 'வந்தேறிகள்'எனக் குறிப்பிட்டிருப்பது மகா அக்கிரமம். அதே போல, சாதிய ஒடுக்குமுறைகளை கிறிஸ்துவ மிஷனரிகள் தான் தகர்த்தது போல இதில் வரலாற்றைத் திரித்திருக்கிறார்கள். அதே கால கட்டத்தில் அங்கு சாதி ஒழிப்புக்கும், சமத்துவத்துக்கும் போராடிய அய்யா வைகுண்டரை அந்தப்பாடத்தில் கண்டுகொள்ளவே இல்லை. 'தாழக் கிடப்பாரை தற்காத்துக் கொள்வதே தர்மம்' என்கிற உயரிய தத்துவத்தை விதைத்து, மொத்த தமிழ் சமூகத்திற்காக தென் தமிழகத்தில் போராடியவர் வைகுண்டர். கூடவே, அந்தப் பகுதியில் மதமாற்றத்தையும் தடுத்து நிறுத்தி லண்டன் மிஷனரிகளின் கோபத்திற்கு ஆளானவர்.

இதனால் அவரைப் புறக்கணித்திருப்பதை திட்டமிட்டு நடைபெற்ற ஒரு நிகழ்வாகவே கருத வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக அய்யாவழி மக்களின் தலைவரான சாமித்தோப்பு பால பிரஜாபதி அடிகளாரைச் சந்தித்தேன்.

அய்யாவை இருட்டடிப்புச் செய்ததையும், நாடார் சமூகத்தினரை இழிவு செய்திருப்பதையும் கண்டித்து விரைவில் போராட்டத்தில் குதிப்போம் என்றார்.

சாமித்தோப்பு பால பிரஜாபதி அடிகளார் நம்மிடம், "ஒரு பாடத்திட்டம் தயாரிக்கும் போது சம்பந்தப்பட்ட மக்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டும். நாடார் சமுதாயப் பெண்கள் மட்டுமல்லாது பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயப் பெண்கள் யாருமே இடுப்புக்கு மேலே ஆடை அணியக் கூடாது என அந்தக் காலத்தில் ஆதிக்க சாதியினர் கெடுபிடி செய்தனர்.அய்யா வைகுண்டர், தன்னை சந்திக்க வரும் பெண்கள் கட்டாயம் தோள் சீலை அணிந்து வர கட்டளையிட்டார். பல இடங்களில் தடையை மீறி, 'தோள்சீலைப் போராட்டங்களை' நடத்தினார். அதே போல சாதிக்கு ஒரு கிணறு என இருந்த நிலையை மாற்ற, 'முந்திரிக் கிணறு' எனப்படும் பொதுக்கிணறு முறையை அறிமுகப்படுத்தினார்.அனைத்து சமுதாயத்தினரும் ஒரே இடத்தில் சாப்பாடு தயார் செய்து, 'துவையல் பந்தி'களை நடத்தினார்.இன்றளவும் சாமித் தோப்பில் அந்த பொது பந்தித் திட்டம் செயல்படுகிறது.

பிற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக ஆண்கள் இடுப்பில் துண்டு கட்ட வேண்டும் என விதிக்கப்பட்ட தடையை மீறி, அந்தக் காலகட்டத்திலேயே அனைவரையும் தலைப்பாகை அணிய வைத்தார். பிற்காலத்தில் கன்னியா குமரியில் தியானம் செய்த விவேகானந்தர், சாமித்தோப்பு கோவிலுக்கு வந்தப்பிறகு தான் தலைப்பாகை அணியத் துவங்கினார் என்பது வரலாறு. எனவே இந்தப் பாடத்திட்டத்தை உடனே வாபஸ் பெற வேண்டும். மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.' என்று சீறினார்.

எனவே நாம் ஒவ்வொருவரும் நமது குழந்தைகளுடன் வாரம் ஒரு நாள் அருகில் இருக்கும் பழமையான கோவில்களுக்கு அழைத்துச் சென்று,அந்தக் கோவிலின் பெருமைகளையும், உருவான வரலாற்றையும் சொல்லுவோம்; ஏழு வயதுக்குள் நாம் நமது குழந்தைகளுக்கு பக்தி உணர்வினை ஊட்டாவிட்டால், அதன்பிறகு ஒருபோதும் அவர்கள் மனதில் "பக்தி உணர்வை" ஊட்டவே முடியாது.நமது குழந்தைகளை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன், ஸ்ரீசின்மயாமிஷன், ராஷ்டீரிய ஸ்வயம்சேவக சங்கம், ராஷ்டீரிய சேவிகா சமிதி, சேவாபாரதி விவேகானந்தா கேந்திரம், ஸ்ரீசாரதா பீடம், மாதா அம்ருதானந்தமயி பீடம், மனவளக்கலை மன்றம் போன்ற அமைப்புக்கள் அடிக்கடி நடத்தும் ஆன்மீகப் பயிற்சி வகுப்புகள், பயிற்சி முகாம்களில் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு கலந்து கொள்ள வைக்க வேண்டும்.இதன் மூலமாக முழுமையான இந்து உணர்வு நமது அடுத்த தலைமுறையினருக்கு ஏற்படும்.இது நாம் ஒவ்வொருவருமே கண்டிப்பாகச் செய்ய வேண்டிய கடமை ஆகும்.இவ்வாறு செய்யாமல் நம்மால் சுயச்சார்புள்ள நாடாகவும்,வல்லரசாகவும் உயர முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நன்றிகள் : குருநாதர்

Monday, 26 August 2013

நமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் ஆசியைப் பெற(28.8.13 முதல் 19.9.13வரை) ஒரு அரிய வாய்ப்பு!!!

கடந்த 25 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக இருப்பவர் நமது ஆன்மீக குரு.ஐயா சிவமாரியப்பன் என்ற சகஸ்ரவடுகர் அவர்கள்!!!ஐயா அவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் ஏராளமான மனிதர்களின் பலதரப்பட்ட பிரச்னைகள் தீர காரணமாக இருக்கின்றன;


 கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும்,இந்தியாவின் பெரும்பாலான மாநகரங்களைச் சேர்ந்தவர்களும் ஐயாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்;எந்தவித பிரதிபலனின்றி தமது ஆன்மீக ஆராய்ச்சிமுடிவுகளால் ஐயா அவர்கள் பிறருக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்; 
சிலரது பிரச்னைகள் 18 வருடங்களாகவோ,அல்லது 20 வருடங்களாகவோ,அல்லது 30 வருடங்களாகவோ இருந்திருக்கின்றன;இந்தப் பிரச்னைகளில் குழந்தைப்பேறின்மை,பூர்வீகச் சொத்துப் பிரச்னை,முன்னேற்றத்தை சூட்சுமமாகத் தடுக்கும் செயல்களால் குடும்பத்தினுள் குழப்பம் அல்லது தீராத நோய்,தொழில் முடக்கம்,நீண்ட காலக் கடன் அல்லது வராக்கடன்,திருமணத் தடை,தொழில் கூட்டாளிகளுடன் பிரச்னை,விபரீதமான நோய்கள் அல்லது சுபாவங்களால் கணவன்  மனைவிக்குள் ஒற்றுமையின்மை,பித்ரு தோஷம்,பிடித்த துறையில் சாதிக்க முடியாமல் தடுமாறுதல்,வீண் பழி மற்றும் அவமானத்தால் தனிமையில் விரக்தியோடு வாழ்ந்து வருதல்(ஆனால்,இவர்களின் மனதில் தாம் தமது குடும்பத்தாரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்);கடுமையான கர்மவினைகளை ஜோதிடத்தின் மூலமாகவோ,ஜீவ நாடியின் மூலமாகவோ அறிந்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்தும் கூட தாம் நிம்மதியான மற்றும் வசதியான வாழ்க்கை வாழ முடியாமல் தவிப்பவர்கள்;

பலருக்கு நல்ல வேலை அல்லது தொழில் இருந்தும் கூட அவர்கள் மனதில் தாம் விரும்பும் சித்தரை தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும்;சிலருக்கு தாம் இந்தப் பிறவியிலேயே சித்தராக ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பார்கள்;


சிலர் சிவ வழிபாடு அல்லது குலதெய்வ வழிபாடு அல்லது சித்தர் உபாசனை அல்லது முன்னோர்கள் உபாசனை அல்லது மகான்கள் உபாசனையை வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும்;குலதெய்வத்துடன் நேரடியாகப் பேச வேண்டும் என்ற எண்ணங்கள் அடிக்கடி மேலோங்கும்;

சிலர் ஆன்மீக வாழ்க்கையில் வாசி யோகம், குண்டலினி சக்தியை எழுப்புதல் முதலான ஏராளமான முயற்சிகளுக்கு தகுந்த குருவைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.






சிலர் மூலிகைகள்,பஞ்சாங்கத்தின் துணை கொண்டு சித்தராக முயற்சி செய்வதும் உண்டு;சரியான குரு கிட்டாமல் ஏங்கிக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.

மேலே கூறப்பட்டிருக்கும் ஆன்மீக முன்னேற்றத்தினை விரும்புபவர்கள் நமது ஐயா அவர்களை தினமும் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் நேரடியாக சந்திக்கலாம்;
முன் அனுமதியைப் பெற: ஆன்மீகக்கடல் கை.வீரமுனி 9092116990 என்ற எண்ணுக்கு அழைக்கவும். ஒரு நாளில் ஏதாவது இரண்டு மணி நேரம் மட்டும் இந்த எண்ணில் பேசலாம்; மிஸ்டு கால் தருவதைத் தவிர்க்கவும, ஐயாவை டெஸ்ட் பண்ணுவதை கண்டிப்பாகத் தவிர்க்கவும்;
ஐயாவை சந்தித்து ஆசிர்வாதம் பெறும் போது நீங்கள் என்ன வேண்டுகிறீர்களோ,அந்த வேண்டுதல் நிச்சயமாக குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேறும்.அவ்வாறு,நிறைவேறியப் பின்னர்,சந்திக்க அனுமதி கிட்டும்; ஆர்ப்பாட்டமில்லாமல் வந்து, ஆசி பெற்றுவிட்டு மட்டும் செல்லவும்;

நமது ஐயாவைச் சந்திப்பதன் மூலமாக நிச்சயமாக உங்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனை அமையும்!!!

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

Monday, 1 July 2013

பைரவரின் அருளைப் பெறுவோம்

108 பைரவ மந்திர உரு தொடர்பான விளக்க மடல்

அன்புடையீர் வாழ்க அறமுடன், இங்கு நமது குரு சிவமாரியப்பன் மற்றும்
அனைவரும் நலம்.அதே போல் தாங்கள் தங்கள் குடும்பத்தார் நலமுடன் வாழ
ஸ்ரீபைரவப் பெருமானைப் பிரார்த்திக்கிறோம்.

இதன்படி தாங்கள் தினமும் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற பைரவ மந்திரத்தை 108 முறை எழுத வேண்டும்; எப்படியெனில்,
ஓம்(உங்கள் குலதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒருமுறையும்,
ஓம் கணபதி நமஹ என்று ஒருமுறையும் எழுதிவிட்டு
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று 108 முறை எழுத வேண்டும்.இவ்வாறு ஒவ்வொரு நாளும் 108 முறை வீதம் குறைந்தது ஒரு வருடம் வரை தொடர்ந்து எழுத வேண்டும்; ஒவ்வொரு மூன்று மாதங்கள் இவ்வாறு எழுதி முடித்ததும், எழுதிய தொகுப்பினை எமக்கு அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்; ஒவ்வொரு நாளும் இந்த 108 பைரவ மந்திர உருவை எழுதி முடிக்கும் வரை வேறு வேலையில் கவனம் செலுத்தக் கூடாது;உதாரணமாக,அலைபேசி பேச்சினைத் தவிர்க்கவும்; பிறரின் இடையூறு இல்லாமல் எழுதிப் பழக வேண்டும்;தொலைக்காட்சி,இணையத்தி
ன் கவனம் செலுத்தாமல் எழுத வேண்டும்;
இந்த 108 பைரவ மந்திர உருவை ஒரு நாளில் எந்த நேரத்திலும்
எழுதலாம்;வீட்டுப் பூஜை அறையில் பைரவரின் படத்தின் முன்பாக நெய் தீபம்
ஏற்றி வைத்துவிட்டு எழுதுவது மிக நன்று.
இவ்வாறு தினமும் எழுதுவதன் மூலமாக உங்களது அனைத்துக் குறைகளும்
படிப்படியாக நீங்கத் துவங்கும்;பெண்கள் மாதவிலக்கு நாட்களைத் தவிர எல்லா நாட்களிலும் எழுதலாம்;
இந்த 108 பைரவ மந்திர உருவை எழுதத் தேவையான தகுதி:அசைவ உணவு சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்;அல்லது இதை எழுதும் ஒரு வருடம் மட்டுமாவது நிறுத்துவது நன்று. யார் வேண்டுமானாலும்,எந்த ஜாதி,மதம்,இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எழுதி அனுப்பலாம்;
இவ்வாறு தொடர்ந்து நீங்கள் எழுதி வந்தால்,உங்களின் மன உளைச்சல்கள்
நீங்கும்;நீண்டகால பிரச்னைகள் தீர வழி கிடைக்கும்;கடுமையான கர்மவினைகள் நீங்கும்;உங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறத் துவங்கும்;எதெல்லாம் உங்களைத் தொல்லை படுத்துகிறதோ அந்த தொல்லைகள் திடீரென விலகும்;பணம்/மனம்/குடும்பம்/பொது வாழ்வு சேர்ந்த பிரச்னைகள் விலகத்துவங்கி,நிம்மதியும் வசதியும் நிறைந்த வாழ்க்கையை எட்டத் துவங்குவீர்கள்.
இதை எத்தனை பேர்கள் எழுத இருக்கிறார்கள் என்பதை அறிய உங்கள் பெயர்,செல் எண்,வசிக்கும் ஊரை aanmeegaexpress@gmail.com என்ற மின் அஞ்சலில் பதிவு செய்து கொள்ளவும். subject இல் BAIRAVAR 108 MANTHIRAM என்று அனுப்பவும்
இப்படிக்கு
ஆன்மீக எக்ஸ்பிரஸ்