Thursday, 9 May 2013

துர்மரணமும் ஆவிகளும்:அனுபவ உண்மை



 ஆவிகள் சூரியனை நோக்கிச் சென்றால் சொர்க்கம்!
சந்திரனை நோக்கிச் சென்றால் வைகுண்டம்!!இங்கு செல்லும் ஆவிகள் மறுபிறவி பிறக்கும்.சனிக்கிரகத்தை நோக்கிச் சென்றால் நரகம்.பல ஆண்டுகள் கடும்வேதனையை அனுபவிக்க வேண்டும்.இதுபற்றிய முழுவிபரம் கருட புராணத்தில் இருக்கின்றது.
 
திடீர் விபத்து,தற்கொலை,போர்/கலகம்/கொலை/எதிர்பாராத மரணம் இவற்றால் இறப்பவர்கள் முறைப்படி இறக்கும் காலம் வரை ,எங்கே இறந்தார்களோ,அங்கேயே ஆவியாக இருக்க வேண்டும்.இறந்தது ஆண் எனில் அதற்கு பேய் என்றும், பெண் எனில் பிசாசு என்றும் பெயர்.
 
நம் சூட்சும உடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலில் இருந்து பலவந்தமாக பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயே சுற்றும்.சுமார் 20 அடி சுற்றளவுக்குள் சுற்றும்.வெளியே எங்கும் செல்லமுடியாது.உயரேயும் பறக்க முடியாது.இதைத்தான் மந்திரவாதிகள் பிடித்து தங்களிஷ்டப்படி ஏவல் செய்கின்றனர்.
 
அருளாளர்களின் ஆசி கிடைத்தால் இந்த ஆவிகளுக்கு விடுதலை!
துர்மரணம் அடைந்தவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது.அவர்களை வணங்கக்கூடாது.அவர்களுக்கு படையல் போடக்கூடாது.உச்சாடன கணபதி ஹோமம் மற்றும் பிதுர் ஹோமம் மூலம் அவைகளை வேறிடத்திற்குப் போகச் செய்யலாம்.
 
துர்மரணமடைந்தது வாலிபவயதுப் பையனாக இருந்தால் வாலிப வயதுப் பெண்ணைத் துன்புறுத்தும்.வாலிப வயது பெண்ணாக இருந்தால் வாலிபவயதுப் பையனைத் துன்புறுத்தும்.கைகள், கால்கள் உள்ளங்கால்கள் தொப்புள் ஆகிய இடங்களில் மருதாணி இலையை மட்டும் பிடுங்கி அரைத்துத் தடவி வந்தால் துர் ஆவிகள் தாக்காது.ட்யூப்லைட் வெளிச்சத்தில் துர் ஆவிகள் செயல்பட முடியாது.ஏன் எனில் அதில் பாதரசம் உள்ளது.பிரண்டைத் துவையல், தடியங்காய்(வெண்பூசணி லேகியம்),வெள்ளைப்பூண்டு லேகியம் சாப்பிட்டால் துர் ஆவிகள் தாக்குதல் இராது.
 
நயம்சாம்பிராணி, வலம்புரிக்காய், கோஷ்டம்,விரலி மஞ்சள் ஆகியவைகளை நன்கு இடித்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் புகைபோட ஆவிகள் ஓடிவிடும்.புகைபோட்ட பின் கைகளை நன்கு கழுவ வேண்டும்.
ஹாஸ்டல்கள்,அரண்மனைகள்,ஆஸ்பத்திரிகள்,சில வீடுகளில் இப்படிப்பட்ட ஆவிகள் இருக்கும்.மாந்திரீகத்தொழில் தெரிந்தவர்கள் மூலமாக பச்சைப்பானைகளில் அடைத்து இவற்றை ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரை,வனங்களில் விட்டால் அந்த ஆவிகளுக்கும் விடுதலை.நமக்கு பெரும் புண்ணியம் தரும் செயலாகும்.

இச்சாதாரி என்றால் என்ன?

இது தொடர்பான டிவி தொடர் ஏற்கனவே சன் டிவியில் வந்திருக்கிறது.இருந்தாலும் எத்தனைபேர் பார்த்திருப்பர்.

நாகலோகத்திலிருந்து சில அல்லது ஒரு வேலையை மனிதர்கள் வாழும் இந்த பூலோகத்தில் முடிப்பதற்காக அனுப்பப்படும் நாகங்களே இச்சாதாரி.இச்சை என்றால் ஆசை.இச்சாதாரி என்றால் நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

இவை நினைக்கும் போது நினைக்கும் மனித வடிவமெடுக்கும் திறன் வாய்ந்தவை.பெரும்பாலும் சில மனிதர்களை நேரம்பார்த்துக்கொல்ல அனுப்பப்படுகின்றன. என்பதே இதுவரை நாம் அறிந்தவை.

ஆனால்,மனிதர்களைக் காக்கும் இச்சாதாரிகளும் உண்டு.அவை சில மனிதர்களை சகல சவுபாக்கியங்களுடன்(அவர்களுக்கு ஜாதகப்படி யோகமில்லாவிட்டாலும்) வாழவைக்கின்றன.இம்மாதிரியான இச்சாதாரிகளைப்பற்றி இந்த வலைப்பூவில் முழுமையாக எழுத முடியவில்லை.ஏனெனில்,அவைகளில் நான் அறிந்தவைகளை சென்சார் செய்தே இவ்வளவுதான் எழுதமுடிகிறது.சரி!
யாராவது மின் அஞ்சலில் தொடர்பு கொண்டால் விளக்கம் அளிக்கிறேன்.

மதமாற்றம் பற்றி சுவாமி தயாநந்தா


மதமாற்றம் செய்ய வந்த பாதிரியாரை திணறடித்த ஹிந்து மத பாதுகாவலர் முத்துராமலிங்க தேவரை பாரீர்

ஓர் சிறு கல்லின் மேல் நின்று கொண்டு மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் கிறித்தவப் பாதிரியார் நாகர் கோவிலிலிருந்து வந்த மைக்கேல் தம்புராசு.

"பாவிகளே ! கல்லை வணங்காதீர்கள், இதோ நான் நிற்பதும் ஓர் கல், இதே கல்தூண் கோவிலில் உள்ள சிலையாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒன்றுதான். அந்தக் கல்லை வணங்குவது பாவம் .. . . . .கூடாது. . . .!

பாதிரியார் பேச்சை மேலும் கேட்டுக் கொண்டிருக்க விரும்பவில்லை மாணவன் பேச்சை இடைமமறித்தான் . . .!

"பாதிரியார் அவர்களே ! ஓர் சந்தேகம் அதை நீங்கள் . . .!

"என்ன சந்தேகம் அதை விளக்கத்தானே ஆண்டவன் என்னை ... . . !

"அப்படியனால். . . !கோவப்படக்கூடாது நீங்கள் . . . !"

"எனக்கேன் வருகிறது கோவம்".எதுவானாலும் கேளுங்கள் . . .!

"நான் நிற்பதும் ஓர் கல் . கோவிலின்உள்ளே சிலையாக இருப்பதும் கல் . . .!"என்று குறிப்பிட்டீர்கள்

"இரண்டும் கல் தான் இதிலென்ன . . . !"

"சிலபாதிரிமார்களுக்கு தாயார், அக்காள்,தங்கை, உறவுபெண்களும் உண்டு".

"ஆமாம் ...!"

"சிலபாதிரிமார்களுக்கு . . .! மனைவியும் மக்களும் இருக்கிறார்கள்."

"உண்மைதான்"

"இவர்கள் அனைவரும் . . . .! பெண்கள் தானே?"

"சந்தேகம் என்ன வந்தது இதிலே. . . ?"

"அவர்கள் அனைவரும் ஒரே பெண்கள்தான் என்ற நிலை ஏற்படுமேயானால். . .!ஒரு மனைவியை பாவிக்கிறமாதிரி தங்களது தாய் ,தங்கையர்களை பாவிக்க முடியுமா? அப்படிபாவித்தால் அவர்களை என்ன சொல்லும் உலகம்.. .? நீங்கள் இதில் .. . ?"

இடி யோசை கேட்ட நாகம் போலாகிவிட்டார் பாதிரியார். எதிர்பாராது எழுந்த இக் கேள்வியைக்கேட்டதும்,

அது வரையிலும் வாயைடைத்துப் போய்நின்ற பொருங்கூட்டத்தினர் எழுப்பிய

ஆரவாரங்கள் , கையோலிகள் விண்னையெட்டும் அளவிற்கு உயர்ந்தெழுந்தன

Hinduism will rule world soon

உலகின் தொன்மையான மதமும் அறிவியல் பூர்வமான பகுத்தாய்வு சிந்தனையுடனும் கருத்துடனும் கூடிய ஒரே மதம் இந்து மதம் என்பதை வெளிநாட்டு விஞ்ஞானிகள் பலர் ஒப்புக் கொண்டு விட்டனர். இதற்கு ஒரு படி மேலே பொய் சில விஞ்ஞானிகள் ஆணித்தரமாக தங்களது ஆராய்ச்சி முடிவுகளை கூறி உள்ளனர். இந்து மதம் என்பது வெறும் மதம் மற்றும் வழிபாடு இல்லை. அவை ஒவ்வொரு மனிதன் மற்றும் உயிர்கள் வாழ தேவையான விஞ்ஞான கூறுகள் அடங்கிய ஒரு சாரம்சமே என்று. தற்போதைய கால கட்டத்தில் பல வெளிநாட்டு மக்கள் இந்து கலாசாரங்களாலும் அதன் தொன்மை மற்றும் புனிதங்களாலும்  ஈர்க்கப்பட்டு இந்தியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் நாமோ அந்நியக் கலாச்சாரங்களுக்கு அடிமைப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். இது தான் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். அவர்கள் நம்மிடம் உள்ள நல்ல விசயங்களை எல்லாம் எடுத்துக் கொள்கின்றனர். நாம் அவர்களிடம் உள்ள கெட்ட விசயங்களை எல்லாம் எடுத்துக் கொள்கின்றோம்.



Tuesday, 7 May 2013

பால பைரவர்

பால பைரவர் தரிசனம் கிடைக்க ஒரு சுலப வழி


தினமும் காலை மணி 4.30 முதல் 6.00 வரையிலும்,மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலும் புருவமத்தியை நோக்கி கிலி அங் என மனதால் தியானித்து வந்தால் பால பைரவர் தோன்றி உங்களுக்குத்துணையிருப்பார்.இதை குறைந்தது 90 நாட்கள் வரையிலும் தொடர்ந்து செய்துவரவேண்டும்.இது ஒரு தியான மந்திரம்.


இதைப் பின்பற்ற அசைவம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்;தைரியசாலிகள் மட்டுமே இதை செய்துவரவேண்டும்.ஏனெனில்,பெண்களும் கோழைகளும் பைரவ உபாசை செய்யக்கூடாது என புராதன பைரவ உபாசனை தத்துவம் விவரிக்கிறது.


நன்றி:மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.

பாலி (இந்தோனேசியா) ஹிந்துக்களின் சொர்க பூமி

உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது. ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகும் ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர்.

பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்.

1. இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது. Nyepi day என்று சொல்கிறார்கள். 2013ல் மார்ச் 12ம் தேதி இந்த மௌன தினம் வருகிறது. ஹிந்துகளின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளிக்கபடுகிறது. காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை எந்த போக்குவரத்தும் இருக்காது. பன்னாட்டு விமான நிலையமான Denpasar (bali) விமான நிலையம் கூட மூடப்பட்டு இருக்கும். யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்.

2. பாலியில் உள்ள ஹிந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான். பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன. புராணங்களில் வரும் மார்கண்டேய, அகஸ்திய, பரத்வாஜ ரிஷிகளை பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில், இந்த ரிஷிகளை பற்றி பாலி குழந்தைகள் கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

3. பாலியில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தேசிய உடை 'வேஷ்டி' தான். எந்த ஒரு பாலி கோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்ல முடியாது. இந்தியாவில் கூட சில கோவில்களில்தான் பாரம்பரிய உடை கட்டாயமாக உள்ளது (குருவாயூர் போன்ற). ஆனால் பாலியில் அனைத்து கோவில்களிலும் நமது உடை அணிந்து தான் செல்ல வேண்டும்.

4. பாலியின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு ரிஷிகள் உருவாகிய tri-hita-karana என்ற கோட்பாட்டின் படி தான் அமைந்துள்ளது. அதைதான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள். Parahyangan - Pawongan - Palemahan என்று பொருள்படும். tri-hita-karana என்பது சமஸ்கிருதம்.

5. Trikala Sandhya என்பது சூரிய நமஸ்காரம். அணைத்து பாலி பள்ளிகளிலும் கட்டயாமாக மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். அதே போல மூன்று வேலையும் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பள்ளியில் சொல்லவேண்டும். பொதுவாக பாலி ரேடியோவில் மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள்.
இந்தியாவில் சூரிய நமஸ்காரதிர்க்கு எதிர்ப்பு தான் வருகிறது. 5 வேலை நமாஸ் செய்ய சொல்வார்கள் போல.

6. பாலி கோவில் பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது. முஸ்லிம் மத நாடான இந்தோனேசியாவில் அனைத்து மத கோவில் பூசாரிகளின் சம்பளத்தை அரசே கொடுக்கிறது. ஆனால் இந்தியா மத சார்பற்ற நாடு, இருந்தாலும் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஹஜ் செல்ல பணத்தை வாரி இறைக்கின்றது.

7. இந்தோனேசிய நாட்டின் மூதாதையர்கள் அனைவரும் ஹிந்துக்களே, அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்திய கலாசாரமே அதிகம் கலந்துள்ளது.

8. உலகில் அரிசி விளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய இடம் வகிக்கிறது, பாலி தீவு முழுவதும் அரிசி வயல்கள் தான் இருக்கின்றது. பாலி மக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ்ரீ தேவி, பூதேவி (Shri Devi and Bhu Devi ) ஆகிய தெய்வங்களுக்கு தான் படைக்கிறார்கள். அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகு தான் விவசாய தொழிலுக்கு செல்வார்கள். 9ஆவது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதிமுறைகளை ஹிந்து பெரியோர்கள் கற்றுகொடுத்து இருக்கிறார்கள். அதற்க்கு Subak System என்று பெயர். இங்கே நீர் பாசனம் முழுவதும் கோவில் பூசாரிகளின் கட்டுபாட்டில் தான் இருக்கும். உலக வங்கியே Subak System பின் பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது. இந்தியர்கள் கொண்டு வந்த இந்த விஞ்ஞானம் இன்று இந்தியாவில் இல்லை.

9. பாலி ஹிந்துக்கள் பூஜை செய்யும் பொழுது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பது இல்லை. இன்றும் கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலை சுவடியையே (Lontar) பயன்படுத்துகிறார்கள். ராமாணயம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.ராமாணய ஓலைசுவடியை நல்ல நாட்களில் எடுத்து வரும் திருவிழா நடைபெறும்.

10. அனைத்து திருவிழாகளிலும் பாலி நடனம் ஆடுவார்கள், அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களை கதைகளாக சொல்வார்கள். ஹிந்துக்களின் சொர்க்க பூமி பாலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உலகின் அழகிய தீவுகளில் பாலி முக்கிய இடம் வகிக்கிறது. அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியமிக்க ஹிந்து கலாச்சாரம், நடனம், இசை என்று இந்த தீவு உலக சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை.

வேலூர் மாவட்டத்தில் ஒரு சிவாலயம்!!!

தமிழகத்தின், வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விண்ணம் பள்ளியில் வரலாற்று சிறப்பு மிக்க அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. கி.பி.12-ம் நுற்றாண்டில் சோழர் காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டது.
ஈசானிய பார்வையில் வாயிற்படி கட்டப்பட்ட இந்த கோவிலில் அகத்திய முனிவர் வழிபட்டுள்ளார். இங்கு தரிசனம் செய்பவர்களுக்கு திருமணம் நடக்கும். நோய்கள் நீங்கும் என்று நம்புகிறார்கள்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5-ம் திகதி முதல் 11-ம் திகதி வரை காலை 6 மணி முதல் 7 மணி வரை சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.
லிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளியானது முதலில் கோவிலின் முன்புள்ள நந்தி மண்டபத்தின் உள் நுழைந்து கோவிலில் உள்ள மூன்று பிரகாரங்களை கடந்து பின்னர் லிங்கத்தின் மீது விழுகிறது.
முதலில் லிங்கத்தின் மேல்புறத்தில் விழுந்த ஒளி பின்னர் படிப்படியாக லிங்கத்தின் மையப் பகுதியை அடைகிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் 15 நிமிடங்களில் நடந்து விடுகிறது.
இன்று காலை 6.30 மணிக்கு சூரிய ஒளி விழுந்து பின்னர் காலை 6.45 மணிக்கு மறைந்து விட்டது. இந்த அரிய நிகழ்ச்சியை பார்த்த திரளான பக்தர்கள் உணர்ச்சி பெருக்கில் நமச்சிவாய என கோஷமிட்டனர். இது அற்புதமான காட்சியாகும்.
இதைகாண தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகத்திலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். பக்தர்கள் 7 நாள் இதை தரிசனம் செய்தால் 7 ஜென்ம தீவினைகள் அகன்று நன்மை பெறலாம் .