Saturday, 6 April 2013

இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்

அண்மையில் ஒரு மடலாடற்குழு விவாதத்தில் வெளிநாட்டில் வாழ்ந்துவரும் நண்பர் ஒருவர் எழுதினார் - “ நேற்றுதான் `Dogma’ எனும் படம் பார்த்தேன். அது கிறிஸ்தவ சமயத்தின் பின்நவீனத்துவ விமர்சனம் என்று காண்கிறேன். ஒரு சமயம் உலக அளவிற்கு பரவுகிறது என்றால் அதன் அடிப்படை அசைக்க முடியாத உண்மைகளைக் கொண்ட சத்யமதமாக இருக்க வேண்டும். இல்லை இழுபட்டு அழியும். இன்று கிறிஸ்தவத்திற்கு அந்த நிலைதான். அது `தத்துவங்களை` அடிப்படையாகக் கொண்டு அமையாமல், யார்,யாரோ சொன்ன கதைகளை வைத்து, தேவாலயம் எனும் மையம் செய்த நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு தொழிலாக நடக்கிறது. அங்கு `சிந்தி` என்பதை விட `நம்பு` என்பதே பிரதானம். `அறிவு` என்பது கீழ் போய் `மூடநம்பிக்கையே` முன்வைக்கப் படுகிறது. இந்த ஆங்கிலப் படம் இது பற்றிய பல கேள்விகளை எழுப்புகிறது… ஒரு சொற்பொழிவிற்கு நெதர்லாந்து போயிருந்தபோது, கிறிஸ்துமஸ் கொண்டாட தேவாலயம் போனால், ஆள் வராமல் தேவாலயம் மூடியே கிடந்தது. அங்கெல்லாம், கிறிஸ்தவத்தை ஒரு பொருட்டாக யாரும் மதிப்பதில்லை. அது பாட்டுக்கு ஒரு மூலையில் கிடக்கிறது. அவ்வளவுதான்… இந்த நிலையை சரிகட்ட, தேவாலய நிறுவனம் புதிய சந்தையை எதிர்நோக்குகிறது. .. இந்தியா போன்ற நாடுகளில்தான் காசிற்காக சிறுநீரகத்தையே விற்கும் போது, காசிற்காக கட்சி மாறும் போது, காசிற்காக `மதம்` மாறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லையே? என்ற எதிர்பார்ப்பில் இச்சந்தை விரிவில் அது ஈடுபட்டிருக்கிறது. ஆனால், இது தோல்வியுறும்”.






அவருக்குப் பதிலளிக்கையில் நான் குறிப்பிட்டேன் - ”ஆமாம், நீங்கள் கூறியது போல மேற்குலகில் கிறிஸ்தவம் கடுமையாக விமர்சிக்கப் படுகிறது. அதை ஒரு enlightened மார்க்கமாக சிந்திக்கும் மக்கள் யாருமே அங்கு நினைப்பதில்லை. ஆனால், இந்தியாவில், தமிழகத்தில் இந்த விமர்சனங்களின் துளிகள் கூட வந்து சேர்வதில்லை என்பது தானே நிதர்சனம்? இங்கு ஊடகங்கள், அரசியல் அதிகார சக்திகள் எல்லாம் கிறிஸ்தவ அமைப்புகள் கையில் இருக்கிறது. ஒருபக்கம் அவை இந்த தேசத்தின் கலாசாரத்தின் மீதும், அதன் சமயங்கள், தத்துவங்கள் மீதும் அவதூறுகளையும், ஏளனத்தையும் பரப்பி வருகின்றன. இன்னொரு புறம், இதே கலாசாரத்தின் கூறுகளைத் திருடி, அவற்றின் மீது கிறிஸ்தவ முத்திரையைக் குத்த முயன்று கொண்டிருக்கின்றன. .. கிறிஸ்தவ பொய்மை இங்கு அங்கீகாரத்துடன் அரங்கேறுகிறது. ஆனால் கிறிஸ்தவத்தைப் பற்றிய நேர்மையான விமர்சனம், ஏன் பிரான்ஸ் போன்ற “கிறிஸ்தவ” நாடுகளிலேயே தங்குதடையின்றி பொதுத்தளத்தில் கிட்டும் விமர்சனம் கூட இந்தியாவில் கிட்டுவதில்லையே??”






சொல்லப் போனால், கிறிஸ்தவம் காலூன்ற முயன்ற ஆரம்ப காலங்களிலேயே, அது இந்தியாவில் கடுமையாக விமர்சிக்கப் பட்டிருப்பது வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும். 16ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு முதன்முதலில் வந்த சீசன்பால்கு என்ற பாதிரியை தமிழறிஞர்கள் நேரடியாகவே எதிர்கொண்டு கிறிஸதவ மதத்தின் அடிப்படைகள் என்று சொல்லப் படும் கருத்துக்கள் குறித்து அறிவார்ந்த கேள்விகள் எழுப்பினர். நம் தரப்பில் அவற்றைப் பதிவு செய்யாததால், காலனிய வரலாற்றின் ஒரு பகுதியாக “ஹிந்து அக்ஞானிகளின் கேள்விகள்” என்ற முத்திரையுடன் அவை பாதிரியாரால் ஆவணப் படுத்தப் பட்டுள்ளன. துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய “ஏசு மத நிராகரணம்” என்ற நூலின் பிரதி இப்போது அச்சில் இல்லை, மறைந்தே விட்டது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட ஆரிய சமாஜ நிறுவனர் தயானந்தர், சுவாமி விவேகானந்தர் தொடங்கி “சைவதூஷண பரிகாரம்” எழுதிய ஆறுமுக நாவலர் வரை இத்தகைய விமர்சனங்களைத் தொடர்ந்து செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.






ஆனால் சுதந்திர இந்தியாவின் செக்யுலர்தனமும், நேருவிய சோஷலிசமும் இந்து அறிவுலகத்தையும் பீடித்திருக்கிறது.. நண்பருக்கு எழுதிய பதிலில், ”இதைப் பேசப் போனால், உடனடியாக “எம்மதமும் சம்மதம்” என்ற புள்ளிக்கு சராசரி இந்துக்கள் நகர்ந்து விடுகிறார்கள். பிற மதங்களின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையும், அதிகார வெறியையும் விமர்சிப்பது கூட தவறான விஷயம் என்ற கருத்து இந்து மனதில் உள்ளது. இதை, இதையே தான் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர் எதிர்பார்க்கிறார்கள்! கிறிஸ்தவ மோசடியைப் பற்றிப் பேசுவதே மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் என்ற கருத்தே பரவலாக உள்ளது… அது அகல வேண்டும” என்றும் குறிப்பிட்டேன்.






இந்தச் சூழலில், “Expressions of Christianity, with a Focus on India” என்ற தொகுப்பு நூலைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பிரசார நெடி சிறிதும் இல்லாமல், அதே சமயம் கசப்பான உண்மைகள் எதையும் மறைக்காமல் எழுதப் பட்ட பல அருமையான கட்டுரைகள் இதில் வாசிக்கக் கிடைக்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.






நூலின் அமைப்பும் சிறப்பாக உள்ளது.






கிறிஸ்தவத்தின் தொடக்கமும் ஆரம்பகால வரலாறும், மேற்குலகில் கிறிஸ்தவத்தின் முகங்கள், இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் கிறிஸ்தவத்தின் முகங்கள், கிறிஸ்தவத்திற்கு அறிவுலகம் விடுத்த சவால்கள், மேற்குலகில் கிறிஸ்தவத்தின் தேய்வு ஆகிய ஐந்து பகுதிகளின் கீழ் சிறியதும், பெரியதுமாக பல்வேறு அறிஞர்களும், ஆய்வாளர்களும் எழுதிய 40 கட்டுரைகள் உள்ளன.






”கிறிஸ்தவம் தான் பீற்றிக் கொள்வது போல அச்சு அசலான மதம் கிடையாது. பழைய ஏற்பாடு ஏராளமான விஷயங்களை பழைய மெசபடோமிய, எகிப்திய மூலங்களில் இருந்து பெற்றது என்பது இப்போது பரவலாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. அதே போன்று புதிய ஏற்பாடு தனது மையமான படிமங்களையும், நம்பிக்கைகளையும் அக்காலத்திய பன்முகப் பட்ட கிரேக்க கலாசாரத்திலிருந்தும் (Hellenistic - cosmopolitan culture), கிழக்கு மத்திய தரைக் கடல் பிரதேசத்தில் அப்போது பரவியிருந்த இந்திய மதங்களிடமிருந்துமே பெற்றது. .. குறிப்பாக, உபநிஷத- பௌத்த சிந்தனைகள் கூறும் முக்தி பற்றிய *தத்துவக்* கோட்பாடு, மறுபிறவி மற்றும் பிறவிச் சுழல் பற்றி ஏதும் அறியாத யூத பின்னணியில் நுழைந்து, ஒரு இறையியல்-நம்பிக்கை சார்ந்த கோட்பாடாக உருமாறியது தான் கிறிஸ்தவத்தின் கதிமோட்சம் (liberation) என்கிற கோட்பாடு. பண்டைக் காலத்திய பலதெய்வ வழிபாட்டின் மறைமுக-சுவடுகள் தவிர்த்து இந்தக் கோட்பாடு தான் கிறிஸ்தவத்தை இஸ்லாம், யூதம் ஆகிய “ஆபிரகாமிய” மதங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது..”






- ”Christianity, a Man made Religion indebted to India” என்ற தலைப்பில் பெல்ஜிய அறிஞர் கொய்ன்ராட் எல்ஸ்ட் (Koenraad Elst)எழுதிய கட்டுரையிலிருந்து






இந்த அரிய கட்டுரையில், எல்ஸ்ட் கிறிஸ்தவத்தின் சடங்குகள், பண்டிகைகள், சமயக் கருத்துக்கள் உருவான விதம் பற்றி சுவைபட விளக்குகிறார். தன் இளமைப் பருவத்தில் ஏசு இந்தியாவிற்கு வந்தார், காஷ்மீரில் வாழ்ந்தார் என்றெல்லாம் இப்போது பிரசாரம் செய்யப் படும் “Jesus in India” என்கிற கருதுகோள் உருவாகி வளர்ந்தது பற்றிய முழுமையான சித்திரமும் இதில் உள்ளது.






கிறிஸ்தவத்தில் பெண்கள் (Women in Christianity) என்ற தலைப்பில் வரலாற்று அறிஞர் மிஷேல் டானினோ (Michel Danino) வின் கட்டுரை இன்னொரு முத்து. பெண்மையைக் கீழானதாக சித்தரிக்கும் ஆதியாகமம், செயிண்ட் பாலின் பெண்மை பற்றிய வசனங்கள், கத்தோலிக்க சர்ச் அதிகார பீடம் மதத்தின் பெயரால் ஏராளமான பெண்களைக் கொன்று குவித்த “சூனியக்காரி வேட்டைகள்” (Witch hunting), கிறிஸ்தவ இறையியலில் இன்று வரை தொடரும் பெண்மை மீதான அச்சம் ஆகியவை பற்றியது இந்தக் கட்டுரை.






ஹிட்லர் இன்று உலகத்தின் மிகப் பெரிய தீய சக்தியாகவும், மகா வில்லனாகவும், “கிறிஸ்துவுக்கு எதிரானவராகவும்” (anti Christ) மேற்குலத்தால் சித்தரிக்கப் படுகிறார். ஆனால் நாசிசத்தின் உருவாக்கத்திலும், யூத வெறுப்பிலும் கிறிஸ்தவத்தின் தாக்கம் மையமானது மட்டுமல்ல, அன்றைய ஐரோப்பிய கிறிஸ்தவ அதிகார பீடங்கள் நாசிசத்தை முழுமையாக ஆதரிக்கவும் செய்தன என்றும் சொன்னால் உங்களுக்கு வியப்பு ஏற்படுகிறது இல்லையா?? மேற்குலகில் நன்கறியப் பட்ட இந்த விஷயங்கள் இந்தியாவில் வெளிச்சத்துக்கு வரவே இல்லை. கலவை வெங்கட் எழுதியிருக்கும் “From the Holy Cross to the Holocaust” (என்ன அட்டகாசமான தலைப்பு!) என்ற இது பற்றிய கட்டுரை கண்டிப்பாகப் படிக்கப் படவேண்டியது.




”பின்னர் காரைக்காலின் பாதிரி (Father Coeurdoux) ஒரு பெரிய சுத்தியலை எடுத்துக் கொண்டு வந்தார். சிவலிங்கத்தை எட்டி உதைத்தார். சுத்தியால் உடைத்தார். பின்னர் விஷ்ணு மற்றும் பிற திருவுருவங்களையும் உடைக்குமாறு காப்பிரிகளுக்கும், மற்ற ஐரோப்பியர்களுக்கும் ஆணையிட்டார். சீமாட்டி (கவர்னர் மனைவி) பின்னர் பாதிரியிடம் சென்று அவர் இஷ்டப்பட்ட படி விக்கிரகங்களை உடைத்துக் கொள்ளலாம் என்று சொன்னாள். ’ஐம்பது வருடங்களாக சாத்தியப் படாதிருந்த ஒரு விஷயத்தை சீமாட்டி நடத்திக் காட்டியிருக்கிறாள்; பழங்காலத்தில் கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்த மகாத்மாக்களில் ஒருவர் தான் அவள் உருவில் வந்திருக்க வேண்டும்’ என்று பாதிரி சொன்னார்.














சீதாராம் கோயல் (1921-2003)



பிறகு வர்லாம் (கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தமிழர்), தன்னையும் மகாத்மா என்று சீமாட்டியும், பாதிரியும் கருதவேண்டும் என்ற எண்ணத்தில், அவர்கள் முன்னிலையில், பத்துப் பன்னிரெண்டு தடவை தன் செருப்புக் காலால் சிவலிங்கத்தை எட்டி உதைத்தான். பின்னர் கொக்கரித்துக் கொண்டே அதன் மீது காறி உமிழ்ந்தான். பிறகு சீமாட்டியைப் பின் தொடர்ந்து சென்றான். பிறகு அவர்கள் கோவிலுக்குள் செய்த அசிங்கங்களையும், வக்கிரச் செயல்களையும் என்னால் எழுதவோ சித்தரிக்கவோ ஒண்ணாது… அவர்களுக்கு இதனால் என்ன விளையுமோ எனக்குத் தெரியாது.. ஆனால் தமிழர்கள் பிரளயமே வந்து விட்டது என்று எண்ணினார்கள். பாதிரிகளும், கிறிஸ்தவர்களாகி விட்ட தமிழர்களும், கவர்னரும், அவரது மனைவியும் அவர்கள் முன்பு எப்போதுமில்லாதது போல சந்தோஷமடைந்தார்கள் … “






- சீதாராம் கோயல் எழுதிய ”பாண்டிச்சேரி வேதபுரீஸ்வரர் ஆலயம்” என்ற கட்டுரையிலிருந்து.






ஆனந்த ரங்கம்பிள்ளையின் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு, அனைத்து சாதி மக்களின் எதிர்ப்புக்களையும் மீறி பாண்டிச்சேரி வேதபுரீஸ்வரர் ஆலயம் பிரெஞ்சு காலனிய அரசாட்சியாளர்களால் தகர்ப்பட்ட வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கிறது இந்தக் கட்டுரை.






தூய்மை, அன்பு, சேவை இவையே இந்தியாவில் கிறிஸ்தவத்தின் முகங்கள் என்று தீவிர பிரசாரம் இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறது. பாதிரி, மிஷநரி, பிஷப் எல்லாம் போய் இப்போது தமிழில் “அருட்பணியாளர்” என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். திரைப்படங்கள் மற்றும் அனைத்து ஊடகங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாவும் இத்தகைய சொல்லாட்சிகள் பரப்பப் பட்டு பிரசாரம் செய்யப் படுகிறது. எப்பேர்ப் பட்ட கொடுஞ் செயல்களையும், பயங்கரவாதத்தையும் பிரசாரம் மூலமாகவே வெள்ளைச் சுண்ணம் பூசி ம்றைத்து விடலாம் என்று காலனிய, சர்வாதிகார சக்திகள் கருதுவது போலவே கிறிஸ்தவ மத அதிகார அமைப்புகளும் கருதுகின்றன.






சொல்லப் போனால் கிறிஸ்தவ மத மிஷநரி அமைப்பு முழுவதுமே காலனிய அதிகார மயமாக்கலின் ஒரு கருவி மட்டுமே என்பதைப் பல வரலாற்றாசிரியர்கள் தெளிவாக ஆவணப் படுத்தியுள்ளனர். ஆசிய காலனியாதிக்கத்தில் மிஷநரிகளின் அபரிமிதமான பங்கு பற்றி கே.எம். பணிக்கர் எழுதிய Christian Missions in Asia என்ற விரிவான கட்டுரையும் இந்த நூலில் உள்ளது. இந்தியாவின் கோவா கடற்கரை தொடங்கி பர்மா, தாய்லாந்து, மலேசியா, சீனா, ஜப்பான் என்று ஆசியா முழுவதும் கிறிஸ்தவ மிஷன்கள் ஒவ்வொரு நாட்டிலும் நுழைந்து எப்படி அதன் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கின்றன என்பது பற்றிய துல்லியமான சித்திரம் அந்தக் கட்டுரையில் இருக்கிறது. (இதே பணிக்கரின் நூலின் அடிப்படையில் திண்ணை இதழில் புருஷ் அவர்கள் ஆசியாவும் மேற்கத்திய ஆதிக்கமும் எனகிற விரிவான கட்டுரையை முன்பு எழுதியிருக்கிறார்).






கோவாவின் புனித விசாரணைகள், அதன் பின்னணி, அங்கு இந்துக்களுக்கு இழைக்கப் பட்ட கொடூரங்கள் பற்றிய இரு முக்கியமான கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. ஆல்ஃபிரடோ டிமெல்லோ (Alfredo De Mello) வின் “Pouncing on Goa”. ராதா ராஜன் எழுதிய ”Antecedents of the Goa Inquisition”.






”கிறிஸ்தவத்திற்கு அறிவுலகம் விடுத்த சவால்கள்” என்ற பகுதியில் தொகுப்பாசிரியர்களின் அயராத உழைப்பும், பரந்த வாசிப்பும், கூரிய பார்வையும் காணக் கிடைக்கிறது. ராபர்ட் இங்கர்சால் (Heretics and Heresies), பெட்ரண்ட் ரஸ்ஸல் (Why I am not a Christian) ஆகிய சிந்தனையாளர்கள் கிறிஸ்தவத்தை விமர்சித்து எழுதிய ”கிளாசிக்” கட்டுரைகளை சேர்த்திருப்பது நல்ல ரசனை. கலிலியோ, மார்க் ட்வெய்ன் உள்ளிட்ட மேற்குலகின் பல முக்கிய சிந்தனையார்களின் மேற்கோள்கள் களஞ்சியத்தை அளித்திருப்பது அருமை.



கிறிஸ்தவம் உண்மையிலேயே உண்மையாக இருக்கவேண்டும் என்று யாராவது விரும்புவார்களா என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் அதன் புனிதநூல் மிக வெளிப்படையாகக் கூறுவதன் அடிப்படையில் விசுவாசிகளாக இல்லாதவர்கள் நிரந்தர நரகத்தில் தண்டிக்கப் படுவார்கள்.. இந்தப் பட்டியலில் என் அப்பா, என் சகோதரர் மற்றும் என் உற்ற நண்பர்கள் எல்லோருமே வந்து விடுகிறார்கள்! இது முற்றிலும் கண்டனத்திற்குரிய கோட்பாடு இல்லாமல் வேறென்ன? (.. and this is a damnable doctrine).






- சார்லஸ் டார்வின்


இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்

கங்கையும், காவிரியும், இமயமும், பொதிகையும் பெருங்காடுகளும் சூழ்ந்த நிலப் பரப்பில் உருவாகியவை இந்து, பௌத்த, சமண மதங்கள். மாறாக அங்கங்கு சில சுனைகள் மட்டுமே கொண்ட வறண்ட பாலை நிலத்தில் தோன்றியவை ஆபிரகாமிய மதங்கள். இயற்கையின் இந்த விசித்திரமே இந்த இரு மத-கலாசாரங்களின் உலகத்தைப் பற்றிய பார்வையில் பங்கு வகிக்கிறதோ? பாரத மதங்கள் பன்முகப் பட்ட தன்மையும், இயற்கையின் கொடைகளைப் பற்றிய பிரக்ஞையும் கொண்டவையாக இருக்க, செமித்திய மதங்கள் ஒற்றைப் பார்வையுடனும், இயற்கையின் வதைக்கும் முகத்தையே அதிகம் கண்டவையாகவும் இருக்கின்றன. இத்தகைய சிந்தனை இழையில் தொடரும் லோகேஷ் சந்திராவின் Theo Diversity and Human Values என்கிற சுவாரஸ்யமான கட்டுரை மதங்களின் உருவாக்கத்தில் இயற்கை மற்றும் பூகோள அமைப்புகள், வாழ்க்கை முறைகள் உருவாக்கும் பங்கு பற்றி ஆராய்கிறது.






இந்த அருமையான நூலை உருவாக்கியிருக்கும் பரமேஸ்வரன், அரவிந்தன் நீலகண்டன் ஆகிய தொகுப்பாசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். இந்தப் புத்தகம் கிறிஸ்தவத்தின் கருத்தியலையும், வரலாற்றையும் பற்றிய முதல் தொகுப்பு, இதைத் தொடர்ந்து ”Christianity: Proselytism and Conversion: with a focus on India என்ற தலைப்பில், நடைமுறையில், சமகாலத்திய கிறிஸ்தவத்தின் மதமாற்ற செயல்பாடுகள் பற்றிய இன்னொரு தொகுப்பும் வெளிவரப் போகிறது என்று முன்னுரை கூறுகிறது. அதையும் உடனடியாக அவர்கள் வெளியிடவேண்டும். இந்து அறிவியக்கத்தின் வளர்ச்சிக்கு இந்த இரு தொகுப்புக்களும் சிறந்த துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள்


காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.பெரிய பெரிய மரங்கள் வேரோடு சாய்க்கின்ற்து.அதே சமயம் சிறிய நாணற்புற்கல் வளைந்து கொடுக்கின்றன.வெள்ளம் நின்றவுடன் நிமிர்ந்து கொள்கிறது.இதே போன்றதுதான் நம் வாழ்க்கைச்சக்கரம்.யார் “ஓம்”, “ஓம்”, “ஓம்” என்று சதா ஜெபிக்கின்றார்களோ அவர்கள் நவக்கிரகங்களின் கதிர்வீச்சுகளால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை;நெருக்கடி காலத்தில் வளைந்து கொடுத்து பின் நிமிர்ந்து கொள்கின்றனர். “ஓம்” ஜெபிக்காதவர்கள் அடியோடு வீழ்கின்றனர்.இதை நாம் அனேகர் வாழ்க்கையில் காணலாம். “ஓம்” என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.இந்த மும்மூர்த்திகளை கிறிஸ்தவர்கள் பிதா,சுதன்,பரிசுத்த ஆவி என அழைக்கின்றனர்.ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம்,வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.






வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும்.இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம்.கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று.மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும்.மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும்,குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும்.வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும்.இளநீரில் ஓதிக்கொடுக்க உடல் காங்கை தணியும்.பிறரை ஆசிர்வாதிக்கும்போது “ஓம்” என்னும் மின்சக்தி தான்,நம் கைகளில் இருந்து வெளியே பாய்கிறது.பிறருக்குண்டான குறைகள் நீக்குகின்றன.






ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும்.பின் “ஒம்”., “ஓம்”, “ஒம்” என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும்.கர்ப்பமான தாய்மார்கள் “ஒம்” , “ஓம்”, “ஓம்” என சதா காலமும் ஜபித்துவந்தால் தெய்வக்குழந்தைகள் பிறக்கும்.






வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது.மீறி ஜபித்தால், உடல் தள்ளாடி விபத்து உண்டாகலாம்.மூச்சை உள்ளே இழுக்கும் போது “ஓம்” “ஓம்” “ஓம்” என ஜெபிக்கலாம்.அப்படி ஜெபிக்கும்போது மூச்சை உள்ளே இழுப்பதும்,வெளியே விடுவதும் ஒரே சீராக இருக்க வேண்டும்.ஊசியில் மருந்தை ஏற்றிய பின் இறக்குவது மாதிரி அமைய வேண்டும்.எக்காரணம் கொண்டும் மூச்சை அடக்கக் கூடாது.அதாவது கும்பகம் செய்யக்கூடாது.மந்திரங்களுக்கேற்றது சைவ உணவுதான்.சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு வருவதால் விரைவில் பலன் கிடைக்கும்.


ஆத்மார்த்தமான நன்றிகள்:மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் எழுதிய ஆன்மீகப்பயணம் பாகம் 1,பக்கம் 218,219.

அயோத்தி இராமர் கோவில்:உண்மை என்ன?

அயோத்தி: உண்மை நிலை என்ன?

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 ஆம் தேதியை இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் துக்க நாளாகக் கொண்டாடுகின்றன.அன்றுதான் 6.12.1992 அயோத்தியில் பாபர் மசூதியை பா.ஜ.க., வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ்.,சிவசேனா போன்றவை இடித்தன.எனவே, இந்தியாவில் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு இல்லை என இந்திய முஸ்லீம்கள் துக்க நாளாகக் கொண்டாடுகின்றன.(அதே சமயம் பாகிஸ்தானுக்கு பயங்கர சந்தோஷம்! இந்திய முஸ்லீம்களைக் கொண்டே இந்தியாவை அழிக்க திட்டமிடத்துவங்கியது.பாகிஸ்தானின் பள்ளிப்பாடத்திட்டத்திலேயே இந்திய எதிர்ப்பு இருக்கிறது.நிஜத்தில் பாகிஸ்தானுக்கு இந்திய முஸ்லீம்கள் மீது சிறிதும் பாசம் கிடையாது.இந்தியா அழியவேண்டும் என்பது மட்டுமே இலட்சியம்.)

(இந்தியா சுதந்திரம் வாங்கிய கி.பி.1947 ஆம் ஆண்டில் எனது நாடு பாகிஸ்தான் என இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற முஸ்லீம்களை பாகிஸ்தான் அரசும்,பாகிஸ்தான் முஸ்லீம்களும் ஏற்றுக்கொள்ளவில்லை;அவர்கள் தமது அடிப்படை உரிமைகளுக்காக உருவாக்கிய அமைப்புதான் முஹாஜிர் குவாமி இயக்கம்?!)



அதேநாளை இந்துக்கள்,இந்து இயக்கங்கள் வெற்றி நாளாகக் கொண்டாடுகின்றன.இதில் எது நிஜம்? என்பதை அரசு ஆவணங்கள், தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகள் என பல விஷயங்களை ஆராய்ந்து பார்த்தால் அயோத்தியில்தான் இராமர் பிறந்தார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன.

விஸ்வ இந்து பரிஷத் கூறுவது என்ன?

இந்தியா முழுக்க சுமார் 30,000 இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு, அவை மசூதிகளாகவும், சர்ச்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.நாங்கள் கேட்பது என்னவென்றால் அதில் 3 இடங்களை மட்டும் இந்துக்களாகிய எங்களுக்கு விட்டுக்கொடுங்கள்.எங்களின் வேதங்களில் அந்த 3 இடங்கள் புனித இடங்களாக எங்கள் முன்னோர்கள் கூறியுள்ளனர்.அந்த மூன்று இடங்கள் அயோத்தி ராம ஜன்ம பூமி, மதுரா கிருஷ்ண ஜன்ம பூமி, காசி சிவன் கோவில்!!!!

சரி! ஒரு இடம் மசூதி என்பதற்கு உரிய அடையாளங்கள் எவை எவை என திருக் குரான் கூறுகிறது?

1.மினார் (உயர்ந்த கோபுரம்,அதன் மேல் முனையில் பச்சைநிறம்) இருக்க வேண்டும்.(அயோத்தியில் மினார் அந்த இடத்தில் இல்லை)

2.குளம் அல்லது நீர்நிலை = தொழும் முன் முஸ்லீம்கள் கை மற்றும் கால்களை சுத்தப்படுத்த இருக்க வேண்டும்.(அயோத்தியில் அந்த இடத்தில் நீர் ஆதாரம் இல்லை)

3. தொடர்ந்து 14 வருடங்கள் தினமும் அங்கு தொழுகை நடத்தியிருக்க வேண்டும்.(அயோத்தியில் அந்த இடத்தில் சுமார் 400 ஆண்டுகளாக ஒரு நாள்,ஒரு முறை கூட தொழுகை நடக்க வில்லை;
6.12.1992 க்குப் பின்பு ஒரு முறை அரசியல்பின்புலத்தால் தொழுகை நடந்தது)


ஆக,அந்த இடம் பாபர் மசூதி அல்ல;பாபரின் தளபதிகளால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட ராமர்கோவில்தான்.இந்த உண்மை காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும்;பாரதிய ஜனதாவுக்கும் தெரியும்.அந்தப் பகுதி முஸ்லீம் தலைவர்களுக்கும் தெரியும்.

ஆக,மதத்தில் அரசியல் புகுந்தது.காங்கிரஸின் சிறுபான்மை அணியின் அகில இந்தியத்தலைமை இந்த பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின் மூலம் அரசியல் ஆதாயம் பார்த்தது.காங்கிரஸ்கட்சியும் தான்!!!

வரலாறு சொல்வது என்ன?

கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்புவரை 76 முறை இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அயோத்தியை மையமாகக் கொண்டு போர் நடந்திருக்கிறது.முஸ்லீம்கள் ஜெயிக்கும்போது அந்த இடம் மசூதியாகவும், இந்துக்கள் ஜெயிக்கும்போது அது கோயிலாகவும் மாறி மாறி கட்டப்பட்டுள்ளது.

முதல் இந்திய விடுதலைப்போர் கி.பி.1875 ஆம் ஆண்டு நடந்தது.அப்போது அயோத்தியைச் சேர்ந்த முல்லா (முஸ்லீம் மதத் தலைவர்), உள்ளூர் இந்துத் துறவியை அழைத்து, இந்த இடம் உங்களுக்கே சொந்தம் வைத்துக்கொள்ளுங்கள் என பத்திரமே பதிந்துவிட்டார்.
இதை அறிந்த பைசாசாபாத் மாவட்ட ஆட்சியாளராக இருந்த கிறிஸ்தவ ஆங்கிலேயன் ஒருவன் இருவரையும் தூக்கிலிட்டான்.ஆதாரம்:பைசாசாபாத் மாவட்ட அரசு ஆவணங்கள்,கி.பி.1875.

இந்நிலையில், நம்ம ராகுல் காந்தி நேற்று ஒரு அறிக்கை விட்டார்.அதில் தகுதி இருந்தால் முஸ்லீம் ஒருவர் கூட இந்தியாவின் பிரதமராகலாம் என அதில் சொன்னார்.

அதற்கு சீறும் புலி பால்தாக்கரே தனது பத்திரிகையான சாம்னாவில் பதிலடி கூறியதை நாம் கவனித்தே ஆக வேண்டும்:

ராகுல் ஒன்றும் ஒட்டுமொத்த இந்தியாவின் முதலாளி அல்ல. இந்தியாவின் முஸ்லீம் சமுதாயம் குடும்பநலத்திட்டம், வந்தே மாதரம் பாடலை ஏற்றுக் கொள்ளுதல், அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதை ஆதரித்தல் = இவற்றை கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர்தான்,முஸ்லீம் ஒருவர் இந்தியாவின்பிரதமராக முடியும்.

(உலகத்தில் இந்துக்களுக்கு என இருப்பது ஒரே நாடு அது பாரதம் எனப்படும் இந்தியா மட்டுமே! கிறிஸ்தவ நாடுகள் 100 க்கும் மேலாக இருக்கின்றன.இஸ்லாமியநாடுகள் 40 க்கும் மேலாக இருக்கின்றன.இந்த நாட்டையும் முஸ்லீம்கள் அல்லது கிறிஸ்தவர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு இந்துக்களாகிய நாங்கள் எங்கே போவது?இனிமேல், இந்தியாவில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் விட்டுத்தர இந்துக்களாகிய எங்களுக்கு வேறு எதுவும் இல்லை;இனி விட்டுத்தர மாட்டோம்)

பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்1

பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது., பாகம் - 1


கி.பி.2002 முதல் கி.பி.2020க்குள் நமது பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது.சித்தர்கள் பாரதத்தை மையமாகக் கொண்டு இந்த பூமியை ஆட்சி செய்யப்போகிறார்கள்.பழனி மலையில் இருக்கும் நவபாஷாணமுருகன் சிலை சிதைந்துவிட்டது நம் அனைவருக்கும் தெரியும்.இந்த சிலையை போகர் நிறுவினார்.அவர் இதே போல் ஒன்பது நவபாஷாணசிலைகளை உருவாக்கி பழனிமலையிலும்,அதைச் சுற்றியுள்ள சில இடங்களிலும் மறைத்து வைத்திருக்கிறார்.அதில் ஒன்று பழனி மலையிலிருந்து சபரி மலைக்குச் செல்லும் ஒரு இடத்தில் இருக்கிறது.அதை ஒரு நாகம் காவல் காக்கிறது.கிபி 2006 முதல் கிபி 2020 க்குள் போகர் விரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேறொரு சித்தரால் பழனி மலையில் புதிய நவபாஷாண சிலை நிறுவிவிடுவார்.அவ்வாறு நிறுவப்பட்டதும்,பாரதம் உலக வல்லரசு நாடாக மாறிவிடும்.


ஆதாரம்:பல ஜீவ நாடிகள்


தகவள்:சித்தர்களின் மகிமை,பக்கம்24,எழுதியவர்:ஜோதிட குரு பி.எஸ்.பி.ஐயா அவர்கள்


கிடைக்குமிடம்:சாயி சங்கரம் பப்ளிகேஷன்ஸ்,11ஈ/38 பஜனைக்கோவில் முதல் தெரு,சூளைமேடு,சென்னை 94.தொலைபேசி:044-55182568,23614581.

ஓம் சிவ சிவ ஓம் மந்திரத்தின் தோற்றம்:-நமது வாசகர் ஒருவர் ஆன்மீக ஆராய்ச்சி செய்து கண்டறிந்தது!!!

சிவ சிவ என்கிலார் தீவினையாளர் சிவ சிவ என்றிட தீவினைமாளும் சிவ சிவ என்றிட தேவருமாவர் சிவ சிவ என்னச் சிவகதி தானே.
இது திருமூலர் சித்த தெய்வத்தின் திருமந்திரம்.  இதை அனைவரும் அறிவர்.  இதில் சிவ சிவ என்பது சிவநெறி செல்வர்களால் பெருமையாக அழைக்கப்படும் காரணப் பஞ்சாட்ரம் ஆகும்.
நமசிவய - ஸ்தூல பஞ்சாட்சரம் (உடல் திருவைந்தெழுத்து)
சிவயநம - சூட்சும பஞ்சாட்சரம் (உயிர் திருவைந்தெழுத்து)
சிவய சிவ சிவ - அதிசூட்சும பஞ்சாட்சரம் (கடி உயிர் திருவைந்தெழுத்து)
சிவ சிவ - காரண பஞ்சாட்சரம் (தோற்ற திருவைந்தெழுத்து)
மேற்கண்ட திருமந்திரத்தின் பொருள்:- (எம் சிற்றறிவுக்கு எட்டியவரையில் விளக்கியிருக்கிறேன்.  விளக்கம் சரியாக இருப்பின் அது சிவனின் கருணை.  பிழை இருப்பின் அது சிவனின் திருவிளையாடல்.  எதுவும் என்னால் நடந்ததல்ல.  எல்லாம் அவன் செயல்)
தீவினையாளர் (பாவம் செய்தவர்கள்) சிவ சிவ என்று செபிக்க மாட்டார்கள், செபிக்கமுடியாது.  அவரவர் செய்த தீவனைகள் செபிக்கவிடாமல் தடுக்கும்.  அவ்வாறு செபித்து வந்தால் தீவினைகள் யாவும் (மூட்டை மூட்டையாக இருந்தாலும்) அழிந்து போகும்.  தீவினைகள் அகன்றால் பிறவி நிலையில் மேன்மை பெற்று மனிதப்பிறவியிலிருந்து தேவராக (சிவகணமாக) மாறமுடியும்.  அவ்வாறு மேன்மை பெற்று சிவகணமாகி முக்தி பெற்று சிவகதியை (சிவனுள் ஒடுங்குதல் - பிறவியிலா பெருநிலை) அடையமுடியும்.
இது சிவ சிவ என்ற மந்திரத்தின் விளக்கம் மட்டுமே.  ஒவ்வொரு சித்தர்களுக்கும் மூலமந்திரங்கள் இருப்பதை எங்கள் ஊரின் நூலகத்திலுள்ள சித்தர்கள் நூல்களிலிருந்து அறிந்தேன்.  அவையாவன:-
1. நந்தீசர் ------  சும்
2. போகர் ------  சம்
3. அகத்தியர் ------ ஞாம்
4. கொங்கணர் ------- ணம்
5. சட்டைமுனி ------- டம்
6. சுந்தரானந்தர் ------ நம்
7. ராமதேவர் ------- தம்
8. கருவூரார் ------ பம்
9. பிரம்மமுனி ------ மம்
10. ரோமர் ------ ரம்
11. மச்சமுனி ------ யம்
12. புண்ணாக்கீசர் ------ வம்

13. இடைக்காடர் ------- லம்
14. கோரக்கர் ------- ளம்
15. வாசமுனி ------- றம்
16. கமலமுனி ------ ழம்
17. அழுகண்ணி சித்தர் ------ னம்
18. திருமூலர் ------ ஓம்
இம்மூலமந்திரங்களில் திருமூலர் சித்த தெய்வத்தின் மூலமந்திரம் ஓம் ஆகும்.
ஓம் சிவ சிவ ஓம் :-
ஓம் --- ஓரெழுத்து மந்திரம் (இரு முறை) --- இரு எழுத்துக்கள்
சிவ --- ஈரெழுத்து மந்திரம் (இரு முறை) --- நான்கு எழுத்துக்கள்
ஆக மொத்தம் ஆறு எழுத்துக்கள் (சிவம் - 5 + சக்தி - 1). சிவனும், சக்தியும் சம அளவில் கலந்த அற்புத மந்திரம் தான் ஓம் சிவ சிவ ஓம்.  சிவ சிவ - சந்நியாசிகளுக்கு மட்டுமே உரித்தானது (சிவ தத்துவம் மட்டும் தனித்திருப்பது).  ஓம் என்ற மந்திரமே அனைத்து மந்திரங்களுக்கும் சக்தி தருவது.  சக்தியின் வடிவுடையது.  ஆதிசக்தியை குறிப்பது.  ஓம் சிவ சிவ ஓம் --- இல்லற நெறியாளர்களுக்கு உகந்தது (சிவ சக்தி தத்துவமானது).  சிவசக்தி தத்துவமே குமரக்கடவுள் (ஆறுமுகம் - ஆறு எழுத்துக்கள்).  சிவசக்தி வடிவமே உலக தத்துவம்.  இதுவே லிங்க யோனி தத்துவம்.  சிவனும் சக்தியும் இணைந்தால் தான் உலக இயக்கம். 
திருமூலரின் மூலமந்திரம் - ஓம்

திருமூலர் அருளிய மந்திரம் - சிவ சிவ
இதை சம அளவில் சேர்ப்பதால் கிடைப்பதே ஓம் சிவ சிவ ஓம்.                                                               =============================================================================     மேலும் சிறு விளக்கம்:-
தமிழ் மெய்யெழுத்துக்கள் --- 18
சித்தர் ஏடுகளில் கூறப்பட்ட சித்தர்களின் மூலமந்திரங்கள் --- 18
          அவற்றுள் முதல் (சும் --- நந்தீசர்) மற்றும் கடைசி (ஓம் --- திருமூலர்) இவற்றை நீக்கி கம் மற்றும் ஙம்இவற்றை சேர்க்க கிடைப்பது உயிர்-மெய் வரிசை (கம், ஙம், சம்,.......,னம்) மொத்தம் - 18.  இவற்றில் புதிதாக சேர்க்கப்பட்ட மூலமந்திரம் --- கம் (கணபதியின் மூலமந்திரம்).  கணபதியும் ஒரு சித்தர் தாம்.  அவரது சமாதி இமயமலை சாரலில் உள்ளதாக படித்திருக்கிறேன். அவ்வாறெனில் ஙம் என்ற மந்திரம் ஆதி சித்தர் காகபுசுண்டர் சித்தர் பெருமானின் மூலமந்திரமாக தான் இருக்க முடியும். இது பற்றி நம் குருவிடம் விளக்கம் கேட்க வேண்டுகிறேன்.
 
ஆறு ஆதார தியான மந்திரங்கள் (சித்தர் ஏடுகளில் படித்தது):-
மூலாதாரம் --- கணபதி --- ஓம் சிவா
சுவாதிட்டானம் --- பிரம்மா --- நம் சிவ ஓம்
மணிபூரகம் --- விஷ்ணு --- மங் சிவ ஓம்
அநாகதம் --- ருத்திரன் --- சிங் சிவ ஓம்
விசுத்தி --- மகேஸ்வரன் --- வசி சிவ ஓம்
ஆக்ஞை --- சதாசிவம் --- யம் சிவ ஓம்
        என்ன வியப்பு...!  மேற்கண்ட ஆறு ஆதார தியான மந்திரங்களிலும் நம்முடைய ”ஓம் சிவ சிவ ஓம்” மந்திரம் ஒளிந்துள்ளது.    

Friday, 5 April 2013

உங்கள் மகளை ஆளுமைத்திறனுள்ள(Proper Personality) பெண்ணாக்கிட ஒரு அரிய வாய்ப்பு!!!

உங்கள் மகளை ஆளுமைத்திறனுள்ள(Proper Personality) பெண்ணாக்கிட ஒரு அரிய வாய்ப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் அம்மாவும்,அப்பாவும் வேலைக்குப்போய்விடுகின்றனர்;வீட்டில் பெரும்பாலும் மகள்கள் தனியாகத் தான் இருக்கிறார்கள்;பள்ளியில் தரப்படும் வீட்டுப்பாடத்தை வாசித்துவிட்டும்,எழுதிவிட்டும் எப்போதும் டிவி பார்த்தல் அல்லது வகுப்புத்தோழியிடம் செல்போனில் வம்பளத்தல்தான் நடைபெற்றுவருகிறது;இது தமிழ்நாடு முழுவதும் பரவலாக இருந்துவருகிறது;

மாநகரங்களில் இன்னும் ஒருபடிமேலே போய் முகநூலில் கணக்குத் துவங்கி உலகெங்கும் நட்பு வளர்க்கிறார்கள்;நேரில் பழகும் ஆண்,பெண்களின் சுபாவத்தை உணர இயலவில்லை;ஒருவர் பேசும் வார்த்தைகளைக் கொண்டே அவர்/ள் எந்த இடத்தில் பொய் பேசுகின்றனர்? என்ன நினைக்கின்றார்/ள்? என்பதை உணரும் சிந்தனைத்திறன் இன்று குறைந்து வருகிறது.இவர்களிடம் அன்பு செலுத்தவும்,அக்கறையாக இருக்கவும் ஆளில்லை;எனவே,செல்போனில் பேசும்/நேரில் புகழ்ந்து பேசும் கயவர்களின் பசப்பு வார்த்தைகளில் விழுந்து விடுகின்றனர்;டீன் ஏஜ்ஜில் குழந்தையைப் போல நடந்துகொள்வதா? இல்லை பெரியவர்கள் போல செயல்படுவதா? என்ற குழப்பம் 13 வயது முதல் 19 வயது வரை(கிராமப்புற தமிழ்நாட்டில் 25 வயது வரை) தொடர்கிறது;கூடவே,தனி மனித ஒழுக்கம் சிதைந்து,குடும்ப அமைப்பு சிதையத் துவங்கி இருப்பதால்,ஒழுங்கீனங்களே கவுரவம் என்ற போலியான மாயத் தோற்றம் சித்தரிக்கப்படுகிறது.இதுவும் டீன் ஏஜ் பெண்களை தடம் மாறிச் செல்லக் காரணமாக இருக்கிறது;
கூட்டுக்குடும்பமாக வாழும் இடங்களில் வயதானவர்களின் அனுபவ வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவோர் மிகவும் குறைவு.இந்த சூழ்நிலையில் வாரம் ஒருநாள் மட்டுமாவது அம்மா,அப்பா,குழந்தைகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடும் பழக்கமும் அரிதாகிவருகிறது.
மாதம் ஒருமுறை கோவில்களுக்குப் போவதும் குறைந்து வருகிறது.சம்மர் வந்தாலே ஊட்டி,கொடைக்கானல் என்று சென்று அந்த ஊர்களையும் நாறடித்து,தீம் பார்க்குகளில் பணத்தைக் கொட்டிட மட்டும் தெரிந்திருக்கிறோம்.நமது மகள்கள் படிக்கும் பொறியியல் படிப்புகள் அவளை சிறந்த வேலைக்காரியாக மட்டுமே தயார் செய்கிறது;ஆனால்,இல்லத்தரசியாக,பொறுப்புள்ள பெண்ணாக மாற்றிடச் செய்கிறதா?

பருவ வயதிலும்,அதற்குப்பிறகும் தனக்கு வர இருக்கும் & வரும் பிரச்னைகளை தானே எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை நமது மகள்களுக்கு ஊட்டிட முயன்றிருக்கிறோமா?

நமது முன்னோர்களின் பெருமைகளை நமது அடுத்த தலைமுறையான மகள்களுக்குப் போதித்துக் கொண்டே வந்திருந்தால் இன்று பப்கள் சென்னை,கோவை,திருப்பூர்,ஈரோடு,நாகர்கோவில்,மதுரைக்கு வந்திருக்காது;நமக்கே நேரமில்லையே?

இந்தக் குறையைத் தீர்க்க ஒரு அருமையான கோடைகால பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் ஏற்பாடாகியிருக்கிறது.அதுதான் பண்புப்பயிற்சி முகாம்! இந்த முகாமில் பெண்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்; ஒரே குடும்பத்தில் இருந்து அக்கா,தங்கை,மருமகள்,அம்மா,பாட்டி என்று அனைவருமே கலந்து கொள்ளலாம்;

அல்லது

குடும்பத்துக்கு ஒரு பெண்ணை அனுப்பி வைப்பது அவசியம்;தனியாக எனது மகள் இருக்க மாட்டாள் என்று நினைத்தால்,இரண்டு மூன்று தோழிகளாக அனுப்பி வைப்பது அவசியம்;இந்த முகாமுக்கு அனுப்பி வைத்துவிட்டால் இந்த பதினைந்து நாட்களும் பார்க்க முடியாது;செல்லில் பேசிக்கொள்ளலாம்;இடையில் வெளியே வந்தால் மீண்டும் உள்ளே செல்ல அனுமதி இல்லை;

தமிழ்பேசும் ஒவ்வொரு இந்துக்குடும்பப் பெண்களுக்கும் இந்தப் பயிற்சி முகாம் அவசியமானது ஆகும் என்பதை பதினைந்தாவது நாள்தான் உணருவீர்கள்;(எனக்கு தேசபக்தியையும்,தெய்வபக்தியையும் உணர்வில் ஊட்டியது இதே போன்ற ஒரு ஆண்களுக்கான பயிற்சி முகாம் தான்! அதன் பிறகே,நான் தன்னம்பிக்கை மிக்கவனாகவும்,பிறருக்கு வழிகாட்டும் முன்னுதாரணமானவனாகவும் மாறத் துவங்கினேன்!!!!)

இதை நடத்துவது ராஷ்ட்ர சேவிகா சமிதி=தமிழ்நாடு

பயிற்சி நடைபெறும் நாட்கள்;3.5.13 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் 18.5.13 சனிக்கிழமை இரவு 9 மணி வரை

இடம்:சுத்தானந்த ஆஸ்ரமம், ‘அடி அண்ணாமலை’, கிரிவலப்பாதை,திருஅண்ணாமலை

கட்டணம்:ரூ.350/-(உணவிற்காக மட்டும்)

தகுதி:பெண்கள் மட்டும்;13 வயது நிரம்பியிருக்க வேண்டும்;கல்வித்தகுதி அவசியமில்லை;

கொண்டுவர வேண்டியவை:=ராணி க்ருஷ்ணன்,மதுரை ப்ராந்த கார்யவாஹி 09790291516 அல்லது ராதா சந்திரமவுலி 9884081969 அவர்களில் ஒருவரைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுக்கொள்ளலாம்.

பயிற்சிக்குப் பிறகு: இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மாணவி,பெண்ணும் தனது ஒவ்வொரு செயலிலும்  தன்னம்பிக்கையோடும்,தெய்வபக்தியோடும்,தேசபக்தியோடும்,செயல்நுட்பத்தோடும் செயல்படுவார்;அவர்களின் பயம்,கூச்சம் விலகும்;படிப்பில்,குடும்பப் பொறுப்பில்,வேலை செய்யும் இடத்தில் இன்னும் சிறப்பாகச் செயல்பட ஆரம்பிப்பார்;சிறந்த ஆளுமைத்திறனும் உருவாகத்துவங்கும்;இந்த ஆளுமைத்திறன் குறைந்தது இருபது ஆண்டுகளுக்கு வழிநடத்தும்!!!

இந்த அரிய வாய்ப்பைப்  பயன்படுத்திக் கொள்ளவும்.

தகவல் ஆதாரம்: விஜயபாரதம்,தேசிய வார இதழ்,பக்கம் 5, வெளியீடு:12.4.13

ஓம்சிவசிவஓம்

 

நமது மகன்களுக்கு பண்பாடும்,ஆன்மீகமும் பற்றி அறிந்துகொள்ள ஒரு பயிற்சி முகாம்!!!



சுவாமி சித்பவானந்தர் ஆசிரமம் ஒவ்வொரு ஆண்டும் கோடைகால ஆன்மீக மற்றும் இந்துப் பண்பாடு சார்ந்த பயிற்சி முகாமை தேனியில் நடத்தி வருகிறது.இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதன் மூலமாக தியானம்,யோகாசனம்,மேலாண்மை ஆளுமைத் திறன்களைக் கற்றுக் கொள்ளலாம்;ஐந்து நாட்கள் நடக்கும் இந்தப் பயிற்சி முகாமில் பதினாறு முதல் நாற்பது வயது வரையிலான ஆண்கள் யாரும் கலந்து கொள்ளலாம்;முகாம் நாட்களில் வெளியில் செல்ல அனுமதி இல்லை;இந்த ஐந்து நாட்கள் பயிற்சி முகாமுக்கான நன்கொடை ரூ.ஐநூறு மட்டுமே!நன்கொடையினை நேரில் வந்து செலுத்தினால் போதும்;இது தொடர்பாக தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய செல் எண்கள்;ஸ்ரீஸ்வாமி பூர்ணானந்த 90039 34344 மற்றும் ஸ்ரீ ஜி.வி.நாராயணன் 94430 51910                                ஆஸ்ரம அலுவலகம்:+91 4546 253908                             மின் அஞ்சல்:swamiomkarananda@gmail.com
இளைஞர் முகாம்:
இடம்:ஸ்ரீஸ்வாமீ சித்பவானந்த ஆசிரமம்,சத்திரப்பட்டி சாலை,வேதபுரீ,தேனி.
நாள்:22.5.13 புதன் முதல் 26.5.13 ஞாயிறு வரை
முகாம் 21.5.13 மாலை ஏழு மணிக்குத் துவங்கி,26.5.13 அன்று மதிய உணவுடன் நிறைவு பெறும்.
இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதால்,நமது ஆளுமைத்திறன்,தேசபக்தி,தெய்வபக்தி,தனித் திறன்கள் வெளிப்படும்;எதற்காகவும் சிறிதும் அஞ்சமாட்டோம்;ஒவ்வொரு சிறு விஷயத்திலும் ஆழ்ந்த கவனம் செலுத்த ஆரம்பிப்போம்;நமது முன்னோர்கள் கடந்த இருபது லட்சம் வருடங்களாக சாதித்த இந்து தர்மத்தின் சாதனைகளில் ஒரு பகுதியை உணர்ந்து கொள்வோம்.
விருப்பம் உள்ளவர்கள் 15.5.13க்குள் தங்களைப் பற்றிய ஒரு விண்ணப்பத்தினை பின்வரும் முகவரிக்கு போட்டோவுடன் அனுப்பி வைக்க வேண்டும்;
முகவரி:இளைஞர் முகாம்,ஸ்ரீஸ்வாமீ சித்பவாநந்த ஆசிரமம்,சத்திரப்பட்டி சாலை,வேதபுரீ,தேனி-625531.
நன்றி:விஜயபாரதம்,தேசிய வார இதழ்,பக்கம் 27;வெளியீடு: 12/4/13
ஓம்சிவசிவஓம்