சுவாமி சித்பவானந்தர் ஆசிரமம் ஒவ்வொரு ஆண்டும் கோடைகால ஆன்மீக மற்றும்
இந்துப் பண்பாடு சார்ந்த பயிற்சி முகாமை தேனியில் நடத்தி வருகிறது.இந்த பயிற்சி முகாமில்
கலந்து கொள்வதன் மூலமாக தியானம்,யோகாசனம்,மேலாண்மை ஆளுமைத் திறன்களைக் கற்றுக் கொள்ளலாம்;ஐந்து
நாட்கள் நடக்கும் இந்தப் பயிற்சி முகாமில் பதினாறு முதல் நாற்பது வயது வரையிலான ஆண்கள் யாரும்
கலந்து கொள்ளலாம்;முகாம் நாட்களில் வெளியில் செல்ல அனுமதி இல்லை;இந்த ஐந்து நாட்கள்
பயிற்சி முகாமுக்கான நன்கொடை ரூ.ஐநூறு மட்டுமே!நன்கொடையினை நேரில் வந்து செலுத்தினால்
போதும்;இது தொடர்பாக தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய செல் எண்கள்;ஸ்ரீஸ்வாமி பூர்ணானந்த
90039 34344 மற்றும் ஸ்ரீ ஜி.வி.நாராயணன் 94430 51910 ஆஸ்ரம அலுவலகம்:+91
4546 253908 மின் அஞ்சல்:swamiomkarananda@gmail.com
இளைஞர் முகாம்:
இடம்:ஸ்ரீஸ்வாமீ சித்பவானந்த ஆசிரமம்,சத்திரப்பட்டி சாலை,வேதபுரீ,தேனி.
நாள்:22.5.13 புதன் முதல் 26.5.13 ஞாயிறு வரை
முகாம் 21.5.13 மாலை ஏழு மணிக்குத் துவங்கி,26.5.13 அன்று மதிய உணவுடன்
நிறைவு பெறும்.
இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதால்,நமது ஆளுமைத்திறன்,தேசபக்தி,தெய்வபக்தி,தனித்
திறன்கள் வெளிப்படும்;எதற்காகவும் சிறிதும் அஞ்சமாட்டோம்;ஒவ்வொரு சிறு விஷயத்திலும்
ஆழ்ந்த கவனம் செலுத்த ஆரம்பிப்போம்;நமது முன்னோர்கள் கடந்த இருபது லட்சம் வருடங்களாக
சாதித்த இந்து தர்மத்தின் சாதனைகளில் ஒரு பகுதியை உணர்ந்து கொள்வோம்.
விருப்பம் உள்ளவர்கள் 15.5.13க்குள் தங்களைப் பற்றிய ஒரு விண்ணப்பத்தினை
பின்வரும் முகவரிக்கு போட்டோவுடன் அனுப்பி வைக்க வேண்டும்;
முகவரி:இளைஞர் முகாம்,ஸ்ரீஸ்வாமீ சித்பவாநந்த ஆசிரமம்,சத்திரப்பட்டி
சாலை,வேதபுரீ,தேனி-625531.
நன்றி:விஜயபாரதம்,தேசிய வார இதழ்,பக்கம் 27;வெளியீடு: 12/4/13
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment