Thursday, 13 December 2012

ஆயக்கலைகள் 64

                         ஆயக்கலைகள் 64






1. எழுத்திலக்கணம் அட்சரங்கள் பிற மொழி பயிலல் (அகரவிலக்கணம்);
2.
எழுத்தாற்றல் (லிகிதம்) யாப்பறிவு;
3.
கணிதம்; பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை
4.
மறைநூல் (வேதம்);
5.
தொன்மம் (புராணம்);
6.
இலக்கணம் (வியாகரணம்);
7.
நயனூல் (நீதி சாஸ்திரம்);
8.
கணியம் (ஜோதிட சாஸ்திரம்);
9.
அறநூல் (தர்ம சாஸ்திரம்);
10.
யோக நூல் (யோக சாஸ்திரம்);
11.
மந்திர நூல் (மந்திர சாஸ்திரம்);
12.
நிமித்திக நூல் (சகுன சாஸ்திரம்);
13.
கம்மிய நூல் (சிற்ப சாஸ்திரம்);
14.
மருத்துவ நூல் (வைத்திய சாஸ்திரம்); உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
15.
உறுப்பமைவு நூல் (உருவ சாஸ்திரம் சாமுத்ரிகா லட்சணம்);
16.
மறவனப்பு (இதிகாசம்);
17.
வனப்பு (காவியம்);
18.
அணிநூல் (அலங்காரம்); ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்); சங்குமுதலியவற்றாற் காதணியமக்கை; மாலைதொடுக்கை;மாலை முதலியன் அணிகை; இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை; அணிகலன் புனைகை; ஆடையுடைபற்களுக்கு வண்ணமமைக்கை; ஓவியம்;
19.
மதுரமொழிவு (மதுரபாடணம்); உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி)
20.
நாடகம் கூத்து; பிதிர்ப்பா (கவி) விடுக்கை; குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்); நாடகம் உரைநடை (வசனம்); நடம் (நடனம்); நிருத்தம்
21.
பாட்டு (கீதம்);
22.
ஒலிநுட்ப அறிவு (சப்தப்பிரம்மம்); குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
23.
மனைநூல் (வாஸ்து வித்தை); தோட்டவேலை; மரவேலை; பிரம்பு முத்தலியவற்றாற்கட்டில் பின்னுதல்; பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்; பள்ளியறையிலும்குடிப்பறையிலும் மணி பதிக்கை;
24.
யாழ் (வீணை); குழல் புல்லாங்குழல் வாசிப்பு;
25.
நூல்கொண்டு காட்டும் வேடிக்கை; தையல்வேலை;
26.
மதங்கம் (மிருதங்கம்); தாளம் இன்னியம் (வாத்தியம்); சுவைத்தோன்றப் பண்ணுடன்வாசிக்கை; நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
27.
விற்பயிற்சி ஆயுதப் பயிற்சி (அத்திரவித்தை);
28.
பொன் நோட்டம் தங்கம் பற்றி அறிதல் (கனகப்பரீட்சை);
29.
தேர்ப்பயிற்சி (ரதப்ப்ரீட்சைஃ ரத சாஸ்திரம்); பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை
30.
யானையேற்றம் மற்றும் சாதி அறிதல் (கச பரீட்சை);
31.
குதிரையேற்றம் மற்றும் சாதி அறிதல் (அசுவ பரீட்சை);
32.
மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33.
நிலத்து நூல் மண்ணியல் (பூமி பரீட்சை);
34.
போர்ப்பயிற்சி போர்முறை சாஸ்திரம் மற்றும் தந்திரம் (சங்கிராமவிலக்கணம்);
35.
மல்லம் (மல்யுத்தம்);
36.
கவர்ச்சி (ஆகருடணம்);
37.
ஓட்டுகை (உச்சாடணம்);
38.
நட்புப் பிரிப்பு பகைமூட்டுதல் (வித்துவேடணம்); பொறியமைக்கை;
39.
காமம் (காம சாஸ்திரம்);
40.
மயக்குநூல் (மோகனம்);
41.
வசியம் (வசீகரணம் ஆகரஷனம்);
42.
இதளியம் (ரசவாதம்); நெருட்டுச் சொற்றொடரமக்கை; ஈற்றெழுத்துப் பாப் பாடுகை; விடுகதை (பிரேளிகை);
43.
கந்தரவ ரகசியம்; ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்); இருகாலிற் கொள்கைதுவிசந்தக்கிராகித்வம்)
44.
பிறவுயிர் மொழியறிகை மிருக பாஷை அறிதல் (பைபீல வாதம்); கிளி நாகணங்கட்குப்பேச்சுப் பயிற்றுவகை;
45.
மகிழுறுத்தம் துயரம் மாற்றுதல் (கவுத்துக வாதம்);
46.
நாடிப்பயிற்சி நாடி சாஸ்திரம் (தாது வாதம்);
47.
கலுழம் விஷம் நீக்கும் சாஸ்த்திரம் (காருடம்);
48.
இழப்பறிகை களவு (நட்டம்);
49.
மறைத்ததையறிதல் மறைத்துரைத்தல் (முஷ்டி);
50.
வான்புகவு (ஆகாயப் பிரவேசம்); வான்செலவு விண் நடமாட்டம் (ஆகாய கமனம்);
51.
உடற் (தேகப்) பயிற்சி;
52.
கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53.
தன்னுருக்காத்தல் (அதிருசியம்ஃ அரூபமாதல்);
54.
மாயச்செய்கை (இந்திர ஜாலம்);
55.
பெருமாயச்செய்கை (மகேந்திர ஜாலம்);
56.
அழற்கட்டு (அக்னி ஸ்ம்பனம்);
57.
நீர்க்கட்டு (ஜல ஸ்தம்பனம்);
58.
வளிக்கட்டு (வாயு ஸ்தம்பனம்);
59.
கண்கட்டு (திருஷ்டி ஸ்தம்பனம்);
60.
நாவுக்கட்டு (வாக்கு ஸ்தம்பனம்);
61.
விந்துக்கட்டு (சுக்கில ஸ்தம்பனம்);
62.
புதையற்கட்டு (கன்ன ஸ்தம்பனம்);
63.
வாட்கட்டு வாள்வித்தை (கட்கத்தம்பனம்);
64.
சூனியம் (அவத்தைப் பிரயோகம்) சூதாட்டம் சொக்கட்டான் கைவிரைவு ஹஸ்தலாவகம்);


இவை அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் தான் நமது முன்னோர்கள் 

ஆனால் அவர்களின் வழித்தோன்றல்களாகிய நமக்கு இவற்றில் எத்தனை தெரியும் ?

காரணம் நமது கல்வி முறை திட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாறும் 

வீணாய் போன நாத்திகமும் சேர்ந்து நம்மை இந்த அளவிற்கு மாற்றி 

விட்டன.  நாம் எகனாமிக்ஸ், படிக்க வேண்டியது இல்லை. நமது 

இதிகாசங்களை படித்தாலே போதும்வல்லரசு நாடுகளின் 

ஏரோநோடிக் துறையில் உள்ளதை விட நவீன வாகனத்தை 

வடிவமைக்கும் தொழில் நுட்பம் நமது வைமானிகா சாஸ்திரத்தில் 

உள்ளது. ராஜா ராஜா சோழன் ஆட்சி காலத்தில் 11 வகையான 

விமானம் வைத்து அதன் மூலம் பிரமிடுகள் கட்டினான். பல்லாயிரம் 

யானை படைகளை துவம்சம்  செய்யும் தைரியம் கொண்டவன்

அரசன் கரிகாலன்அதற்கான சான்றுகள் அடுத்த பதிவில் 

வெளிவரும்ஆனால் நாமோ இன்று அலெக்சாண்டரையும்

நெப்போலியனையும் அவர்கள் தைரியத்தை மட்டும் போற்றிக் 

கொண்டு இருக்கிறோம்சித்தர் போகரின் நூல்களை பொருள்

உணர்ந்து அறிந்தவருக்கு மரணம் 150 வருடங்கள் வரை நெருங்காது

(இது குறைவு தான்) மரணமில்லாப் பெருவாழ்வு மற்றும் 75000, 25000 

வருடங்கள் வாழும் களையும் காற்றை மட்டுமே உண்டு வாழும் 

கலையும் சித்தர்களால் நமக்கு அருளப் பெற்று இருக்கிறதுஆனால் 

நாம் எதை நம்பிக் கொண்டு இருக்கிறோம்.

இன்று? மருத்துவத்தை எடுத்துக் கொண்டால் இன்றைய உலகில் 

மயக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டதை நாம் மிகுந்த கண்டுபிடுப்பு என 

நம்பிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் பல வருடங்களாக சித்த 

மருத்துவத்தில் வர்மப் புள்ளிகளை தட்டுவதன் மூலம் மயக்கம் 

அடையவும் எழுச்சி பெறவும் செய்து உள்ளனர். இதை இன்றும் சில 

மாநிலங்களில் செய்து கொண்டு உள்ளனர்.

தற்போது கிறித்துவர்களோ ஆங்கிலேயன் நம்மை ஆட்சி செய்ததால் 

தான் நாம் இந்த அளவு கல்வி அறிவு பெற்றோம் என்று பிரசாரம் 

செய்து கொண்டு இருக்கின்றனர். அதே சமயம் நமது கல்வி 

முறையை இந்த அளவிற்கு மாற்றிய ஒரு சமூக விரோதியை நாம் 

அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் அவன் தான் மெக்காலே 

அவன் பற்றிய குறிப்புகளும் அவன் செய்த நாச வேலைகளும் அடுத்த 

பதிவுகளில் வெளிவரும்.  இது ஒரு முன்கதை சுருக்கம் போன்றதே 

பின்வரும் பதிவுகளில் முழுமையான தவகல்கள் வெளியிடப்படும்.

மேலே உள்ள படங்கள் நமது பாரம்பரிய கலைகள் சிலவற்றிற்கு சான்றுகள் ஆகும் 
நன்றிகள் : குருநாதர் 



Wednesday, 28 November 2012

திருக்கார்த்திகைத் திருநாளில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்!!!


நந்தன வருடத்தின் கார்த்திகை மாதத்து பவுர்ணமி 28.11.12 புதன் கிழமை இரவு 10.16 மணிக்குத் துவங்கி 29.11.12 வியாழன் இரவு 10.16 வரை அமைந்திருக்கிறது.அதே சமயம்,கார்த்திகை நட்சத்திரமானது 27.11.12 செவ்வாய்க்கிழமை மதியம் 12.48க்கு உதயமாகி,மறுநாள்=28.11.12 புதன் கிழமை மாலை 3.17 வரை இருக்கிறது.ஆக,நாம் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஏற்ற நாள் புதன் கிழமை இரவும்,வியாழக்கிழமை காலையும் ஆகும்.(இந்த நேரம் பஞ்சாங்க அடிப்படையில் கணித்து தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது;நட்சத்திரமும்,பவுர்ணமியும் தனித்தனியே வருவதால் இப்படிப்பட்ட சூழ்நிலை !!!)

ஒவ்வொரு மனிதனுக்கும் ரத்தமும்,சுக்கிலமும் ஆரோக்கியமாக இருக்கும் வரையிலும் அவனது வாழ்க்கை நோய் நொடியின்றி இருக்கும்.ரத்தக்காரகனாகிய செவ்வாயின் முதல் ராசி மேஷம்;சுக்கிலக்காரகனாகிய(காதல்,வாகனவசதி,சுகபோகங்கள்) சுக்கிரனின் முதல் ராசி ரிஷபம் ஆகும்.இந்த இரண்டு ராசிகளிலும் இருக்கும் நட்சத்திரமே கார்த்திகை மாதம் ஆகும்.கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முன்கோபக் காரர்களாக இருப்பார்கள்;அதே சமயம் தன்னிடம் பழகுபவர்களிடமும்,தனது ரத்த உறவுகளிடமும் அளவற்ற பாசத்தோடு இருப்பார்கள்;

கார்த்திகை உள்ளிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் எந்த ஒரு காரியத்தையும் ஆர்பாட்டமில்லாமலும்,படு ரகசியமாகவும் செய்வதில் சமர்த்தர்கள்;இந்த நாளில் பவுர்ணமி ஆண்டுக்கு ஒருமுறைதான் வருகிறது;கார்த்திகை நட்சத்திரமானது சூரியன் உச்சமாகும் நட்சத்திரமாக இருப்பதால் இவர்கள் சிறந்த நிர்வாகத்திறமையும்,முன்கோபமும் உள்ளவர்களாகத் திகழுகிறார்கள்.இந்த கார்த்திகை நட்சத்திரம் பவுர்ணமியாக பரிணமிக்கும் இந்த நாளில் தான் அடிமுடி தேடிய திருமாலுக்கும்,அயன் என்ற பிரம்மாவுக்கும் ஜோதி வடிவாக சிவபெருமான் காட்சியளித்தார்.


பெரிய கார்த்திகை என்று தென் தமிழ்நாட்டு இந்துக்களால் புகழப்படும் இந்த கார்த்திகை பவுர்ணமியன்று திரு அண்ணாமலையை ஐந்து முறை கிரிவலம் சுற்றி வருபவர்களுக்கு மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும் என்று அருணாச்சல புராணம் தெரிவிக்கிறது.கலியுகத்தில் இப்போதெல்லாம் ஒருமுறை கிரிவலம் முடிக்கவே குறைந்தது நான்கு மணி நேரமும்,அதிகபட்சம் ஆறுமணி நேரமும் ஆகிறது.நமது ஆத்மபலம் அதிகமாக இருந்தால் ஆறுமுறை கிரிவலம் செல்ல முடியும்.
27.11.12 செவ்வாய்க்கிழமை இரவு 7 முதல் 8 மணிவரை குரு ஓரை வருகிறது;28.11.12 புதன்  கிழமை காலை 9 முதல் 10 மணி வரையும், மாலை 4 முதல் 5 மணி வரையிலும் குரு ஓரை வருகிறது;இந்த நேரங்களில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்;28.11.12 புதன்கிழமை காலை 4.30 முதல் 6 மணி வரையிலான கால கட்டமான பிரம்ம முகூர்த்தத்திலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்;


இதுவரை ஓம்சிவசிவஓம் ஜபிக்காதவர்கள் இந்த அரிய மற்றும் அற்புதமான நாளில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கலாம்;


இதுவரை சில பல வாரங்கள்/மாதங்கள் ஓம்சிவசிவஓம் ஜபித்துவிட்டு,இடையில் ஜபிக்க இயலாமல் தடங்கல்களைச் சந்தித்தவர்கள் மேற்கூறிய நேரங்களில் உங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் ஓம்சிவசிவஓம் மீண்டும் ஜபிக்கத் துவங்கலாம்;


ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் தொடர்ந்து பத்து வருடங்கள் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;18 சித்தர்களின் ஆசியையும் ஒரே நேரத்தில் பெறுவோம்;மறுபிறவியில்லாத முக்தியை ஓம்சிவசிவஓம் ஜபிப்பதன் மூலமாகவே பெறுவோம்;


ஓம்சிவசிவஓம்