Wednesday, 28 November 2012

திருக்கார்த்திகைத் திருநாளில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்!!!


நந்தன வருடத்தின் கார்த்திகை மாதத்து பவுர்ணமி 28.11.12 புதன் கிழமை இரவு 10.16 மணிக்குத் துவங்கி 29.11.12 வியாழன் இரவு 10.16 வரை அமைந்திருக்கிறது.அதே சமயம்,கார்த்திகை நட்சத்திரமானது 27.11.12 செவ்வாய்க்கிழமை மதியம் 12.48க்கு உதயமாகி,மறுநாள்=28.11.12 புதன் கிழமை மாலை 3.17 வரை இருக்கிறது.ஆக,நாம் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஏற்ற நாள் புதன் கிழமை இரவும்,வியாழக்கிழமை காலையும் ஆகும்.(இந்த நேரம் பஞ்சாங்க அடிப்படையில் கணித்து தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது;நட்சத்திரமும்,பவுர்ணமியும் தனித்தனியே வருவதால் இப்படிப்பட்ட சூழ்நிலை !!!)

ஒவ்வொரு மனிதனுக்கும் ரத்தமும்,சுக்கிலமும் ஆரோக்கியமாக இருக்கும் வரையிலும் அவனது வாழ்க்கை நோய் நொடியின்றி இருக்கும்.ரத்தக்காரகனாகிய செவ்வாயின் முதல் ராசி மேஷம்;சுக்கிலக்காரகனாகிய(காதல்,வாகனவசதி,சுகபோகங்கள்) சுக்கிரனின் முதல் ராசி ரிஷபம் ஆகும்.இந்த இரண்டு ராசிகளிலும் இருக்கும் நட்சத்திரமே கார்த்திகை மாதம் ஆகும்.கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முன்கோபக் காரர்களாக இருப்பார்கள்;அதே சமயம் தன்னிடம் பழகுபவர்களிடமும்,தனது ரத்த உறவுகளிடமும் அளவற்ற பாசத்தோடு இருப்பார்கள்;

கார்த்திகை உள்ளிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் எந்த ஒரு காரியத்தையும் ஆர்பாட்டமில்லாமலும்,படு ரகசியமாகவும் செய்வதில் சமர்த்தர்கள்;இந்த நாளில் பவுர்ணமி ஆண்டுக்கு ஒருமுறைதான் வருகிறது;கார்த்திகை நட்சத்திரமானது சூரியன் உச்சமாகும் நட்சத்திரமாக இருப்பதால் இவர்கள் சிறந்த நிர்வாகத்திறமையும்,முன்கோபமும் உள்ளவர்களாகத் திகழுகிறார்கள்.இந்த கார்த்திகை நட்சத்திரம் பவுர்ணமியாக பரிணமிக்கும் இந்த நாளில் தான் அடிமுடி தேடிய திருமாலுக்கும்,அயன் என்ற பிரம்மாவுக்கும் ஜோதி வடிவாக சிவபெருமான் காட்சியளித்தார்.


பெரிய கார்த்திகை என்று தென் தமிழ்நாட்டு இந்துக்களால் புகழப்படும் இந்த கார்த்திகை பவுர்ணமியன்று திரு அண்ணாமலையை ஐந்து முறை கிரிவலம் சுற்றி வருபவர்களுக்கு மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும் என்று அருணாச்சல புராணம் தெரிவிக்கிறது.கலியுகத்தில் இப்போதெல்லாம் ஒருமுறை கிரிவலம் முடிக்கவே குறைந்தது நான்கு மணி நேரமும்,அதிகபட்சம் ஆறுமணி நேரமும் ஆகிறது.நமது ஆத்மபலம் அதிகமாக இருந்தால் ஆறுமுறை கிரிவலம் செல்ல முடியும்.
27.11.12 செவ்வாய்க்கிழமை இரவு 7 முதல் 8 மணிவரை குரு ஓரை வருகிறது;28.11.12 புதன்  கிழமை காலை 9 முதல் 10 மணி வரையும், மாலை 4 முதல் 5 மணி வரையிலும் குரு ஓரை வருகிறது;இந்த நேரங்களில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்;28.11.12 புதன்கிழமை காலை 4.30 முதல் 6 மணி வரையிலான கால கட்டமான பிரம்ம முகூர்த்தத்திலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்;


இதுவரை ஓம்சிவசிவஓம் ஜபிக்காதவர்கள் இந்த அரிய மற்றும் அற்புதமான நாளில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கலாம்;


இதுவரை சில பல வாரங்கள்/மாதங்கள் ஓம்சிவசிவஓம் ஜபித்துவிட்டு,இடையில் ஜபிக்க இயலாமல் தடங்கல்களைச் சந்தித்தவர்கள் மேற்கூறிய நேரங்களில் உங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் ஓம்சிவசிவஓம் மீண்டும் ஜபிக்கத் துவங்கலாம்;


ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் தொடர்ந்து பத்து வருடங்கள் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;18 சித்தர்களின் ஆசியையும் ஒரே நேரத்தில் பெறுவோம்;மறுபிறவியில்லாத முக்தியை ஓம்சிவசிவஓம் ஜபிப்பதன் மூலமாகவே பெறுவோம்;


ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment